Advertisement

வீடு தேடிவருது தபால் நிலைய வங்கி சேவை: தமிழகத்தில் விரைவில் துவக்கம்

தேனி: தமிழக கிராமங்களில் வீடுதேடி வரும் தபால் நிலைய வங்கி சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது.

'இந்தியா போஸ்ட் 'வங்கி சேவையை துவக்கியுள்ளது. அடுத்த கட்டமாக ஊரகப் பகுதிகளில் இயங்கும் தபால் நிலைய களப்பணியாளர்களிடம் கையடக்க கருவியை வழங்கி, வீடுதோறும் சென்று வங்கிச் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் :



ஓய்வூதியம் பெறுவோர், விவசாயிகள், சுயஉதவிக்குழுவினர் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. களப்பணியாளர்களிடம் ஆதார் எண் விபரத்தை அளித்தால், விரல் ரேகை பதிவு செய்து எந்த பொதுத்துறை வங்கி கணக்கிலும் சம்பந்தப்பட்டவர் பணம் செலுத்த, எடுக்க முடியும். இதற்காக துறை சார்பில் 'டார்பன் ஆப்ஸ் ' என்ற செயலி வடமாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஊரக தபால் நிலையங்களில் பொதுமக்களுக்கு இந்த வங்கிச் சேவையை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 12 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இச்சேவை தமிழகத்தில் விரைவில் துவங்கப்பட உள்ளது. அதுகுறித்து பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Varun Ramesh - Chennai,இந்தியா

    கால் நூற்றாண்டுகளாக தபால் சேவையை தனியார் கூரியர்காரர்களிடம் ஒப்படைத்தது அதன் பின் கம்ப்யூட்டர் அறிமுகத்தின் காரணமாக தந்தி சேவையையும் இழந்தது இதற்கெல்லாம் மேலாக ஊழியர்களின் மெத்தன போக்கால் வாடிக்கையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தது இவையே இத்துறையின் சரிவிற்கு காரணங்கள். தற்போது வீடு வீடாக சென்று மக்களை கவர நினைக்கும் இந்த எண்ணம் வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வந்தபோது இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

    • Karthikeyan Pillai Sathanatham - Pennadam,இந்தியா

      மிகவும் சரி. பெண்ணாடம்(606105) தபால் நிலைய சேவை அலுவலர் (சேமிப்பு பிரிவு) இன்றைய நல்ல வரை மக்களிடம் பொறுப்பாக பதில் கூறுவது இல்லை எப்போது சென்று சேமிப்பு கணக்கு பற்றி கேட்டால் இன்று முடியாது (அ) இணையம் தொடர்பு இல்லை என்று வாடிக்கையாளர்களை அலையவிடுவதே அவர்களின் சேவையாக உள்ளது. தபால் துறை ஆணையர் கவனிப்பாராக.......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement