Advertisement

பேராசிரியை விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயலவில்லை: கவர்னர்

சென்னை: கல்லூரி பேராசிரியை விவகாரம் தொடர்பாக ஒருநபர் குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. யாரையும் காப்பாற்ற முயலவில்லை என கவர்னர் பேட்டியளித்தார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை, நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான ஆடியோ உரையாடல் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி...

மாணவிகளை பேராசிரியை தவறாக வழி நடத்தியது கண்டிக்கத்தக்கது. பேராசிரியை விவகாரத்தில் சிறு தவறு நடந்துள்ளது. நிர்மலா தேவி யாரென்றே எனக்கு தெரியாது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இது குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு அவசியமில்லை. அந்த குழு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயலவில்லை என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கவர்னர் அளித்த பேட்டியில், காவிரி மேலாண்மை வாரியத்தின் முக்கியத்துவம் குறித்து கவர்னர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினேன். தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (92)

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  பாக்குறதுக்கு முன்னாள் ஆந்திர கவர்னர் என் டி திவாரி மாதிரியே இருக்காப்புல...

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  பூனைகுட்டி வெளியே வந்துவிட்டது...அஹாஹா...

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  உளவியல் வாயிலாக ஆராய்ச்சி செய்தால், வியாபாரங்களை பெருக்க சிலரின் சான்றிதழ் தேவைப்படும் அதனை பிரச்சாரம் செய்யவும் கூடும். சான்றிதழ் தந்தவராகவோ அல்லது தராதவராகவும் இருந்தால், எந்த பொருளை வியாபாரம் பெருக்க தன் பெயரை பயன்படுத்தினார்களோ அதனை அவர்கள் தன் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக உபயோகிக்க தேவையில்லை. விற்பனை செய்யும்போது, இல்லாததை இருப்பதாகவும் (facilitation ), இது உங்கள் நன்மைக்குத்தான் (Enlightenment ) என்னவோ, அல்லது இருப்பதை பாதி மறைப்பதும் (Fog ) தடை செய்யப்படாத யுக்திகள். இதில் விழுந்தவர் எழுவதில்லை எழுந்தவர் மீண்டும் விழுவதில்லை.யாருடைய பெயரையும், யாரும்,எங்கும், எதற்காகவும் குறிப்பிட்டால் அல்லது குறிப்படக்கூடுமானால் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டதோ அவரை பொறுப்பாளியாக, பலிக்கடாவாக ஆக்கமுடியுமா? ஆக்கலாம், அவ்வாறு ஆக்குவதால் பிறருக்கு தொல்லைகள் நீங்கி, நன்மைகள் பிறக்கக்கூடுமேயானால்.

 • ஷாஜஹான் முஹமது - Jeddah,சவுதி அரேபியா

  தன்னை தானே காப்பாற்ற முயற்சி தான் விசாரணை குழு.

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  காவெர்னெர் ஆய்வு ஆய்வு செய்ய செல்கிறேனெண்டு சொல்லுவதேலேயே மக்களுக்கு சந்தேகம் வந்தது ,மற்ற காவெர்னேர்கள் யாரும் செலாதநிலையில் இவர் மட்டும் ஏன் செல்லவேண்டும் ?? இப்பொழுது பிரச்சனையில் மாட்டுவார்போலுள்ளது

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  பத்திரிகையாளர்கள் கவர்னர் பதில் சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி...பத்திரிகை சுதந்திரம்???.

 • Darmavan - Chennai,இந்தியா

  எப்படியாவது இந்த ஆளுநரை சிக்கலில் மாட்டவேண்டுமென்று பின்னப்பட்ட சூழ்ச்சியாக தெரிகிறது. அப்போதுதான் இவர்கள் கொள்ளையடிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியும்..ஆளுநர் நியாயமனவர்தான் என்பது கூடிய சீக்கிரம் தெரியும்.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  எனக்கு என்னவோ ஜெயாவின் ஆவி தான் இப்படி பழி வாங்குதோ தெரியவில்லை அந்த பொம்பள இறந்த பிறகு தமிழ்நாடே அல்லோகல படுது , வாரிசுகள் ஆத்ம சாந்தி அடைய ஏதாவது செயுங்கள் இல்லை தமிழ்நாட்டை சுற்றி சுற்றி தான் வரும்

 • Visu Iyer - chennai,இந்தியா

  இதுவரை பேசாத கவர்னர் இந்த விஷயத்தில் பேசுகிறார் என்றால்... யோசிக்கறீங்களா...? சரி... யோசிக்க விடமாட்டாங்க....

 • Shanu - Mumbai ,இந்தியா

  BJP- Balatkar Janatha Party. பிஜேபி- பலாத்கார ஜனதா கட்சி

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  இந்த பேராசிரியை விவரமாக விசாரித்தால் பின்னப்பட்ட விவகாரம் வெளியில் வரும்...

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  மறைந்த பெண் முதல்வரே கவர்னர் மீது ஒரு மாதிரியான பிரச்சனை எழுப்பினார். அப்போது எல்லோருமே கவர்னரை விட்டுவிட்டு குற்றம் சுமத்திய முதல்வர் மீது வெகுண்டு எழுந்தார்கள்.. பழைய நிகழ்வுகளை மறக்காதீர்கள். இப்போது தலைகீழாக ஒரு பேராசிரியை யார் சொல்லி இதை செய்தார் என்று விசாரனை ஆரம்பம் ஆகுமுன்னே எதிர்மறையாக வெகுண்டு எழுவதன் நோக்கம் புரிந்து கொள்வதும் மக்களின் அறிவார்ந்த திறமையே...

 • Power Punch - nagarkoil,இந்தியா

  இவர் பதவி விலகி தான் யோக்கியர் என்பதை நிரூபிக்க வேண்டும்..Cbcid யம் தங்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற நினைப்போடு அயோக்கியர்களை மக்களுக்கு காட்ட வேண்டும்...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இவர் இந்த விஷயத்தில் போகும் வேகத்தை பார்த்தால் சந்தேகம் மேலும் மேலும் வலுக்கிறது.. இவர் மீதே குற்ற சாட்டு இருக்கும் போது இவரே விசாரணை கமிசன் அமைப்பது தான் வேடிக்கை..இந்த கிரிமினல் குற்றத்தில் போலீஸ் FIR போட்ட உடனேயே அது கோர்ட்டின் எல்லைக்கும், பார்வைக்கும் வந்து விடும்.. இந்த விசாரணை கமிஷன் செல்லாது.. நியாயமாகவும் விசாரணை நடக்காது....அதற்கும் மேல் அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.. ஆளுநர் தவறை மூடி மறைக்க பல சப்பை கட்டுகளை கட்டுகிறார். பத்திரிகையாளர் சந்திப்பில் மிரட்டுவதும் அப்பட்டமாக தெரிகிறது..

 • Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா

  அட பாவிகளா: கவர்னரை கூடவா: இத்தனை வயதானவரை கூடவா சந்தேகிக்கிறீர்கள் என்னதான் இருந்தாலும் பெண் பித்து வராதே இந்த வயதில். இதற்கெல்லாம் தானே சொன்னேன் தனி மனித ஒழுக்கம் இல்லை இந்த உலகிலே:

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  முன்பு ஒரு விஜயலக்ஷ்மி நேற்று தான் அவர் மறுமணம் செய்தார் இன்று நிர்மலா தேவி பாவம் எவென் எவென் தலை உருளப்போகுதோ காவிகள் ஆட்சி முடிவதற்குள் காமக்களியாட்டம் தான், இமாச்சல கோவெர்னெர் தான் ஞாபகம் வருது இவர் இங்கிருந்து போய் அங்கே

 • poonguzhali - singapore,சிங்கப்பூர்

  I think people comments here whether aware of what they are writing about.... If something happens to neighbourhood and one voiced took action, we first to tell thanks for it rather here people want to spill their (?)mind. If one is a good person wants to look good and pray for good. Here.......

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  தாங்கள் மாவட்டம் தோறும் சுற்றியதாக கேள்விப்பட்டோம். ஒரு முறை பல் கொலை கழகங்களை விசிட் செய்து வாருங்கள்

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  ஐயா நீங்கள் வாயே திறக்க வேண்டாம். இது சாக்கடை. முடிந்தால் பத்து நாட்களில் ஒரு முடிவு தரப்பாருங்கள். அல்லது நாங்கள் இதை பத்தோடு பதினொன்றாக மறந்து மன்னித்து விடுவோம்

 • lakshmi - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Governor is the authority for all universities. As per the norms he has to form the committee. He had clearly read the laws from the Constitution. He's a transparent gentleman. Blaming such a straightforward and well-wisher person is a great sin. He had answered all the questions but journalists only asked the same questions again and again.

 • INDIAN - Mamallpuram ,இந்தியா

  இந்த பெண்மணியை கைது செய்யும் போது நடந்த நிகழ்வுகளை வரிசை படுத்தி கோர்வையாக சிந்தித்து பார்த்தால் மிக பெரிய அதிர்ச்சியான தகவல்கள் வெளிவரும். நாடே தாங்காது. ஆகையினால் இதன் விசாரணை ஒருக்காலும் நேர்மையாக நடக்காது. இது ஒரு பெரிய நெட்ஒர்க். ஏன் நமது மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் யாரும் வேட்டி கட்டிய ஆண்மகன் யாரும் இல்லையா? வெட்கட்கேடு.

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  ஆடியோவில் ஒரு முனையை விசாரிக்கும் போது மறுமுனையை முற்றிலுமாக மறைக்கிறார்களே... இதுபோல தான் சின்ன விவகாரத்தில் கொடுக்க முயன்ற என்ற போது வாங்க முயன்ற விசாரணை வேண்டும் என்ற கோஷம் வந்ததே.. இப்போது எதிர் மறை கோஷம் வராத மர்மம் என்னவோ...ராடியாவில் கூட இ பக்கம் அ பக்கம் விசாரணை நடந்ததே..

 • suresh - chennai,இந்தியா

  பாஜக மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடுக்கடுக்கான கருத்துக்களை பதிவிடும் என்னால்,,,நிர்மலா தேவியின் 20 நிமிட ஆடியோவை கேட்ட பின்பு,,,சீ என்றாகி விட்டது,,,,,புகார் அளித்த அந்த 4 தமிழ் பெண்களின் துணிச்சலை பாராட்டி கருத்தை முடிப்பதே சரி.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "சிறு தவறு...." - ஆமா வெளியெ தெரிஞ்சிபோய்டிச்சி....

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  ஏற்கனவே ஒரு கிராமத்தில் பாத்ரூம் கதவு என்று கதை கட்டினார்கள்... கிராம மக்கள் இது மாதிரியான கீழ்த்தர கதைகளுக்கு ஒத்து போகாத காரணமோ அந்த மேட்டர் சக்ஸஸ் ஆகவில்லை.. இப்போ படித்தவர்களிடம் பட்டணத்தில்... இப்படி எல்லாமா அரசியல் ...அதனால் தான் சாக்கடை...இவர்கள் ஆரம்பம் முதலே கவர்னர் போகுமிடமெல்லாம் தொடர்ந்து தொல்லை கொடுத்தவர்கள். இப்போது துணை வேந்தர் தேர்வில்கூட எதிர்த்தனர்... பல்கலைக்கழக வளாகத்திலே காய் நகர்த்தப்படுகிறதா...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "நிர்மலா யாருன்னே எனெக்கு தெரியாது... நீங்க வேணா அவுங்குள்ட்ட கேட்டுப்பாருங்க....?"

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் மாணவிகளின் கற்பை மதிப்பெண்ணை காரணம் காட்டி விலைபேசுகிறார்கள், இது உங்களுக்கு சாதாரண பிரச்சனையா. மாணவர் தரப்பு, ஆசிரியர்கள் தரப்பு, சமூக ஆர்வலர் தரப்பு, நீதிபதிகள் தரப்பு, புலனாய்வு தரப்பு, என்று ஐந்து பேர் கொண்ட விசாரணை குழுவை வைத்து விசாரிக்கப்பட வேண்டும், முதலில் இந்த பேராசிரியை மின் கம்பியை கடித்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும், இது போன்று மாணவிகளின் எதிர்காலத்தை விலைபேசும் ஆசிரியர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்க பட வேண்டும்..........

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  காஷ்மீர் ஆசிபா செய்தி பொய் கேசு என்ற உண்மை தெரிந்தும் அதையே திரும்ப திரும்ப பேசுவது. விரைவாக நடவடிக்கை எடுத்த கவர்னரை பாராட்டாமல் அவரையே சந்தேகப்படுவது. பாஜக/மோடி எதிர்ப்பு கண்மூடித்தனமாக போய் விட்டது. டுமீளர் அல்லாத சில மக்களும் தங்கள் சுய நிதானத்தையே இழந்து கொண்டுள்ளனர். சமூக வலையில் வரும் எல்லாவற்றையும் நம்பும் நிலையிலேயே இப்போது உள்ளனர். எல்லாம் சுய சிந்தனைக்கு வாங்க...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ".... யாரையும் காப்பாற்ற முயலவில்லை: கவர்னர்" - அப்டித்தான் சொல்லணும்...

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  என்ன இது முந்திரிக்கொட்டை விளக்கம்.... அதுவும் பத்திரிகையாளர்களை கவர்னர் மாளிகைக்கு அவரே அழைத்து கொடுத்த பேட்டி... ஏன் இந்த பதட்டம் ..... ஒன்னும் புரியல சாமி....

 • suresh - covai,இந்தியா

  விசயம் நடந்த 2 நாளிலேயே குழு அமைப்பது இதுதான் முதல் முறை. அதுவும் வாலன்டியரா வந்து அட்டனன்ஸ் போடராரு எங்கோ இடிக்குதே.

 • BALU - HOSUR,இந்தியா

  நாக்கு எப்படி வேணும்னாலும் பேசும் நேற்றுவரைக்கும் நடவடிக்கை எடுக்கலன்னு கவர்னர் பெயரை பயன்படுத்தியிருக்காங்க கவர்னர் அலுவலகம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கலன்னு நேற்று தான் தொலைக்காட்சி செய்திகளில் கேட்டோம். இன்னைக்கு கவர்னர் நடவடிக்கை எடுத்தா இவருக்கு ஏன் அவசரம்னு கேக்கறோம். தப்பு செய்பவர்கள் யாராயிருந்தாலும் தண்டனை கொடுக்கச்சொல்லி கேளுங்கள். ஆனால் நாம் என்ன பேசறம்னே புரியாம ஏட்டிக்குப்போட்டியா பேசறோம் தவறைக் கண்டிப்பாக தட்டிக் கேளுங்கள். ஆனால் ஏட்டிக்குப்போட்டி மனோபாவம் நம் கொள்கைகளையே தவறானவையாக்கி விடும். சிந்திப்பீர் நன்றி..

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  சுப்ரீம் கோர்ட் கைட்லைன்படி பெண்களை விசாரணை செய்யும் போது பெண் மெம்பர் உறுப்பினராக இருக்கனும்ன்னு கேட்டால்.... இவரோட பதில் - ஏன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆண் தானே???? இவர் டிசைன் இவ்வளோ தானா ... இல்லை RSS காரர்ங்கரதால இப்பிடியா???

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பாலியல் ஜனதா பார்ட்டி யில் இதெல்லாம் சகஜமப்பா.........

 • suresh - covai,இந்தியா

  நிர்மலா யார் என்றே எனக்கு தெரியாது. யாரையும் நான் காப்பற்ற முயலவில்லை என கவர்னர் கூறினார். இதை மட்டும் தனியாக படித்து பாருங்கள் புரியும் யார் குற்றவாளிகள் என்று .

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பா.ஜ.க என்றால் பாலியல் ஜல்சா கட்சி ன்னு ஆக்கிட்டாங்க..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  இவர் ஏன் தன் தலையில் தானே அட்சதையைப் போட்டுக்கொண்டு, எங்கப்பா குதிருக்குள் இல்லை ன்னு வலிய வந்து பேட்டி யெல்லாம் குடுக்கறார்?? கவர்னரா லட்சணமா இருக்கப்படாதா?

 • காவிகள் (மாட்டு) மூத்திரம். - cuddalore,இந்தியா

  ஆளுநர் மனிதர் தான். இதில் இவர் காவி. இதில் தவறு நடை பெறுவதில் வாய்ப்பு இருக்கிறது. சிபிஐ விசாரணை வேண்டும்

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இந்த வேலையை ஏன் காஸ்மீர் கவர்னரோ இல்லை சூரத் இல் நடந்திருக்கு அந்த ஊர் கவர்னரோ வரவில்லை இங்கே எதற்கெடுத்தாலும் கவர்நேர் இருப்பது ADMK ஆட்சியா இல்லை கவர்னரு கண்காட்சியா, ஜெ இருந்திருந்தா இவர் என்றைக்கோ packup ஆயிருப்பார் இல்லை இவர் அலுவலகத்தில் யாராவது மாட்டியிருக்கின்றனரோ தெரியவில்லை

 • VOICE - CHENNAI,இந்தியா

  தென்இந்திய கவர்னர் ஒருவர் மீது பெண்கள் விஷயத்தில் குற்றச்சாட்டு எழுந்தது அது எந்த கவர்னர் என்று இன்று இது வரை ஏன் மத்திய அரசு மறைக்கிறது ? அவரை ஜெயிலில் ஏன் இது வரை தள்ளவில்லை. சமூக தளத்தில் வெளிவருவதற்கு முன்பு நடவெடிக்கை எடுக்கியவில்லை என்றால் மத்தியில் இருப்போருக்கும் இதில் தொடர்பு உள்ளது என்று தான் மக்கள் நம்புவார்கள். குட்கா புகழ் காவல்துறை எப்படி நேர்மையாக விசாரிக்கும் ? .

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  எங்க அப்பன் குதிருக்குள் இல்லை.

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////Apposthalan samlin - sulaymaniyah,ஈராக் 17-ஏப்-2018 18:30 சிறு தவறா?////. - மொபைலில் அது பேசிச்சே, அதுவாக(மொபைல் போன்) இருக்குமோ?. என்னடா இது, இந்த மாளிகைக்கு(?) வந்த சோதனை?. வாசகருக்கு புரியும்.

 • ரபேல் ஊழல் நாயகன் மோடி: - Ariyalur,இந்தியா

  காவி கட்சி என்று பார்த்தால் காம கட்சியா இருக்கே.

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  வாலன்டியரா இவர் ஏன் உள்ளே வர்றார் ..... எங்கோ உதைக்குதே ....?

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அந்த நி தே-வின் ஆடியோவில், உயர்ந்த பதவி ஆட்களுக்கு, மாணவிகள் தேவைபடுது என்பது போல கூறி இருப்பதால், சிபிஐ விசாரணைதான், தக்க விசாரணையாக அமையும் என்பதை, யாராவது, நடுநிலையான, பொதுஜன சேவகர்களிடம், கேட்டால் கூட, சிபிஐ விசாரணையை ஏற்றுக்கொள்வார்கள் தானே?.

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  அரசியல் சட்டம் வேதம் போன்றது. கவர்னர் எதற்கு குழு அமைத்தார் என்று வெள்ளை அறிக்கை கொடுக்க முடியுமா .இது கிரிமினல் நிகழ்வு . எனவே போலீஸ் மட்டும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  இந்த கவர்னரை முதலில் மத்திய அரசு திரும்பி அழைத்து கொள்ள வேண்டும் . தமிழகத்தின் மிக பெரிய இழுக்கு இவர்.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  எதுவும் உருப்படியா பதில் சொல்லலை. நிறைய கேள்விக்கு ஹாங் ஹாங் ஹாங் தான் பதில்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  அப்ப நீ கேட்கலையா, நான்தான் உளறிட்டேனா, என்னமோ நேரமே சரியில்லை,

 • Magesh - Riyadh,சவுதி அரேபியா

  Then, why are you bothering so much in this issue, as usual close the case after few days after people focus on next issue.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  //பேராசிரியை விவகாரத்தில் சிறு தவறு நடந்துள்ளது.// சிறு தவறா ? அப்போ சம்பந்தம் உள்ளது என்று தெரிகிறது .

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இப்ப நமது நாட்டுக்கு யார் முதல்வர் என்றே தெரியவில்லை, இவர் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார், இவருடைய வேகம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது, சம்பந்தம் இல்லாமல் அனைத்திலும் ஆஜர் ஆவது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது,

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  சிறு தவறா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement