Advertisement

புல்லட் ரயில் திட்ட பணிகளில்... தொய்வு! : நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்

பால்கர்: ஆமதாபாத் - மும்பை, புல்லட் ரயில் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், அதற்காக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


மஹாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த, 73 கிராமங்களை சேர்ந்த, பழங்குடியின மக்கள், தங்கள் நிலங்களை ஒப்படைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கள ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்ட, தால் திட்டத்தை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் - மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை இடையே, 508 கி.மீ., நீள வழித்தடத்தில், புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியா - ஜப்பான் நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. புல்லட் ரயில் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், 2022ல் பணிகளை முடிக்கும் வகையில், ரயில்வே அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த திட்டத்திற்காக, குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஒப்புக்கொண்டாலும், அதை ஏற்க, கிராமவாசிகள் மறுப்பு

எதிர்ப்பு :



இதற்கிடையே, மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள, பழங்குடியினத்தை சேர்ந்த, 73 கிராம மக்கள், புல்லட் ரயில் திட்டத்திற்காக, தங்கள் நிலத்தை அரசுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால், அந்த மக்களுடன், மத்திய அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். சந்தை விலையை விட, ஐந்து மடங்கு அதிக தொகை அளிக்க, அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர். நிலம் கையகப்படுத்துவதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவழிக்க, அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

பழங்குடியினர் எப்படியும், 50 கிராம மக்களை சம்மதிக்க வைத்துவிடலாம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ள போதும், மீதமுள்ள, 23 கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர், புல்லட் ரயில் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.இது தொடர்பாக, கள ஆய்வு நடத்த சென்ற ரயில்வே அதிகாரிகளை, கிராம மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். தாங்கள் வசிக்கும், விவசாயம் செய்யும் நிலத்தை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என, ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர். கிராம மக்களின் திடீர் எதிர்ப்பால், புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிக பணம் தருவதாக கூறியும், நிலத்தை ஒப்படைக்க, கிராம மக்கள் மறுப்பதால், சிக்கல் நீடிக்கிறது.

தாமதம் :



பால்கர் மாவட்டத்தை சேர்ந்த, கிராமமக்களின் திடீர் போராட்டத்தால், பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்ட பணிகளை, குறித்த காலத்திற்குள் முடிப்பதில், தாமதம் ஏற்படலாம் என, அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.



ரூ.98 ஆயிரம் கோடி! :



மொத்தம், 98 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான, புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பு, ஆண்டுக்கு, 0.1 சதவீத வட்டியில், 88 ஆயிரம் ரூபாய் கடன் உதவி செய்கிறது.கடன் தொகை வழங்கப்பட்டு, 15 ஆண்டு கழித்தே, கடனை திரும்ப செலுத்துவதற்கான முதல் தவணை துவங்கும். 50 ஆண்டுகளில், இந்த தொகையை திரும்ப செலுத்த, அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


508 கி.மீ., துாரம்! :



மஹாராஷ்டிரா மாநிலத்தில், புல்லட் ரயில், மிக நீண்ட துாரம் பயணிக்கும், பால்கர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 508 கி.மீ., நீள ரயில் பாதையில், 12 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. மஹாராஷ்டிராவில், 154 கி.மீ., துாரத்தை கடந்து, புல்லட் ரயில், குஜராத்திற்கு நுழைகிறது. இதனால், மஹாராஷ்டிராவின் முக்கிய பகுதிகளில், நிலம் கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில், 38 கி.மீ., துாரமும், பால்கர் மாவட்டத்தில், 110 கி.மீ., துாரமும் புல்லட் ரயில் பயணிக்கிறது.
Advertisement
 

வாசகர் கருத்து (26)

  • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

    Which is more important for our Nation. BULLET TRAIN OR FARMERS LIFE. This Bullet train proposal is like cats copying Tiger for their skin lines. Let us not forget India is a poor Agricultural Country. If The wheels of ploughing stops the Bullet train wheels can not run. Already farmers are suffering and the Govt wants Bullet trains at the cost of Farmers daily bread. For rich people there many flights and this bullet trains are not a must to travel from Ahmedabad to Mumbai.. Let us copy developed Countries for the welfare of Citizens and not ask citizens to sacrifice their livelihood. LET GOD SAVE INDIA AND ITS PEOPLE.

  • rmr - chennai,இந்தியா

    முதல இந்த மோடி அரசு இருக்கும் ரயில்களை ஒழுங்கா 150 to 200 km வேகத்தில் ஓடுவதற்கு செய்யலாம் அதாற்கு பெரிய செலவு ஆகாது ரயில் நிலையத்தின் கட்டமைப்பை மேம்படுத்தலாம் , டிக்கெட் இல்லாம பயனும் செய்யும் வட இந்தியர்களை கட்டுப்படுத்த வேண்டும் நம்மிடம் இருக்கும் ரயில்வேயை முதலில் மேம்படுத்த வேண்டும் . நதி நீரை இணைத்தால் இந்தியாவே பயன் பெரும் அதை பற்றி ஒரு திட்டமும் இல்லை , வெறும் விளம்பர அரசு

  • Welcome Back to 1900AD - korkai,இந்தியா

    if u all have time please visit the ongoing new L & T bye pass road from kazhakottam to karode in kerala and from there to kottaram in kk dist.if not possible google map search it.completely shaved the evergreen mountains.

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

    விவசாய நிலங்களை அழித்து உருவாக்கும் எந்த ஒரு திட்டமும் வேண்டாம் .... முதலில் விவசாயம் , பின்னர் தான் மற்றவை எல்லாம் ...மக்களுக்கு தங்கள் எதிர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும் ... பண ஆசை காட்டி வீழ்த்த முயலும் கயவர்களின் வஞ்சக வலைக்குள் விழ வேண்டாம் ....

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    சரியாக பெயர் வெச்சாங்கய்யா அறிவுகெட்ட தமிழனுக்கு டுமீலன்னு நாட்டுலே எல்லா பிரச்னையும் தீர்ந்ததுக்கப்பறம் புல்லட் ரயில் விடணுமாம் அப்போ ஏரோபிலேன் ஏர்போர்ட் எல்லாம் ஏன் செஞ்சாங்களாம்? பிரச்னையெல்லாம் தீராமலேயேவா? ஏன் டுமீலன் இவ்வளவு அறிவுகெட்டத்தனமாக இருக்கிறான்? அடேங் கொக்கா மக்க,இந்த ப்ரொஜெக்ட்டுக்கு தான் ஜப்பான்காரன் நிதி உதவியோடு தொழில்நுட்ப உதவியும் சேர்ந்து கொடுக்கிறான். அரசு போடும் முதல் மிக குறைவு. இவ்வளவு சிறிய முதலில் இந்த திட்டம் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, நம் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி வேறு அளிக்கிறது. ஜப்பான்காரனின் அவ்வளவு பணமும் இங்கு முதலீடு செய்யப்படும்போது நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் எவ்வளவு பெருகும்? அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் பொருளாதாரம் மிகவும் மேம்படும். இப்படி எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது நம்ம டுமீளன்கள் ஒன்றுமே புரிந்து கொள்ளாமல், 'அமைதி' களும் 'அன்பு'களும் ஆர்வத்தோடு பரப்பும் பிரச்சாரத்தில் மயங்கி தன் சொந்த புத்தியை சீரழித்து கொண்டு இருக்கிறானே?

  • krishnan - Chennai,இந்தியா

    நம் நாடு விவசாய நாடு . முதலில் சோற்றுக்கு வழி பண்ணவேண்டும் அதற்கு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் நமக்கு தேவை இல்லை புல்லட் ட்ரைன் எல்லாம்.

  • sam - Doha,கத்தார்

    இதுவும் ஒரு வெத்து வெட்டு பேச்சு தான். எதுவுமே நடக்காது. வாய் சொல் வீரர்கள், இன்னும் எத்தனை பேசினாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மோடி நெரைய நினைக்கிறார்... கனவு காண்கிறார்...ஆனால் நடக்கனுமே .... நமது நிலத்தின் வரப்பை நாம் தினமும் சுற்றி வரவில்லை என்றால் விளைச்சல் பாழ்...

  • balakrishnan - coimbatore,இந்தியா

    நமது நாட்டில் ஒரு சாதாரண சாலை விரிவாக்கமே இழு இழுன்னு இழுத்துகிட்டு இருக்கும், இந்த லட்சணத்தில் புல்லட் ரயில் சேவைக்கு நிலம் கையகப்படுத்துதல் அவ்வளவு சாமானிய விஷயமா என்ன, அந்த காலத்தில் வெள்ளைக்காரன் தொலைநோக்கு பார்வையுடன் ரயில்வேக்கு லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஒதுக்கியதால் தான் இன்றும் பெரும்பாலான இடங்களில் சிரமம் இல்லாமல் விரிவு படுத்த முடிகிறது,

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    மேட்டூர் சாத்தனூர் வைகை அணைகள்கூட விவாசாய கிராமங்களை காலிசெய்துதான் கட்டினார்கள். எனவே அவற்றை இடித்துவிடலாமா? அட நெய்வேலி சுரங்கம் BHEL ? பல காடுகளை அழித்துத்தான் விவசாய நிலமாக்கி வீட்டுமனையாக்கி வாழ்கிறோம். திரும்பவும் காட்டுக்கே போய் இலை தழை உடுத்தி இயற்கை வாழ்வுக்கு திரும்பலாமா? காடு கொள்ளாது

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    விவசாயிகளின் நிலம் இப்பொழுது திடீர் என்று முக்கியமாகி விடும்... உயர் மதிப்புள்ள இடத்துக்கு கூட ஐந்து மடங்கு என்பது அபத்தம்...

  • manian - chennai,இந்தியா

    First improve our available railway services in a better ways than bullet railways

  • Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா

    திட்டங்களை அறிவிக்க முதல் மக்களின் நாடிபிடித்துப் பார்க்கவேண்டும். எல்லாத்துக்கும் தலையாட்டிகள் வாழ்ந்த காலங்கள் மலையேறிவிட்டன.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    கமிஷன் குறைகிறதோ? இது அதற்கான மிரட்டலோ?

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    காங்கிரஸ் சதி..

  • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

    பிரதமரின் கனவுக்கு ஏழை விவசாயிகள் பலியாகணுமா என்ன? மாற்றுப்பாதைக்கு புல்லட் ரயிலை இயக்க யோசிக்கட்டும். என்னவோ நாட்டில் ஏழைகளுக்கு உணவுகள் தொடர்ந்து கிடைப்பதுபோலவும்..அணைத்து வசதிகளும் கொடுத்துவிட்டது போலவும்..இனி கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று எண்ணிக்கொண்டு புல்லட் ரயிலை விடுவதற்கு யோசித்ததே கொடூரம். ஒருவேளை உணவே இல்லாமல் 50 % மக்கள் உள்ள இந்த திருநாட்டில் அவர்களுக்கு அத்யாவசிய தேவையை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு புல்லட் ரயில் முக்கியமோ? கனவு கண்டாராம் பிரதமர் அதனை நிறைவேற்றணுமாம்..சந்தை விலையை காட்டிலும் ஐந்து மடங்கு கொடுக்க ஆசைகாட்டியும் கூட மறுத்தவர்கள்தான் நாட்டின் முதுகெலும்பு..விவசாயிகள். இருக்கின்ற விவசாய நிலங்களை இப்படியே அழித்து நாசமாக்கிவிட்டு சோற்றுக்கு அந்நிய நாட்டில் கையேந்தவா? எதற்கு இந்த புல்லெட் ரயில்? இப்போதுதான் மிக சிறிய நகரங்களுக்கு கூட விமான சேவைகள் வந்துவிட்டனவே..புல்லட் ரயிலேதான் வேண்டுமா? கனவுகள் காண்பது பிரதமர் ஆசை..அவரேதான் அடிக்கடி சாரி தினமும் அயல்நாட்டில்தானே இருக்கின்றார்..அப்படியே புல்லெட் ரயிலில் பயணித்து ஆனந்தப்படட்டுமே..பொறுப்பற்ற பிரதமர் சொன்னாலும் அதிகாரிகள் படுகின்ற பாடு அடி உதை என்று. ஆசைக்கு அடிபணியாத அக்கிராம மக்கள்தான் இந்திய நாட்டின் உயிர்நாடி...பிரதமர் புரிந்துகொள்வாரா இனியாவது?

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    விவசாயிகள் தங்கள் நிலம்களை கொடுத்துவிட்டு, பிட்சை எடுக்க போகாமல் இப்படி போராடி, நாட்டை சுடுகாடாக ஆக்கினால் எங்கள் வரும்கால முதல்வர் ரஜினியின் மனம் புண்படாதா? தாம்பரத்தில் அந்தியோதயா ரயில்கள் சில மாதம்களாக சும்மா நிறுத்தப்பட்டு துரு பிடித்துக்கொண்டு இருக்கின்றதே, அதை கேட்க இந்த நாட்டில் ஒரு நாயும் இல்லை.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அது எப்படி ஜி, நல்ல திட்டங்கள் அனைத்தும் குஜராத்துக்கு? அழிவு திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டுக்கு?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement