Advertisement

'நீட்' விவகாரம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சென்னை : 'நீட்' தேர்வு விவகாரத்தில், சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் அளித்த பதில், திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி, எதிர்க்கட்சிகள், நேற்று வெளிநடப்பு செய்தன.

சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:




எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: விழுப்புரம் மாவட்டம், பரவலுார் காலனியைச் சேர்ந்த, கூலித் தொழிலாளியின் மகள் பிரதிபா, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறாததால், தற்கொலை செய்துள்ளார். அதே மாவட்டத்தில், மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கடந்த ஆண்டு, நீட் தேர்வால், அனிதாவை இழந்தோம். இந்த ஆண்டு, தமிழ் வழியில் தேர்வு எழுதிய பிரதிபாவை இழந்துள்ளோம். இன்னும் எத்தனை பேரை இழக்கப் போகிறோமோ தெரியவில்லை. இந்த ஆண்டு நடந்த, நீட் தேர்வில், தென் மாநில மாணவர்கள், மிக குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்று உள்ளனர். வட மாநில மாணவர்கள், அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


முதல், 50 இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா மட்டுமே, இடம் பெற்றுள்ளார். தென் மாநிலங்களில், எட்டு பேர் மட்டுமே வந்துள்ளனர். தமிழகத்தில், டாக்டராக வேண்டும் என்ற கனவோடு தேர்வு எழுதிய, 1.14 லட்சம் பேரில், 45 ஆயிரத்து, 336 பேர் மட்டுமே வெற்றி பெற்று உள்ளனர்.


நீட் தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி, சட்டசபையில், இரு
மசோதாக்களை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினோம். அதன் நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.


சட்டசபை காங்., தலைவர் ராமசாமி: தமிழ் வழியில், நீட் தேர்வு எழுதியவர்கள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வினாத்தாளில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதை சுட்டிக்காட்டியும், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.


சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதா, மத்திய அரசிடம் உள்ளதா, ஜனாதிபதியிடம் உள்ளதா என்பதே தெரியவில்லை. நீட் தேர்விலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, சிறந்த பயிற்சியாளர்கள் வாயிலாக, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.


அமைச்சர் விஜயபாஸ்கர்: மாணவி பிரதிபா, கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு எழுதினார். அந்த ஆண்டு, நீட் தேர்வில், தேர்ச்சி பெறவில்லை. சித்தா மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும், அவர் சேரவில்லை. மீண்டும் இந்த ஆண்டு, நீட் தேர்வு எழுதினார். கடந்த ஆண்டை விட, குறைவான மதிப்பெண் கிடைத்ததால், இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். நீட் எதிர்ப்பு கொள்கையில், அரசு உறுதியாக உள்ளது.


விதிவிலக்கு பெற, சட்டப் போராட்டம் நடத்தினோம். அரசும் பல்வேறு வகையில், அழுத்தம் கொடுத்தது. சட்டசபையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, சட்ட மசோதாக்களை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினோம். மத்திய அரசு இசைவு கொடுத்து, அட்டர்னி ஜெனரல், நமக்கு சாதகமான பதிலை, நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், காங்., கட்சியைச் சேர்ந்த, நளினி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.


அனைத்து மாநிலங்களும், நீட் தேர்வை ஏற்றுள்ள நிலையில், தமிழகம், தன்னந்தனியாக போராடியது. ஆனால், வழக்கு காரணமாக, முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. மாணவர்கள், பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு, நீட் தேர்வு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் காரணமாக, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 12 ஆயிரத்து, 766 மாணவர்கள், கூடுதலாக தேர்ச்சி பெற்று உள்ளனர்.


மத்தியில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தான், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது, தி.மு.க.,வும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது.


பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு, விலக்கு பெற வேண்டும் என்பது, அரசின் கொள்கை முடிவு. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முடிவு வராத நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 412 பயிற்சி மையங்களில், 72 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, 'ஆன்லைன்' பயிற்சி அளிக்கப்பட்டது.


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள், பயிற்சி பெற்றனர். இதுபோல், வேறு எந்த மாநிலத்திலும், பயிற்சி அளிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு, அரசு பள்ளி மாணவர்கள் இருவர் மட்டுமே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு, 1,337 அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


ஸ்டாலின்: தி.மு.க., ஆட்சி இருந்த வரை, தமிழகத்தில், நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. நான் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் அளித்த பதில், திருப்தி அளிக்காததால், வெளிநடப்பு செய்கிறோம். இதைத் தொடர்ந்து, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (64)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    "எஜமான் காலடி மண்ணெடுத்து, நெத்தியில பொட்டு வச்சு......."

  • bal - chennai,இந்தியா

    நாளை முதல் கொஞ்சம் மாறாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும்...எங்கு உள்ளிருப்பு என்று சொல்லவில்லை.

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

    எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி. அண்ணன் சுடலை அவர்கள் விரைவில் தனது 100 வது போராட்டம் நடத்த உள்ளார். மக்கள் அனைவரும் அவரவர் வேலை வெட்டிகளை விட்டுவிட்டு இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேராதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    1 ) நீட் எதிர்ப்பு எதற்கு???இல்லை எனக்கு போராட்டம் செய்யலைன்னா போரடிக்குது அதற்காகத்தான் என்று சொல்வது போல இருக்கின்றது இந்த வகை போராட்டம். நீட் என்பது ஒரு டெஸ்ட் மருத்துவத்தில் சேர நினைப்பவர்களின் இன்டெலிஜென்சை டெஸ்ட் செய்து அவர்களுக்கு சீட் கொடுப்பது அவ்வளவு தானே? இதற்கு எதற்கு எதிர்ப்பு??? 2 ) இதில் பிரதீபா என்ற பெண் தோல்வியுற்றாள் ஆகவே தற்கொலை? அவர் குடும்பத்திற்கு ரூ 7 லட்சம் இழப்பீடு கொடுத்தது டாஸ்மாக் அரசு??? இந்த மாதிரி தோல்வி, தற்கொலை என்ற எண்ணம் கொண்டவர்கள், இன்றில்லையென்றால் நாளை எப்படியும் அதையே செய்வார்கள் வாழக்கையில் தோல்வி என்று????இதை ஊக்குவிப்பது போல் இருக்கின்றது அரசின் செய்கை. ஓட்டுக்காக எப்படியெல்லாம் முட்டாள்தனமான் செயல்கள் செய்து காட்டுகின்றது நமது அரசு, மற்றும் எதிர் கட்சிகள். இதில் தினகரன் ஆறுதல், சுடாலின் ஆறுதல் என்று விளம்பரம்?????

  • Raja - Paris,பிரான்ஸ்

    மிகவும் கேவலமான அரசியல் நம்ம தமிழ் நாட்டில் தி மு க & அவர்கள் தோழமை காட்சிகள், தமிழ்நாட்டு மக்கள் முன்னேறுவதை தடுக்க தான் அணைத்து உருப்படாத வெளிநடப்பும் , போராட்டங்களும் . இதய் புரிந்து கொள்ளாத தமிழினம் எப்படி தப்பிப்பது இந்த கவயர்களின் கை பிடியுள் இருந்து

  • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

    எங்கடா எளவு விழும் அதவைத்து அரசியல் பண்ணலாம் என திரிபவர்கள், தெரிந்து கொள்ள வேண்டியது, இவர்கள் இன்னும் பலரை தற்கொலைக்கு மறைமுகமாக தூண்டுகிறார் கள் என்பது தான் நிஜம் . ஒவ்வொரு தோல்விக்கும் தற்க்கொலை சரியான் முடிவு என் ஊக்குவிக்கும் கீழ்தர அரசியல் என்று முகின்றதோ அன்று தான் தற்கொலை கீழ்தர மான கேவல்மான் முடிவு என் இன்றய சமுதாயம் உணரவும் செய்யும். தற்கொலை செய்வருக்கு வீர வணக்கமாம் , பணமுடிப்பு குடும்பத்துக்காம் , அரசு வேலயாம்...... இது என்ன கொடும "சரவணன்"

  • karupanasamy - chennai,இந்தியா

    இதுவரைக்கும் திமுக தேர்தலில் தோல்வியடைந்த போதெல்லாம் எத்தனையோ பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே இனி திமுக தேர்தலில் போட்டியிடக்கூடாது.

  • Maaruthi - Chennai,இந்தியா

    Stalinukku porada karanam kidaithu vittadhu adhan 700000koduthachulla apparam enna koochal

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இவர்கள் மருத்துவ கல்லூரியில், ஏழைகளுக்கு இலவசமாக இடம் கொடுக்கலாம், பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் கேவலம்,

  • adalarasan - chennai,இந்தியா

    வேலையத்த வேலை?வேண்டுமென்றால், டெல்லியில், உச்சநீதிமன்றம், பிரசிடண்ட், மாளிகை முன் சென்று, தார்னா செய்யுங்கள் ஒரு விதத்தில ஏதோ, காரணம் சொல்லி, வெளியேறி, வீடு செல்லணும்>வேலூர் காருடைய, அழுத்தமாகவும் இருக்கள்லாம்?ரொம்ப நேரம், சட்டசபையில் அமர்ந்து, உருப்படியா வேளை பார்க்க, நாதி இல்லாதவர்கள்?

  • Krishna Prasad - Chennai,இந்தியா

    உங்களுக்கு வெளிநடப்பு நடத்த ஒரு காரணம் கிடைத்ததா ரொம்ப சந்தோசம் Keep it up...

  • vbs manian - hyderabad,இந்தியா

    தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சோபிக்காமல் போனதற்கு முக்கிய காரணம் மோசமான அபத்த களஞ்சியமான சமசீர் கல்வி திட்டத்தை கொண்டுவந்ததே .எல்லோரும் மேல் நோக்கி பாயும் பொழுது நாம் பூமியை தோண்டிக்கொண்டு கீழே போனோம். கழகத்தின் இந்த செயல் சில தலைமுறை மாணவர்களின் வாழ்வில் மண்ணை அள்ளி போட்டுவிட்டது.

  • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

    நீட் தோ்வு கட்டாயமாக்கபடுவதற்கு முன்பு சைன்ஸ் குரூப் எடுத்து டாக்குட்டரு சீட் கிடைக்காதவனெல்லாம் தற்கொலையா பண்ணிக்கிட்டான்? அரசியல் செய்ய துடிக்கும் கழுகுகளுக்கு வாய்ப்பாக அமைந்ததை தவிர வேறு எதற்கும் உதவாது இந்த தற்கொலை. இது மாதிரி முட்டாள்களின் மேல் பரிதாபம் வருவதை விட வெறுப்பு தான் வருகிறது. தமிழக அரசியல் வியாதிகள் சுப்ரீம் கோா்ட் தோ்வு கட்டாயம் என அறிவித்த பின்னரும் ஏன் போராட வேண்டும்? நீட் தோ்வு விவகாரத்தில் சுப்ரீம் கோா்ட் ஆணையை மதிக்கமாட்டானுக ஆனால் காவிரி மேலாண்மை வாாிய விவகாரத்துல சுப்ரீம் கோா்ட் ஆணையை நிறைவேற்ற சொல்லி ஒரே கலவரம் . தமிழ் சமுதாயம் திருட்டு திராவிட புரட்டு சிந்தனையாலும், பிரிவிணைவாத தமிழக கட்சியினாின் கருத்துக்களாலும் இயக்கப்பட்டு சுயகட்டுபாடற்ற காட்டுமிரான்டி சமூகமாய்.மாறிவருகிறதோ என்ற கேள்வி எழுகிறது.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    செயலை நம்பினால் டாக்டர் ஆக முடியாது.

  • durai - trichy,இந்தியா

    கட்சிகளில் வாரிசுகளை கட்சிகளின் தலைவர்களாக்குவது போல் ( திமுக , காங்கிரஸ், பாமக, சமாஜ்வாடி ) பெற்றோர் டாக்டர் ஆக இருந்தால், வாரிசுகளுக்கு மெடிக்கல் காலெஜ்ல் சீட் கொடுக்கலாம்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    பார்றா இந்த தேர்வு லூசுத்தனமான தேர்வாம் கண்டு பிடிச்சிட்டாருடா தாமஸ் ஆல்வா எடிசன். அப்போ 1200 க்கு வெக்கிற தேர்வு மட்டும் என்ன நாஸாக்கு ராக்கெட்டு வுடுற தேர்வா? 11 ஆம் வகுப்புல இருந்தே மொத்தமா ஒரு 6 அல்லது 7 பாட புத்தகங்களை மட்டும் அடுத்த ஒரு இரண்டு வருடத்துக்கு, சும்மா நொங்கு நொங்கு ன்னு நொங்கி, அட்டை டூ அட்டை மனப்பாடம் அடிச்சு அப்படியே கண்ணுக்குள்ள நிறுத்தி, அப்படியே கொண்டு போயி பேப்பர்ல வாந்தி எடுத்துட்டு வந்தா, அதுக்கு பேரு சூப்பர் தேர்வு, அந்த தெருவுல 1200 எடுத்தா அவன் நாலஞ்சு ராக்கெட்டை எடுத்து சும்மா சர் சர் ன்னு விட்டுடுவானா? என்னையா இது முட்டாள்தனமா பேசுறதுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. நுழைவு தேர்வு நீட் தேர்வு இதெல்லாம் இல்லாம சும்மா மனப்பாடம் பண்றவங்களுக்கு டாக்டர் சீட்டு கொடுக்க முடியுமா?

  • இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    அரசு மையங்களில் மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சியளிக்கப்படவில்லை. மாறாக, ஆன்லைனில் தான் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் நீட் தேர்வுக்கான எந்த பயிற்சியும், விழிப்புணர்வும் இல்லாமல் தான் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வை எதிர்கொண்டனர். அதனால் தான் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைந்தது. தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் கல்வித்துறையை சீரழித்திருக்கின்றன. சிந்திக்கும் திறன் கொண்ட கல்வி முறையை ஒழித்துவிட்டு, மனப்பாட கல்வியை ஊக்குவித்து கல்வித் தரத்தை குழிதோண்டி புதைத்தது தான் இதற்கு காரணமாகும். எல்லா தப்பையும் பண்ணிட்டு இன்னும் எத்தனை வருஷம் தான் மக்களை இப்டி திசை திருப்புவீங்க ஸ்டாலின்.

  • Ganapathy - Bangalore,இந்தியா

    பிரதிபா ஒரு கிராம பின்புலத்தில் இருந்து வருகிறார் . அந்த கிராமத்தின் பெயரே அவர் தன்னை மாய்தபோதுதான் நமக்கு தெரியவருகிறது .இப்படி பெயர் எடுக்காத அநேக கிராமங்கள் சிறு நகரங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ,நீட் தேர்வுக்கு வேண்டி தனி பயிற்சி மேற்கொள்ள முடியாது. ஒரு கூலி தொழிலாளி மகள் +2 வரை படிப்பதே அபூர்வம். அதையும் தாண்டி அவர் 90 சதவீதற்கும் மேலே மதிப்பெண் பெற்றுள்ளார் . இப்படி மிகவும் ஏழ்மையான, தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து வரும் மக்களுக்கு எந்த வசதி இருக்கிறது, வெறும் கனவு காண்பது மட்டும் தன, முதல் ஐம்பது இடத்தில பிடித்த மாணவி இரண்டு வருடம் பயிற்சி எடுத்தேன் என்று கூறுகிறார் . இப்படி எல்லோராலும் படிக்க முடியாது .இதற்கு பணமும் வசதியும் தேவை . நம் தமிழ்நாட்டில் இதற்கு முன்பு நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணும், +2 மதிப்பெண்ணும் சேர்த்து வந்த சராசரி மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம் மற்றும் பொறியில் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்டனர் . அப்படி செய்தல், நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும் என்ற உந்துதலும், போட்டி தேர்வுக்கு வேண்டிய திறன் சார்ந்த அறிவும் வளர்க்கப்படும் . நம் தமிழ்நாட்டில் தன இருவத்திமூணு மருத்துவ கல்லூரியும், அதன சார்ந்த மருத்துவமனையும் உள்ளன, இது முக்கியமாக நம் மக்களுக்கு பயன்படவேண்டிய ஒன்று .

  • கைப்புள்ள - nj,இந்தியா

    இப்படியே பேசிகிட்டு திரிஞ்சா கடைசில எல்லோரும் தெரு தெருவா பிச்சை எடுக்க வேண்டியதுதான், இல்லேனா எல்லோரும் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட போக வேண்டியதுதான். உலகம் ராக்கெட் வேகத்துல போயிட்டு இருக்கு. அதோட சேர்ந்து நாமளும் சும்மா ஜிவுன்னு பயணிக்கலேனா நஷ்ட்டம் நமக்குதான். உடனே நல்லா படிக்க ஆரம்பிங்க மக்களே, பாத்துடுவோம் ஒரு கை நாமளா இல்லே அந்த நீட்டான்னு. போடுற போடுல இனிமேல் இந்த மாறி பரீட்சை எல்லாம் அறிமுக படுத்தவே யோசிக்கணும் அவன் அவன்.

  • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

    திருந்தாத ஜென்மங்கள் ....

  • raman - Madurai,இந்தியா

    நீர் தேர்வில் 40000 பேர் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் இப்போது 17000 பேரு க்குத்தான் இடம் கிடைக்கும். மீதி 23000 பேர் தற்கொலை செய்து கொள்வார்களா. வேறு படிப்புத்தான் படிக்கவேண்டும். இதே நிலைதான் நீட்டுக்கு முன்னால் கூட இருந்தது. இது தான் யதார்த்தம். இதை அரசியலக்குவதுதான் தமிழ்நாடு சீர்கெட்டுள்ளது.

  • sankar - Nellai,இந்தியா

    நீட் தேர்வு - படிப்பு செலவு வெறும் 13000 ரூபாய் தான் கட்டணம் - கோடி கோடியாய் முதலீடு செய்த அரசியல்வாதிகள் எப்படி அதை அனுமதிப்பார்கள்

  • sankar - Nellai,இந்தியா

    எம் எல் ஏ , எம் பி - ஆவதற்கு எந்த தகுதியும் தேவை இல்லை - ஆனால் மருத்துவர் ஆவதற்கு? இதில் எல்லாம் அரசியல் வேண்டாம் - இப்போது உங்கள் வழியில் அரை வேக்காடு சந்திரபாபுவும் வந்துவிடுவார் போல இருக்கிறது - நாடு முன்னேறினால் பிஜேபி கட்சிக்கு பெயர் கிடைத்துவிடும் என்கிற பெரும் கவலை இவர்களுக்கு

  • balakrishnan - coimbatore,இந்தியா

    நீட் தேர்வு தேவையில்லை என்றால், நுழைவு தேர்வு கொண்டுவரவேண்டும், உயர்கல்விகளுக்கு மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற படிப்புக்கு கண்டிப்பாக நுழைவு தீர்வு அவசியம் வேண்டும்

  • rajan. - kerala,இந்தியா

    சுடலை வெளிநடப்பு செய்து சட்டசபையின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு காப்பாற்றப்பட்டு விட்டது. இதுவே இவிங்க பிழைப்பைபோச்சு. சட்டசபை கூட்ட ஒரு மறியல் பண்ண வேண்டியது. சபையை கொட்டினால் கரை வேட்டியை தூக்கி புடிச்சுகிட்டு வெளிநடப்பு பண்ணுவது. இவனுங்கள வச்சு தமிழ்நாடு உருப்பட்ட மாதிரி தான்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பிள்ளைகளின் திறனை வளர்க்கசொல்லாமல்... பணத்திற்க்காக அலையறதை பாரு...

  • sridhar - Chennai,இந்தியா

    எங்க மாணவர்களுக்கு படிப்பு வராது, ஆகவே அகில இந்திய தேர்வு வேண்டாம் என்று சொல்ல ஒரு வெட்கம்கெட்டத்தனம் வேண்டும். அது சுடலையிடம் இருக்கிறது. போகட்டும். பிளஸ் டூ தேர்வுக்கு பிறகுகூடத்தான் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். காதல் தோல்வி என்று தற்கொலை செய்கிறார்கள். இதையெல்லாம் தடை செய்யமுடியுமா.

  • Ravi - Chennai,இந்தியா

    நல்லது எதுவுமே DMK காரனுக்கு பிடிக்காது , அதைவிட அவங்களுக்கு வோட்டை போறானே தமிழனுக்கு எதுவுமே பிடிக்காது , முதலில் வோட்டை போட்டவன் முதல் முட்டாள் , மூளை அற்றவன் .

  • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

    அவுரு கிறுக்கு மறுக்கா பண்றத பாத்தா குழப்பமாத்தான் இருக்கும்....என்ன செய்ய? எதுவும் செய்யக்கூடாதுன்னு இருக்கவேண்டுமென்பது உத்தரவு,... உத்தரவை மீறி நடந்தால் சொத்துக்கள் பறிமுதல், சிறை, களி...இதெல்லாம் அப்பப்ப கண்ணுமுன்னால வந்துபோவும்ல...

  • ravi - chennai,இந்தியா

    நம்பாதீங்கோ நம்பாதீங்கோ - எல்லாம் தில்லுமுல்லு தில்லாலங்கடி கூட்டம்

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    இவருக்கு இன்னும் பள்ளி கூடத்துக்கு போறதா நினைப்பு...எப்போ பார்த்தாலும் கட் அடிச்சுட்டு வெளிய சுத்துறதே வேலை...இன்னமும் நியூ காலேஜ்ல படிக்கிறதாவே நினைப்பு...............

  • ravi - chennai,இந்தியா

    நங்கள் பள்ளிக்கே ஒழுங்கா போனதில்லை - எங்கப்பன் பெயரை சொல்லி ஏமாற்றிக்கொண்டிருந்தோம் - வாத்யார்களும் நமக்கு எதற்கு வம்பு என்று எங்களை விட்டுவிட்டார்கள் - இப்போ வந்து வோட்டுப்போட்டுட்டோம்னு எங்களை சட்டமன்றத்திற்கு போகசொல்றதும் - ஒரே இடத்தில் உக்காரசொல்வது கேள்வி கேட்கச்சொல்வதும் எங்களுக்கு இழுக்கில்லையா - அதை மனுஷன் செய்வானா - வெளியில் போனாதான் நாலு பாப்பா இருக்கும் பார்க்கலாம் - தடவி கொடுக்கலாம் - பாராட்டலாம் - குறைகளை கேட்டு அறியலாம் எல்லாம் ஒரு தமாஷ்தானே - அதனாலே தான் அப்பப்போ வெளிநடப்பு என்றபெயரில் நாங்கள் வெளியில் வந்துடறோம் ... இதெல்லாம் ஒரு விதமான ஏமாத்துவேலைன்னு எங்களை ஆதரித்து வோட்டுப்போட்ட முட்டாள்களுக்கு தெரியாது - அப்படியே தெரிந்தாலும் அதை காட்டி இதை காட்டி அதை சொல்லி இதை சொல்லி ஏமாற்றி மறுபடியும் எங்கள் அல்லக்கைகள் வோட்டுவாங்கிவிடுவார்கள் - அதற்காக தானே நாங்கள் போட்டிபோட்டியாய் எல்லா வட்டம் மாவட்டத்துக்கு கொடுத்து வருகிறோம் - ஜனநாயகமாவது புடலங்காயாவது...

  • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

    ஸ்டாலின், பேசாம நீட் தேர்வுக்காக அரசியலை விட்டு விலகிடுங்க.

  • Darmavan - Chennai,இந்தியா

    இந்த மாதிரி தற்கொலைகள் எல்லா படைப்புகளிலும் நடக்கிறது.அப்போதுஎல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா. கிரமப்புற ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி மூலம் தரம் உயர்த்த வேண்டுமே ஒழிய கீழ்தரத்துக்கு படிப்பை கொண்டுபோவது முட்டாள்தனம்.சூழ்ச்சியும் கூட.

  • Rohith Raja - chennai,இந்தியா

    சுடலை பத்தாவது பன்னிரெண்டாவது fail ஆகி நிறைய பேறு தற்கொலை பண்ணி இருக்கிறான்... அதுக்காக ரெண்டு தேர்வையும் நிறுத்தி விடலாமா,, இந்தியாவுல அதிகம் லஞ்சம் வாங்கும் இடம் தமிழகம் இதை மறுக்க முடியுமா.. இந்தியாவிலே அதிக இட ஒதுக்கீடு தமிழ்நாடு இதை மறுக்க முடியுமா.. இதற்கு பேரு ஒன்னு வெச்சு இருக்காங்க.. சமூக நீதி... 95% மார்க் எடுத்து டாக்டர் ஆக முடியாது அனால் 50 % மார்க் எடுத்து டாக்டர் ஆகமுடியும்... இது தான் நம்ம ஊருல சமூக நீதி... இதற்க்கு திராவிட கட்சிகளுக்கு பெருமை வேறு... அசிங்கமா இல்ல. ராவா பகலா படிச்சவனுக்கு என்ன நீதி இருக்கு... இதை எதிர்த்து போராட தமிழ்நாட்டுல நாதி இல்ல. நீட் வந்ததினால் கொஞ்சம் இட ஒதுக்கீடு குறையும். திறமை இருக்கிறவன் மட்டும் தான் டாக்டர் ஆகணும்.. இது தானே நீதி.. ஒருவன் ஒரு அரசியல் வாதி போராடுவான ... மாட்டான்.. அனால் எவன் வீட்டுலயாவது இழவு விழுந்த உடனே ஒரு பேட்டி மத்திய அரசு மாநில அரசு ஒழிக என்று.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    அண்ணாதுரை அந்தக்காலத்தில் எஸ் எஸ் எஸ் சியில் பெயிலானவர் எனவே அவர் நினைவாக எஸ் எஸ் எல் சி தேர்வை ரத்து செய்துவிடலாம் .அவரது ஆன்மா போற்றும்

  • POORMAN - ERODE,இந்தியா

    குஞ்சுமணி, நம் தமிழக மாணவர் படிக்கும் பாடத்திட்டமும், நீட் தேர்வின் பாடமும் வேறு. வடநாட்டில் ஏனைய மாநிலங்களில் பல ஆண்டுகளாய் உள்ள உள்ள பாடத்திட்டத்தில் நீட் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்ந வருஷம் த.நாட்டில் நிறைய பேர் பாஸ் அப்படின்னு தம்பட்டம் அடிக்கிறார்கள் மடையர்கள். அவர்களில் யாருக்காவது சீட் கிடைக்குமா?. நீட்டின் மூலம் தனியார் கல்லூரிகளின் கல்வி கொள்ளைதடுக்கப்பட்டது சொல்றவங்க.பரம அயோக்கியர்கள். 3லட்சம் பீஸ் இப்போ 20 முதல் 40லட்சம் ன்னு அரசாங்கமே தனியார்.மருத்துவ கல்லூரிகளுக்கு உயர்த்தி விட்டது. போதாக்குறைக்கு டீம்டு மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஆய்வு செய்து ஒழுங்கு படுத்தும் மத்திய கணக்காயரின் தனிக்கை முறையை விலக்கி தனியார் கல்லூரிகளில் கேள்வி கேட்பாரில்லாமல் கொள்ளை அடித்துக் கொள்ளவும் மத்திய அரசு வழி வகை செய்து விட்டு தனியார் கொள்ளையை தடுத்து விட்டோம் என வெட்கமே இல்லாமல் பொய் சொல்லித் திரிவது அவமானம். CBSE கேள்வித்தாள் லீக் என்பது பல காலமாய் இருந்து வரும் நடைமுறையாய் போய் விட்டது, தேர்வு தான் வேண்டும் எனில் நம் மாநில கல்வித் திட்டத்திற்கு உட்பட்டு த. நா அரசே போட்டித்தேர்வுகளை நடத்தி நமது மாநில கல்லூரிகளில் 100% இடமும் தமிழகத்துக்கே ஒதுக்கீடு என்பது வர வேண்டும்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    புறக்கனித்தால் இப்படி தினமும் வெளிநடப்புச்செய்ய முடியாது என்பதால் வெட்கம் கெட்டு திரும்ப உள்ளே வர இருக்கிறார்கள்...

  • singaivendan - Singapore,சிங்கப்பூர்

    எதை எடுத்தாலும் வெளிநடப்பு...நீங்க எதுக்கு உள்ள போறீங்க பேசாம வெளியவே ஒரு சேர் போட்டு உக்கார நிரந்தரமா வேண்டியதுதானே...

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    நல்லது எது நடந்தாலும் பிடிக்காத ஒரே கட்சி, இந்த குடும்ப கும்பல் கட்சி. பணம் பண்ணும் கல்லூரிகள் கைவிட்டு போகும் அல்லவா??. எதிலும் பணத்தை பார்க்கும் இவர்களுக்கு, மக்கள் நலனில் நாட்டம் எப்படி இருக்கும்??

  • Kunjumani - Chennai.,இந்தியா

    வடநாட்டான் அதிக மதிப்பெண்கள் வாங்கும் தேர்வில் அதிபுத்திசாலிகளான கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோண்டிய மூத்தகுடி சிரமப்படுவது ஏன் என்று நாம் யோசிக்கவேண்டும்.

  • Kunjumani - Chennai.,இந்தியா

    வடநாட்டான் அதிக மதிப்பெண்கள் வாங்கும் தேர்வில் அதிபுத்திசாலிகளான கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோண்டிய மூத்தகுடி சிரமப்படுவது ஏன் என்று நாம் யோசிக்கவேண்டும்.

  • Baskar - Paris,பிரான்ஸ்

    இந்த பந்தாவுக்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் சபையை விட்டு வெளியேற. காரணம் கிடைத்து விட்டது. நாளை இறந்த பெண்ணின் உடலை வைத்து ஒரு ஒப்பாரி வைத்து அழுவார்கள். இதே பிழைப்பு இவர்களுக்கு.

  • Kunjumani - Chennai.,இந்தியா

    மாணவர்கள் எதிர்கிறார்களா இல்லை அரசியல்வியாதிகளா? தமிழர்கள் வடநாட்டவர்களை விட அதிபுத்திசாலிகள் என எக்காளமிடும் தலைவர்கள், வடநாட்டான் கொண்டுவந்த தேர்வை ஏன் எதிர்க்கிறார்கள்?

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    போங்கையாப்போங்க வேறு வேலையே இல்லாத இவர்களால் என்ன நலன் வருது இந்தகொளுத்தும் வெய்யில்லே வெளியே நில்லுங்களேன் , இவ்ளோ பேர் தேர்ச்சி பெற்று இருக்காளே போந்தரம் வீட்டா இந்த தரம் நல்லமுன்னேற்றம்தான் , படிக்கும் பசங்களுக்கு நோ ப்ராப்லம் என்று தெளிவாகிறது

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    செயலு சொட்டு நீலம் விளம்பரத்துல நடிக்கிறத யாரும் சொல்லவே இல்லையே...... அருமையான போஸ்......

  • கைப்புள்ள - nj,இந்தியா

    அன்பு தமிழ் மக்களே, இந்த கேடு கெட்ட சுடலையானை நம்பி வாழ்க்கை தொலைத்து விடாதீர்கள். நான் அடித்து சொல்கிறேன், படிப்பதில் தமிழ் மக்களை அடித்து கொள்ள ஆளே இல்லை. அதுவும் சவால் என்று வந்து விட்டால் தமிழ் மக்கள் எப்பாடு பட்டாவது இது போன்ற தேர்வுகளை ஊதி தள்ளி விடுவார்கள். ஆகையால் அவசரப்பட்டு இந்த சுடலையானின் சதிக்கு ஆளாகி விடாதீர்கள். இன்றைக்கு 40% ஆக இருப்பது, அடுத்த வருடம் 60%, அதற்கு அடுத்த வருடம் 70%, அதற்க்கு அடுத்தவருடம் 85% என்று வடநாட்டுகாரன் எல்லாம் மிரண்டு போகும் அளவுக்கு கண்டிப்பாக வளர்ந்து விடும். சும்மா ஒரு பரீட்சை எல்லாம் வெச்சு தமிழனை அழித்து விட முடியாது. இதுமாறி பத்து பரீட்சை எழுதுவான் தமிழன். என்ன எல்லாமே டைம் தான். அவனுக இவ்வளவு வருசமா பிடிச்சதை ரெண்டு வருசத்துல புடிச்சு காட்டுறானா இல்லையான்னு பாருங்க நம்ம தமிழ் மக்கள். ஒருத்தன் சவால் விட்டு நம்மளை அழிக்க பாக்கிறான்னா முட்டி மோதி உடைத்து தள்ளுவதுதான் நமக்கும் வீரம். ஆகவே இனிமேலும் நீட்ட எதிர்த்து போரிடுவதை விட பயங்கரமா ஜெயிச்சு, வடநாட்டுல இருக்கிற மருத்துவ சீட்டுக்கு நம்ம பசங்களை அனுப்புவோம், ஓகே. வடநாடு பூரா மருத்துவ சீட்ல 15% நம்ம பசங்கதான் இருக்கோணும், என்னடா ஒரு நீட்டை போட்டு காலி பண்ணிடலாம்ன்னு பார்த்தா இப்போ நம்ம சீட்டுக்கும் ஆப்பு வந்திடும் போலயேன்னு முழிக்கணும் அவனுக. ஓகே வா. ஸோ அதனால கண்டமேனிக்கு போராடுறதை விட்டுட்டு இன்னிக்கே நம்ம பசங்களை எப்படி தயார் பண்றதுன்னு பார்ப்போம் நாமே.

  • s t rajan - chennai,இந்தியா

    மடத்தனமான தற்கொலைக்கு வக்காலத்து வாங்கும் ச்டாலின் ஏன் தான் கொள்ளையடித்து வைத்துள்ள பல்லாயிரம் கோடியில் ஒரு சில கோடிகளை வைத்து ஏழை மக்களுக்காகவே ஒரே ஒரு இலவச மருத்துவ கல்லூரியாவது நடத்தி முன்னுதாரணமாகத் திகழக்கூடாது. சும்மா வாயால் பந்தல் போடாதே ச்டாலின் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement