Advertisement

இடைத்தேர்தல் தோல்வியால் பா.ஜ., முதல்வர்களுக்கு சிக்கல்! மஹா., உ.பி., மாநிலங்களில் அதிருப்தியாளர்கள் அதிகரிப்பு

புதுடில்லி : சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில், பா.ஜ., மோசமான தோல்வியை தழுவிய நிலையில், 'உ.பி., மஹாராஷ்டிரா மாநிலங்களில், முதல்வர் பதவியில் உள்ள, பா.ஜ., தலைவர்கள் கடும் சவாலை சந்திக்க நேரிடும்' என, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

உ.பி., மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில், சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு மோசமான தோல்வி கிடைத்தது; இது, பா.ஜ., மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.


எதிர்க்கட்சிகள் :




மஹாராஷ்டிராவில், பால்கர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற, பா.ஜ., பண்டாரா - கோண்ட்யா லோக்சபா தொகுதியில் தோல்வியை தழுவியது. உ.பி.,யில், கைரனா லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தலில், பா.ஜ., தோற்றது. நுார்புர் சட்டசபைத் தொகுதியிலும், அக்கட்சிக்கு தோல்வியே கிடைத்தது.


இதனால், முக்கியத்துவம் வாய்ந்த, உ.பி., மஹாராஷ்டிரா, பீஹார் ஆகிய மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு எதிராக அணி திரண்டு வரும் எதிர்க்கட்சிகள் உற்சாகமடைந்து உள்ளன. மஹாராஷ்டிராவில், பால்கர் தொகுதியில், பா.ஜ., வெற்றி பெற்றது, அம்மாநில ஆட்சியில், அதனுடன் கூட்டணி சேர்ந்துள்ள, சிவசேனாவை எரிச்சலடையச் செய்துள்ளது. பல ஓட்டு சாவடிகளில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே குற்றஞ் சாட்டியுள்ளார்.


சமீப காலமாக, பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து வரும், சிவசேனா, பா.ஜ.,வுடனான, 30 ஆண்டு கூட்டணியில் இருந்து விலகும் என்ற யூகங்கள் வலுவடைந்து உள்ளன. லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட போவதாக, 'சிக்னல்' அளித்து வரும் உத்தவ், 'தேர்தல் கமிஷனும், பா.ஜ.,வும் கூட்டு சேர்ந்து சதி செய்கின்றன' என, குற்றஞ்சாட்டி வருகிறார்.


மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர், தேவேந்திர பட்னவிசை கவிழ்ப்பதற்கான வாய்ப்புக்காக, சிவசேனா காத்திருப்பதாக, அரசியல் விமர்சனர்கள் கூறுகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ.,வை, காங்., உடன் கூட்டணி சேர்ந்தாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிவசேனா தலைவர் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.



மஹாராஷ்டிராவில், இடைத் தேர்தல் நடந்த, பால்கர், பண்டாரா - கோண்ட்யா தொகுதிகள், பா.ஜ., வசம் இருந்தவை. இவற்றில், பண்டாரா - கோண்ட்யா தொகுதியை, தேசியவாத காங்., கடும் போராட்டத்துக்கு பின், வெற்றிகரமாக கைப்பற்றி உள்ளது, முதல்வர், தேவேந்திர பட்னவிஸ், மத்திய அமைச்சர், நிதின் கட்கரிக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இத்தொகுதி, பா.ஜ.,வின் கோட்டையாக கருதப்படும், விதர்பா பகுதியைச் சேர்ந்தது.


மஹாராஷ்டிராவில், 48 லோக்சபா தொகுதிகளும், உ.பி.,யில், 80 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. இம்மாநிலங்களில் கிடைத்த இடைத் தேர்தல் முடிவுகள், மோடிக்கு எதிராக, மெகா கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது.


மஹாராஷ்டிராவில், மற்றொரு முக்கிய கட்சியாக கருதப்படும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரே, 'மோடி அல்லாத பாரதம் அமைப்போம்' என, குரல் எழுப்பியுள்ளார்.


பண்டாரா - கோண்ட்யா தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தேசியவாத காங்., கட்சித் தலைவர், சரத் பவார், 1998 லோக்சபா தேர்தலின்போது, காங்.,கில் இருந்தார். அத்தேர்தலில், மொத்தமுள்ள, 48 தொகுதிகளில், காங்., 42ல் வென்று சாதனை படைத்தது. அதேபோன்ற மாயாஜாலத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்டுவதில், சரத் பவார் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.


நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகள் உடைய, உ.பி.,யில், பா.ஜ.,வுக்கு மூன்றாவது முறையாக, கைரனா லோக்சபா தொகுதியில் பெரிய தோல்வி கிடைத்துள்ளது. இம்மாநிலத்தில், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், 80ல், 73 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்த, பா.ஜ., கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும், அமோக வெற்றி பெற்றது.


சமீப காலமாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி, பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. ஒரு மடத்தின் அதிபதியாக உள்ள அவர், யாரையும் கலந்தாலோசிக்காமல் முடிவு எடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.


பதவி நீக்கம் :




இடைத்தேர்தல் முடிவுகளால், உ.பி., முதல்வர் ஆதித்யநாத், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ், ம.பி., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, கட்சிக்குள் உள்ள அதிருப்தியாளர்கள் குரல் எழுப்பிஉள்ளனர். இதனால், அவர்களது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.


வரும், 2019 லோக்சபா தேர்தலில், உ.பி., மஹாராஷ்டிரா, பீஹார் ஆகிய மூன்று மாநிலங்களே, ஆட்சி யாருக்கு என்பதை நிர்ணயிக்கக் கூடியவை.
இடைத் தேர்தல் வெற்றிகளால் ஊக்கம் பெற்றுள்ள எதிர்க்கட்சிகளை, லோக்சபா தேர்தலில், பா.ஜ., சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பா.ஜ.,வுக்கு எதிராக மெகா கூட்டணிக்கு முயற்சி : ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். 2003 முதல், 15 ஆண்டு களாக, இம்மாநிலத்தில், ஆட்சியை பறிகொடுத்து, அதை மீட்க முடியாமல், காங்., திணறி வருகிறது. இந்நிலையில், பீஹாரில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஆளுங் கட்சியாக உள்ள, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி தலைவரான சரத் யாதவ், ம.பி.,யில், பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். இந்தாண்டு இறுதியில், ம.பி.,யில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக, சரத் யாதவ் அமைக்கும் மெகா கூட்டணியில் இணைய, காங்., விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.சரத் யாதவின் கூட்டாளிகள், ஏப்ரலில், எல்.ஜே.டி., எனப்படும், லோக்தந்திரிக் ஜனதா தளம் என்ற கட்சியை துவக்கினர். இருப்பினும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உரிமை தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், எல்.ஜே.டி.,யில், சரத் யாதவ் இன்னும் இணையவில்லை.சரத் யாதவ் கூட்டாளிகளின் முயற்சியால், ம.பி.,யில் மலைப்பகுதிகளில் செல்வாக்கு மிக்க, பி.ஜி.பி., எனப்படும், பாரதிய கோண்ட்வானா கட்சி, ஜி.ஜி.பி., எனப்படும், கோண்ட்வானா கந்தந்ரா கட்சி ஆகியவை கருத்து வேறுபாடுகளை மறந்து, சட்டசபை தேர்தலில் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளன.

'70 லட்சம் போலி வாக்காளர்கள்' : காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத், ம.பி., மாநில கட்சி பிரமுகர்களுடன் நேற்று, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்றார். அங்கு அதிகாரிகளை சந்தித்த பின், அவர் கூறியதாவது: ம.பி.,யில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, 70 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்கள், பா.ஜ., சார்பில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆதாரத்தை, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளோம். இவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும்படி, அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
 

வாசகர் கருத்து (43)

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    @Shriram - Chennai, சோ மோடி யா?? அதான் சோ இறந்து விட்டாரே, தெரியாதா??

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    அதெல்லாம் ஒரு சிக்கலும் நீடிக்காது. அ_ _ ஷா அங்கெல்லாம் போய் சிக்கல் பண்றவங்க மண்ட மேலயே நாலு போட்டார்னா எல்லாம் ஓ.கே. ஆயிடும்.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து பி ஜெ பி யை தோற்கடிக்குமானால். அது யானை தன்தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொள்வதற்கு சமம்.

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    ////krishnan - Chennai,இந்தியா 04-ஜூன்-2018 10:14 கடந்த பாராளு மன்ற தேர்தலில் மொத்தமாக 32 % பெற்ற பிஜேபி இந்த முறை 10 % கூட பெறாது.//// - யப்பா, இன்னா ஒரு அரிப்பு, இப்ப சொறிஞ்சி விட்ட பின், சுகமா இருக்குது மனசுக்கு.

  • Somiah M - chennai,இந்தியா

    மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களின் அரசாக இருக்கவில்லை .காங்கிரஸ் கூறுவது போல கார்ப்பொரேட் அரசாகத்தான் இருந்துள்ளது .சாதாரண மக்களின் நலனில் போதிய அக்கறை காட்டவில்லை .விவசாயிகளை பற்றிய நலனில் சிறிதும் ஆர்வம் கொள்ளவில்லை .கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் எதிர் பார்த்த பலனில் பாதியை கூட ஏற்படுத்தவில்லை .கிட்டத்தட்ட அனைத்துமே தோல்வி அடைந்து விட்டதாகவே மக்கள் கருதுகின்றனர் .இந்த நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை பிடிக்கும் என்பது கனவாகவே முடியும் .

  • Mujiber Rahman - Theni,இந்தியா

    மோடியின் சாம்ராஜ்யம் வீழப்போவது உறுதியாகி விட்டது. மதவாத கட்சிக்கு முடிவு நெருங்கிவிட்டது. 15 லட்சம் அக்கவுண்ட்டுக்கு வருமா வராதா?

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    கோண்ட்யா லோக்சபா தொகுதியில் தோல்வியை தழுவியதுக்கு பொறுப்பாளரான மாவட்ட ஆட்சியரை (தேர்தல் அதிகாரி) இடம் மாற்றம் செஞ்சிருக்காங்க போல இருக்கே.

  • yila - Nellai,இந்தியா

    பிரதமருக்கு...?

  • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

    //அன்பு - தஞ்சை,இந்தியா 04-ஜூன்-2018 03:01// Well said and well done

  • ganapati sb - coimbatore,இந்தியா

    அணைத்து ஊழல் வாரிசு கட்சிகளும் ஒன்று சேர்ந்தால்தான் பாஜகவை மோடி பிரச்சாரம் செய்யாத இடை தேர்தலில் வீழ்த்த முடிந்துள்ளது பாராளுமன்ற தேர்தலில் நிலைமை வேறாக இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டணி பங்கீட்டில் ஒன்றை ஒன்று காலை வாரும் நேர்மையான மோடியின் பிரச்சாரம் பாஜகவை கரை சேர்க்கும்

  • krishnan - Chennai,இந்தியா

    கடந்த பாராளு மன்ற தேர்தலில் மொத்தமாக 32 % பெற்ற பிஜேபி இந்த முறை 10 % கூட பெறாது.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    மீண்டும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்றெல்லாம் எனக்கு வாட்ஸ் அப் -இல் வேண்டுகோள்கள் வந்தவண்ணம் உள்ளன ...... இது சரியா ?

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    கட்சிப் பிரமுகர்களுக்குப் பதவி இல்லை என்றால், கட்சி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தால், கட்சியின் மக்கள் பிரதிநிதிகளில் மற்றும் கூட்டணிக்கு கட்சிகளுடைய மக்கள் பிரதிநிதிகளில் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை கூடும் ......

  • balakrishnan - coimbatore,இந்தியா

    பி.ஜெ.பி வெற்றி பெற்றால் அதற்க்கு காரணம் மோடி தான் என்று பிரச்சாரம் செய்வதும், கொண்டாடி மகிழ்வதும், தோல்வி அடைந்தால் மாநில தலைமை மீது பொறுப்பை தூக்கிப்போடுவதும் மோடியின் கைத்தடிகளின் நகாசு வேலை, இந்திய முழுமைக்கும் பி.ஜெ.பி க்கு ஏற்படுகிற உயர்வு தாழ்வுக்கு பொறுப்பு மோடி என்கிற ஒரு தனி நபருக்கு மட்டுமே உண்டு,

  • kadhiravan - thiruvaroor,இந்தியா

    இந்தியா ஒளிரவேண்டும் என்றால் எதிர்கட்சிகள் அனைத்தும் வேற்றுமை மறந்து ஒன்றிணையவேண்டும்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பா.ஜ., மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது...பெரிசா வருவதற்கு இதுதான் மணி ஓசை.......

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    பிஜேபி எதிர்ப்பு என்பதை விட மோடி எதிர்ப்பு என்று சொல்லலாம்....இந்திய 1000 ஆண்டுகள் அடிமை நாடக இருந்து உள்ளது..இந்த தாக்கத்தில் இருந்து இப்போ கொஞ்சம் கொஞ்சம் ஆக விடுபட்டு கொண்டிருக்கிறது,ஆனால் காங்கிரஸ் இந்தியாவை மீண்டும் அந்நியர் ஆட்சிக்கு கொண்டு செல்கிறது.

  • திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் - சோழர்கள் நாடு ,இந்தியா

    மராட்டிய சிங்கம் பால்தக்கரே உயிரோடு இருந்து இருந்தால் ஏழு ஏழு ஜென்மத்திர்கும் பாஜகவின் தோழனாக இருந்து இருப்பார்

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    உபி kairana தொகுதியில் 2014 பிஜேபி 5 .65 லட்சம் வாக்குகள் வாங்கியது இப்போ நாலு ஆண்டுகள் போன பின் 4 .3 லட்சம் வாக்குகள் தான் வாங்கியுள்ளது . சென்ற முறை பிஜேபிக்கு வோட்டு போட்ட 1 .2 லட்சம் பேர் இந்த முறை போட வில்லை .

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெல்வது ஆட்சியாளர்களுக்கு மக்கள் கொடுக்கும் எச்சரிக்கை...... எதிரிகள் மாற்றுக்கருத்து சொல்வார்கள்....ஆனால் மாற்றுக்கருத்து சொல்பவர்களெல்லாம் எதிரிகள் அல்ல என்பதை உணர வேண்டும்......

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    UP தேர்தலில் நான் போட்ட கணக்கு படி SP +BSP +காங்கிரஸ் சேர்ந்தால், பிஜேபி 80 தொகுதிகளில் 8 தொகுதி கூட ஜெயிப்பது கடினம் . brahmin + bania +kayastha வாக்குகள் தான் உறுதி . யஸ்வந்த் சின்ஹா , சத்ருகன் சின்ஹா போன்ற kayastha ஜாதியினர் இப்போ குடைச்சல் கொடுக்கின்றனர்

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    சிவ சேனா மாநிலத்திலும் மத்திய அரசிலும் கூட்டணி மற்றும் மந்திரி பதவியில் உள்ளது . ஆனால் அதே நேரத்தில் பிஜேபியை எதிர்க்கிறது . வட நாட்டான்களே தனி டிசைன் தான் .

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    இன்னும் ஓராண்டில் மோடி ஆட்சியை அகற்றாவிடில், இந்தியா ஆப்பிரிக்கா ஆகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மட்டும் தான் இருந்தது. பிஜேபி ஆட்சியில் நீதி துறை, பத்திரிகை துறை, தேர்தல் கமிஷன், rbi போன்றவை தனிப்பட்ட சுதந்திரத்தை இழந்துவிட்டது. இப்படியே விட்டால், இன்னும் ஐந்தாண்டில் இந்தியா சர்வாதிகார ஆட்சியாகிவிடும். இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தை காப்பாற்றிக்கொள்ள, பிஜேபி யை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    முன்னாள் ரௌடிகளை பதவியில் நியமித்தால் தோல்வி வராமல் வேறு என்ன வரும்? என்று நினைக்கிறார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement