Advertisement

5 நிலையங்களில் அரக்கோணம் ரயில் நிற்காது

சென்னை: வில்லிவாக்கம் - அம்பத்துார் இடையே பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், அரக்கோணம் ரயில், ஐந்து நிலையங்களில் நிற்காது.l சென்னை, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணத்துக்கு, அதிகாலை, 1:20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்படுவதால், கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனுார் மற்றும் இந்து கல்லுாரி நிலையங்களில், நாளையும், வரும், 18ம் தேதியும் நிற்காதுl சென்னை, சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, ஆவடிக்கு, அதிகாலை, 12:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்படுவதால், கொரட்டூர், பட்டாபிராம், திருமுல்லைவாயில் மற்றும் அன்னனுார் நி லையங்களில், நாளையும், வரும், 18ம் தேதியும் நிற்காது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.பாதி வழியில் ரத்துஅரக்கோணத்தில், ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை சென்ட்ரல் - சூலுார்பேட்டை ரயில்கள், பாதி வழியில் ரத்த செய்யப்பட்டுள்ளன.l சென்னை, சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, சூலுார்பேட்டைக்கு, காலை, 7:30 மணி மற்றும், 8:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், எலாவூர் - சூலுார்பேட்டை இடையே, இன்று ரத்து செய்யப்பட்டுள்ளனl சூலுார்பேட்டையில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு, காலை, 10:00 மணி மற்றும், காலை, 11:15 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், சூலுார்பேட்டை - எலாவூர் இடையே, இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement