Advertisement

வீட்டுவசதி திட்டங்கள் குறித்து உலக வங்கி இன்று ஆய்வு

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும், ஏழை மக்களுக்கான, வீட்டுவசதி திட்டங்கள் குறித்து, உலகவங்கி அதிகாரிகள் குழு, இன்று ஆய்வு செய்ய உள்ளது.தமிழகத்தில், ஏழை மக்களுக்காக, குடிசை மாற்று வாரியம் வாயிலாக, பல்வேறு இடங்களில், வீட்டுவசதி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், மத்திய அரசின், அனைவருக்கும் வீடு திட்ட நிதியும் பயன்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில், உலக வங்கி வாயிலாக, கூடுதல் கடன் வசதி ஏற்படுத்த, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக தமிழகத்தில், வீட்டுவசதி திட்டங்களின் நிலை, நிதி தேவை குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க, உலக வங்கி திட்டமிட்டுள்ளது.இதற்காக, உலக வங்கி உயர் அதிகாரிகள் குழு, தமிழகத்தில் வீட்டுவசதி திட்டங்கள் தொடர்பான விபரங்கள் பெற, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை, நிதித்துறை, குடிசை மாற்று வாரியம், வீட்டுவசதி வாரிய அதிகாரிகளுடன், இன்று முதல், மூன்று நாட்களுக்கு ஆலோசனை நடத்த உள்ளது.இத்துடன், பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும், அக்குழு, நேரில் ஆய்வு செய்ய உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement