Advertisement

இரு சுயேட்சைகளுக்கு இப்போது ராஜமரியாதை

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜ. தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் உரிமை கோரியுள்ளது. அதே நேரம் காங்., மதசார்பற்ற கூட்டணி தங்களிடம் பெரும்பான்மை இருப்பதாகவும் தங்களை ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

இந்நிலையில் சுயேட்சையாக வெற்றி பெற்ற இரண்டு எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ., காங். கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்திக்க மாறி மாறி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டம் ரானேபெனுரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆர். சங்கர், இவர் இன்று நடந்த பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் திடீரென அதிரடியாக கலந்து கொண்டதாகவும் அவரை பா.ஜ.வில் இணைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ. ஹச் நாகேஷ், இவர் கோலார் மாவட்டம் முல்பாஹல் தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் மஞ்சுநாத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை காங். முன்னாள் முதல்வர் சித்தராமையா வளைத்து கூட்டணியில் சேர்க்க முயற்சித்தாகவும கூறப்படுகிறது.

இதுவரை கவர்னரை சந்திக்க பா.ஜ. மற்றும் காங்.கட்சியினர் சென்ற போதெல்லாம் இரு சுயேட்சைகளும், மாறி மாறி அவர்களுடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆட்சியை தக்க வைக்க காங்.கட்சியும், ஆட்சியை பிடிக்க பா.ஜ.வும் சுயேட்சைகளுக்கு ராஜ மரியாதை அளிப்பதால் அவர்களுக்கு இப்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (8)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  இதெல்லாம் அறிவுக்கு விரோதமான செயல்கள் சாத்தியமற்ற ஒன்றை சாத்தியமாக முயல்வது மனிதமாண்புக்கு அப்பாற்பட்டது .. காலம் கனியும் அது காலன் வரும்போது ஒவ்வொரு தீயசக்தியும் உணரும் . அது வெளியிடமுடியாமல் அழியும் இதுதான் நியதி .. மனிதமாண்பற்ற மனிதர்களால் பேரழிவு ஒன்றே .. எஞ்சும்

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  இந்த இரு சுயேட்சைகளும் காங்கிரஸ் ஆதரவில் வெற்றி பெற்றவர்கள் ... இவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தவில்லை ...

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  கொஞ்சம் பொறுத்திருக்கலாமே என்ன அவசரம். காங்கிரஸ் நிபந்தனையின்றி வெளியிலிருந்து இந்த சுயேச்சைகள் துணை முதல்வராவதற்கு ஆதரவு தருவோம் என்று சொல்லுமல்லவா? இரண்டொரு நாட்கள் பொறுத்திருந்தால் அதை அவர்கள் சொல்வதை கேட்கலாமே.

  • Mohamed Siddiq - Khor,கத்தார்

   என்ன பண்றது காங்கிரஸ் கட்சி இப்போ காஞ்சு கடக்க..,, இப்போ எல்லாம் மக்கள் பணமும் bjp தான் கொள்ளை அடிச்சு வச்சுருக்கு..,, நூறு கோடி என்ன ஆயிரம் கோடி கூட கொடுக்கும்..,, அடுத்து நம்ம பிரதமர் எங்க சுற்றுலா..,,

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  குமாரசாமியின் சர்வாதிகார போக்கு பிடிக்கலை. ராகுலின் போக்கு பிடிக்கலை, வயித்து போக்கு பிடிக்கல்லைன்னு குதிரைகள் அல்லது கழுதைகள் விலைக்கு வரும். பாஜகவில் நல்ல விலைக்கு வாங்கப்படும். ஜனநாயகத்தை அது மேய்க்கும். சாணி மக்களுக்கு.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ரெண்டு சுயேச்சை சேர்த்தாலும் 106 தானே வருது. கொறடாவை மதிக்காமல் ஓட்டு, செல்லாத ஓட்டு, ஆப்சென்ட், தகுதி நீக்கம் ன்னு ஆரம்பிச்சா போதுமே.

  • EN MELA KAI VACHAA KAALI - manama,பஹ்ரைன்

   கழுத்தை கிராஸ் கட்சி தெரிஞ்சு கட்டெறும்பா போச்சு.

 • sam - Bangalore,இந்தியா

  தப்பு பண்ணுடீங்க கோபால் தப்பு பண்ணுடீங்க கோபால்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement