Advertisement

எப்பவுமே அம்மா செல்லம் : சந்தோஷப்படுகிறார் சாந்தனு

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோ, ஹீரோயினாக அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் இயக்குனர் பாக்யராஜ், பூர்ணிமா தம்பதியின் குடும்பம் ஒரு
பல்கலை கழகம். இவர்களின் கலை வாரிசாக பிறந்து 'சித்து பிளஸ் டூ' படம் மூலம்
ஹீரோவாக களமிறங்கி கலகலவென நடிப்பில் கலக்கி வரும் சாந்தனு அன்னையர் தினம் குறித்து மனம் திறந்ததாவது....

நான் எப்பவுமே அம்மா செல்லம் தான். சிறு வயதில் இருந்து இன்று வரை எனக்கு தேவையானதை அம்மாவிடம் தான் கேட்பேன். ஒரே வீட்டில் இருந்தாலும் நானும், அப்பாவும் நேரில் பேசிக் கொள்ளும் நேரம் மிக குறைவு. அப்பாவிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் கூட அம்மா வழியாக தான் சொல்வேன். என்ன தான் அம்மா எனக்கு செல்லம் கொடுத்தாலும் படிப்பு விஷயத்தில் ரொம்ப கண்டிப்பு.


ஒரு முறை ஒரு பாடத்தில் 'மார்க்' குறைவாக வாங்கிட்டு வந்து அம்மாவை பார்க்க பயந்து, வீட்டுக்கு கீழே சோகமாக உட்கார்ந்து இருந்தேன். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த அப்பா நான் சோகமாக இருக்குறதை பார்த்து விட்டு 'மார்க்' குறைவாக இருக்கிற விஷயத்தை அம்மாவிடம் பக்குவமாக கூறி உள்ளே அழைத்துச் சென்றார்.அம்மாவிடம் இருந்து நிறைய பழக்க, வழக்கங்களை நான் கற்றுக் கொண்டேன். என் மனைவி கீர்த்தி கூட 'நீங்கள் பூர்ணிமா அம்மா மாதிரியே பொறுமையாக இருக்கீங்க'ன்னு அடிக்கடி கூறுவார்.


அம்மாவை எப்படி 'மா'ன்னு கூப்பிடுறேனோ, அதே மாதிரி கீர்த்தியையும் 'மா'ன்னு தான் அழைப்பேன். என் மனைவி, கடவுள் எனக்கு கொடுத்த இன்னொரு அம்மா. தாய்க்கு பின் தாரம்ன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க. நிறைய படங்கள் நடிச்சு சினிமாவில் பெரியளவில் சாதிக்கணும்.அது தான் என் அம்மாவுக்கு நான் கொடுக்குற பெரிய பரிசாக இருக்கும்.
அவங்களும் அதை தான் என்கிட்ட இருந்து எதிர்பார்க்குறாங்க. அந்த ஒரு நாளுக்காக தான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்.


இந்த அன்னையர் தினம் அன்று அம்மா, அப்பா ஒரு டூர் போறாங்க. அதனால் அவங்களுக்கு 'ஸ்பெஷல்' வாழ்த்துக்கள் கூறியிருக்கிறேன், என்றபடி ஷூட்டிங் கிளம்பினார்...
வாழ்த்த shanthnoobhagyarajgmail.com
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement