Advertisement

'டவுட்' தனபாலு

முதல்வர் பழனிசாமி: தமிழக அரசை பொறுத்தவரை, காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும்; பங்கீட்டு குழு தேவை என்பதை வலியுறுத்திஉள்ளோம்.

டவுட் தனபாலு: நீங்களோ, காவிரி மேலாண்மை வாரியம் தான் வேண்டும்னு சொல்றீங்க... தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகமோ, 'வாரியமோ, ஆணையமோ, குழுவோ, எதுவாயினும், அந்த அமைப்பிற்கு அதிகாரம் இருக்கிறதா என்பது தான் முக்கியம். எனவே, பெயர் வைப்பதில் பிரச்னை ஏதும் இருக்கப் போவதில்லை'ன்னு சொல்றாரு... முக்கியமான பிரச்னைகளில் கூட, உங்களுக்குள் கலந்துரையாடல் நடப்பதில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

-----

சசிகலா இனி என் அக்கா இல்லை என அறிவித்துக் கொண்ட திவாகரன்: பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை எப்படி சசிகலாவுக்கு எதிராக, தினகரன் திருப்பினாரோ, அதே போல், தற்போது, என்னையும் சசிகலாவுக்கு எதிராக திருப்பியுள்ளார்.

டவுட் தனபாலு: பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி இருவரும், இதைப் பத்திச் சொல்லலையே... நீங்க ஏங்க, அவங்களுக்கு வக்காலத்து வாங்குறீங்க... விட்டால், சசிகலாவின் உண்மை விசுவாசிகள், பன்னீரும், பழனிசாமியும் தான்னு, அடிச்சுவிடுவீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!

----

காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு: வரும், 2019 லோக்சபா தேர்தலை மையமாக வைத்து, ஒட்டுமொத்த தமிழக காங்கிரசில் சீரமைப்பு பணிகள் செய்யப்படும்.

டவுட் தனபாலு: தி.மு.க., தலைமையுடன் அதீத நெருக்கம் காட்டி, அந்தக் கூட்டணியில், அதிக இடங்களைப் பெறக்கூடிய திறமை பெற்ற நபரை, தமிழக காங்., தலைவராக நியமிக்கப் போறீங்க... இதைச் சொல்ல, எதுக்கு, இவ்வளவு, 'பில்டப்' என்பது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    விரைவில் குஷ்பூ அவர்களின் நீண்டகால தன்னலம் கருதா சேவையைபாராட்டி தமிழக காங்கிரஸ் தலைமைப்பொறுப்பை டெல்லிமேலிடம் வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

  • WE ARE INDIAN - Chennai,இந்தியா

    இனிவரும் எலக்ஷனில் திமுக காங்கிரசை கழட்டிவிட போகுது. எங்கே அதிக சீட் கேட்பது. மொத்த தமிழ்நாட்டு தொகுதியிலும் தனியே போட்டியிட்டு பார்க்கலாமே. மேடையெங்கும் குஸ்புவின் குத்தாட்டம் என்று விளம்பரம் செய்து பார்க்கலாமே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement