Advertisement

'நீட்' தேர்வு, 'ரிசல்ட்'; கட்சிகளுக்கு மூக்கறுப்பு

'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழகத்தில் குரல் எழுப்பிய அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்ட மூக்கறுப்பாக, இத்தேர்வு எழுதிய, 1.14 லட்சம் பேரில், 45 ஆயிரம் மாணவர் - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் வாயிலாக, பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், நீட் தேர்வு நன்றாக எழுதியதன் காரணமாக, டாக்டராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள, 7,470 மருத்துவ படிப்பு இடங்களுக்கு போட்டியிடும் அளவுக்கு, ஆறு மடங்கு மாணவர்கள் தகுதி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.


தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டு வந்தனர். இதில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தங்களது பொருளாதார செல்வாக்கை பயன்படுத்தி, தனியார் கல்லுாரிகளில் சேர்ந்தனர். அதனால், டாக்டர்களின் தகுதியும், திறமையும் கேள்விக்குறியானது.


கடும் எதிர்ப்பு :




அதனால், உயிரை காப்பாற்றும் புனித தொழிலான மருத்துவத்தில், தரத்தை உறுதி செய்யும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு, தமிழகத்தில் உள்ள பல கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன.


'நீட் தேர்வால், தமிழகத்தில் சமூக நீதி பாதிக்கப்படும். தமிழக மாணவர்களால், மருத்துவம் படிக்க முடியாது; பிற மாநில மாணவர்கள், தமிழக மாணவர்களுக்கான இடங்களை அபகரிப்பர்' என்றெல்லாம், இக்கட்சி கள், மத்திய அரசுக்கு எதிராக, தீவிர பிரசாரம் செய்தன.


இப்பிரச்னை, உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதும், 'நீட் தேர்வு கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட, அனைத்து மாநிலங்களுக்கும், நீட் தேர்வு கட்டாயமானது. இதில், தமிழக அரசு, விலக்கு கேட்டும் கிடைக்கவில்லை. எனவே, நீட் தேர்வுக்கு, தமிழக அரசின் சார்பில், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.


இந்நிலையில், நீட் தேர்வு, மே, 6ல், நாடு முழுவதும் நடந்தது. இதன் முடிவுகளை நேற்று, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டது. நாடு முழுவதும், தேர்வு எழுதிய, 12.69 லட்சம் பேரில், 56 சதவீதமான, 7.14 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மொத்தம், 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட தேர்வில், சென்னை, பத்மசேஷாத்ரி பள்ளி மாணவி, கே.கீர்த்தனா, 676 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், 12ம் இடம் பிடித்துள்ளார்.


தமிழகத்தில், 1.14 லட்சம் பேர், நீட் தேர்வை எழுதினர். அவர்களில், 45 ஆயிரத்து, 336 பேர், தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லுாரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். அதாவது, தேர்வு எழுதியோரில், 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.


தமிழகத்தை பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் வாயிலாக,
கவுன்சிலிங் நடத்தப்படும். இதில், மொத்த இடங்களில், 85 சதவீதம், நீட் தேர்ச்சி பெற்ற, தமிழக மாணவர்களுக்கே வழங்கப்படும். 85 சதவீத இட ஒதுக்கீட்டில், தோராயமாக, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 3,894 இடங்களும், பி.டி.எஸ்., என்ற, பல் மருத்துவ படிப்புக்கு, 1,880 இடங்களும் என, மொத்தம், 5,774 இடங்கள் உள்ளன.


மேலும், இந்த ஆண்டு முதல், நீட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள, இந்திய மருத்துவமான - ஆயுஷ் படிப்புகளுக்கு, 1,696 இடங்கள் உள்ளன. எனவே, தமிழக ஒதுக்கீட்டில், மொத்தம், 7,470 மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றுக்கு, இந்த இடங்களை விட, ஆறு மடங்கு அதிகமாக, 45 ஆயிரத்து, 336 மாணவர்கள் போட்டியில் உள்ளனர்.


'நீட் தேர்வால், தமிழகத்தில் சமூக நீதி பாதிக்கப்படும்; தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு பாழாகி விடும்' என்றெல்லாம் பிரசாரம் செய்த, கட்சிகளுக்கு ஏற்பட்ட மூக்கறுப்பாக, 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்க தகுதி பெற்றுள்ளனர். இதன் காரணமாக, பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், நீட் தேர்ச்சி மூலமாக, மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.



அரசு ஒதுக்கீடு :




தமிழகத்தில், நிகர்நிலை பல்கலைகளில், 1,349 மருத்துவ இடங்கள் உள்ளன. அவற்றுடன், அகில இந்திய ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., 456 மற்றும் பி.டி.எஸ்., 30 இடங்களையும் சேர்த்து, 1,835 இடங்களிலும், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தமிழக மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த, மத்திய அரசு ஒதுக்கீட்டிலும் சேர முடியும்.

குறைந்த மதிப்பெண் எவ்வளவு? 'நீட்' தேர்வில், மருத்துவ இடங்களில் சேருவதற்கான, 'கட் ஆப்' என்ற, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 'கட் ஆப்' ஒன்பது மதிப்பெண் குறைந்துள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களது இன அடிப்படையில், குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. இதன்படி, பொதுப் பிரிவினருக்கு, 119 மதிப்பெண் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில், 691 மதிப்பெண் வரை, 6.35 லட்சம் மாணவர்கள் பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில், மாற்றுத் திறனாளிகளுக்கு, குறைந்தபட்சமாக, 107 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினருக்கும், குறைந்தபட்ச மதிப்பெண், 96. பிற்படுத்தப்பட்டோரில், 54 ஆயிரத்து, 653 பேர்; தலித் பிரிவில், 17 ஆயிரத்து, 209; பழங்குடியினர், 7,446 பேர், இந்த குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளில், பொதுப் பிரிவினர், 205; பிற்படுத்தப்பட்டோர், 104; தலித், 36; பழங்குடியினர், 12 பேர், தகுதி பெற்றுள்ளனர். இந்த பட்டியலின்படி, குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்கள், மருத்துவ படிப்பில் சேர தகுதியானவர்கள். அவர்களுக்கு, அகில இந்திய தர வரிசை பட்டியலின் படி, மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.


- நமது நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (160)

  • மாரிமுத்து.க - சென்னை,இந்தியா

    இன்று உங்களுக்கு புரியாத "நீட்" அரசியல்... முப்பது வருடங்கள் கழித்து ஹிந்தி பேசும் டாக்டர் உங்களுக்கு மருத்துவம் பார்க்கும் போது புரியும்...

  • chezhiyan -

    தமிழகத்தில் 45000 மாணவர்கள் தேர்ச்சி தான். 100 மார்க் வாங்கினாலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 400 மார்க்குக்கு மேல் வாங்கினால் தான் அரசு கல்லுரியில் சேர முடியும். லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து கோச்சிங் சென்ற மாணவர்கள் தான் 400 மார்க் வாங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க 100 மார்க் வாங்கியவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தின் நோக்கம் என்னவென்றால் பணக்கார மாணவர்கள் தனியார் கல்லூரியில் சேர வேண்டும் என்ற நோக்கம் தான். ஆண்டுக்கு 20 லட்சம் பணம் செலுத்தி ஏழை மாணவர்கள் தனியார் கல்லூரியில் சேர முடியாது. அரசு கல்லூரியில் சேர 400 மார்க் வாங்க லட்சங்கள் செலவு செய்து கோச்சிங் போக வேண்டும். ஆக மொத்தம் NEET தேர்வால் வந்த பலன் என்ன வென்றால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் இல்லை..

  • sri -

    நீ பேசாம இரு. நீ உன் மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா போற. நீ அங்க போக காரணம் என்னவென்றால் அங்கு மருத்துவம் தரமானதாக உள்ளது. நாங்கள் நல்ல மருத்துவத்திற்கு எங்கே போவது? எங்களுக்கு நல்ல மருத்துவர்கள் இருந்தால் தான் எங்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும். அதனால் எங்களுக்கு நீட் வேண்டும்

  • siriyaar - avinashi,இந்தியா

    But out of 7400 seats over 2000 management quota, each seat sold for 3 crore rate, most NRI people spent and got it, qualification is not matter only economy matters, now these 2000 seat allotted based ranking only so no need to pay money. But it is heavy loss to karuna family , puthiyathalaimurai family and vaiko like people. But benifit to poor people.

  • Nakeeran - Tirunelveli,இந்தியா

    நீட் அவசியம் தேவை ஆனால் மருத்துவத்துக்கு மட்டும் இல்லை ,அரசியலுக்கும் தான் ,தன் வாழ்நாளில் அதிகபட்சம் 5 முதல் 6 லக்ஷம் பேரையே ஒரு மருத்துவர் பார்ப்பார் ,ஆனால் அரசியல்வாதி பல கோடி பேரின் தலையெழுத்தை தீர்மானிக்கிரார் ,அரசியலுக்கும் ஏன் நீட் கூடாது ?இதை பொது மக்கள் வலியுறுத்த வேண்டும் .தமிழிசை அக்கா இதற்கு தயாரா ?உங்கள் மோடி தேறுவாரா ?குறிப்பு:நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பவர் தான் பிரதமர் ஆக வேண்டும்

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

    நீட்டுக்கு ஆதரவை பேசுற யாராவது எப்படி பீகாரில் பரிசை எழுதியவர்களின் எண்ணிக்கையை விட அதிகமான பேருக்கு தேர்வு முடிவுகள் வந்திருக்கிறது என்பதை விளக்க முடியுமா?

  • s t rajan - chennai,இந்தியா

    இதேப் போல் பொறியியல் படிப்புக்கும் வழிவகுத்தால், ஏழைகள் அதிலும் திறமையில் அடிப்படையில் வெற்றி காணுவர். கட்டணங்களும் குறையும். கல்வியின் தரம் உயரும். கல்விக் கொள்ளை செய்து கட்சி நடத்தும் அனைத்து அரசியல் வ்யாதிகளும் மாயும்.

  • venkat Iyer - nagai,இந்தியா

    NEET Exam should must in all over India.Life related issue.Tamil Nadu Student should not be think reservation.

  • Saravanaperumal Thiruvadi - pollachi,இந்தியா

    நாடு முழுவதும் ஒரே பாட திட்டம் இல்லாத பொழுது CBSE பாட திட்டத்தின் படி மட்டும் தேர்வு வைத்துள்ளது நியாயமில்லை தமிழக மாணவர்கள் நீட் எனப்படும் குறுக்கு வழி CBSE தேர்வு முறைக்கு தயார் செய்வது என்பது வேடிக்கையானது மருத்துவ கல்வி கட்டணம் மிக அதிகரித்து உள்ளது இதை பற்றி யாரும் பேசுவது இல்லை அதிக மார்க் எடுத்தவரை விட குறைந்த மார்க் எடுத்த பணக்காரர்கள் தான் படிக்க முடியும் என்பதை தான் நீட்டும் சொல்கிறது மத்திய ரசு நடத்தும் எய்ம்ஸ் ஜிப்மருக்கு நீட் செல்லாது என்பது ஏன் தமிழக பாடத்திட்டம் சிறப்பானது அதனடிப்படையில் தேர்வு வைத்தால் தமிழக மாணவர்கள் முதலிடம் பெறுவர் CBSE சிறந்த பாடம் என்றால் 2 லட்சம் செலவு செய்து ஏன் கோச்சிங் படிக்க வேண்டும் அந்த முதலிட பிகார் மாணவி டெல்லியில் சென்று கோச்சிங் பெற்றுள்ளார் உயிரிழந்த பிரதிபா 12 வருடம் CBSE படித்து அதில் இரண்டு வருடம் லட்சங்கள் செலவு செய்து கோச்சிங் படிப்பவர்கள் எழுதும் CBSE தேர்வு முறையில் எப்படி போட்டியிட முடியும் CBSE தமிழ் வினாத்தாளில் 39 கேள்விகள் தவறு

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    சமசீர் கல்வி முறைக்கு முன் தமிழக கல்வி சிலபஸ் சி பி எஸ் இ யை விட தரமாக இருந்தது. பா ம க வின் திரு ராமதாஸ், திரு கருணாநிதி யை மிரட்டி சமசீர் கல்வி முறையை கொணர வைத்தார். இந்த விஷயம் தான் நமது மாநிலத்தை கல்வி துறையில் புரட்டி போட்டது....

  • THANGARAJ - CHENNAI,இந்தியா

    +2 வில் குறைந்த மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் பாஸ் ஆகியிருந்தால் டாக்டர் ஆகிவிடலாம் என்றால், +2 என்ற பாட திட்டத்தை கைவிட்டு, நீட் தான் ஒரே படிப்பாக 2 வருடம் படிக்கலாமே? இதனால், மாணவர்களின் நேரம் வீணாவது மற்றும் மனஉளைச்சல் தடுக்க படும், பெற்றோரின் பணம் / பொருளாதாரம் காக்க படும். .......... நம்மை யார் காப்பாற்றுவார்கள்????????????

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

    வெட்டியா கமெண்ட் போடாம போய் படிச்சு பாஸ் பண்ணுங்க .. தமிழகத்திலிருந்து 45000 பேர் தேர்வாகி உள்ளனர் .. இது எண்ணிக்கையில் அதிகம் ஆனால் சதவிகிதத்தில் குறைவு .. 7420 சீட் வைச்சுக்கிட்டு சீட் வேற ஆளுக்கு போகுதுனு உட்ட பீலா அந்து போச்சு .. இப்போ 6 மடங்கு மாணவர்கள் மற்ற மாநிலங்களில் படிக்க போகிறார்கள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • NKR rekha - Karur,இந்தியா

    பொதுப்பிரிவினரே 720 க்கு 119 எடுத்தால் போதும் பாஸ் அதாவது 16.52% மார்க் , பாஸ் பண்ணினால் மட்டும் மெடிக்கல் சீட் கிடைக்குமா ? அதற்கு நல்ல ரேங்க் வேண்டும், நல்ல ரேங்க் வாங்க பயிற்சி மையங்களுக்கு லட்சக் கணக்கில் அழ வேண்டும்

  • Justin - Tirunelveli,இந்தியா

    , Tamilnadu is in 35th Position, Out state students are scored more, so in tamilnadu govt medical sheets max will be occupied by other state students.For this reason only all tamil nadu students are against neet.

  • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

    சரிப்பா..... தமிழனா பொறந்த ஒரே காரணாத்தால் எல்லா தமிழனும் டாக்குட்டரு. அது என்ன டாக்குட்டரு மட்டும் இன்ஜினீயரு, வக்கீலு, எல்லாம்..... பள்ளிக்கூடத்துதுல பெயர் சேர்த்துட்டாளே 21 வயசு முடிஞ்சா உடனே எல்லாருக்கும் டாக்குட்டரு பட்டம் கொடுத்துடனும் காரணம் நாங்க தமிழர்கள். அப்புறம் வடக்கத்திக்காரன் காப்பி அடிச்சு நீட் பாஸ் பண்ணுறான், எங்களுக்கு காப்பி அடிக்க எல்லாம் தெரியாது எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம், பேப்பர் மாத்துறது, பிட் அடிக்கிறது, பேப்பர் சேஸ் பண்ணுறது இதெல்லாம் தான் கரணம் இந்த உலகத்த்துலயே ஏன் இந்த வேர்டுலேயே நாங்க மட்டும் தான் அறிவாளி. அப்புறம் ஏழை தமிழன், கிராமப்புற தமிழன், மாங்காய் பறிக்கும் தமிழன், தேங்காய் பறிக்கும் தமிழன் எல்லாரும் டாக்குட்டரு ஆகணும் எங்ககிட்ட தகுதி எல்லாம் கேட்கப்படாது.

  • Tamilselvan - Trichy,இந்தியா

    Even after 100 yrs, politicians wont improve govt schools and state board syllabus.They will sing village students will benefit from NEET exemption but namakkal schools and residential schools only benefit from NEET exemption. Most of these schools run by education mafia(politicians).Now no need to join those schools.Because of NEET their is down.Last ten years school wise MBBS Admission list should be published and the same should be compared with NEET list.To prevent flourishing coaching institutes, syllabus, infra structure, teaching quality should be improved.But i dont think they wont be able to do the same.We all know the status of engineers because of admission based on 12 th marks

  • Tamilan - Doha,கத்தார்

    . NEET. என்பது சமூக நீதிக்கு எதிரானது, மாநில சுயாட்சிக்கு எதிரானது. கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. மொத்தத்தில் தமிழக அரசு கல்லூரியில் உள்ள இடங்களை வட மாநில மாணவர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் முயற்சி. இதை நிருபவிக்கும் விதமாக சென்ற NEET. பாஸ் ஆகி தமிழ் நாடு அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த பெயர்கள் பெரும்பான்மையான அனைத்தும் வட மாநிலத்து பெயர்கள். NEET, யை ஒழிக்கும் வரை போராடி தமிழகத்தின் கல்வி உரிமையை மீட்டு எடுப்பதே சிறந்தது.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    நியூ ஜெர்ஸி கைப்புள்ள, தாய்லாந்து சாமி ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள்தானே ? சாமி கருத்துக்கு ஏன் கைப்புள்ள அந்தக்கால மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி மேறி வேற பக்கம் போயி ரிப்லை உடுறார் ....

  • Mulumadhi - Chennai,இந்தியா

    குறைந்த மார்க் எடுத்தவங்களுக்கும் வாய்ப்பு ன்னு தலைப்பு போட்ருக்கது நல்ல தான் இருக்கு ஆனா அதிக மார்க் வாங்கி தமிழ் medium படுச்சுட்டு இன்னிக்கு தன்னோட கனவெல்லாம் விட்டுகுடுத்துட்டு உக்காந்திருக்கவங்க நிலைமை என்ன ? -

  • vbs manian - hyderabad,இந்தியா

    பள்ளி கல்லூரி வாசலையே மிதிக்காத அரசியல் வாதிகள் சமூக நீதி என்ற பெயரில் நடத்திய கூத்து இப்போது அம்பலம் ஆகி விட்டது.

  • Krish Sami - Trivandrum,இந்தியா

    Good ning. In a multi stream school education tem, a common entrance examination is a mandatory requirement. . Individual stream managers should do the needful to prepare their students adequately for the common entrance test, based on the syllabus for the test. Kids also should be educated to look into other options when they fail to make it in the common test. There are indeed excellent other options. I personally know many students of my generation did BSc , MSc and PhD and they are professors and scientists in the leading global institutes and also Indian institutes. Today, there are plenty of opportunities in Engineering. Let us not just polarize our kids to make them feel 'if it is not neet, I am a waste", resulting in suicides. I wish people are responsible when expressing opinion on sensitive subjects. Kids, if you have made it , Congratulations. If you have not made it, believe me there are interesting & rewarding other options.

  • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

    4o % மார்க் எடுக்க முடியவில்லை. ஆனால் ஆசிரியருக்கு சம்பளம் ஆண்டுக்கு 10 % சதம் கூடுகிறது. ஏன் நீட்டை எதிர்க்கிறார்கள் இப்போது தெரியது. கல்வியாளர்களின் தரமும்,அரசியல் வாதிகளின் தரமும் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற பயத்தால் இவர்கள் தமிழ்நாட்டில் எதிர்க்கிறார்கள்,கேரளா எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை மாறாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

  • periasamy - Doha,கத்தார்

    தமிழக மாணவர்களை கடைசி பெஞ்சில் அமர்த்தியதே இந்த நீட்டின் சாதனை மேலும் தமிழக மாணவனை கேரளா ஆந்திராவில் அலையை விட்டதுதான் நீட்டின் சாதனை தூ நீங்களும் உங்க நீட்டும் போங்கடா

  • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் 35-வது இடம் என்பதை எவராலும் ஜீரணிக்க முடியாது. அதுவும் உலகமே சந்தி சிரிக்கும் அளவுக்கு காப்பியடித்த, 30% பேர் மட்டுமே பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்ற பீகார் மாணவர்கள் 60% பேர் தேர்ச்சியாம் தமிழக மாணவர்கள் 60% பேர் தோல்வியாம்.. மனசாட்சியே இல்லையா உங்களுக்கு என்றுதான் கேட்க தோன்றுகிறது. காலம் காலமாக கல்வியில் பின் தங்கியுள்ள மாநிலங்கள் நீட் தேர்வு முடிவுகளில் திடுதிப்பென முன்னிலை பெற்று வருகின்றன. ஆனால் நேர்மையுடனும் அக்கறையுடனும் படித்து 80% 90% தேர்ச்சி பெறுகிற தமிழக மாணவர்கள் அறிவற்றவர்கள் என இந்த நீட் தேர்வு முடிவுகள் செவுளில் அறைகின்றன. அதுவும் 70% மாணவர்கள் தோல்வி அடைந்த பீகாரை விட மிகவும் பின் தங்கிப் போய்விட்டதாம் தமிழகம். அதைவிட கொடுமை பீகார் மாணவி இந்திய அளவில் முதலிடமாம். தமிழகம் மீது தாக்குதல் தமிழகம் மீது தாக்குதல் இதையெல்லாம் எப்படி நம்புவது எனத் தெரியவில்லை? ஆனால் தமிழகத்தை திட்டமிட்டு ஒதுக்கும் செயல் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. சிபிஎஸ்இ நீட் திணிப்பு சிபிஎஸ்இ நீட் திணிப்பு மாநில பாடத் திட்டப் பாடங்களில் படித்து 1000-க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து இயல்பாகவே மருத்துவ படிப்புக்கு தமிழக மாணவர்கள் தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஆனால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்கிற வஞ்சக எண்ணத்துடன் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்படும் நீட் நுழைவுத் தேர்வை திணித்து உயிர்களை காவு கொள்கிறார்கள். ஒப்புதல் ஏன் பெறலை? ஒப்புதல் ஏன் பெறலை? இடஒதுக்கீட்டை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வந்த தமிழக அரசால், ஜல்லிக்கட்டைப் பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டு வந்த அரசால், வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெற இயலாமல் இருப்பது கையாலகத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்? இன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்? இன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்? தமிழக அரசுதான் இப்படி என்றால் எப்போதும் தமிழகத்திற்கு புறம்பாகவே செயல்படும் மத்திய அரசு, அந்த அவசர சட்டத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது. இப்போது பிரதீபா பலியாகிவிட்டாள்.. கீர்த்திகா உயிருக்குப் போராடுகிறாள்... அன்று அனிதாவை கொலை செய்தார்கள்.. இன்னும் இன்னும் எத்தனை உயிர்கள்தான் இந்த அரசுகளுக்கு வேண்டுமாம்

  • christ - chennai,இந்தியா

    நீட் தேர்வு வைத்தால் அரசியல்வியாதிகள் தங்களின் கல்லூரிகளில் கல்லா கட்டமுடியாது என்பதாலேயே நீட் தேர்வை எதிர்த்து வந்தனர் .

  • Sahayam - cHENNAI,இந்தியா

    கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை கடைசி 3-வது இடத்துக்கு தள்ளிய நீட் கொடுங்கரம் கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை கடைசி 3-வது இடத்துக்கு தள்ளிய நீட் கொடுங்கரம் - இதற்க்கு சிலர் கொண்டாட்டம் ??

  • BCS - Bareilly,இந்தியா

    வட இந்திய மாணவர்கள் +1&+2 வகுப்பு செல்ல மாட்டார்கள். மாறாக coaching தான் செல்வார்கள். Coaching centere school attanceku arrange panniduvangu. Exam மட்டும் எழுதினால் போதும்

  • Tamilvaanan - Madurai,இந்தியா

    ஜைஹிந்த்ப்புறம், suresh, boochimaranthu, Raman இன்னும் பல மறைமுக ஆன்டி சாஃபிரான், க்ரீன் அண்ட் வைட் கமெண்ட்ஸ்ச அதிகமா எதிர்பாக்குறேன்.

  • Balagurusamy Ayyanadar - Thirumangalam, Madurai ,இந்தியா

    நீட் தேர்வே வேண்டாம் என்ற தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி பரீட்சை எழுத வைத்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை. வீணாக நம் மாணவர்களுக்கு கால விரயமும் பண விரயமும் தான். நம் மாநிலத்திலேயே அனைவரும் எழுதியிருந்தால் எவ்வித மன உளைச்சலும் இல்லாமல் நன்றாக எழுதி இன்னும் நிறைய பேர் அதிக மதிப்பெண் எடுத்திருப்பார்கள். பாலகுருசாமி அய்யநாடார்

  • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

    பிரதமர் பதவிக்கும், நிதி மந்திரி பதவிக்கும் இதை போல தேர்வு வைக்க வேண்டும். அப்போ ஒன்றும் தெரியாத கழிசடைகள் எல்லாம் பிரதமராகவோ இல்லை நிதி மாதிரியாகவோ முடியாது.

  • Sanjay - Chennai,இந்தியா

    டுமிழர்கள் ஆகிய நாங்கள் எல்லாம் நாயாட நரியாட நிகழ்ச்சி பார்க்க தான் லாயக்கு. இலவசம் தான் எங்கள் லட்சியம், படிப்பு எங்களுக்கு தேவையில்லை.

  • balakrishnan - coimbatore,இந்தியா

    பெரும்பாலானவர்கள் பயந்த அளவுக்கு நிலைமை இல்லை, ஆனாலும் அகில இந்தியாவில் தமிழகம் 6 வது இடத்தை பெற்றுள்ளது, அடுத்தடுத்த வருடங்களில் நிலைமை மேலும் சீரடையும் என்று எதிர்பார்க்கலாம், மாணவர்களும் பள்ளிகளும் நன்கு கடுமையாக உழைக்க வேண்டும் அப்போது தான் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்

  • krishnan - Chennai,இந்தியா

    தமிழ்நாடு தேர்ச்சி சதவீதத்தில் 35 வது இடத்தில் உள்ளது, அதாவுது கடைசில் இருந்து 3 இடம்.

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    நீட் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதனால், தரமான மருத்துவர்கள் கிடைப்பதோடு, கருப்பு பணமும் ஒழிக்கப்படும். கருப்பு பணத்தை வைத்து இதுவரையில் விளையாடியவர்கள் பாடு இனி திண்டாட்டம்தான்.

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    தினமலர் இப்படி நீட்டிற்கு வக்காலத்து வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. பெருநகர செல்வந்தர்கள் குழந்தைகளோடு கிராமப்புற அன்றாடம் காய்ச்சி குழந்தைகள் போட்டி போட்டு ஜெயிக்க முடியுமா..?..மேலும் தலித்துகள் , இப்போ நகரம், அரசு வேலையில் உள்ளவர்களின் குழந்தைகளே வெற்றி பெற முடியும்.. கிராமப்புற ஒதுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் தேர்வு பெற முடியுமா..?. திறமைக்கு முக்கியம் கொடுக்க வேணும் தான் அதற்காக ஒதுக்கப்பட்ட மக்களை புறக்கணிக்க வேண்டுமா..? ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் இந்த மருத்துவ படிப்பு கிடைக்க வேணும்..அதற்க்கு இட ஒதுக்கீடு தேவை.. இதோடு இந்த மக்களின் குழந்தைகளுக்கு தனி பயற்சி மையம் தேவை.. இதை செய்யாமல் திறமை என்று ஒரு சாரார் மட்டும் மருத்துவம் படித்தால் நல்லதில்லை..

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    பண வசதி உள்ளவர்கள் அயல் நாடு சென்று மருத்துவம் படிக்கிறார்கள். அங்கு செலவு அதிகம் ஆவதில்லை.

  • Sahayam - cHENNAI,இந்தியா

    நீட் எதிர்ப்பு சாமானியர்களுக்குத்தான் , வசதி படைத்தவர்களுக்கு நீட் ஒரு வர பிரசாதம். இதில் மூக்கு அறுபட ஒண்டும் இல்லை. நீட் பாஸ் செய்தாலும் பீஸ் கட்ட திராணி உள்ளவர்கள் வசதி படைத்தவர்கள்தான், சாமானியர்கள் சேர மாட்டார்கள்

  • Madhavarao Neelamegam - Mumbai,இந்தியா

    பல வருடங்களாக நுழைவுத்தேர்வு நடத்தும் மகாராஷ்டிராவை தமிழ் நாடு மாணவர்கள் வெறும் ஒரு வருடத்தில் பின்னுக்கு தள்ளியது. இதிலிருந்தும் என்ன தெரிகிறது? நம்முடைய மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள். அரசியல்வாதிகள் அவர்களை முட்டாளாக்குகிறார்கள்.

  • Ray - Chennai,இந்தியா

    இதில் பாஸ் பெயில் தேவையில்லை (இது தற்கொலைகளைத் தடுக்கும்) ரேங்க் மட்டும் போதும் இந்த ரேங்க் அகில இந்திய அளவில் இல்லாமல் மாநில அடிப்படையில் இருக்கலாம் தகுதியுள்ளவர்களுக்கு கொடுத்துக் கொண்டே வந்தால் மீந்து போன கல்லூரியிடங்களை அதற்குப் பின்னாலுள்ளவர்களுக்கும் முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தரலாம் இதற்கு கடைசீ தேதியும் அறிவிக்கலாம் அந்த தேதியுடன் கடையைக் கட்டலாம்

  • Saravanan RK - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    தலைப்பு உள்நோக்கம் கொண்டது . குறைந்த மதிப்பெண் பெற்றவர் மருத்துவர் ஆவது நல்ல விஷயம் அல்ல. தகுதியானவர் மருத்துவராவதே நல்லது.

  • velan - california,யூ.எஸ்.ஏ

    மாணவர்களை பாடாய் படுத்துகிறோம் . தமிழ்நாட்டில் உள்ள தமிழக ஒதுக்கீடு இடங்களுக்கு தமிழகமே தேர்வு நடத்தி நிரப்பலாம் .

  • Ananthakrishnan - Thanjavur,இந்தியா

    "பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், நீட் தேர்ச்சி மூலமாக, மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்"- இங்கேதான் சந்தேகம் ஏற்படுகிறது. மண்டையை உடைத்துக்கொண்டு பிளஸ் 2 - தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை பெரும் மாணவர்களின் முயற்சிக்கு மதிப்பளிக்காமல் நீட் தேர்வு என்ற ஒன்றை கொண்டு வந்து கல்வியில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு மாணவர்களுக்கு அநீதி செய்யும் நோக்கத்தோடும், கல்வியில் பின்தங்கியுள்ள பிஹார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் முதலிய வட இந்திய மாணவர்கள் முன்னணியில் இருப்பது போலவும் காட்டப் படுவதற்காகவே ஏதோ வேலைகள் நடப்பதாகவே தோன்றுகிறது. இந்த நீட் தேர்வில் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு மனதளவில் தனிப்பட்ட முறையில் கொடுமைகள் செய்து, 4 ,5 மாநிலங்கள் கடந்து ராஜஸ்தான் முதலிய மாநிலங்களுக்கு மிகக் குறைந்த கால அளவில் சென்று சேர்ந்து தேர்வு எழுத வைக்கப் பட்டுள்ளனர். வட இந்திய மாநிலங்கள் தென் இந்திய மாநிலங்கள் அளவுக்கு கல்வியில் முன்னேறியவர்கள் இல்லை. இது நிதர்சனமான உண்மை. குறைந்த பட்சம் பிளஸ் 2 மார்க்கு மற்றும் நீட் தேர்வில் பெற்ற மார்க் சேர்த்து வரும் கட் ஆப் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப் படவேண்டும். மற்றும் நீட் தேர்வில் மைனஸ் மார்க் முறை, அதாவது தவறான ஒரு விடைக்கு மார்க்கை குறைக்கும் முறை கைவிடப் படவேண்டும். ஊழல் செய்வதற்கு எல்லாவித வசதியையும் வட இந்தியர்கள் வைத்துக்கொண்டு, தென் இந்திய மாணவர்கள் மட்டமானவர்கள் என்று காட்டுவதற்காகவும், பெருமளவில் வட இந்திய மாணவர்களை தென் இந்திய, குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இட்டு நிரப்பவும் கொண்டு வந்ததே நீட் தேர்வு முறை. நிச்சயமாக பாரபட்சமுள்ள இந்த நீட் தேர்வு ஒழித்துக் கட்டப் பட்டு கல்வியை திரும்பவும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும். தவறினால் அடிப்படையில் கல்வியில் திறமை குறைந்த வட இந்திய மாணவர்கள் தென் இந்திய மாணவர்களை விட அறிவாளிகள் மற்றும் திறமையானவர்கள் என்று நீட் தேர்வு ஊழல்கள் மூலம் நிரூபிக்கும் முறைகள் தொடர்ந்து நிலை நிறுத்தப் படும் ஆபத்து உள்ளது. நீட் தேர்வு முறை ஆபத்தானது, நியாயம் அற்றது மற்றும் முற்றிலும் ஒழித்துக் கட்டப்பட வேண்டியது.

  • Silambu Arasan - dharmapurl,இந்தியா

    நீட் தேர்வு ஏழுதிய மாணவர்கள் யார் கூலி தொழிலாளியின் மகனும் மகளுமா அனைவரும் மேல் வர்கம் மாணவர்கள் மட்டும் இதுல எங்க மூக்கறுப்பு இதற்கு தானே ஆசைப்பட்டது மத்திய அரசு

  • கைப்புள்ள - nj,இந்தியா

    அன்பு தமிழ்மக்களே, ஒரு விஷயத்தை நாம நல்லா புரிஞ்சுக்குவோம், ஓகே. நல்ல கல்வி, நல்ல வேலை வாய்ப்பு, மனதுக்கு பிடித்த சூழ்நிலை, இதெல்லாம் கிடைத்தால் எப்பாடு பட்டாவது அந்த இடத்துக்கு போய் விட வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் கடுமையாக உழைக்கிறார்கள். இவ்வளவு ஒரு அருமையான மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் ஒவ்வொருத்தனும் எவ்வளவு கடுமையாக உழைக்கணும்ன்னு யோசிச்சு பாருங்க. டாக்ட்டர்ங்கிறது இன்னொரு கடவுள். அப்பேற்பட்ட கடவுளையே உருவாக்கும் மகத்துவமான இந்த படிப்புக்கு கண்டிப்பாக தகுதி இருந்தால் மட்டுமே வர முடியும், வர வேண்டும். அதை விட்டுட்டு சும்மா புரளி பேசுவதை விட இப்பொழுது 40% ஆக இருக்கும் தேர்ச்சி விழுக்காடு எப்படி அதிகரிப்பது என்று மட்டும் நாம் யோசிப்போம், முன்னேறுவோம்.

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

    நீட் தேர்வு முடிவுகள் அடிபப்டையில் 120 மதிபெண் பெற்ற மாணவன் வசதி படைத்தவன் என்பதால் தனியார் கல்லூரியில் இடம் வாங்க முடியும். ஏழை மாணவர் 250 மதிபெண் பெற்றிருந்த்தாலும் கோடிக்கணக்கில் செலவு செய்ய பணம் இல்ல என்பதால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காது. இபபோது சொல்லுங்கள். தகுதிக்கு முதல் இடமா? பணத்திற்கு முதலிடமா? 120 மதிபெண் பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றவன் எப்படி தகுதியான மருத்துவராக வெளிவருவான்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    அன்பு தமிழ் மக்களே, நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க. இனிமேலும் கண்ட கண்ட காரணங்கள் எல்லாம் சொல்லி, சும்மா மூக்கை சிந்திக்கிட்டு ஸீன் போட முடியாது. என்னமோ நாமதான் ரொம்ப ஸ்மார்ட்ன்னு நெனச்சுக்கிட்டு உலகத்தை ஏமாத்த முடியாது. ஆ ஊ னா, நான் இந்த ஏழை பாழை, க்ராமத்துக்காரன், தாழ்த்தப்பட்டவன், உயர்த்தப்பட்டவன், நெட்டையன், குட்டையன், கருப்பன், சிகப்பன், ஆரியன் திராவிடன் ன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு ஊரை ஏமாத்திகிட்டு திரிய முடியாது. அதெல்லாம் அந்த காலம். அமெரிக்காகாரன் வேலை வாய்ப்பையே நம்ம ஊர்காரனும், சைனாகாரனும் தான் தின்னுகிட்டு இருக்கானுங்க. தாய்லாந்து சிங்கப்பூர்காரன் வேலையையும் நம்ம ஊரு சாமிங்கதான் அடிச்ச்சு புடுங்கி தின்னு கிட்டு இருக்கானுங்க. ஆஸ்திரேலியாகாரன் பொலப்புல மண்ணை அள்ளி போட்டுட்டு வாய் கிழிய பேசுவதும் நம் தமிழன்தான். அப்போ மட்டும் தமிழன் எங்க வேணாலும் போகணும் ன்னு சொல்லிட்டு வடநாட்டுகாரன் நம்ம ஊர்ல வந்து படிக்கிறான்னு சொல்லி ஏமாத்துவது சுத்த அயோக்கியத்தனம்.

  • krishnan - Chennai,இந்தியா

    மறுபடியும் ஒரு உளறல் .

  • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

    தமிழ்நாட்டு பள்ளி பாடத்திட்டத்தை சென்ற வருடம் தான் மாற்றி அமைத்து இருக்கின்றனர். அதனுடனே நீட் தேர்வுக்கான தேவையான பயிற்ச்சியையும் இணைத்ததும் சென்ற வருடம் தான். இந்த வருடமும் மிக நேர்த்தியாக மாற்றி பல முன்னேற்றங்களை சேர்த்து மிக அருமையாக வெளிவந்துள்ளது. ஆனால் இதன் பலன்கள் வெளிவர குறைந்தது முன்று வருடங்களாவது ஆகும். தற்போது அண்டை தென்மாநிலங்களின் நீட் தேர்வு சதவீதத்தை வைத்து கும்மி அடித்து கொள்ள வேண்டாம். அவர்கள் பல வருடங்களாக வருடா வருடம் செய்த மேம்பாட்டுகளை நாம் போன கல்வியாண்டில் தான் ஆரம்பித்தோம். அதற்கே அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அவரோட டீமுக்கு மிகப்பெரிய பாராட்ட குடுக்கணும். சென்ற வருடத்தை விட இந்த வருடம் நீட் தேர்வில் தேறியவர்கள் கணக்கில் நாம் சிறிது முன்னேறி இருக்கோம். அதற்கு காரணமும் கல்வித்துறை தான். நீட்'டுக்கான பயிற்ச்சியை கல்வியாண்டில் தொடக்கத்துலேயே ஆரம்பித்து மாணவ செல்வங்களை தயார் படுத்தி இருக்கிறார்கள். அடுத்த வருடம் இன்னும் மாணவர்கள் தேர்ச்சி அதிகமாகும். வெகு சீக்கிரமே நாம் அண்டை மாநிலங்களை பின்னுக்கு தள்ளுவோம்.

  • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

    மாநில தேர்வுகளில் 90% தேர்வு சதம்..அகில இந்திய தேர்வில் 40% மட்டுமே... நீட் தேர்வு முடிவுகள் உரக்க உரைக்கும் நிதர்சனம்:.... நமது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா,கேரளா எல்லாம் 64%க்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ள போது, தமிழ்நாடு 40% மட்டுமே தமிழகத்துக்குக் கீழே ஒரு சிறிய மாநிலமும்(நாகாலாந்து), ஒரு மிகச் சிறிய யூனியன் பிரதேசமும்(டாமன்&டையூ) மட்டுமே. இது, தமிழ்நாட்டில் நிலவும் கல்விமுறை, பாடத்திட்டம், தேர்வுமுறை ஆகியவைபற்றிக் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.....மாநில அளவில் நடக்கும் தேர்வுகளில் 90% க்கு மேல் தேர்ச்சி காட்டும் மாநிலம், அகில இந்தியப் பொதுத்தேர்வில் 40% என்றால் நாம் எங்கே செல்கிறோம்? இல்லை செல்லாமல் நிற்கிறோமா? ....இதனால் தான் நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம் என்றோமா? .....நீட் எழுதியதால் தானே உண்மை நிலவரம் நிதர்சனமாகத் தெரிகிறது. ....இது ஒரு கண்திறப்பு (Eye er). .....நம்மைத் தட்டி எழுப்பும்(wake up call) என்று நம்புவோம். வெளி மாநிலத்தில் (கேரளா) நம் மாணவர்கள் தேர்வு எழுதியதால் இப்படி ஆயிற்று என்றும் சொல்லமுடியாது. ஏனெனில் மிக மிகக் குறைந்த % மாணவர்களே அங்கு எழுதினார்கள். இதனால் தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்று சொன்னால் அது 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்'கதை.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    ராஜஸ்தான் 75% பாஸ், பீஹார் கூட 70% பாஸ் என்பதெல்லாம் நம்பக்கூடிய அளவில் இல்லை. அதுவுமில்லாமல் இனிமேல் எல்லாம் ரொம்ப நாளைக்கு குண்டு சட்டியில் குதிரை ஓட்டி கொண்டு எங்க ஊரு சீட்டு எங்களுக்கு மட்டும்தான், எங்களுக்கு வேணுங்கிற மாறி நாங்களே பரிச்சை வெச்சுக்குவோம், எங்களுக்கு வேணுங்கிற மாறி நாங்களே பில் அப் பண்ணிக்குவோம்ன்னு சொல்லிக்கிட்டு திரிய முடியாது. ஓபன் எகானாமியின் தீமையும் இதுதான் நன்மையும் இதுதான். நீ மட்டும் உனக்கு வேணுங்குறப்போ பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை, அமேரிக்கா, மற்றும் தாய்லாந்துல போயி படிப்ப, தமிழன் இல்லாத இடமே இல்லைன்னு வாய் கிழிய பீத்துவ , அங்க போயி வேலை செய்ஞ்சிட்டு அவங்களோட வேலை வாய்ப்பை பறிப்ப, ஆனா இதுவே இங்க தமிழ்நாட்ல இந்திக்காரன் வந்து படிச்சா ஐயோ எங்க தங்க தமிழ்நாட்ல வடநாட்டுக்காரன் படிக்கிறானேன்னு மூக்கை சிந்திட்டு ஸீன் போட்டு நடிப்பியா? கேவலமா இல்லியா உனக்கு? அப்படி தமிழ்நாட்டு சீட்டு தமிழ்நாட்டுக்காரனுக்குதான்ன்னு பீத்துனா, அப்போ நீயும் தமிழ்நாட்டுக்கே வா, வந்து தமிழ்நாட்ல வேலை செய்யி. அதைவிட்டுட்டு இவுருமட்டும் ரொம்ப சவுரியமா தாய்லாந்துகாரன் வயித்தில அடிச்சிட்டு அவனோட குடும்பத்துல தீ வெச்சுட்டு சந்தோசமா இருப்பாராம். ஆனா வடநாட்டுக்காரனுக மட்டும் தமிழ்நாட்ல வந்து படிக்க கூடாதாம். முட்டாள்தனமா பேசிகிட்டு.

  • arun veli - chennai,இந்தியா

    நீட் தேர்வு முறையாக நடந்தால் எல்லாருக்கும் நல்லது தான்... ஆனால் பீகார் மாணவி முதலிடம் என்ற செய்தியில் இருந்தே நீட் எந்த அளவுக்கு முறையாக நடக்கிறது என்று தெரிகிறது.......

  • CBE CTZN - Chennai,இந்தியா

    35 சதவிகித மட்டுமே தேர்ச்சி... இதில் எந்த மூக்கறுப்பும் இல்லை... இன்னைக்கு கூட 2 பேர் தற்கொலைனு செய்தி... ஒருத்தர் தற்கொலைக்கு முயற்சி... இதல்லவா சாதனை... ஒரு வெங்காயமும் பிரயோசனம் இல்லை...

  • Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா

    தமிழகம் இலவசத்தை கொடுத்து ஏமாற்ற தெரிந்த அரசியல் வாதிகளால் நல்ல தரமான கல்வியை கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வழி செய்யவில்லை. மாறாக லேப் டாப் கொடுத்து ஏமாற்ற தெரியும் கல்வியை கொடுத்து திறனை வளர்க்க செய்ய மாட்டார்கள்.மக்களை எந்த அளவிலே வைத்ததால் இலவசத்திற்கு அடிமையாய் போனார்கள்/

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

    இனி 11 ம் வகுப்பு 12 ம் வகுப்பு படிக்கும் போதே வசதி உள்ளவர்கள் நீட் கோச்சிங் கிளாஸ் செல்வார்கள். ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் எட்டா கனி 199 கட் ஆப் எடுத்தாலும் கூட.

  • Tamil - Trichy,இந்தியா

    இதேபோல் அரசியல்வாதிகளும் வொரு தேர்வு எழுதி MLA & MP சீட் கொடுக்கலாமே? நாட்டயே ஆள்பவர்களுக்கு எந்த தகுதிக்கும் தேவை இல்லையா? என்ன கொடுமையான சட்டம் இது.

  • Chandrasekar P M - chennai,இந்தியா

    அப்போ 12 வருட படிப்பு எதுக்கு ? நேர நீட் எழுதிடலாமே ?

  • Abdul Bari - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    நீட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்.. தோராயமாக மாணவர்களிடம் கொள்ளையடித்த நீட் கோச்சிங் பண விபரம் கடைசி பத்தியில்... முக்கிய குறிப்பு : நீட் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காது.. உதாரணமாக, தமிழ் நாட்டில் இந்தாண்டு 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. ஆனால், இங்கிருக்கும் MBBS படிப்பு இடங்களோ வெறும் 5660 மட்டுமே.. அதாவது, தகுதி தேர்வில் பாஸ் செய்தவர்களில் 12.5% சதவீதம் பேருக்கு மட்டுமே மெடிகல் படிக்க இடம் கிடைக்கும்... மாயை 1 : நீட் தேர்வு தகுதியை உறுதிப்படுத்துகிறது.. இந்திய அளவில் நீட் தேர்வை எழுதிய 12.69 லட்சம் பேரில் 7.14 லட்சம் பேர் கட்-ஆப் மார்க்வை விட அதிகமாக எடுத்து தகுதி பட்டியலில் இடம் பெறுகிறார்கள்.. ஆனால், இந்தியாவில் மொத்தமுள்ள மருத்துவ இடங்களோ 52,965... அதாவது, நீட் கிளியர் செய்தவர்களில் வெறும் 7.4% சதவீத பேர்களுக்கு மட்டும் தான் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும்.. 2018 இல் பொது பிரிவினர் கட்ஆப் 720 க்கு 119 (16.5%) இடஒதுக்கீடு பிரிவினருக்கு 720 க்கு 96.. அதாவது நீட் தேர்வில் 16.5% & 13.3% சத மதிப்பெண்களை எடுத்தாலே தகுதி பட்டியலில் இடம் கிடைத்துவிடும்.. ஆனால், மாநில +2 பொது தேர்விலோ 50% சத மதிப்பெண்களை எடுத்தால்தான் தகுதி.. மாயை 2 : நீட்டால் தனியார் கல்லூரிகளில் டொனேஷனுக்கு வேட்டு.. நீட் கிளியர் செய்த 7.14 லட்சம் பேரில், அரசு கல்லூரிகள் & தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு கோட்டாவில் மெரிட் அடிப்படையில் 50 ஆயிரம் பேருக்கு இடம் கிடைக்கும்.. மீதமுள்ள 6.5 லட்சம் பேரிலிருந்து, மொத்தமுள்ள பத்தாயிரத்து சொச்சம் மேனஜ்மென்ட் கோட்டா இடங்களை வழக்கம்போல பணம் வாங்கிகொண்டு, டொனேஷன் வாங்கிக்கொண்டு தனியார் கல்லூரிகள் நிரப்பிகொள்ளலாம்.. எந்த தடையும் இல்லை.. மாயை 3 :சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்.. எந்த பாடத்திட்டத்தில் படித்தாலும், தனியார் நீட் பயிற்சி மையங்களில் ஒரு ஆண்டோ, இரண்டாண்டோ, 2 லட்சம் ரூபாய்கள் தனியாக செலவழித்து படித்தால்தான் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும்... நிஜம் : 12.6 லட்சம் பேர் நீட் கோச்சிங் படித்திருந்தால், அதில் வெறும், 60 ஆயிரம் பேர் மட்டும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைகிறது.. மீதமுள்ள 12 லட்சம் பேர் செலவழித்த தலா 2 லட்சம் ரூபாய்.. அதாவது மொத்தம் 24 ஆயிரம் கோடி ரூபாய் எள்ளு.. சரி, இதில் பாதியையே எடுத்துக்குங்க, நீட் மையங்களுக்கு 12 ஆயிரம் கோடி கொள்ளை லாபம்.. இதில் நீட் ஆதரவு மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு பங்கு???

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தேர்வு என்பது மாணவனின் திறமையை அறிந்து கொள்ளும் சரியான சாதனம் கிடையாது... தேர்ச்சி என்பது மாணவனின் க்ஷண நேர மன ஓட்டம்தான்... மாணவனின் வெற்றி தோல்விகள் மாறிமாறிதான் வரும்... அவரவர் போக்கிற்கு விட்டுவிட்டால் அவர்கள் திறமை தானாகவே பளிச்சிடும்... அதை அறிய இன்னும் இந்தியாவில் வழிமுறைகள் வகுக்கப்படவில்லை...

  • அமுதவாணன் - chennai,இந்தியா

    தேர்ச்சி பெற்றவர்கள் பலர் 200 மதிப்பெண் கீழ் உள்ளார்கள். இவர்கள் எல்லாம் ஏழைகள், 12 வகுப்பில் 97 % மதிப்பெண் எடுத்தும் அரசு கல்லூரி வாய்ப்பை இழந்தவர்கள். நீடில் 300 மேல் எடுத்தவர்கள் ஆந்திராவில் 2 அல்லது 3 வருடம் 10 லட்சம் செலவு செய்து மதிப்பெண் எடுத்தவர்கள். எனவே தலைப்பு உள்நோக்கம் கொண்டது.

  • saro - Chennai,இந்தியா

    நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சகவீதம் 35 மட்டுமே. தமிழ்நாடு தான் கடைசி. "Tamil Nadu fares poorly with only one candidate in the top 50 " இதுதான் உண்மை.

  • Ravi - Chennai,இந்தியா

    உயிர் காக்கும் தொழில் செய்ய வருபவர்கள் திறமை யாகத்தான் இருக்கவேண்டும் , நாட்டை மேம்படுத்த படித்த அறிவாளியான என்ஜினீர்ஸ் தேவை இதில் ஜாதி பார்க்கக்கூடாது .

  • Raja (Thravida Veriyan) - Chennai,இந்தியா

    சுடலைக்கு படிப்பு மண்டைக்கு சுத்தமாக ஏறவில்லை. பஸ் கண்ணாடிகளை உடைக்க சொன்னது மட்டுமே படிப்பு... எடப்பாடிக்கு பள்ளிக்கூடம் அவ்வளவு செட்டாகவில்லை. பன்னீர் வாத்தியார் கண்ணீர் விட்டது தான் மிச்சம். சீமாட்டி பெயில், தாசுமவன் பதவி பித்து கண்டபடி தலைக்கு ஏறிவிட்டது. வளவன் பள்ளியிலேயே டீ பார் மற்றும் ரெட் கார்டு. இந்த லட்சனத்துல படிப்ப பத்தி இவங்க பேசுனா எவங் கேட்பான்?

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    உண்மைத்தமிழனுக்கு பச்சைத்தமில( ?)னுக்கு சொந்த தாய்மண்ணின் கலையான சித்தவைத்தியமே சிறந்தது வந்தேறி மருத்துவம் எதற்கு? எனவே போராளீஸ் குடும்ப மாணவர்கள் உண்மைத்தமிளனென்றால் சேர்பண்ணு சோபா பண்ணு நாற்காலி பண்ணு எனவெல்லாம் மீம்ஸ் போட்டவர்கள் வந்தேறி ஆங்கில மருத்துவம் படிக்கலாமா? அன்னைத்தமிழுக்கு இழுக்கில்லையா?

  • ber - tuticori,இந்தியா

    சாதனை சாதனை தமிழகம் 35 வது இடத்தில இருப்பது சாதனை .கிராம புற மாணவர்கள் ஒருவருக்கு கூட அரசு கல்லூரியில் இடம் கிடைக்காது.

  • S.Pandiarajan - tirupur,இந்தியா

    தமிழ் நாடு 22 வது இடம்

  • raja - Kanchipuram,இந்தியா

    இங்கு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் என்ன. நல்ல மருத்துவரை உருவாக்க நல்ல ஆசிரியர்களால் தான் முடியுமே ஒழிய இந்த மாதிரி நுழைவு தேர்வுகளால் அல்ல. நுழைவு தேர்வை ஆதரிக்கும் எவரும் நல்ல கல்வியாளர்கள் அல்ல

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    கோழைகள் தங்களை வீர இனமாக மார்தட்டும் 23புலிகேசி மனோநிலை இங்கு இன்னுமுண்டு

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    மூக்கறுப்பு யாருக்கு? தேர்ச்சி சதவீதத்துல தமிழ்நாடு அடி மட்டத்துல இருக்கு....... மாநிலங்களின் தேர்ச்சி சதவீத பட்டியல்ல கடைசி ரெண்டு இடங்களுக்கு மேலே தமிழ்நாடு இருக்கிறது.....பீஹார், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் எல்லாம் மேலே இருக்கு..... இந்த பிரச்சினைகள் இல்லாமல் இருந்து இருந்தால் , தேர்வு எழுதும் இடம் பிரச்சினைகள் கொடுக்காமல் இருந்து இருந்தால் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருக்க வாய்ப்பு உண்டு......இப்போ பாருங்க, நம்மளோட மருத்துவ கல்லூரிகள்ல வட நாட்டவன் பூரா படிப்பான்....நம்ப ஆளுங்க oooooooooo

  • Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ

    There are serious conceptual problems with NEET that might destroy the quality of medical education. First, the Year 12 mark is achieved after 12 years of tematic education both under the CBSE and other State syllabuses. Do the academic world and educationalists say that the CBSE and State Schools are incompetent to rank the students merit for medical entrance and the year 12 ranks and marks are useless? Do they also proclaim that NEET score (a three-hours test), tutored mostly by NEET coaching centres, are superior to the comprehensive year 12 exams marks? If that is the case, should we then abolish the grade 12 exams altogether and use an objective type NEET as the best outcome than the school teaching? By ignoring the Year 12 marks we are destroying the importance of and motivation for the year 12 studies. But, then claim we are testing student on year 12 syllabus is ridiculous. Eminent educational institutions and academics across the globe has been considering the year 12 marks as a primary score for medical school admissions in the European Union, Turkey, Australia, Japan and the US recognise the year 12 score as the basis for admission. Roy MP and Gupta H (2016, British Medical Journal) evaluated the NEET and concluded that NEET has resulted in increase in capitation fee of some medical colleges of India. The argument that NEET will reduce capitation fees in Private medical school is a fallacy. There are two other serious policy conflicts in NEET and the CBSE acted without authority: First, the non-creamy layer (NCL) policy to be decided by the Central and State governments and CBSE assumed extraconstitutional authority and imposed non-creamy layer policy Second, there is an in-service quota in medical admission to encourage Doctors to move to rural and remote areas. NEET silently abolished such quotas without any authority. These are dangerous precedence as CBSE should strictly implement the Government policy and not to introduce public policy through back door.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ஒதுக்கீடுகள் ஏமாற்றுவேலை. திறமையை கல்லூரிக்கு வெளியே நிற்க வைத்து விட்டு ஜாதியை கல்லூரிக்குள் seat போட்டு உட்கார வைக்கும் கொடுமை கொலைக்குற்றம். பொதுவாக உலகில் சராசரி மற்றும் குறைந்த திறமை ,குறைந்த அறிவுள்ளவர்கள் அதிகமாக இருப்பது இயற்கையே. ஆனால் இவ்வளவு மக்கள் கூட்டத்துக்கும் வேண்டிய வற்றை செயது கொடுப்பது திட்டமிடுவது என்பதற்கு மிக குறைந்த அளவிலேயே மிக்க அறிவுள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களை தலை எடுக்க விடாமல் செய்வதே இந்த ஒதுக்கீடுகள் விளைவுகள். இந்த ஒதுக்கீடு இல்லாத சமூக நீதியுள்ள சாம்ராஜ்ஜியத்தை படைப்போம், விவேகானந்தர் கூறியதே போல இளைய சமுதாயமே இதனை செய்ய வேண்டும் ,முடியும் .சலுகைகளை வேண்டாம் என்று பணம் படைத்தவர்களை(சமையல் எரிவாயு) யும்,மற்றும் சீனியர் சிடிஸின் களையும் (பயண கட்டண சலுகை) கேட்டுக்கொள்ளும் இந்த அரசு ஒதுக்கீடுகளை உதறி சமூகத்தில் எழுச்சி பெற ஜாதிசங்கங்களையும் தூண்ட வேண்டும்.மானமுள்ளவன் சலுகைகளை என் ஏற்றுக்கொள்ள வேண்டும்?திறமை மிக்க மற்றவரின் வாழ்வை என் பறிக்க வேண்டும்?இதுவா சமூக நீதி?

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது, குறுக்கு வழியில் முதல்வராவது, என்று தமிழ் நாட்டில் ஏராளமான தீய சக்திகள் நீட்டை எதிர்க்காமல் என்ன செய்வார்கள்?? மக்கள் தான் விழித்துக்கொண்டு, அவர்களை தமிழகத்தை, ஏன் இந்தியாவை விட்டே விரட்டவேண்டும். சமூக விரோதிகள் செயல் மக்களுக்கு இப்போது புரிந்திருக்கும். பாஜகவின் நல்ல ஆட்சி மக்களுக்கு தெரிந்து இருக்கும். ஜெய் ஹிந்த். மோடிஜி வாழ்க. பாஜக வாழ்க.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    முதலிலேயே தெளிவாக அறிவித்து விட்டால் அதற்கு தகுந்த படி மாணவ மாணவியர்கள் நன்கு பயிற்சி எடுத்து கொள்வார்கள். எந்த போட்டி தேர்வும் போட்டி எவ்வளவு அதிகமாக இருந்தாலும் பொருட்டல்ல. தொடர் பயிற்சி, பேரார்வம் நம்பிக்கை ன்சிச்சயம் வெற்றி தரும். பணம் Vs அறிவு. என்பதில் அறிவே பிரதானம் என்று சொன்னது நீட். அது தான் சரி. பாப்போம் இந்த ஆண்டு அந்த பிரசித்தி பெட்ரா மிஷனரி கல்லூரி அட்மிஷன் தருகிறதா அல்லது கடந்த ஆண்டை போலவே நிறுத்தி விடுகிறதா என்று. நீட் வேண்டும் என்பதில் தின மலரின் கருத்தே மெத்த படித்தவர்களின் கருத்தாகும்.

  • Jana - Chennai,இந்தியா

    Pass rate in UP & Bihar 60% TN only 40% Now you decide who is intelligent or there is conspiracy against tamils decide urself

  • Baskar - Paris,பிரான்ஸ்

    பந்தா தலைவருக்கு நீட் தேர்வில் கிடைத்த ஒன்பதாவது பல்ப்.

  • Baskar - Paris,பிரான்ஸ்

    இந்த கூவத்துர் கூமுட்டைகளும் தமிழகத்தில் உள்ள படிக்காதமேதைகள் கட்சிகள் நடத்தும் கட்டப்பஞ்சாயத்து தலைவர்களுக்கும் ஒன்றும் தெரியாது. ஒரு தலைவன் பெட்டி பெட்டியாய் பணம் கொடுக்கிறான் அவன் எப்படி கூவுகிறானோ அப்படியே கூவுங்கள் என்றால் வாங்கிய காசுக்கு கூஉவித்தனே ஆக வேண்டும்.

  • Santhosh Gurumurthy - Orrville,யூ.எஸ்.ஏ

    எல்லாம் சரி ... இதுல வகுப்பு வரியா எத்தனை மாணவர்கள் தமிழ்நாட்டுல தேர்வுவாகிறுக்கங்க? மத்திய அரசுக்கு கூஜா தூக்குனா வேலைக்குஆகுமா ஏழை பசங்க முன்னுக்கு வரவேண்டுமா என்ன ஜென்மமோ நீங்கல்லாம்

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    தேர்ச்சி பெற்றவர்களில் எதனை மாணவர்கள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள், தாழ்த்த பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் போன்ற புள்ளி விபரங்களை கொடுத்து இருந்தால் யாருடைய மூக்கு அறுபட்டது என்று தெளிவாக தெரிந்து இருக்கும்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    டாப் 50 மதிப்பெண் பெற்றவர்களில், டெல்லியைச் சேர்ந்த 8 பேர், குஜராத்தில் 7 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து தலா 4 பேர், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா, பஞ்சாப்பைச் சேர்ந்த தலா 3 பேர், மத்திய பிரதேசம் 2 பேர், ஒடிசாவிலிருந்து 2 பேர், சண்டிகாரிலிருந்து 2 பேர், தெலங்கானாவிலிருந்து 2 பேர், மேற்கு வங்காளத்திலிருந்து 2 பேர், பீகாரிலும், தமிழ்நாட்டிலிருந்தும் ஒருவர், இதரப் பகுதியிலிருந்து ஒருவர் என டாப் 50 இடத்தைப் பிடித்துள்ளனர்.

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    இன்ஜினீரிங் மற்றும் மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வு வேண்டும் தான். ஆனால் அது மாநில அரசின் உரிமை. அதில் மத்திய அரசு தலையிட கூடாது. நுழைவு தேர்வை மாநில அரசே நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும். அதைவிட்டு தேர்வு எழுத கேரளாவில் ஏன் இடம் கொடுத்தார்கள்? மத்திய அரசால் தான் எந்த வேலையையும் உருப்படியாக செய்ய முடியாது என்று தெரியும். எதற்காக எல்லா வேலையையும் தாங்களே செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள்? நுழைவு தேர்விற்கும் சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூக நீதி என்று சொல்லி கொண்டு, கோட்டா கொண்டுவருவது என்னை பொறுத்தவரை ஏற்புடையதாக இல்லை. ஏழை மாணவர்களுக்கு அரசு இலவசமாக சிறந்த பயிற்சி அளியுங்கள். புத்தகங்கள் இலவசமாக கொடுங்கள். பஸ் வசதிகள் செய்து கொடுங்கள். நல்ல ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்துங்கள். இலவச உணவும் கொடுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் பயிற்சி கொடுங்கள். ஆனால் மதிப்பெண்ணில் சலுகை கொடுப்பது, தரத்தை குறைத்துவிடும். கோட்டா சிஸ்டத்தை முதலில் ஒழியுங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement