Advertisement

முன்விரோத தகராறு இருவருக்கு வலை

பாகூர்:கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் மணி மனைவி பச்சையம்மாள், 48; கூலித் தொழிலாளி. இவரது குடும்பத்திற்கும், கடலுார் வில்வ நகரை சேர்ந்த ஜனார்த்தனன் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், பச்சையம்மாளின் மகள் கடலுாரில் வேலை செய்யும் துணிக்கடைக்கு சென்ற ஜனார்த்தனன், அவரிடம் தகராறு செய்துள்ளார்.
இது குறித்து பச்சையம்மாள், ஜனார்த்தனின் குடும்பத்தினரிடம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் தரப்பினர், பச்சையம்மாளையும், அவரது மகள் மற்றும் மகனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில், ஜனார்த்தனன் உட்பட இருவர் மீது கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement