Advertisement

கொளுத்தும் வெயிலிலும் கிரிக்கெட் விளையாட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், கொளுத்தும் வெயிலிலும், மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.

ஆண்டு இறுதி தேர்வு முடிந்து, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறையில், மாணவ - மாணவியர், ஸ்போக்கன் இங்கிலீஷ், இசை கருவிகள் வாசித்தல், ஹிந்தி, கம்ப்யூட்டர் வகுப்பு உள்ளிட்ட சிறப்பு வகுப்புகளுக்கு செல்கின்றனர்.
காஞ்சிபுரம் நகரில், சில வாரங்களாக, 38 செல்சி யசுக்கும் மேல் வெப்ப நிலை நிலவி வருகிறது.
இந்நிலையிலும், மாணவர்கள் சிலர், கொளுத்தும் வெயிலிலும், பகல் முழுவதும், தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் உள்ளிட்டவற்றை விளையாடுகின்றனர்.
வெயிலில் விளையாடு வதால் ஏற்படும் சரும நோய்கள் குறித்தும், பல்வேறு பாதிப்புகள் குறித்து பெற்றோரும், தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement