Advertisement

அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவெடுப்பாரா வஜுபாய்

புதுடில்லி : கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மாநிலத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்ற முக்கிய முடிவை எடுப்பது தொடர்பாக, கவர்னர் வஜுபாய் வாலா, 79, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த, குஜராத் மாநிலத்தில், 1985ல், பா.ஜ., தலைமையிலான ஆட்சி மலர்ந்தது. குறிப்பாக, ராஜ்கோட் சட்டசபை தொகுதியில், 1984 வரை, காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கூட தோல்வி அடையாத நிலையில், பா.ஜ., சார்பில் அங்கு போட்டியிட்ட, வஜுபாய் வாலா, அமோக வெற்றி பெற்றார்.

அப்போது முதல், 2002 வரை, அந்த தொகுதியில், வஜுபாய் வாலாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. அங்கு நடந்த அனைத்து தேர்தல்களிலும், அவரே வெற்றி பெற்றார். மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்தார். 2002ல் நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி போட்டியிடுவதற்காக, வஜுபாய், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அந்த தேர்தலில், நரேந்திர மோடி வெற்றி பெற்றார்.

அதன் பின் நடந்த பொது தேர்தலில், நரேந்திர மோடி மணிநகர் தொகுதியில் போட்டியிட்டதை தொடர்ந்து, ராஜ்கோட்டில், வஜுபாய் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2007 மற்றும் 2012 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, மோடி தலைமையிலான மாநில அமைச்சரவையில், முக்கிய இலாகாவான, நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார்.

குஜராத் சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்து உள்ள வஜுபாய், 2014ல், மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்ததும், கர்நாடகா மாநில கவர்னராக பொறுப்பேற்றார். குஜராத் மாநில பா.ஜ., தலைவர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக அவர் திகழ்ந்தார்.

நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரியுள்ளது.

அதே சமயம், இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்துள்ள, காங்., - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், சட்ட விதிகளின் படி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ள, பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பாரா அல்லது எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், காங்., - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு வாய்ப்பு வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோடிக்கு மிக நெருக்கமாக இருந்தவரும், பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமாக திகழ்ந்த, வஜுபாய், தற்போது, கவர்னர் பதவி வகிப்பதால், அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ளார். வஜுபாய் எந்த மாதிரியான முடிவை எடுக்கவுள்ளார் என, அரசியல் தலைவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (36)

 • ManiS -

  If there is a situation like this, At that time only you people were recalling the word Democracy?

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  ஒரு சுக்கும் கிடையாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவு எடுக்கமாட்டார் என்பதை இந்த கட்டுரை மிக விரிவாக புலப்படுத்துகின்றது .

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  வோட்டு மெஷின் கைகொடுக்கும்போது வஜுபாய் கைகொடுக்க மாட்டாரா? தேர்தல் முடிவு வருவதற்கு முன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க., பணநாயகத்தை காக்க அவகாச நாடகம்., அப்பாவுக்கு முதல்வர் பதவி - சாமி அய்யா கணக்கு போட்டு என்னப்பயன்?

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  வாழ்க பாஜக

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   சைன் சக்கா..

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  இவரிடம் நீதியை எதிர்பார்ப்பதா..? பிஜேபி யை தான் ஆட்சி அமைக்க அழைக்க போகிறார் ... இது அனைவருக்கும் தெரிந்த ஓன்று ... குதிரை பேரம் துவங்கட்டும் ...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  அரசியலுக்கு அப்பாற்பட்டு நாகபூரில் இருந்து உத்தரவு வரும்

  • kundalakesi - VANCOUVER,கனடா

   வாட்டிகன் ஜித்தாவில் இருந்து வராது. தூக்கி எறிய படும்.

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   குண்டலகேசி அவர்களே...அருமையான நெற்றியடி. எப்படியாவது வாடிகன் அடிமை ஒழிந்தால் நிம்மதி.

 • suresh - covai,இந்தியா

  ஜனநாயக மரபுப்படி கவர்னர் முதலில் பெரும்பான்மை 112 + உள்ள கட்சியையோ அல்லது கூட்டணி கட்சிகளையோ பதவியேற்க அழைக்க வேண்டும். எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையும் இல்லாமல் கூட்டணியாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவும் விருப்பம் இல்லாமலும் இருந்தால் மட்டும் தான் இரண்டாவது வழியாக தனிப் பெரும் கட்சியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இப்படி ஜனநாயகப்படி பார்த்தால் முதல் வாய்ப்பு காங் + மஜத. இரண்டாவது வாய்ப்பு தான் BJP க்கு கவர்னர் தர வேண்டும். ஆனால் இந்த BJP கவர்னரிடம் ஜனநாயகத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. மக்கள் எல்லாம் முட்டாள்கள் என நினைத்து ஒரு ஜனநாயக விரோத முடிவை தான் எடுப்பார்கள் பாருங்கள்.

  • Krishnan - Coimbatore,இந்தியா

   சுரேசு... என்னமோ கான்ஸ்டிடியூஷனை கரைச்சுக் குடிச்ச புண்ணாக்கு மாதிரி பேசுற பாரு...

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   திரு சுரேஷ்ஷ் அவர்களே.......மக்கள் முட்டாள்கள் என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா...?...."எது ஜனநாயக விரோதம்? ஊழல் மலிந்த குமாரசாமியுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவின் B டீம் என்று கர்நாடக தேர்தலில் பிரச்சாரம் செய்த சித்தராமையாவும், செத்தாலும் காங்கிரஸீடன் கூட்டணி கிடையாது என்று கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் சத்தியம் செய்து வாக்காளர்களிடம் உறுதிமொழி அளித்த குமாரசாமியும் பாஜக ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக தேர்தல் முடிந்த உடன் கூட்டணி என்கிற பெயரில் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோருவது மக்கள் விரோதமில்லையா? ஜனநாயகப் படுகொலை இல்லையா? கர்நாடகாவில் சித்தராமையாவும் குமாரசாமியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தால் அது பேயும் பிசாசும் சேர்ந்து குடும்பம் நடத்துவது போலத்தான் இருக்கும்...."

 • suresh - covai,இந்தியா

  என்ன இந்த கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவடுப்பாரா? அப்படின்னு நாம நானச் சா நாம தான் முட்டாள் .அவரு எப்பேரு பட்ட தந்தரவாதின்னு இந்த வாரத்துல தெரிஞ்சிடும். இவரே ஒரு BJP - ன் கைக்கூலி. அப்புறம் ஜனநாயக மாவது மக்கள் நலனாவது.

 • s t rajan - chennai,இந்தியா

  காலம் எவ்வளவு விசித்திரமானது என்று நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. இப்பொழுது கர்நாடகா கவர்னராக இருக்கும் வாஜூபாய் ரூதாபாய் வாலா குஜராத் மாநில பிஜேபி தலைவ ராக இருந்த பொழுது இதே தேவகவுடா பிரதமராக இருந்தார். அப்பொழுது குஜராத் முதல்வராக பிஜேபி யின் சுரேஸ் மேத்தா இருந்தார். . அப்பொழுது 121 எம்எல்ஏக்களுடன் பிஜேபி மெஜார ரிட்டியுடன் தான் இருந்தது.வகேலாவை தூண்டிவிட்ட காங்கிரஸ் பிஜேபி யை உடைத்து அவருடன் 28 பிஜேபி எம்எல்ஏக்களை இழுத்து சட்டசபையில் மெஜாரிட்டியுடன் இருந்த பிஜேபி ஆட்சியை தேவகவுடா வை வைத்து கலைத்தது. மெஜாரிட்டி யுடன் இருக்கும் ஆட்சியை கலைக்க வேண்டாம் என்று அப்போதைய கவர்னர் கிருஷ்ண பால்சிங்கி டம் நடையாய் நடந்தவர் இப்போதைய கர்நாடக கவர்னர் அப்பொழுது பிஜேபி ஆட்சியை கலைத்த தேவகவுடா இப்பொழுது தன் மகனை முதல்வராக்க அப்பொழுது குஜராத் மாநில பிஜேபி தலைவரும் இப்போதைய கவர்னருமான வாஜூபாய் வாலாவின் உதவி கேட்டு காங்கிரஸ் துணையுடன் வருகிறார்..

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   இந்திய அரசியலில் காலங்கள் மாறலாம், கட்சிகள் மாறலாம். ஆனால் ஜனநாயகத்தை மிதித்து மக்களை ஏமாற்றும் கருமம் பிடிச்ச கட்சிகள் என்றைக்கும் மாறாது.

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   அதாவது உம்மால் ஜால்றா அடிக்கப்பட்ட கட்சிகள்....வந்தேறிகளிடம் பாரதத்தை அடகு வைத்த கும்பல். உம்மை தத்துவம் எல்லோருக்கும் நன்றாகவே புரிந்து விட்டது. கம்முனு கடக்கலாம்.

 • Subramanian - chennai,இந்தியா

  இந்தியாவில் தர்மம் நியாயம் பேசும் கவர்னர் யார் இருக்கா ?

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   வந்தேறிகளிடம் வாங்கிக்கொண்டு ......அவர்களுக்கு பாரதத்தை அடகு வைத்த கும்பல் .... பற்றி பேச என்ன உள்ளது.

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  காவி கவர்னர் - நீதி புரட்டப்படும்.

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

   அதானே...ஒரு அரபி கவர்னர் இருந்தால் மட்டும் தான் நீதி நிலைக்கும்.

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  பெரு மட்டும் தான் வஜூபாய் ஆனால் செய்ய போற வேலை எல்லாம் அமித் ஷா மாதிரி.

  • Sudarsanr - Muscat,ஓமன்

   நீங்களே எப்படி தீர்ப்பு சொல்றிங்க...

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  பெரும்பாலான சீட்கள் ஜெயித்த கட்சிகள், மற்ற குறைவான கட்சிகளுடன் கூட்டு சேர்வது நியதி. கர்நாடகாவில் என்னவென்றால் 37 தொகுதிகளில் மட்டுமே வென்ற ம ஜ த கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் (78 தொகுதிகள்) ம ஜ த கட்சி தலைவரை முதல்வராக்குகிறார்களாம். இது காங்கிரஸ் தந்திரம். தான் தோற்றாலும் மற்றவன் ஆட்சி அமைக்கக்கூடாது. இது தந்திரமா இல்லை பொறாமை, பழி வாங்குதல். ஆகையாலேயே காங்கிரஸ் மங்கிக்கொண்டு வருகிறது. 78 தொகுதிகள் கட்சி 37 தொகுதிகள் கட்சியை ஆதரிக்கிறேன் என்று சொல்லி ப்ளாக் மெயில் செய்தே திரைக்கு பின்னாலிருந்து ஆட்சி செய்யும். மன்மோகன் சிங்க்கை பிரதமர் நாற்காலியில் உட்காரவைத்து ஆட்சி செய்த காந்தி குடும்ப ஆட்சிதானே. ஒரு பழ மொழி ஞாபகம் வருகிறது - தன் கண் கெட்டாலும் மற்றவருக்கு இரண்டு கண்களும் கெடவேண்டும் - என்ற நல்ல எண்ணம் கொண்ட நாட்டு பற்று.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   பிஜேபி இதே போல குமாரஸ்வாமிக்கு ஆதரவு கொடுத்து உள்ளது .

  • JOY - Chennai,இந்தியா

   3 யை 3 தொகுதி ஜெயிச்சிட்டு நீங்க ஆட்சி அமைக்கல

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவெடுக்கவேண்டுமெனில் சமூக சேவகர்களை மட்டுமே கவர்னராக்க முடியும். வாஜுபாய் தேர்ந்த அரசியல்வாதி . அவர் அரசியல்வாதியாகத்தான் செயல்படமுடியும் அதற்குத்தானே பதவி? ஆர் எஸ் எஸ் சில் முழுநேரத்தொண்டராக தன்னலமற்று சேவைசெய்த குணம் மிச்சமிருந்தால் நீண்ட கால நோக்கில் கர்நாடகாவுக்கு சிறந்த அமைய அமைய முயலட்டும். மக்கள் நலத்தையோ வளர்ச்சியையோ எண்ணாமல் ஒரு குறிப்பிட்ட கட்சியை ஒதுக்கிவைக்கவென்றே உருவான கூட்டணி எவ்விதத்தில் மக்களுக்கு நன்மை செய்யும் என்பது அவருக்குதெரிந்திருக்கும் .முக்கியமாக காவேரி பிரிச்சினையில் எந்த மந்திரியாவது கோர்ட் உத்தரவை எதிர்த்துப் பேசினால் எந்த கோப்பிலும் கையெழுதிடமாட்டேனென உறுதியாகக் கூறிவிடவேண்டும் . கோர்ட்டை அவமதித்துப்பேசும் மந்திரிகள் எம் எல் ஏக்கள் மீண்டும் தேர்தல்களில் நிற்கமுடியாதபடி கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை சாத்தியமே

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  பாஜகவை ஆட்சியிலிருந்து ஒதுக்க ராகுல் சோனியா குமாரசாமிக்கு ஆதரவளித்தால் தேவே கவுடா காங்கிரசை கீழ்த்தரமாக நடத்துவார். ஓரிரு பதவிகளைத்தவிரை மீதமுள்ள அணைத்து மந்திரி பதவிகளையும் தனது கட்சிக்காரர்களுக்கே கொடுத்து அதிகாரம் முழுவதையும் தானே வைத்துக் கொள்வார் இத்தனைநாள் சொகுசாக அரியணையிலிருந்த ஊழல் காங்கிரஸாரால் வெகு சில நாட்கள் கூட அதனை தாங்கமுடியாது .விரைவில் மிளிதல் வந்து அழிவர். இல்லையெனில் சுடலை அழகிரிபோல தேவே கௌடாவின் இம்மகான்களான ரேவனாவும் குமாரசாமியும் அடித்துக்கொண்டு உடைபபர்

 • WE ARE INDIAN - Chennai,இந்தியா

  பிஜேபி தான் முதலில் அழைக்கப்பட வேண்டும். குமாரசாமி கொங்கிரஸ் நம்பாமல் பிஜேபி யை ஆதரிப்பது நல்லது.

  • murugu - paris,பிரான்ஸ்

   அதுதான் கோவாவில் பார்த்தோமே தேசிய கொடியை போட்டுக்கொள்பவன் எல்லாம் இந்திய தேசிய வாதியாக ஆகமுடியாது

  • Mohan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   YES TRUE...GOA IS A DIFFERENT SAMPLE... AND HERE THE RULE WILL BE DIFFERED IN KARNATAKA... ALL UNDER CONTROL BY BJP JAIHIND

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அவரிடம் நேர்மையையெல்லாம் எதிர்பார்க்க முடியமென்று தோன்றவில்லை. அறுதி பெரும்பான்மை பெற இயலாவிட்டாலும் 'கோவா' formula இருக்கவே இருக்கு.

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  FINALLY, THE GOVERNOR OF KARNATAKA HAS PROVED THAT BASICALLY HE IS A POLITICIAN - BY ALLOWING ONE WEEK TIME TO SHRI YEDIURAPPA TO PROVE MAJORITY, THUS ALLOWING HORSE TRADE. BJP WILL BE SUCCESSFUL IN THIS GAME. KARNATAKA WILL BE THE FOURTH STATE IN BJP KITTY THANKS TO MANIPULATIVE POLITICS. WHERE IS DEMOCRACLY?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரஸ் அதன் நரித்தனத்தின் பயனாக வந்த இந்த தோல்வியை வெற்றி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது... அதன் பலனை சீக்கிரம் அனுபவிப்பார்கள்... சிறுபான்மையினரை குறி வைத்து செய்த தந்திரங்கள் தோல்வி என்பதை காங்கிரஸ் உணராதவரை கல்லறையை நோக்கிய பயணத்தை காங்கிரஸ் கட்சி தவிர்க்கமுடியாது..

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  எண்ணிக்கை அடிப்படையில் முதலில் பா.ஜ.க. வை அழைப்பார்.....அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால், காங்கிரசை, கவுடாவை அழைப்பார் ....

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   வெகுளி..

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  மோசடி கட்சியில் அப்படி அரசியலுக்கு அப்பால் முடிவெடுக்கிற நல்லவன் யாரும் இருக்க முடியாது .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement