Advertisement

'நீட்' தேர்வில் சென்னை மாணவிக்கு, 12ம் இடம்; கடந்த ஆண்டை விட தமிழகம் அதிக தேர்ச்சி

சென்னை : 'நீட்' தேர்வில், தேசிய அளவில், பீஹார் மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஆந்திரா, தெலுங்கானா மாணவர்களும், அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா, 12ம் இடம் பெற்றுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வில், 13 லட்சம் பேர் பங்கேற்று, 7.14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு, அதிகபட்சமாக, 691 மதிப்பெண் எடுத்து, பீஹார் மாணவி, கல்பனா குமாரி, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


தெலுங்கானாவை சேர்ந்த, ரோஹன் புரோஹித், டில்லியை சேர்ந்த, ஹிமாஷு ஷர்மா ஆகியோர் இரண்டாம் இடமும், டில்லியை சேர்ந்த, ஆரோஷ் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த, பிரின்ஸ் சவுத்ரி ஆகியோர், 686 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.


கீர்த்தனா சாதனை :




தமிழக மாணவி, கே.கீர்த்தனா, 676 மதிப்பெண் பெற்று, 12ம் இடம் பெற்றுள்ளார். இவர், சென்னை கே.கே.நகரில் உள்ள,

பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவி.


'சி.பி.எஸ்.இ., பாடத்தில் இருந்து, அதிக கேள்விகள் இடம்பெற்றதும், இரண்டாண்டுகளுக்கு மேல், தொடர் பயிற்சி எடுத்ததும், வெற்றிக்கு காரணம்' என கீர்த்தனா கூறினார்.


தமிழக அரசு பள்ளிகளில், மூன்று மாதம் சிறப்பு பயிற்சி பெற்ற, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். தமிழக பாட திட்டத்தில், சென்னை கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளி மாணவர் சரண், எந்த பயிற்சியும் இல்லாமல், நீட் தேர்வில், 416 மதிப்பெண் எடுத்துள்ளார்.


மாநில அளவிலான தேர்ச்சியை பொறுத்தவரை, 74 சதவீதத்துடன், ராஜஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது. டில்லி, 74; ஹரியானா, 73 சதவீதம் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. ஆந்திரா மாநிலம், 73 சதவீதம் பெற்று, நான்காம் இடம் பெற்றுள்ளது.


மாநிலங்கள் அளவில், அதிக எண்ணிக்கையில், 1.77 லட்சம் மாணவர்கள், நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா மாநிலம், 40 சதவீதத்துடன், 34ம் இடம் பெற்றுள்ளது. தமிழகம், 33ம் இடம் பெற்றுள்ளது.


கர்நாடகா, 64 சதவீதத்துடன், ஒன்பதாம் இடமும்; தெலுங்கானா, 69 சதவீதம் பெற்று, ஆறாம் இடமும், கேரளா, 67 சதவீதத்துடன் ஏழாம் இடமும்; புதுச்சேரி, 40 சதவீதம் பெற்று, 32ம் இடமும் பெற்றுள்ளன.
மற்ற மாநிலங்களில், பல ஆண்டுகளாக, மருத்துவ நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எழுதி வந்தனர். தமிழக மாணவர்கள், இந்த ஆண்டு தான் முழுமையாக நுழைவு தேர்வு எழுத பதிவு செய்தனர்.


முதல் ஆண்டில், பெரிய அளவில் பயிற்சி எடுக்காமல், 40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, இந்த ஆண்டு முதன்முதலாக, நீட் தேர்வில் பங்கேற்ற, புதுச்சேரி மற்றும் மஹாராஷ்டிரா மாணவர்களும், 40 சதவீதமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தமிழக அரசின் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் நுழைவு தேர்வுக்கு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி, நுாற்றுக்கணக்கான மாணவர்கள், மருத்துவ நுழைவு தேர்வுக்கான, தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.


தமிழகத்தில், 2017ல், 32 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அதை விட, 13 ஆயிரம் அதிகமாக, 45 ஆயிரம் பேர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (30)

  • Rajasekar - Trivandrum,இந்தியா

    தமிழக மாணவர்கள் தமிழுடன் சேர்த்து ஹிந்தி கற்கவேண்டும் எதிரியை அவனது ஆயுதத்தால் வீழ்த்தவேண்டும். ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்துபோகும் என்பது அரசியல் சூழ்ச்சி..... மெத்தப்படித்த முன்னேறிய தமிழ் சமுதாயத்திற்கு தேசிய அளவில் முக்கியத்துவம் வேண்டும் அதற்க்கு நாம் செய்யவேண்டிய முதல்வேலை ஹிந்தி பயில்வது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ஹிந்தியுடன் தங்கள் தாய்மொழி மற்றும் மாநில மொழியை சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள் எனவே ஹிந்தி எதிர்ப்பு என்ற மாயத்திரையை தமிழகம் உடைத்து நாட்டின் தலைமை பொறுப்புக்கு தமிழன் வரவேண்டும். எவ்வளவோ தகுதிகள் இருந்தும் பிரதமர் பதவியை தமிழன் குறிவைக்காதது ஏன்????

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் எந்த மெடிகல் காலேஜில் சேர்வார்கள் அவ்ளோ வசதிகள் இருக்க நம்ம சென்னை மற்றும் இதர மெடிக்கல் காலேஜ்கள்ளே . +2 மார்க்ஸ் வாங்குறது வேறு எப்படி இவ்ளோ மார்க்ஸ் அள்ளித்தறாங்க என்றுதான் புரியலீங்க அந்தகாலத்துலே நாங்க்கல்லாம் படிச்சப்போ ஏவாளும் இவ்ளோ 100%மார்க்ஸ் வாங்கவே இல்லீங்களே கணிதம்லெ கூட 98 ஆர் 99 வாங்கினால் அதிசயம் அவ்ளோ ஸ்ட்ரிக்ட் க்ரெக்க்ஷன் இருந்தது ஒருமுறை மதன் கார்ட்டூன் லே பார்த்தேன் பெரிய கட்டங்கள் போட்டு ஒவ்வொருகட்டம் லேயும் 90 80 / 70 /60/ 50 / 45 / 40 எழுதி தன வீட்டு VAANDAI கொண்டு போடவச்சு மார்க்ஸ் போடுறாப்பல அதப்பானிலே தான் மார்க்ஸ் போற்றங்களோ ஆசிரியர்கள் என்று சந்தேகம் வரது

  • Sankar - Chennai,இந்தியா

    கீர்த்தனா க்கு திராவிட கட்சிகள் வாழ்த்து சொல்லலையே?

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

    முடிவாக MBBS படிக்க எத்தனை அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்தது... எலிஜிபிலிட்டி ஐ வைத்து எல்லோருக்கும் MBBS சீட் கிடைத்ததாக கருதமுடியாது.. அப்புறம் சொல்லலாம் சமூகநீதி கிடைத்திருக்கிறதா என்று...

  • Santhana Kala - Tuticorin,இந்தியா

    நமது அரசியல் வாதிகள் நீட் என்ற பய உணர்வை மாணவர்கள் மத்தியில் எர்படுத்தி விட்டார்கள். மற்றப்படி தமிழ்நாட்டில் நீட் எதிராக போராட்டம் செய்த செலவுகளை மாணவர்களுக்காக இலவச நீட் பயிற்சி கூடங்களை அமைத்திருக்கலாம் போதிய நீட் பயிற்சி வகுப்புகள் இல்லை வரும் காலங்களில் பய உண்ர்வு மாறி முதல் மாநிலமாக திகழும்

  • rasu - chennai,இந்தியா

    இந்த மாணவிக்கு வாழ்த்துக்கள், வரும் காலத்தில் மற்றைய மாணவ / மாணவிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நம்முடைய வாந்தி எடுக்கும் கல்வி முறையை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது . இந்த இன்டர்நெட் காலத்தில் மாணவர்கள் தங்கள் அறிவை பெருக்க நிறைய வழிகள் உள்ளது , போட்டி தேர்வுகளில் ஈடுபட தங்களை தயார் செய்துகொள்ளவும்.

  • ntkதம்பி -

    neet ஒழிக.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    கடின முயட்சி வெற்றி உறுதி , மாணவி கீர்த்தனாவுக்கு வாழ்த்துக்கள் , அடுத்த முறை அதிக தமிழக மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • kalaivani - tirunelveli,இந்தியா

    அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவி நீட் தேர்வில் வெற்றி பெறுள்ளார் என்று யாருக்கு தெரியும் ,

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அடுத்த நீட் தேர்வில் தமிழக மாணவர்களே முதல் ஐநூறு ரேங்கில் இருக்க வேண்டும்...

  • Abdul Bari - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    நீட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்.. தோராயமாக மாணவர்களிடம் கொள்ளையடித்த நீட் கோச்சிங் பண விபரம் கடைசி பத்தியில்... முக்கிய குறிப்பு : நீட் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காது.. உதாரணமாக, தமிழ் நாட்டில் இந்தாண்டு 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. ஆனால், இங்கிருக்கும் MBBS படிப்பு இடங்களோ வெறும் 5660 மட்டுமே.. அதாவது, தகுதி தேர்வில் பாஸ் செய்தவர்களில் 12.5% சதவீதம் பேருக்கு மட்டுமே மெடிகல் படிக்க இடம் கிடைக்கும்... மாயை 1 : நீட் தேர்வு தகுதியை உறுதிப்படுத்துகிறது.. இந்திய அளவில் நீட் தேர்வை எழுதிய 12.69 லட்சம் பேரில் 7.14 லட்சம் பேர் கட்-ஆப் மார்க்வை விட அதிகமாக எடுத்து தகுதி பட்டியலில் இடம் பெறுகிறார்கள்.. ஆனால், இந்தியாவில் மொத்தமுள்ள மருத்துவ இடங்களோ 52,965... அதாவது, நீட் கிளியர் செய்தவர்களில் வெறும் 7.4% சதவீத பேர்களுக்கு மட்டும் தான் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும்.. 2018 இல் பொது பிரிவினர் கட்ஆப் 720 க்கு 119 (16.5%) இடஒதுக்கீடு பிரிவினருக்கு 720 க்கு 96.. அதாவது நீட் தேர்வில் 16.5% & 13.3% சத மதிப்பெண்களை எடுத்தாலே தகுதி பட்டியலில் இடம் கிடைத்துவிடும்.. ஆனால், மாநில +2 பொது தேர்விலோ 50% சத மதிப்பெண்களை எடுத்தால்தான் தகுதி.. மாயை 2 : நீட்டால் தனியார் கல்லூரிகளில் டொனேஷனுக்கு வேட்டு.. நீட் கிளியர் செய்த 7.14 லட்சம் பேரில், அரசு கல்லூரிகள் & தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு கோட்டாவில் மெரிட் அடிப்படையில் 50 ஆயிரம் பேருக்கு இடம் கிடைக்கும்.. மீதமுள்ள 6.5 லட்சம் பேரிலிருந்து, மொத்தமுள்ள பத்தாயிரத்து சொச்சம் மேனஜ்மென்ட் கோட்டா இடங்களை வழக்கம்போல பணம் வாங்கிகொண்டு, டொனேஷன் வாங்கிக்கொண்டு தனியார் கல்லூரிகள் நிரப்பிகொள்ளலாம்.. எந்த தடையும் இல்லை.. மாயை 3 :சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்.. எந்த பாடத்திட்டத்தில் படித்தாலும், தனியார் நீட் பயிற்சி மையங்களில் ஒரு ஆண்டோ, இரண்டாண்டோ, 2 லட்சம் ரூபாய்கள் தனியாக செலவழித்து படித்தால்தான் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும்... நிஜம் : 12.6 லட்சம் பேர் நீட் கோச்சிங் படித்திருந்தால், அதில் வெறும், 60 ஆயிரம் பேர் மட்டும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைகிறது.. மீதமுள்ள 12 லட்சம் பேர் செலவழித்த தலா 2 லட்சம் ரூபாய்.. அதாவது மொத்தம் 24 ஆயிரம் கோடி ரூபாய் எள்ளு.. சரி, இதில் பாதியையே எடுத்துக்குங்க, நீட் மையங்களுக்கு 12 ஆயிரம் கோடி கொள்ளை லாபம்.. இதில் நீட் ஆதரவு மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு பங்கு???

  • ரத்தினம் - Muscat,ஓமன்

    UP , பிஹார் மாநிலங்களில் அகில இந்திய போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகமாக உள்ளன. தமிழக அரசு கிராமப்புற மாணவர்களுக்காக பயிற்சி மையங்கள் திறக்கலாம். அதை விடுத்து நீட்டை குறை சொல்லிக்கொண்டு உட்கார்ந்து இருப்பதில் பிரயோஜனம் இல்லை.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    //சி.பி.எஸ்.இ., பாடத்தில் இருந்து, அதிக கேள்விகள் இடம்பெற்றதும், இரண்டாண்டுகளுக்கு மேல், தொடர் பயிற்சி எடுத்ததும், வெற்றிக்கு காரணம்' என கீர்த்தனா கூறினார்.// பயிற்ச்சி என்றால் பல லட்சங்கள் செலவாகும் . இதெல்லாம் ஏழை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சாத்தியமா ? ஒன்னு உயர ஜாதி, இல்லை பணக்காரன் , இவர்கள் தான் மருத்துவன் படிக்கணும்னு மத்திய அரசு முடிவு செய்து உள்ளது .

  • s t rajan - chennai,இந்தியா

    முயற்சி திருவினையாக்கும் என்று நிரூபித்துள்ளார். கல்விக் கொள்ளையைத் தடுக்கும் நீட் முயற்சி வாழ்க, வெல்க.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    டாப் 50 மதிப்பெண் பெற்றவர்களில், டெல்லியைச் சேர்ந்த 8 பேர், குஜராத்தில் 7 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து தலா 4 பேர், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா, பஞ்சாப்பைச் சேர்ந்த தலா 3 பேர், மத்திய பிரதேசம் 2 பேர், ஒடிசாவிலிருந்து 2 பேர், சண்டிகாரிலிருந்து 2 பேர், தெலங்கானாவிலிருந்து 2 பேர், மேற்கு வங்காளத்திலிருந்து 2 பேர், பீகாரிலும், தமிழ்நாட்டிலிருந்தும் ஒருவர், இதரப் பகுதியிலிருந்து ஒருவர் என டாப் 50 இடத்தைப் பிடித்துள்ளனர்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    படிப்பறிவே கம்மியாக உள்ள பீகார் மாநில மாணவி முதலிடமா? நம்பவே முடியவில்லை. அதுதான் ஆளுக்கு தகுந்த மாதிரி கேள்விக்கலாமே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement