Advertisement

மானிய டீசல் பெறும் புத்தகம் ஒப்படைக்கும் போராட்டம்

புதுச்சேரி:நிவாரண தொகை வழங்காததை கண்டித்து, விசைப்படகு உரிமையாளர்கள் மானிய விலையில் டீசல் பெறும் புத்தகத்தை மீன் வளத்துறையிடம் ஒப்படைத்தனர்.
தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரம் துார் வாராததால், தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விசைப் படகுகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையான ரூ.75 ஆயிரத்தை நிபந்தனையின்றி வழங்க வேண்டும் எனக் கோரி, விசைப்படகு உரிமையாளர்கள் பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மீன்வளத்துறை மூலம் மானிய டீசல் பெறுவதற்காக விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ள டீசல் புத்தகங்களை, விசைப்படகு உரிமையாளர்கள் நேற்று மீன்வளத்துறை இயக்குநர் முனுசாமியை சந்தித்து ஒப்படைத்தனர். மேலும், தடையை மீறி, நாளை (17 ம் தேதி) மீன்பிடிக்க கடலுக்கு செல்வோம் என, விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement