Advertisement

போலீஸ் செய்திகள்....

வாலிபர் தற்கொலை
திருமங்கலம்: சிந்துபட்டி அருகே சந்தைப்பேட்டை விவசாயி மந்திரிகொடி, 35. இவர் குடும்ப பிரச்னையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


ஆட்டோ கவிழ்ந்து மாணவி பலி
திருமங்கலம்: தேனி பொம்மையகவுண்டன்பட்டி ஆட்டோ டிரைவர் அழகர். இவர் குடும்பத்துடன் இரு நாட்களுக்கு முன் ஆட்டோவில் திருமங்கலம் வந்து உறவினர் வீட்டில் தங்கினார். நேற்று அழகர் ஆற்றில் இறங்குவதை காண குடும்பத்தினர், உறவினர்களுடன் மதுரைக்கு ஆட்டோவில் சென்றார். அழகர் ஆட்டோவை ஓட்டினார். கப்பலுார் ரோட்டில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அழகர் மகள் வீரலட்சுமி, 12, பலியானார். இவர் தேனியில் ஏழாம் வகுப்பு முடித்திருந்தார். ஐந்து பேர் காயமுற்றனர்.


செயின் பறிப்பு: 2 பேர் கைது
வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே தேனுாரில் கடந்த வாரம் இரவு அடுத்தடுத்து பெண்களிடம் செயின் பறிப்பில் மர்மநபர்கள் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்டதாக கடவூர் மைதீன் மகன் ஜாகீர்உசேன்,19, அவனியாபுரம் கோபிநாத் மகன் மணிகண்டன்,19, ஆகியோரை கைதுசெய்த சமயநல்லூர் போலீசார் நகை மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.


ரூ.1.67 லட்சம் வழிப்பறி
கருப்பாயூரணி: வண்டியூரில் மதுக்கடை சூப்பர்வைசராக இருப்பவர் செந்தில்குமார்,31. நேற்றுமுன்தினம் பணி முடிந்து விற்பனையாளருடன் டூவீலரில் சென்றபோது, செந்தில்குமாரை 4 பேர் வழிமறித்து 1.67 லட்சம் ரூபாயை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement