Advertisement

கர்நாடகா தேர்தல் முடிவால் தேசிய அரசியலில் தாக்கம்! அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்த மோடி

'கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தேசிய அரசியலில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும்' என, அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். கடைசி கட்ட அதிரடி பிரசாரங்களால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் செய்த, பிரதமர் நரேந்திர மோடி, அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ளார்.
கர்நாடகா மாநில சட்ட சபைத் தேர்தலில், சித்தராமையா தலைமையிலான, காங்., 78 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்து உள்ளது. மதச் சார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சியை அமைக்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது.

கர்நாடக சட்டசபைத் தேர்தல், தேசிய அரசியலில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்த தேர்தல் மூலம், கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சிக்கு மூடுவிழா நடத்தப்பட்டு உள்ளது.

மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தி அலைகளை ஒடுக்க, சித்தராமையாவால் முடியாமல் போனது, இத்தேர்தலில் அம்பலமாகி உள்ளது. கர்நாடகாவில், ஒரு முறை ஆட்சி அமைத்த கட்சி, தொடர்ந்து, மீண்டும் ஆட்சி அமைக்காது என்ற வரலாறு, மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.


இரண்டாவது தலைவர் :



இருப்பினும், கர்நாடகாவில், ஐந்தாண்டு முழுமையான ஆட்சியை வழங்கிய இரண்டாவது தலைவர் என்ற சாதனையை, சித்தராமையா படைத்துள்ளார். இதற்கு முன், காங்.,கைச் சேர்ந்த, தேவராஜ் அர்ஸ் மட்டுமே, இந்த பெருமையை பெற்றுள்ளார். மற்ற அனைத்து முதல்வர்களும், ஆட்சி கவிழ்ந்தோ, வேறு ஒருவர் அப்பதவியை பிடித்தோ, முழு ஆட்சியை வழங்க முடியாமல் போனவர்கள்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில், 20 நாட்களுக்கு முன் வரை, எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை கணிக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் இடைவிடாமல் சூறாவளி பிரசாரம் செய்து, காங்.,கை மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தினார்.

முதலில், 15 கூட்டங்களில், பிரதமர் மோடி பேசுவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில், இது, 21 கூட்டங்களாக அதிகரிக்கப்பட்டன. மோடி பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மக்களை கவரும் தலைவராக, மோடி, ஜொலித்தார்.

தனிப்பெருங்கட்சி :



இந்த தேர்தலில், பா.ஜ., தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்ததன் மூலம், அசைக்க முடியாத மாபெரும் தலைவர், மோடி என்பது உறுதியாகி உள்ளது. வரும், 2019ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு முன், நடந்த பெரிய போர்க்களமாக, கர்நாடகா தேர்தல் பார்க்கப்பட்டது.


இதில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து உள்ளதால், மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு சிறந்த ஊக்கம் கிடைத்து உள்ளதாக கருதப்படுகிறது. அடுத்து, ம.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற முடிந்தால், சிறந்த எழுச்சியை அக்கட்சி தொண்டர்கள் பெறுவர் எனக் கூறப்படுகிறது.
பா.ஜ.,வினர் உற்சாகம் : கர்நாடகா தேர்தல் முடிவை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா ஆகியோரின் ஆளுமையை, பா.ஜ., தேசிய பொதுச் செயலர், ராம் மாதவ் வெகுவாக புகழ்ந்துள்ளார். இந்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள, பா.ஜ., தலைவர்கள், லோக்சபா தேர்தலை, 2019, மே மாதத்துக்கு முன் நடத்துவரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும், இதே போன்ற வெற்றியை, பிற தென் மாநிலங்களான, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகியவற்றில் பெற முடியுமா... என்பதற்கும், காலமே பதில் சொல்ல வேண்டும்.
ராகுலுக்கு தோல்வி! காங்., தலைவராக பொறுப்பேற்ற, ராகுலுக்கு, கர்நாடக சட்டசபைத் தேர்தல், அவர் சந்தித்த பெரிய தேர்தலாக அமைந்தது. தன் கட்சியை வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்வதில், ராகுல் தோல்வியை தழுவியுள்ளார். 2014, மே மாதத்தில், மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்த பின், காங்., ஆட்சியில் இருந்த மாநிலங்களில் நடந்த அனைத்து தேர்தல்களிலும், பா.ஜ.,வே வெற்றி பெற்று வருகிறது. 'காங்., கட்சியின் நலனில் ராகுலுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், தலைவர் பதவியில் இருந்து விலகி, திறமைமிக்க வேறு ஒரு தலைவருக்கு அப்பதவியை அளிக்க வேண்டும்' என, அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (91)

  • கைப்புள்ள - nj,இந்தியா

    ஹாஹாஹா எனக்கு நல்லா செம ஜோக்கா இருக்குது இங்க. டெய்லியும் வந்து இந்த மோடி எதிர்ப்பாளர்கள் வயிறு எரிஞ்சு எரிஞ்சு கத்துவதை பார்க்கும் போது செம ஆனந்தமா இருக்கு. அது, இது, எது ன்னு எந்த ஒரு உண்மையும் இல்லாத கருத்துக்களை சொல்லி சொல்லி மாஞ்சு போவதை பார்க்கும் போது, அடடா இவனுகளுக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது, இப்புடி வீணா போறானுகளேன்னு நினைக்கிறப்போ கொஞ்சம் வேதனையாவும் இருக்கத்தான் செய்யுது. ஆனா என்ன பண்றது? உலகத்துல எல்லோரையும் நாம திருத்த முடியாதே. ஒரு நாலு முட்டாள், நாலு வயித்தெரிச்ச புடிச்சவன் இருக்கத்தானே செய்வான்? அதுக்கு நாம என்ன பண்றது? என்ன நான் சொல்றது?

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

    கலியுகம் எப்போது முடிமென கண்ணனிடம் கேட்டதற்கு “தருமநெறி பொய்த்ததென தாயர்குலம் வாடுவது தாளாது பொங்கும் நேரம்... தடியுடைய முரடர்களும், படையுடைய தலைவர்களும் தலைதூக்கி நிற்கும் நேரம்.... தர்மவினை பொய்யாகி, காலநிலை தவறாகி, கருணை பறிபோகும் நேரம்... கண்ணனவன் சொன்னபடி, கண்ணெதிரில் வந்துவிடும் “கலியுகம்” முடியும் நேரம்....” என பகவத்கீதை கண்ணன் சொன்னபடி... “கலியுகம்” முடியும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்... மேலே சொன்னதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது... அதனால் கண்ணனவன் சொன்னபடி, கலியுகம் முடியும் நேரம் வந்து... உலகத்துல இருக்குற அத்தனை மனிதப் பதர்களும்... திடீரென ஒருசில நொடிகளில் பூமி பிளந்து... நல்லவன்,கெட்டவன், அறிவாளி, முட்டாள், பணக்காரன், பிச்சைக்காரன் எல்லாருமே மண்ணுக்குள் புதையும் நேரம் வந்துவிட்டது... சர்வம் கிருஷ்ணார்ப்பணம்....

  • edwin -

    ha ha ha ha

  • எடவின்சுவாமிதாஸ் -

    🤣😂

  • எடவின்சுவாமிதாஸ் -

    🤣😂

  • எடவின்சுவாமிதாஸ் -

    🤣😂

  • எடவின்சுவாமிதாஸ் -

    🤣😂

  • எடவின்சுவாமிதாஸ் -

    🤣😂

  • எடவின்சுவாமிதாஸ் -

    🤣😂

  • எடவின்சுவாமிதாஸ் -

    🤣😂

  • எடவின்சுவாமிதாஸ் -

    🤣😂

  • விருமாண்டி - மதுரை,இந்தியா

    காங்கிரஸா ??? அப்படீன்னா ..????

  • விருமாண்டி - மதுரை,இந்தியா

    மோடி ராஜ்ஜியம் தொடரட்டும் . ஜெய்ஹிந்த்

  • விருமாண்டி - மதுரை,இந்தியா

    இந்தியாவை ஏழை நாடாக்கிய காங்கிரசை ஒழிப்போம் , தாமரை வளர்ப்போம் .

  • வல்வில் ஓரி - koodal,இந்தியா

    போலி மத சார்பின்மையை காங்கிரஸ் கைவிட்டால் எதுனா விளங்குறதுக்கு வாய்ப்பு வரும்.. இல்ல ..நாங்க இன்னமும் முஸ்லிம்களுக்கு நாட்டை தூக்கி கொடுப்போம்..ன்ற ரீதியிலே போனீங்கன்னா...ஒங்களுக்கு பாலூத்தி கள்ளி செடி மொளைச்சிரும்..

  • Ram - Panavai,இந்தியா

    அசைக்க முடியாத சக்தி ....விரைவில் ஆப்பு கழன்ற சக்தி ஆகிரும்

  • balakrishnan - coimbatore,இந்தியா

    மோடி ஒன்றும் தோற்கடிக்க முடியாத ஒரு சக்தி அல்ல என்பது தான் இந்த தேர்தல் முடிவு, எவ்வளவு பொய் சொன்னாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதும் இதன் மூலம் தெரிந்துவிட்டது, இந்த தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது பணம் மட்டுமே,

  • Appavi Tamilan - Chennai,இந்தியா

    இவர் பேசும் இடங்களில் இவரின் ஆட்சி என்ன சாதித்தது என்று பேசுவதில்லை. குறைந்த பட்சம் உண்மைகளைக்கூட பேசுவதில்லை. மாறாக அண்டப்புளுகளை அவிழ்த்துவிட்டு உரக்க சொல்வதில்தான் இவர் வல்லவர். தனிமனித தாக்குதலை மட்டுமே நம்பி கத்தி கத்தி பேசுவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இவரா பெரும் தலைவர்???

    • balakrishnan - coimbatore,இந்தியா

      அவருடைய சொந்த மாநிலத்தில் அவரின் சக்தி எப்படி வேலை செய்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்,

    • வல்வில் ஓரி - koodal,இந்தியா

      சரி..முதலில் நீ உனக்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு னு சொல்லு... ... அப்பாவி தமிழ் தெரிஞ்ச முஸ்லிம்ன்னு பேரு வச்சிக்கிட்டு தைரியமா வந்து கருத்து போடேன்...

  • suresh - covai,இந்தியா

    2019-ல இருக்கு இந்த இரண்டு சர்வாதிகார BJP க்கு. ஏண்டா குஜராத்திகளே இப்ப ரொம்ப உஷாராயிட்டாங்க.. நீங்க திருந்துங்கடா.

    • வல்வில் ஓரி - koodal,இந்தியா

      2019 ல இதே பக்கி 2024 ல பிஜேபிக்கு இருக்கு பாரு ன்னு சொல்லும் ....தத்தி...

  • DuraiRaj - Chennai,இந்தியா

    கோவாவில், மணிப்பூரில், மேகலாயாவில் காங்கிரஸ் தனி பெரும் கட்சியாக வந்தபோது ராகுலுக்கு இது மாதிரியான பெருமையை யாரும் கொடுக்கவில்லை மாறாக குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த பிஜேபி கட்சிக்கு அமித்ஷா வியூகம், மோடி மாபெரும் தலைவர் என்று சொல்லி மகிழ்ந்தார்கள். கர்நாடகாவில் பிஜேபி கட்சியை மக்கள் அந்தரத்தில் விட்டிருப்பதை பிஜேபி தலைவர்களுக்கு புரியவில்லையா? கவுன்சிலர் தேர்தலில் கூட மோடி வந்தால்தான் வெற்றி என்ற நிலைமையில்தானே பிஜேபி கட்சி உள்ளது. கர்நாடகத்தில் பிஜேபி கட்சி தனி பெரும்பான்மை பெற்று விட்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். இப்போது நிலைமை அப்படியில்லை தேர்தல் முடிவு விவாதத்திற்குள்ளாகியுள்ளது. சுயேட்சை MLA க்கள் பெரிய அளவில் இல்லாத போது பிஜேபி கட்சியால் எப்படி ஆட்சி அமைக்க முடியும்?. பிராடு வேலை செய்யாமல் பிஜேபி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பது யதார்த்தமான உண்மை. முழுமையான வெற்றியை பெற முடியாமல் அரைகுறையில் இருக்கும் பிஜேபியை மக்கள் ஆதரித்துள்ளார்களா இல்லை பிஜேபி கட்சியை விட பல லட்ச்சம் வாக்குகளை அதிகமாக பெற்ற காங்கிரஸ் கட்சியை மக்கள் ஆதரித்துள்ளார்களா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்.

    • balakrishnan - coimbatore,இந்தியா

      பி.ஜெ.பி க்கு மக்கள் சுமார் 29 தொகுதிகளில் ஜாமீன் தொகையை கூட கொடுக்கவில்லை, அமீத் ஷா குறிப்பிட்ட தொகுதிகளை தேர்ந்தெடுத்து பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து மோடிக்கு செயற்கையான புகழை தேடி கொடுத்து இருக்கிறார்

    • sankar - trichy,இந்தியா

      அப்போ சோனியா ராவுல் எல்லாம் என்ன பண்ணினார்களாம்

  • Naan Avaal Illai - cuddalore,இந்தியா

    ஜால்ரா அடிக்க வேண்டும் . ஆனால் உண்மை நிலை ராகுல் காந்தி நன்றாக ஆப்பு மோடிக்கு அடித்தார். வலி தாங்க முடியாமல் அவர்கள் வழியில்... ஹாஹாஹா

    • Varipuli - VaigaiCity,இந்தியா

      அட கடுவன் பாம்புகளா மோடிஜி யின் வளர்ச்சியை பார்த்து தாங்க முடியவில்லை . நேர்மையான ஒரு தலைவர் மோடி ஜி . இனிமேல் இந்தியா என்றால் மோடி ஜி , மோடிஜி என்றால் இந்தியா .

  • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

    இந்த நடுநிலைகளின் தொல்லை தாங்க முடியலடா, இவனுங்க வேலையே செய்யலாமா மோடி இலவசமா எல்லாத்தையும் கொடுத்த தான் வளர்ச்சினு நம்புவானுங்க போல.

  • hussain - cuddlore,இந்தியா

    கர்நாடகாவில் 29 தொகுதிகளில் பாஜகவுக்கு டெபாசிட் காலி இதைப்பற்றி எந்த ஊடகமாவது பேசுமா என்றால் ம் மூச் வாயையே திறக்காது... தொகுதிகளின் பெயரும் அங்கே பாஜக வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கையையும் குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து ... பெருமளவில் பணம் கொடுத்து .. 104 தொகுதிகளை பா.ஜ.க வென்றுள்ளது ... மகத்தான ஆதரவு என்றால் ... 29 தொகுதிகளில் ... ஏன் ... டெபாசிட்டை பறிகொடுத்தது பாஜக .... அதுவும் 12 தொகுதிகளில் ... நம்ம தமிழ்நாட்டை போலவே .. 5000 க்கும் குறைவான .. வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது ... Sharvanabelagola 7,506 Magadi 4,379 Rama Nagaram 4,837 Kanakapura 6,213 Malavalli. 8,372 Maddur 3,948 Melukote. 1,587 Shirirangapatna 11,326 Nagamangala 1,781 Krishnarajapete 3,839 Arsikere 25,258 Holenarasipur. 1,781 Arkalgud 18,982 Pulikesinagar 9,479 Periyapatna 4047 Krishnarajanagara 2,515 Devanahalli 9,799 Kolar 12,230 Mulbagal 4,906 Srinivaspur 1,544 Chintamani 1,961 Sidlaghatta 3,596 Chikkaballapur 5,576 Begaballi 4,140 Gauribindanur 35,579 Madhugiri 2, 333 Pavagada 9,668 Sirs 6,469 Kortagere 11,102 இதற்கு மேல் நீங்கள் அசிங்கபடனுமா ?

    • Rohith Raja - chennai,இந்தியா

      இந்த அள்வுக்கு பாஜக இந்தியா முழுவதும் வளர்ந்ததும் காரணம் உங்களை போன்ற ஆளு நால தான்.. இயற்கையாவே உங்களுக்கு பாஜக பிடிக்காது அதன் எதிர் மறைவு வோட்டை அவுங்க வாங்கி இன்னைக்கு 22 மாநிலம் ஆட்சி செய்யுறாங்க. இன்னைக்கு காங்கிரஸ் 3 மாநிலம் தான் ஆட்சி அதற்கு காரணம் உங்களுக்கு அதிகமா சலுகைகள் கொடுத்து கொடுத்து எப்படி இருந்த அவுங்க இன்னைக்கு இப்படி ஆகிட்டாங்க.

    • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

      29 தொகுதிகளில் பாஜக டெபாசிட் இழந்தது என்றும் அதனால் அந்த கட்சி ஆட்சியில் அமரக்கூடாது என்றும் வாதிடுவோர் 112 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்த மஜத வை ஆட்சியில் அமர்த்தினால் தவறு இல்லை என்று சொல்வதில்லை ஏனோ ? ..பாவம் இங்கே பாஜக விற்கு எதிராக பதிவிடுவோர் எல்லோரையும் பார்த்தால் .. அதுவும் ராகுலின் திறமைமீது நம்பிக்கை வைத்துள்ளது போல ஒரு மாயை உருவாக வேண்டும் என்பதற்காக வலிந்து கட்டிக்கொண்டு எழுதுவோரை பார்த்தால், வரவர மோடி எதிர்ப்பு பைத்தியங்கள் என்ன என்னவெல்லாம் உளறுவார்களோ என்று பயம் வருகிறது ..

    • Gopi - Chennai,இந்தியா

      தயவு செய்து என்னுடைய இன்னொரு பதிவை படிக்கவும் . தென் கருநாடகம் தொடர்ந்து மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூடாரம் என்பதை வெற்றி பெற்ற புள்ளியியல் விவரம் கொண்டு பார்க்கவும். இங்கு தான் ஆட்சிக்கு வந்தால் காவிரியிலிருந்து தண்ணீர் ஒரு சொட்டு கூட தமிழகத்திற்கு தரமாட்டேன் என்று பிரசாரம் செய்தார்கள் இவர்கள்.

  • மணிமாறன் - trichy,இந்தியா

    பெட்ரோல் , டீசல் விலைஒரே ஆண்டில் மட்டும் 15 ரூபாய் உயர்த்தி இருக்கும் மோடியை அசைக்க முடியாது என்றால் எல்லோரும் சிரிப்பார்கள்..இந்தி சமலே தான்...இதை போல பல பொருட்களின் விலைவாசி உயர்வுகள் , பல தொழில்கள் காணாமல் போனது, விவசாயிகளின் துயரங்கள் , ஒட்டு மொத்தமாக மக்களுக்கு துன்பங்கள்.. இவை எல்லாம் அவரை வீழ்த்தி விடும்..விரைவில்..வீழ்த்த முடியாத தலைவர் என்று எவரும் இருந்ததில்லை சரித்திரத்தில்...

  • Solvathellam Unmai - Chennai,இந்தியா

    களவாணிபய கையில் போனதால் இன்று முதல் காவி நாடு என வஞ்சகமாக அழைக்கப்படுவாய் - வருத்தமுடன் பாரத மாதா

    • வல்வில் ஓரி - koodal,இந்தியா

      என் பேரு மட்டும் பொய் ன்னு தைரியமா சொல்லு..பாக்கி..

  • C Suresh - Charlotte,இந்தியா

    பி.ஜே.பி என்ன தகிடு தத்தம் வேலை செய்தாலும் பெருபான்மை பெற முடியவில்லை.. அதற்கு பிறகு எதற்கு இந்த propaganda .. மொத்த வோட்டு விகிதாச்சாரத்தில் காங்கிரஸ் தான் வென்று இருக்கிறது... பி.ஜே.பி க்கு தெற்கில் இடம் கிடையாது ...

    • வல்வில் ஓரி - koodal,இந்தியா

      கன்னியாகுமரிக்கு தெக்கே இடம் கிடையாது......

  • sam - Doha,கத்தார்

    ஆமாம், 2019 தேர்தலில் பார்ப்போம் இவர் வண்டவாளம் எப்படி என்று. வாய் சொல் வீரர்களுக்கு மக்கள் நல்ல படம் கற்பிப்பார்கள்

  • K.G.Gopinath Kannan - Chennai,இந்தியா

    எதிர் கட்சி ஆண்ட மாநிலங்களில், ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் பிஜேபி வெற்றி பெற்று உள்ளது. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பிஜேபி தோல்வி அடைந்துள்ளது. மணிப்பூர், மிசோராம், கோவா போன்ற மாநிலங்களில் தோல்வி அடைந்தாலும் கவர்னர் உதவியால் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆனால் பாராளுமன்ற தேர்தல் வரும் பொழுது மக்கள் இவர்களுக்கு தோவியை தான் தருவார்கள். ஆதார் குழப்பம், பெட்ரோல் விலை, கடும் விலைவாசி உயர்வு, வங்கி மோசடிகள், மோசடியாளர்களை தப்ப விட்டது, காங்கிரஸ் ஆட்சி திட்டங்களை எதிர்த்து விட்டு, ஆட்சிக்கு வந்தபின் அதே திட்டங்களை பல்வேறு பெயர்களில் மக்களின் எதிர்ப்பை மீறி திணிப்பது, போர் விமான ஊழல்கள், மக்கள் விரோத திட்டங்கள், சர்வாதிகார செயல்பாடுகள் போன்றவை மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். பிஜேபிக்கு மரண அடி காத்திருக்கிறது.

    • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

      இது போன்ற மனநிலையில் அடுத்த கால் நூற்றாண்டுகள் இருந்து கொள். வடிவேல் ஒரு படத்தில் சொல்வது போல, ஊருக்கு வந்து பாரு , ஏரியா பக்கம் வந்து பாரு, தெரு பக்கம் வந்து பாரு, வீட்டாண்டை வந்து பாரு, என்று சொல்வது போல, மோடி எல்லா இடமும் தான் வருகிறார். எங்கே அவரை தோற்கடிக்க வழியே தான் காணோம். ஒன்றை புரிந்து கொள் அறிவீலியே. மக்கள் ஆதரவு அவருக்கு இருக்கிறது என்பதை இத்தனை வெற்றிகள் பெற்றபின்னும் அறியாமலேயே இருப்பதில் இருந்து உன்னை போன்ற ஆட்கள் மூடர்கள் என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா என்ன? கோழி கூவி அல்ல பொழுது விடுவது..புரிந்து கொள்.

    • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

      அடடா இப்பவே ஆரம்பிச்சுட்டியா? இதைத்தானே கார்நாடகா தேர்தலுக்கு முன்னாடியும் சொன்னே?

    • balakrishnan - coimbatore,இந்தியா

      தோற்க்கடிக்க முடியாதவர் மோடி என்று ஒரு செயற்கயான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி திணறிக்கொண்டிருப்பவர்கள் பி.ஜெ.பி யினர் தான், நாயாக அலைந்து பேயாக திரிந்து, வறட்டு கூச்சல் போட்டு, பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து, இவ்வளவு செய்தும் பெருமைப்பட ஏதும் இல்லாமல் போய்விட்டதே, வட போச்சே கதை

    • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

      மோடி எல்லா இடமும் தான் வருகிறார். எங்கே அவரை தோற்கடிக்க வழியே தான் காணோம்.

  • rajan - kerala,இந்தியா

    உலக அளவில் அண்டைநாடு முதல் மேற்கத்திய நாடுகள் வரை இந்தியாவை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வைத்த மோடி ஒரு மாபெரும் சகித்தியாக உருவெடுக்க வாழ்த்துக்கள்.

    • balakrishnan - coimbatore,இந்தியா

      இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் ஆகாது, ஏன் மற்ற கிரகங்களை விட்டு விட்டீர்கள்

    • sridhar - Chennai,இந்தியா

      இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு வயிற்றெரிச்சல் ஆகாது.

    • Sabari - Tanjore,இந்தியா

      பல சாதனைகள் செய்து கொண்டுள்ளார்....இந்தியா இன்று ஆசியாவில் ஒரு பலம் மிக்க நாடாக திகழ்வதில் பிரதமரின் பல ராஜதந்திர நடவடிக்கைகளும், செயல்படும் விதமும்தான் காரணம். அவர் வெளிநாடுகளுக்கு செல்வதை குறைசொல்லும் பக்கிகள் அந்த பயணத்தின் உண்மைத்தன்மையை, அதன் பிரதிபலனை, நன்மையை உணர சக்தி இல்லாதவர்கள். அதை ஒரு பொருட்டாக கருதாமல் அவர் தான் செய்யும் செயலில் முழு மூச்சுடன் இருப்பது பாராட்டக்கூடியது. கூக்குரல் இடும் நரிகள் பல வருடங்களாக செய்துவந்த தேசத்துரோக நடவடிக்கைகள் ஏராளம்...வரி ஏய்ப்பு, ஹவாலா, லஞ்சம், கொள்ளை, சூறையாடல் இவைகள் இப்போது நடக்க வாய்ப்பில்லாமல் போனதால் பாதிக்கப்பட்டதுகள் அப்படித்தான் ஊளையிடும். சில உள்நாட்டு சீர்திருத்தம், கொள்கை மாற்றம் கொண்டுவந்து ஏகோபித்த மக்களின் ஆதரவை பெற்று அடுத்த ஆண்டு தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கவேண்டும். முக்கியமாக தமிழக காவிரி, மீத்தேன், ஹைரோகார்பன் போன்ற திட்டங்களை நிறுத்தி, பெட்ரோல், டீசல் விலையை GST யின்கீழ் கொண்டுவந்து மக்களுக்கு நல்லது செய்து, இரண்டு கொள்ளை திராவிஷங்களும் இனி தலையெடுக்காமல் செய்ய பல திட்டங்களை செயல்படுத்தவேண்டும். மக்கள் நலனே அரசின் லட்சியம் என்பதை பிரதமர் செயலில் காட்டினால் அவரின் வளர்ச்சியை, புகழை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. நாடு இன்று நோக்கியுள்ள சவால்கள் ஏராளம்....அதை சமாளிக்கவேண்டிய இடத்தில திறமையான பிரதமர் நம்மிடம் உள்ளார் என்பது நமக்கெல்லாம் பெருமிதம்...மகிழ்ச்சி...

    • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

      அவர் எதுக்கு போறார்..னு எங்கள போன்ற ஆளுங்களுக்குதானே தெரியும்...

    • Sudarsanr - Muscat,ஓமன்

      சபரி சார் அதெல்லாம் உணர்ந்து தான் இருக்காங்க. பய பிராந்தி வேற ஒன்னும் இல்ல அப்புறம் ஜெலுசில் நெறய செலவாகுதான். கூடவே இவ்வளவு நாளா அனுபவிச்ச சலுகை எல்லாருக்கு போகுதே அத எப்படி தடுக்கிறது... இப்படி பல எண்ண ஓட்டங்கள்.

  • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

    ஆதரவு ஆதரவு என்று செய்தி போடும் தினமலர் கர்நாடக தேர்தலில் எதனை சதவிகிதம் வாக்குகள் ப ஜெ க வுக்கு எதிராக விழுந்தது என்பதை ஏன் மறைக்கிறது,அதை போட்டால் மக்களின் உண்மையான மனா நிலை என்ன என்று உலகத்துக்கு தெரியும்.போடுவீர்களா ?

    • c.k.sundar rao - MYSORE,இந்தியா

      In INDIA vote share does not count only number of seats won by anyparty is eligible to form a govt,for these reason only scamgress and JDS have come together to form a govt.

  • Ganesan - Karaikudi,இந்தியா

    உத்திரப்பிரதேசத்தில் காவி ஆட்சி தான்.. அங்கு, மக்கள் நிலைமை என்னவென்று யோசித்து பாருங்கள்.

  • Ganesan - Karaikudi,இந்தியா

    எதுக்கு அப்புடியே தமிழ்நாட்டுக்கும் காவி நிறமே போடு விட்ருங்க ..பெரிய வித்யாசம்ல இல்ல

    • Sabari - Tanjore,இந்தியா

      Ganesan - Karaikudi, அன்பரே....உங்கள் பெயர் கணேசன் என்பது உண்மையானால்... இப்படி காவி...காவி என்ற வெறுப்பு கருத்தில் வராது. காவி என்பதில் என்ன தவறு? அது ஒரு மதத்தின், சந்நியாசத்தின் அடையாளம். வேற்று மதத்தவரை இப்படி வெறுப்பாக சொல்லமுடியுமா? ஐம்பது ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சி விட்டுச்சென்றது என்ன? ஊழல், லஞ்சம், கொள்ளை, சுரண்டல், போலி மதசார்பின்மை, பயங்கரவாதம் இவைகள்தான். அதுதான் மக்களை வெறுப்படைய செய்து பிஜேபியை தேர்ந்தெடுத்தனர்.

    • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

      காவி என்பது தவறு இல்லை... காவி...ன்னா புனிதமானது

  • Ganesan - Karaikudi,இந்தியா

    மேப்பை மாதுங்கோவ் அங்கே ஆப்பு வாங்கியாச்சு

  • Ganesan - Karaikudi,இந்தியா

    தமிழ்நாட்டுலேயும் பிஜேபி ஆட்சிதாதேன நடக்கு அதுக்கு மட்டும் மேப்பில் காவி கொஞ்சம் திக்கா கொடுத்திருகு காவி கலரே கொடுத்து இருக்கலாம்

  • Ganesan - Karaikudi,இந்தியா

    குள்ள நரி அரசியலால் சிலமாநிலங்களில் ஆட்சியை பிடுத்துள்ள கட்சி எச்சரிக்கையாத்தான் இருக்கவேண்டும்

  • Ganesan - Karaikudi,இந்தியா

    ஆடாம ஜெயிச்சோம இங்க ஆப்பு தான் வைச்சிட்டாங்க பாரு, சோனியா சோனியா

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    இது பாராட்ட தக்க வளர்ச்சி தான்........ஆனால் ஒரு விஷயத்தை மறந்துட்டு கூடாது, காங்கிரஸ் இந்தியா முழுக்க ஆண்ட கட்சி...ஒரு காலத்தில் இந்த காவி வெள்ளைக்கு பதிலாக பச்சையாக இந்தியா முழுக்க ஜொலித்தது......அந்த பச்சை நிறம் ஏன் மறைந்தது? அளவுக்கதிகமான ஊழல் அப்புறம் ஒட்டு வாங்கி அரசியல்.........ஓட்டிற்காக எதையும் சமாதானம் செய்து கொள்ளும் உடன்படிக்கை........உதாரணத்திற்கு சரத்பவார், கருணாநிதி, கல்மாடி, கவுடா, மாயாவதி கும்பல் அளவுக்கதிகமாக ஊழல் செய்தும் அவர்களுடன் இவர்களும் இணைந்து கொள்ளை அடிப்பது...அப்புறம் ஓட்டிற்காக வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான ஆட்களை இறக்கி அவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுப்பது, முஸ்லிம்களின் வாக்கு வங்கியை குறிவைத்து தேச நலனுக்கு எதிராக செயல்படுவது என்று பலவிதமான குளறுபடிகளை காங்கிரஸ் செய்து வந்தது......அது போல இப்போது வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பா.ஜெ.க அமைச்சர்களில் பலர் மதம், மாடு அரசியலில் சர்ச்சைகளில் சிக்கி கொள்கின்றனர்........பெண்களின் பாதுகாப்பு, கற்பு சம்பந்தமான விஷயங்களில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி கொள்கின்றனர்...இதை இவர்கள் தவிர்த்து நாட்டின் வளர்ச்சி, மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்தல் போன்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தினால் தமிழ்நாட்டிலும் கூட கட்சியினை பெரிதாக வளர்க்கலாம்........ஆனால் தமிழநாட்டில் பா.ஜெ.க தலைவரை முதலில் மாற்ற வேண்டும்...........

    • கைப்புள்ள - nj,இந்தியா

      சாமி சொன்னது ரொம்ப கரெட்தான். பா.ஜ.க வுக்கு இன்னும் கூட சில பல விஷயங்களில் வாய்ப்பு இருக்கிறது தன்னை திருத்தி கொள்ள. எனக்கு என்னன்னா இவ்வளவு நாள் பெரிய பெரிய மேட்டருக்கு நிறைய விஷயங்கள் பண்ணிக்கொண்டு இருந்த பி.ஜே.பி இனி கொஞ்சம் இறங்கி வந்து லோக்கல் மேட்டர்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கணும். உதாரணத்துக்கு விவசாயம் சார்ந்த துறைகளில் கொஞ்சம் கவனம் கொண்டு வரலாம், அப்புறம் காவிரி முதற்கொண்டு ஒரு நாலஞ்சு லோக்கல் விசயத்துக்கு கவன செலுத்தினால் லோக்கல் மக்களின் நன்மதிப்பை பெறலாம். பெரும் பலன் தரும் நெடுநாள் திட்டங்களோடு சேர்ந்து அவ்வப்போது குறுங்கால திட்டங்களையும் செயல் படுத்த வேண்டும்.

    • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

      சாமி அவர்களே.. நீங்கள் சொல்வது போல பிஜேபி இந்தியா முழுவதும் ஒன்றன் பின் ஒன்றாக மாநிலங்களாக ஆட்சி அதிகாரத்தை பிஜேபி கையில் கொடுத்து வருவது நம் கண் முன்னால் நடந்தேறும் காட்சி. நீங்கள் கூறுவது போல பிஜேபி ஆட்கள் மத விவகாரங்களில் ஈடுபடுகிறார்கள் அது மக்களின் ஆதரவை பெறுவதற்கு தடையாக இருக்கிறது என்பது சொல்வது போல உங்கள் கருத்து தொனிக்கிறது. ஹிந்துக்களுக்கு ஆதரவாக செயல்படும் வேறு ஒரு கட்சியை எடுத்து சொல்லுங்கள் பாப்போம். துலுக்கன்களுக்காக, கிரிச்சவர்களுக்காக உயிரை விட்டு செயல்பட ஆயிரம் கட்சிகள் இங்கு இருக்கின்றன. ஆனால் ஹிந்துக்களுக்கு ஆதரவாக ஒரு கட்சி செயல்பட்டால் அது தவறாக? அது மட்டுமின்றி பிஜேபி என்பது ஹிந்துக்களுக்கு ஆதரவான அவர்களுக்காக போராடுகின்ற ஒரு கட்சி என்று அனைவர்க்கும் தெரிந்து தான் அதை ஆட்சி பீடத்தில் கொண்டு வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வோட்டிற்காக அது தனது தனி தன்மையை இழந்து ஹிந்துக்களை கைவிட்ட ஆலோசனை சொல்கிறீர்களா? இது தான் மதசார்பற்ற தன்மை என்று சொல்ல வருகிறீர்களா? ஹிந்துக்களை கைவிட்ட மதசார்பற்ற தன்மை என்பது 'பிணத்தை அழகுபடுத்துவது போல'. அந்த தவறை பிஜேபி ஒருபோதும் செய்யாது.

    • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

      @அக்னி, மதப்பற்று என்பது வேறு, மத வெறி என்பது வேறு........நான் பல விஷயங்களை இங்கு சுட்டி காட்ட முடியும்.. அதற்கு எனக்கு இப்போது நேரம் இல்லை...

    • Sabari - Tanjore,இந்தியா

      @கைப்புள்ள..Agni Siva உங்கள் இருவரின் சில கருத்துக்களில் நான் உடன்படுகிறேன். காரணம் தமிழகத்தில் போலி மதசார்பின்மைவாதிகள் இந்து மதத்தை தூற்றுவது, இந்துமத வழிபாடுகளை விமர்சிப்பது, பண்டிகைகள் வந்தால் முழுமனதுடன் வாழ்த்து சொல்லாமல் போலி வேஷம் போடுவது, கோவில் நிலங்களை ஆக்கிரமித்து கட்சிக்கார ரௌடிகள் கொள்ளையடிக்க, சூறையாட அனுமதிப்பது, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை தன்வயப்படுத்தி இஷ்டம்போல் கொள்ளையை நடத்துவது...மொத்தத்தில் இந்து மதம் சார்ந்த பொது சொத்துக்களை பல வருடங்களாக கொள்ளையடித்துக் கொண்டிருப்பது நடந்துகொண்டுள்ளது. இந்த கூட்டுக்கொள்ளையில் தமிழகத்தில் உள்ள ஆண்ட ஆளும் இரண்டு கொள்ளைக் கும்பலும் ஈடுபடுவது பொதுமக்களின் வெறுப்பை பலவருடங்களாக காண முடிகிறது. ஐம்பொன் கடவுள் சிலைகளைக்கூட இந்த கொள்ளைக்கும்பல் விட்டுவைப்பது கிடையாது. சிலைகள் திருடுபோனால் அதற்கான போலீஸ் நடவடிக்கைகூட இருக்காமல் பார்த்துக்கொள்வதில் இந்த இரண்டு கொள்ளைக்கூட்டமும் மும்முரமாக ஈடுபடும். சமீபத்தில் சிலை திருட்டு தடுப்பு டிஜிபி பொன் மாணிக்கவேல் கண்டுபிடித்த பல திருட்டுக்களை மறைக்க ஆளும் கட்சி முயற்சி செய்து அவரை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்தது, அதை நீதிமன்றம் தடை செய்து அவரை பணியில் தொடர அனுமதித்தது எல்லோருக்கும் தெரியும். இப்படியே பல கொள்ளைகளை, முறைகேடுகளை செய்து இந்துமதத்தின் பொக்கிஷங்களை இல்லாமல் செய்துவிட இந்த இரண்டு திராவிட விஷங்களும் செய்துகொண்டுள்ளன. இந்துமதத்தை குறிவைத்து தாக்குவதும், சொத்துக்களை சுரண்டுவதும் பல வருடங்களாக நடந்துவரும் நிலையில் தமிழக பிஜேபி இதுபோன்ற பிரச்சினைகளில் முழுமுயற்சியுடன் ஈடுபட்டு முறைகேடுகளை தடுக்க, கோவில் சொத்துக்களை பாதுகாக்க முயற்சி செய்யாதது ஏன் என்பது என் போன்ற பொதுமக்களின் பல நாள் கேள்வி. முறைகேடுகளை தட்டிக்கேட்டு, அந்த முறைகேடுகள், கொள்ளைகள் நடக்காமல் செய்ய பிஜேபி தொடர்ந்து பாடுமாடுமானால் மக்களின் முழு ஆதரவும் பிஜேபிக்கு உண்டாகும். தமிழகத்தில் தழைத்து வளர இதுபோன்ற நல்ல கொள்கைகள் வழி செய்யும். அதை தமிழக தலைமை முன்னெடுக்காதது ஏன்? இன்று பிஜேபி ஆதரிக்கும் ஆட்சிதானே நடக்கிறது...மத்திய பிஜேபி நினைத்தால் தமிழக முறைகேடுகள் பலவற்றை தடுக்கமுடியும்....தவறு செய்தவர்களை தண்டிக்கமுடியும்.... பெரும்பான்மையினரின் ஆதரவை பெற்று தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியும். மத்திய பிஜேபியின் திறமையான திட்டமிடல் இன்று தமிழகத்திற்கு மிகவும் அவசியம். திராவிஷ கொள்ளைக்கும்பலை மக்கள் தூக்கியெறிய காத்திருக்கிறார்கள். பல வருடங்களாக கொள்ளை, லஞ்சம், ஊழல், சுரண்டல் போன்றவற்றை பார்த்து பார்த்து மக்கள் வெறுப்பில் உள்ளனர். இந்த நிலைதான் மத்தியிலும். பிஜேபி அரசை மத்தியிலிருந்து அகற்ற ஒரு பெரிய சூழ்ச்சி நடக்கிறது. அதை போக்கவேண்டிய முக்கிய பொறுப்பில் பிஜேபி உள்ளது. மக்கள் விரோத திட்டங்களை நிறுத்துவதும், நல்ல கொள்கைகளை கொண்டுவந்து மக்களின் ஆதரவை பெறுவதும் இந்த நேரத்தில் மிகவும் முக்கியம். நம் பிரதமர் ஒரு தனித்துவ சக்தி வாய்ந்தவர்...வெளிநாட்டு உறவு விஷயத்தில் அவரின் நிலைப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது. திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்வதும், சரியான முறையில் செயல்படுத்துவதும் முக்கியம். பல வருடங்களுக்கு பிறகு வந்துள்ள இந்த ஆட்சியை கொள்கை, திட்ட குளறுபடிகளால் இழந்துவிடக்கூடாது. நாட்டில் தீவிரவாதம், மதவாதம், பயங்கரவாதம் தலையெடுக்க விடக்கூடாது. அதற்கு இந்த அரசு தொடரவேண்டும் என்பது என்போன்ற கட்சி சாராத பொதுமக்களின் விருப்பம்.

    • Sabari - Tanjore,இந்தியா

      Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா...தங்கள் கருத்தை...கைப்புள்ள கருத்தை முழுமனதோடு ஆதரிக்கிறேன். தெரிவித்துள்ள அனைத்தும் உண்மை. அதற்கான சரியான வழியை, மாற்றத்தை இந்த அரசு கொண்டுவரும் என்பது நிச்சயம்.

    • Sabari - Tanjore,இந்தியா

      பிஜேபி அரசு தமிழகத்தில் ஆட்சி அமைக்கவேண்டும்....காரணம் கோயில் சொத்துக்கள் இந்த இரண்டு திராவிட விஷயங்களால் சூறையாடப்படுகின்றன. ஸ்வாமி சிலைகளைகூட இந்த கொள்ளைக்கும்பல் விட்டுவைக்கவில்லை. விசாரணை செய்யும் டிஜிபி பொன் மாணிக்கவேல் அவர்களைக்கூட இடம் மாற்ற முயற்சி செய்கின்றனர். இந்து மதம், தேசப்பற்றில் பிஜேபி சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை. பல காலமாக இருந்த ஊழல்கள் சிறிது சிறிதாக கண்டுபிடிக்கப்பட்டு துடைக்கப்படுகின்றன. சுத்தமாக துடைத்தெறிய பிஜேபிக்கு சிறிது காலம் தேவைப்படும். நாடு முழுவதும் இத்தனை ஆண்டுகளாக போலி மதசார்பின்மை கும்பல்களால் பல பிரச்சினைகள். தமிழகத்தில் அதிகம். கோயில் வழிபாடு, பண்டிகைகள் போன்ற பொதுமக்களின் விஷயங்களில்கூட தலையிட்டு குரூரமாக கருத்து சொல்லும் போலிகள் நிறைய உள்ளன. இவர்கள் யார்? வழிபாட்டை கேவலமாக விமர்சிக்க இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இதை யாரும் தட்டிக்கேட்காததால் இந்த கும்பல் செய்துவந்த அராஜகம் அதிகம். தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் துடைத்து எறியப்படும். கோயில் கொள்ளை, சூறையாடல் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்பது என்போன்ற பொதுமக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

    • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

      நம் பிரதமர் ஒரு தனித்துவ சக்தி வாய்ந்தவர்...

  • Sahayam - cHENNAI,இந்தியா

    இனிமேதான் உங்கள் கெட்ட காலம் ஆரம்பம் .

    • வல்வில் ஓரி - koodal,இந்தியா

      தோத்திரம்.. ...

    • வல்வில் ஓரி - koodal,இந்தியா

      இந்த பாவியை ரட்ஷித்தருளும்.. ஆமென்.

  • amuthan - karaikudi,இந்தியா

    தேச பக்தி வளர வேண்டும்...இன்றைய பாதுகாப்பு... அதுவே...

    • Sabari - Tanjore,இந்தியா

      பிஜேபி அரசு தேசபக்தி விஷயத்தில் எதிர்பார்பதைவிட அதிகமாகவே செயல்படுத்தும். தேசபக்தி அந்த கட்சியின் உயிர்நாடி என்பதில் ஐயமில்லை. தேசபக்தியுள்ள பிரதமர்தான் நம் பிரதமர்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    மோடி தனது அரசியல் பயணத்தில் அசைக்க முடியாத தலைவராகவே இருந்திருக்கிறார்... அது பலருக்கு இன்னும் பிடிபடவில்லை என்பது துரதிஷ்டம்... காங்கிரஸ் தனது ஆட்சியில் ஆரம்பித்து சொதப்பிய பல திட்டங்களை மோடி தனது தீவிர முயற்சியால் பல திட்டங்களை வெற்றிப்பாதையில் கொண்டு சென்று இருக்கிறார். இதற்க்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்... ஆதார், நர்மதா அணை... இன்னும் பல... நல்ல தலைவர்கள் நாட்டுக்கு நல்லதை துணிந்து செய்வர்...

    • Sanny - sydney,ஆஸ்திரேலியா

      நர்மதா இருக்கட்டும், முதலில் காவிரியை கோட்டு தீர்ப்பின் பிரகாரம் தமிழகத்துக்கு வர விடுங்க.

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      காவிரிபிரச்சினையை மோடியின் முயற்ச்சியில் தீர்த்து வைக்க அதிக சந்தர்ப்பம் இருக்கிறது.

    • balakrishnan - coimbatore,இந்தியா

      மோடி அவர்களை பற்றிய செய்திகள் பெரும்பாலும் செயற்கை தோற்றத்தை ஏற்படுத்துபவை, அது திட்டமிட்டு அவர் குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து ஏற்படுத்தப்பட்டது, இப்போது ஆட்சியில் இருப்பதால், அடுத்தடுத்து தோல்வி ஏற்படுவதால் பிம்பம் தகர்ந்து வருகிறது

    • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

      பல திட்டங்களை வெற்றிப்பாதையில் கொண்டு சென்று இருக்கிறார்

  • கைப்புள்ள - nj,இந்தியா

    ஹ்ஹாஹ்ஹா ஏங்க நீங்க வேற, மோடி ஜொலிக்கிறார், மின்னுறாரு, பின்னுறாருன்னு இவனுகளை கிளப்பி விடுறீங்க. இங்க அவன் அவன் ஏற்கனவே மோடினா தூக்கத்துல கூட எந்திரிச்சு பைத்தியம் புடிச்ச மாறி கத்துறானுக. பல பேரு ஆஸ்பத்திரில அட்மிட் பண்ற லெவலுக்கு மனநிலை பிசகி போயி கிடைக்கானுக. நீங்க என்னடானா ஆ ஊ னா மோடி வந்தாரு, மோடி போனாரு, பா.ஜ.க வருது, பா.ஜ.க போவுது ன்னு செய்திகளை அள்ளி போட்டு இவனுகளை வெச்சு விளையாடிட்டு இருக்கீங்க. நான் நினைக்கிறேன் உங்களுக்கு பொழுது போகல, ஜாலியா ஏதாச்சும் பண்ணனும் ன்னு தோணினா ஒரு மோடி செய்தி போடுவீங்க போல இருக்கு. போட்டுட்டு இவனுக எப்படி லபோ திபோ ன்னு அடிச்ச்சுக்கிறதை பார்த்து ஜாலியா கை கொட்டி சிரிச்சு என்ஜாய் பண்ணுவீங்க போல இருக்கு. இதெல்லாம் நல்லா இல்லீங்க. உங்க பத்திரிக்கை தர்மத்துக்கு ஆவாது.

    • Ganesan - Karaikudi,இந்தியா

      thambi tea innum vallai..

    • Ganesan - Karaikudi,இந்தியா

      நீ நிதானமா இல்ல, அப்புறம் வந்து கூவு.

    • Ganesan - Karaikudi,இந்தியா

      கவர்னர் உங்க ஆளு இப்போ நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியும்

    • Ganesan - Karaikudi,இந்தியா

      கவுண்டமணி காமெடிதான்.

    • Ganesan - Karaikudi,இந்தியா

      இன்னும் முழுசா வளரவே (ஜெயிக்கவே) இல்லை,அதுக்குள்ள சவுண்டா?போ போ ஓரமா போயி விளையாடு

    • கைப்புள்ள - nj,இந்தியா

      ஏற்கனவே அட்மிட் ஆகிற அளவுக்கு முத்தி போயி இருக்கானுகன்னு,

    • வல்வில் ஓரி - koodal,இந்தியா

      காரைக்குடி கணேசன் தொண்ட தண்ணி வத்த வத்த கூவிட்டு அடுத்தவரை பார்த்து கூவாத ன்றான்...

    • Sabari - Tanjore,இந்தியா

      வல்வில் ஓரி - Koodal,இந்தியா...அவர்களே...கணேசன் பெயர் உண்மைதானா என்பது என் சந்தேகம். காரணம் காவி காவி என்று ஊளையிடுகிறார்... பெயருக்கும் கருத்துக்கும் தொடர்பில்லாமல் இருப்பதால் சந்தேகமாக உள்ளது.

    • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

      பதிமூணு இடத்துல பேசியும்.... ஏய்யா... மெஜாரிட்டி கிடைக்காம... போறவன.. வர்றவனையெல்லாம்... இழுக்குறீங்க...? ஆனா... ஒண்ணுய்யா... மெஜாரிட்டிக்கு மேலே.... நல்லா ரிசல்ட்ட புல்லா ஏத்திவிட்டு... .... தொப்புன்னு நூத்திநாலு..ன்னு கீழே தள்ளினாங்க பாரு... அந்த விஷயத்துல.... கன்னடத்துக்காரங்கள பாராட்டலாம்....

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தினமும் ஏறி கொண்டு இருக்கின்றது. இன்னும் சிறிது நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தொட போகின்றது. விலைவாசி படம் எடுத்து ஆட போகின்றது. ரூபாய் மதிப்பு நாசமாகி கொண்டு இருக்கின்றது. காங்கிரஸ் சேர்த்து வைத்து அந்நிய செலாவணி, அநியாயமாக மோடியின் ஆசிர்வாதத்துடன் நிர்மல் மோடி போன்றவர்களால் களவாட பட்டு கொண்டு இருக்கின்றது, பீஜேபியினரின் கற்பழிப்பு சேட்டைகள் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டு இருக்கின்றது. உழைக்கும் பெண் வர்க்கத்தினரை அசிங்கமாக பேசவிட்டு, சட்டத்தின் முன்பு அடங்க மாட்டேன் என்று தலை மறைவாக இருக்கும் தேசபக்தர் சேகர் போன்றவர்களால் ஒட்டு மொத்த இந்தியாவும் வெறித்தனமான கோபம் கொண்டு, அந்த அலையில், போலி தேசபக்தர்கள் கடலில் தூக்கி எறியப்படுவது உறுதி.

    • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

      நல்லா புலம்பு. கடலில் தூக்கி எரிவாங்க நீ அதை பாத்து கை கொட்டி சிரிக்கலாம்.

    • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

      அட நீ சொல்வது திரைப்படத்தில் பார்த்த கதையா? ஆனால் நிஜத்தில் நீ சொல்வதற்கு எதிர்மாறாக அல்லவா இருக்கிறது? . ஒரே உதாரணம் தருகிறேன். மேல்மண்டையில் ஏதாவது சரக்கு இருந்தால் புரிந்து கொள். அதாவது நீ சொல்லும் "காங்கிரஸ் சேர்த்து வைத்து அந்நிய செலாவணி, அநியாயமாக மோடியின் ஆசிர்வாதத்துடன் நிர்மல் மோடி போன்றவர்களால் களவாட பட்டு கொண்டு இருக்கின்றது" என்பது தவறு என்பதை இங்கு பாரு. கான் கிராஸ் ஆட்சி காலத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 300 பில்லியன் டாலர்கள். அது எழுபது ஆண்டு சாதனை. ஆனால் மோடி பதவி ஏற்ற பின்னர் வெறும் ..ஆமாமா வெறும் இந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் அந்நிய செலவாணி சாதனை அளவான 410 பில்லியன் டாலர்கள். அதாவது வெறும் மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவிற்காக அதிகரித்து சேகரித்த சேமிப்பு 110 பில்லியன் டாலர்கள். இனி மீண்டும் ஒரு முறை ஊளையிட்டு பாப்போம்.

    • Sabari - Tanjore,இந்தியா

      Ramasamy Naicken - Hamilton,...பிரதமர் மோடியின் வெளிநாட்டு கொள்கைகள் இதுவரை எந்த அரசும் செய்யமுடியாத பல சாதனைகளை செய்துள்ளது. தினம்..தினம்... வெளிவரும் செய்திகளை வெளிநாட்டு பத்திரிக்கைகளின் அறிக்கைகளை படித்துவந்தால் இந்தியாவின் இன்றைய நிலை என்பது விளங்கும். ஒரே வரியில் பல சாதனைகளை சொல்லிவிடமுடியாது. ஏன் இந்த கருத்து பகுதியே போதாது. நடுநிலை நோக்கத்துடன் பிரதமரின் பல சாதனைகளை என்போன்ற கட்சி சாராத நடுநிலை வாதிகள் விவாதிப்போம். சத்தமேயில்லாமல் பல வியத்தகு சாதனைகளை செய்துள்ளார். விருப்பமென்றால் நாம் விவாதிப்போம்...இந்த பகுதியில். வெளியில் உலவும் பல வெற்று ஊளையிடலுக்கு செவி சாய்த்துவிடாமல் செய்திகள் ஒவ்வொன்றையும் படித்து அதன் தன்மைக்கேற்ப விவாதிக்கலாம். மாற்றுக்கட்சி என்ற அரசியல் நோக்கத்தோடு இருந்தால் உண்மை புரியாது...மனது ஏற்றுக்கொள்ளாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement