Advertisement

கர்நாடகத்தில் இணையற்ற வெற்றி: மோடி பெருமிதம்

புதுடில்லி : ''கர்நாடக மக்கள் பா.ஜ.,வுக்கு முன் எப்போதும் இல்லாத, இணையற்ற வெற்றியை கொடுத்து உள்ளனர். தேர்தல் முடிவுகளால் அம்மாநிலத்தின் வளர்ச்சி பயணம் சிதைக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்,'' என பிரதமர் மோடி பேசினார்.


கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு குறித்து பா.ஜ.,வின் பாராளுமன்ற குழு கூட்டம் டில்லியில் நேற்று மாலை நடந்தது. கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அமித்ஷா வரவேற்றார்.

இதில் மோடி பேசியதாவது: கர்நாடக மக்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். தேர்தல் முடிவுகளால் அம்மாநிலத்தின் வளர்ச்சி பயணம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. மாநிலம் பின் தங்குவதை அனுமதிக்க மாட்டோம்.

பா.ஜ., இந்தி பேசும் வடமாநிலங்களுக்கான கட்சி என்ற பொய் தோற்றத்தை சிலர் உருவாக்க முயன்றனர். ஆனால் எங்களுக்கு வெற்றி அளித்து, அது போன்ற சிதைந்த சிந்தனை கொண்டவர்களுக்கு சரியான பதில் அளித்துள்ளனர் கர்நாடக மக்கள். இது எப்போதும் இல்லாத, இணையற்ற வெற்றி.

நம் நாட்டை பல ஆண்டுகளாக ஆண்ட ஒரு கட்சி வடமாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் பகையை ஏற்படுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கியும் அரசியலமைப்பையும், ஜனநாயக நெறிமுறைகளையும் சிதைத்து விட்டது.


பல மாநில மொழி தெரியாததால் தகவல்களை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்ற தயக்கம் இருந்தது. ஆனால் கர்நாடக மக்கள் மிகப் பெரிய அன்பை பகிர்ந்து, மொழி ஒரு பிச்னை இல்லை என்பதை உறுதி செய்து விட்டனர்.

கட்சி தலைவர் அமித்ஷாவின் நுணுக்கமான அணுகுமுறையால் நமக்கு அடுத்து அடுத்து வெற்றி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பின் மூலம் கட்சித்தொண்டர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (32)

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  இந்த வெற்றியை பெறுவதற்காக காவேரி நீதியை குழி தோண்டி புதைத்ததை சொல்வதா? பணம் பாதாளம் வரை பாய்ந்ததை சொல்வதா? மத துவேஷங்களை பரப்பியதை சொல்வதா? அனைத்திற்கு மேலாக ஆட்சி அமைப்பதற்காக மாற்று கட்சி MLA க்களை வளைப்பதற்காக குறுக்கு வழியை கையிலெடுத்து பம்பரமாக வேலை செய்வதை சொல்வதா?

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  கலியுகம் எப்போது முடிமென கண்ணனிடம் கேட்டதற்கு “தருமநெறி பொய்த்ததென தாயர்குலம் வாடுவது தாளாது பொங்கும் நேரம்... தடியுடைய முரடர்களும், படையுடைய தலைவர்களும் தலைதூக்கி நிற்கும் நேரம்.... தர்மவினை பொய்யாகி, காலநிலை தவறாகி, கருணை பறிபோகும் நேரம்... கண்ணனவன் சொன்னபடி, கண்ணெதிரில் வந்துவிடும் “கலியுகம்” முடியும் நேரம்....” என பகவத்கீதை கண்ணன் சொன்னபடி... “கலியுகம்” முடியும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்... மேலே சொன்னதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது... அதனால் கண்ணனவன் சொன்னபடி, கலியுகம் முடியும் நேரம் வந்து... உலகத்துல இருக்குற அத்தனை மனிதப் பதர்களும்... திடீரென ஒருசில நொடிகளில் பூமி பிளந்து... நல்லவன்,கெட்டவன், அறிவாளி, முட்டாள், பணக்காரன், பிச்சைக்காரன் எல்லாருமே மண்ணுக்குள் புதையும் நேரம் வந்துவிட்டது... சர்வம் கிருஷ்ணார்ப்பணம்....

 • amuthan - kanyakumari,இந்தியா

  ஓட்டு எந்திரம் கூட எதிரா வேலை செய்யுது. 70 % ஓட்டு தாமரைக்கு செட் பண்ணி வச்சா 50 % கூட பதியாம விட்டுடிச்சி.

  • sankar - Nellai,இந்தியா

   இதையே - ஓட்ட ரிக்கார்ட் மாதிரி சொல்லிகிட்டே இருங்க

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  பெரும்பான்மையினர் சண்டைபோட்டால் சிறுபான்மையினருக்கு கொண்டாட்டம் தான் . அதற்கு வழிவகுக்க வேண்டாம்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  மோடி பிரச்சாரம் , அமித் ஷா வீடு எடுத்து தங்கிய பிரச்சாரம் செய்தது , 10 முதல்வர்கள் , 50 மந்திரிகள் , தேர்தல் கமிஷன், IT டிபார்ட்மென்ட் , ஊடகம், whatsapp பொய் செய்தி, இது எல்லாம் இருந்தும் 104 சீட் , 2008 இது எதுவுமே இல்லாம 110 சீட் எடியூரப்பா வாங்கினார் . உங்க EVM ஆட்கள் திறமை இல்லை போல .

 • balakrishnan - coimbatore,இந்தியா

  அதாவது பெரும்பான்மை வெற்றி பெறுவது அது வெற்றியாக கருதப்பட்டது, இப்போது அதிகமான இடத்தில் வெற்றி பெற்றால் அது வெற்றி, நாளை ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அது வெற்றி, அதற்கு பிறகு தேர்தலில் கலந்துகொண்டால் அது வெற்றி, வெற்றிக்கு ஆயிரம் அர்த்தங்கள்

 • suresh - covai,இந்தியா

  வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் மெஜாரிட்டியை கூட பெறவில்லையே. மோடி இருந்தும் கூட. எனவே இது உங்களுக்கு பெரிய அவமானம். அதை மறைக்க இந்த வேசம்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  கேவலத்தின் உச்சமாக பெல்லாரி, குவாரி கொள்ளையர்களுக்கு அவரது பினாமிகளுக்கும் மொத்தமாக 10 சீட்டுக்கள் ஒதுக்கி ஊழலை ஒழிக்க பாடுபட்டார்கள், ஆனால் அங்கே அவர்களின் சகோதரர்கள் இருவரும், பினாமி ஸ்ரீராமுலுவும் வெற்றி பெற்றார்கள், வாக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்தார்கள், மொத்தமாக பேரம் பேசி வாங்கினார்கள், ஆனாலும் மாஜிக் என்னை பெறமுடியவில்லை அதுதான் எதார்த்தம். என்னத்த சொல்ல.

  • Ramesh - Bangalore,இந்தியா

   Are we same concept for DMK and Family + ADMK and Extended Family who have looted TN for last 50 and 30 years and now South Asia Richest person...Not to have double standards with High morale ground as we have started to SELL self respect quite long time back... Introspect

  • Gopi - Chennai,இந்தியா

   திமுகவிலிருந்து அதிமுக அதிமுகவிலிருந்து திமுக என்று கட்சி தாவியவர்களை இன்றளவும் ஆதரிக்கின்றனர் கட்சியை வழிநடத்தும் பெருந்தகைகள். இது தடுக்கப்படவேண்டும். இதே மாதிரி யுக்தியை கர்நாடக தேர்தலிலும் கண்டோம். ரெட்டிஎன்றால் ஊழல் என்னும் காங்கிரஸ் அவர்களிடமிருந்து வந்த வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுத்து அவர்கள் தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளார்கள். இதில் மக்களை தான் குறை சொல்லவேண்டும்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  தான் முதுகை தானே தட்டி கொடுத்துக்கொள்ளவேண்டும், ஏன்னா, அடுத்தவர்கள் தட்டிக்கொடுப்பதில்லையையே? இதைவிட அதிக இடங்களை 2008 ல் பிஜேபி பெற்று தனியே ஆட்சி அமைத்தது, அதையெல்லாம் மறந்து, துள்ளி குதிக்கிறார்கள், அல்ப சந்தோஷத்தில்.

 • rajan - nagercoil,இந்தியா

  பிஜேபி 29 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது...12 தொகுதிகளில் 5000க்கும் குறைவான வாக்குகளே வாங்கியுள்ளது..

  • Gopi - Chennai,இந்தியா

   உண்மைதான் ஒரு முதலமைச்சராக இருந்தவர் ஒரு தொகுதியில் படு தோல்வி இன்னொரு தொகுதியில் நூலிழையில் வெற்றி . இதை என்ன என்று சொல்லவீர்கள்

 • Sahayam - cHENNAI,இந்தியா

  ஜெயித்து விட்டர்கள் அல்லவே , காவேரி தண்ணீரை எங்களுக்கு தாருங்கள் . உங்கள் தம்பட்டம் பற்றி கவலை இல்லை

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   காவேரி தண்ணீர் தரமாட்டேன் என்று சொன்ன தமிழனின் விரோதி ஆட்சிக்கு வர. இப்போது இதை பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்? இப்போது யார் தண்ணீர் தர வேண்டும்?

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   இனிமேல் காவேரி தண்ணீர் தந்தபின்பு இந்த கருத்து சரியாக இருக்கும், இனியும் அதே புராணம் தான், NO காவேரி நீர்.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்ல மறந்துட்டார்.......தொகுதிக்கு அஞ்சு கோடி கொடுத்ததையும், ஒரு ஓட்டுக்கு 1200 பணம் கொடுத்ததையும்......... பணம் கொடுத்தால் அன்பு தன்னால் வராதா? தினகரனும் இதே வசனத்தை சொல்லலாமே?

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இவங்க ஒரு விஷயத்தை மறந்துடறாங்க......புதுசா உள்ள கட்சி தான் இந்த மாதிரி வெற்றியை பார்த்து ரசிக்கணும்......இவங்க ஏற்கனவே பெரும்பான்மையான ஆட்சியில இருந்தவங்க தான்...அதை தான் போன தடவை காங்கிரஸ் கிட்ட இழந்தாங்க...அப்புறம் திரும்ப இப்போ மைனாரிட்டியா ஜெயிச்சு இருக்காங்க..மெஜாரிட்டி இல்லை......அப்படின்னா இது ஒன்னும் சாதனை இல்லை.....

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   சாமி, 2008 ல் இதைவிடவும் அதிக எண்ணிக்கை பெற்றார்கள், ஆனால் மோடியின் தலைமையில் தொகுதிகளை இழந்தார்கள், அதை மறைக்க நாடகம் போட்டு அடிமைகளை குஷி படுத்துகிறார்கள், அடிமைகளும் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்கள்.

  • Ramesh - Bangalore,இந்தியா

   Majority has not come and no one is denying ...Bringing down a ruling party from the power and 30 seats more than Congress is good things(104,78). It is HUNG assembly only...Very good that Grand Old Party which was ruling Karnataka and got 74/222 is giving CM to 38/222 party ...Super Sacrifice... Will we be calling as Victory ? As usual blocked /biased TN people view...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  முழு வெற்றியின் குறுக்கே காங்கிரஸ் நிற்கிறது... பாஜக ஆட்சிபீடத்தில் அமரக்கூடாது என்று காங்கிரஸ் பிடிவாதமாக நிபந்தனை அற்ற ஆதரவை தனது முன்னாள் எதிரிக்கட்சிக்கு வலியச்சென்று கொடுக்கிறது...

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

   shameless beggers அவ்ளோ பதவி வெறி அண்ட் மோடின்னவெறுப்பு நாடு நன்னாவே இருக்கக்கூடாதுன்ற வெறி

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர் ////காசுமானி ஆமாம் காஷ்மீரில் மெகபூபாவை எப்படி ஆதரிக்கிறீர்கள், கூட்டணி வைத்தது தான் தேர்தலை சந்தித்தீரா, தொகுதி உடன்படிக்கை செய்து தேர்தலை சந்தித்தீர்கள், ஒத்த கொள்கை உண்டா இரு கட்சிகளுக்கும், தேர்தல் முடிந்தவுடன், அப்துல்லா கட்சியும், காங் கட்சியும் ஆதரவு தெரிவிக்க, ஓடோடி சென்று, மஹபூபா காலில் விழுந்து முதல்வர் பதவியை அளித்து அவரை ஆட்சியில் அமரவைத்தீர்களே, அப்போ உங்களின் கொள்கைகள் எவ்வளவுக்கு விற்றீர்கள்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதில் தவறில்லை, ஆனால் அடுத்தவன் கட்சியை உடைத்து பல நூறு கோடிகளை கொடுத்து உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது தான் தவறு

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   அவர் கொள்கை, தனக்கு வந்தால் Blood, மற்றவனுக்கு Tomato sauce.

 • kumaresan - Petaling Jaya,மலேஷியா

  தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்து கர்நாடகாவின் வாக்கை பெற்று அடைந்த வெற்றி அதுவும் சிம்பிள் மஜுரிட்டியை பெறமுடியாமல் போன வெற்றி . எனினும் ஆட்சி அமைக்க முடியாமல் போன வெற்றி. தமிழனுக்கு செய்த துரோகத்தில் கிடைத்த வெற்றி எவ்வளவு தூரம் கொண்டு செல்லும் என்பதை பொறுத்திருந்து பாரும். அமிட்ஷா இப்பொழுது தமிழகத்தை குறிவைத்து செயல் பட முனைகிறார். உங்கள் கனவு நிறைவேறாது. நிறைவேறக்கூடாது, தமிழர்கள் நிறைவேற விடமாடடார்கள். நல்லவன் தான் வாழ்வான். துரோகி வாழ மாட்டான். இது தான் இயற்கையின் நியதி. தமிழ் நாட்டை பொறுத்தவரை, ப ஜ க மிகப்பெரிய துரோகி தான். இதை விட காங்கிரஸும் தி மு கவும் பெரிய துரோகிகள் தான். காவேரி நதி நீர் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு இந்திய அரசியல் சாசனத்துக்கு (Indian Constitituion ) , மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான ஒன்று.

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

   குமரேசா கந்தா கதிர்வேலா நாடு நன்னாவே இருக்கக்கூடாது கொள்ளையர்க்கூட்டம்தான் ஆளவேண்டும்னு சோனியா தன ஐரோப்பிய மூளையை காட்டிண்டுருக்கா , ஆனால் நன்னாயிரக்கவேண்டும் என்று மக்கள் பிஜேபிக்கு ஓட்டுபோட்டுருக்காளே வோட்டு எண்ணிக்கைகளை வச்சுப்பார்த்தால் தெரியும் %எவ்ளோ என்று மஜாக் வெறும் 38thaan கான்ஹகிரேஸ் தான் 77 தான் இது ரெண்டுக்கும் என்றுமே ஒத்துப்போவாதுங்க இது நாடறிஞ்ச உண்மை பிஜேபி வந்தால் நல்லது பார்ப்போம் அடுத்து cm குரிசிக்கி அடிச்சிப்பானுக என்பதும் தெளிவு மஜாகாகூட கூட்டணி என்றால் மக்களுக்கு செய்யும் துரோகம் தான் இந்த கூட்டணி சோனியாவின் க்ரூகேட் மைண்ட் எப்படி வேலை செய்யுது

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்பதை பன்னீரும், பழனியும் வெற்றி வாழ்த்து அனுப்பி கிண்டல் செய்து விட்டார்கள். அடிமைகளின் வீழ்ச்சிக்கு நேற்று திருப்பதியில் அடித்தளம் அமைக்க பட்டுவிட்டது.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  இது பா,ஜ.க. விற்கு கர்நாடகத்தில் பெரும் வெற்றிதான்..... .ஆனால் அது வடநாட்டு கட்சி என்ற கருத்து இந்த வெற்றியால் மாற வாய்ப்பில்லை...... அந்த கருத்து மாறும் வரை தமிழகத்தில் அவர்கள் காலூன்றவும் வாய்ப்பில்லை......

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

   இந்தியாவின்காட்ச்சியேதான் பிஜேபி காங்கிரஸ் ஆரம்பிக்க உதவியவர்கள் ஏவாளெல்லாம் என்று நியாபகம் இருக்கா ஏக் இந்தியா என்ற எண்ணமே வராதா தென்னாட்டுலே இருக்கும் உங்களுக்கெல்லாம் வெட்கமாயில்லீங்களா இந்தியா என்று பெருமைபட்டுப்போம் ஆனால் நான் தமிழன் நாணலுண்கண் கன்னடியன் மலையாளி மராட்டி யு பி ராஜஸ்தானி அஸ்ஸாமி வங்காளி பிஹாரி காஸ்மீரி குஜராத்தி பஞ்சாபி ஓடிச்சா என்று பேதம் பேசிண்டு இருக்கினங்களே ப்ளீஸ் நாம் இந்தியன் என்று என்று எப்போது சொல்லுவீங்க பஞ்சம் பிழைக்க தமிழன் தெலுங்கன் மலையாளி தெலுங்கன் கண்ணாடிக்கான்னு போறீங்களே படிச்சவா பெரி வேலைகளுக்கு படிக்காதவர் எந்த வேலைக்கும் போறீங்களே அதேபோல அவாளும் வாரங்களே ஒரு சொல் வழக்கு உண்டு வெறுக்கியுரஹத்துக்கு போனாலும் அங்கே ஒரு நாயர் சாயா கடை வச்சுருப்பாம் மார்வாடி வட்டிக்கடை வச்சுருப்பான் என்று உழைக்க தெரிஞ்சவன் வேலைக்கு தயங்கமாட்டேன் சோம்பேறி எந்தவேலைக்கும் போவாமல் ஆத்தாவின் உழைப்புலே குந்தியே துன்னுவான் என்று

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement