Advertisement

ஐ.சி.எப்.,பில் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி

சென்னை: இந்தியாவில் முதன் முறையாக, சென்னை, ஐ.சி.எப்.,பில், சர்வதேச ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி, மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட, ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ரயில் பெட்டி மற்றும் தொழில் நுட்ப மேம்பாடு குறித்த, கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட உள்ளது.இந்தியாவில் தயாரிக்க உள்ள, 'புல்லட்' ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ள வாய்ப்புகள், குறித்த தகவல்களும் இடம்பெறும். இக்கண்காட்சி, ஐ.சி.எப்., ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில், வரும், 17ல் துவங்கி, 19 வரை நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை திறந்திருக்கும் என, ஐ.சி.எப்., தெரிவித்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement