Advertisement

சிட்டி க்ரைம் செய்திகள்...

'பான்மசாலா' விற்றவர்கள் கைது
வெரைட்டிஹால் ரோடு மற்றும் காட்டூர் போலீசார் நேற்று முன்தினம் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட 'பான்மசாலா' பொருட்களை விற்பனை செய்த, சாதிக், 39, முருகேசன், 59, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 'ஹான்ஸ்' உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட 'பான்மசாலா' பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
லாட்டரி விற்ற இருவர் கைது
சரவணம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் கரட்டுமேடு, சின்னவேடம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அச்சமயம் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த ரவிகுமார், 51, சண்முகவேல், 40, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து லாட்டரி எண் எழுதிய பேப்பர்கள், மொபைல்போன்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மது விற்றவர்கள் கைது
மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மாநகரின் பல்வேறு இடங்களிலும், ரத்தினபுரி போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ராமநாதன், 54, சதீஷ், 25, செந்தில்குமார், 39, தனராஜ், 30, குமரேசன், 45, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement