Advertisement

அர்ஜூனன் பார்வையில் கிளிமஞ்சரோ...




கிளிமஞ்சரோ - மலை கனிமஞ்சரோ - கன்னக் குழிமஞ்சரோ யாரோ யாரோ ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா…


என்ற எந்திரன் படப்பாலைக் கேட்கும் போதெல்லாம் அதென்ன கிளிமஞ்சரோ என்ற கேள்வி எழும்? அந்தப்பாடல் இடம் பெற்ற இடத்தின் பெயராக இருக்கும் என்றும் நினைத்துக் கொண்டேன்.


ஆனால் அந்தப்பாடல் வரிகளுக்கும் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை,கிளிமஞ்சரோ என்பது ஆப்பிரிக்கா நாட்டில் தான்சானியா பகுதியில் உள்ள 5895 மீட்டர் உயரமுள்ள மலைப்பகுதி என்பதும் அந்த மலை உச்சியில் ஏறி இறங்குவது மலையேறும் சாகச பிரியர்களின் கனவு என்பதும் அர்ஜீனன் கிருஷ்ணசுவாமியை சந்தித்த போதுதான் தெரியவந்தது.


கூடுதலானதும் முக்கியமானதுமான தகவல் அர்ஜூனன், கிளிமஞ்சரோ மலை உச்சிக்கு சென்று திரும்பியிருக்கிறார் என்பதுதான்.


ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த அர்ஜீனன் விவரம் தெரி்ந்த நாள் முதலே பென்சிலால் படம் வரையும் ஒவியர் இப்போது வரைந்த ஒவியத்திற்கு ஏற்ப தமிழில் கவிதை எழுதும் கவிஞர் இவரது ஒவியக்கலை ஒரு கட்டத்தில் இவரை புகைப்படக்கலைஞராக்கியது.


முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பது என்று முடிவு செய்தவர் போல தனது கேமிராவுடனான முதல் பயணத்தையே கிளிமஞ்சரோ மலைப்பயணமாக்கிக் கொண்டார்.


மொத்தம் 6 நாள் மலைப்பயணம்,மிக மெதுவாக மலையேற வேண்டும், நம்மால் முடியும் என்ற பாசிடிவான எண்ணத்தை எப்போதும் விட்டுவிடக்கூடாது, நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும் இதுதான் கிளிமஞ்சரோ செல்வதற்கான கோல்டன் ரூல் என்று சொல்லி கைடு அழைத்துச் சென்றார்.


உயரத்திற்கு போகப்போக குளிர் வாட்டியது ஆனால் இதுவரை காணாத வான்வௌியை காணமுடிந்ததில் அந்த பிரச்னை மறைந்தது, பால் வீதியும் அதிகாலை ஆரஞ்சு நிற வானமும் அதிசயக்கவைத்தது.


5000 மீட்டர் உயரத்திற்கு சென்ற போது குடிக்க கொண்டு போயிருந்த போது தண்ணீர் ஐசாக உறைந்து போனது நல்ல வேளை கைடு பிளாஸ்க்கில் தண்ணீர் கொண்டு வந்திருந்தார்.


இது போன்ற விஷயங்களை சமாளித்து உச்சியை அடைந்த போது அளவில்லாத மகிழ்ச்சியை மனம் அடைந்தது.இன்னும் நிறைய சாகச பயணங்களை தொடரவேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது என்று சொல்லும் அர்ஜீனனை வாழ்த்துவதற்கான எண்;9940048616.


எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement