புதுடில்லி: டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் 2 ஆலோசகர்களை நீக்கி கவர்னர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார். கல்வி மற்றும் மீடியா தொடர்பு ஆலோசகர்களாக இரண்டு பேரை சிசோடியா நியமித்திருந்தர், இந்த 2 பேர் நியமனத்திற்கு முறைப்படி உள்துறை அமைச்சக ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இது பின்பற்றப்படவில்லை. இதனால் 2 பேரையும் நீக்கியிருப்பதாக கவர்னர் அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது. இது போல் மேலும் 7 ஆலோசகர்கள் நீக்கப்படலாம் என தெரிகிறது.
ஏற்கனவே கவர்னர், ஆம்ஆத்மி அரசு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில் தற்போதைய கவர்னர் நடவடிக்கை மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் , அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
டில்லி அரசின் ஆலோசகர்கள் நீக்கம்
வாசகர் கருத்து (8)
ஒன்று மட்டும் நல்லா புரியுது.... பிஜேபி டெல்லியை பொறுத்தவரை வயித்தெரிச்சல் வேலைதான் செய்யுது.... அடுத்த தேர்தலிலும் டெல்லியில் பிஜேபி கால் பதிக்கமுடியாது.... கெஜ்ரி வேலை செய்யுறாரோ இல்லயோ... பிஜேபி மெனக்கிட்டு தன் தலையீலேயே மண்ணை அள்ளி போட்டு கொண்டு இருக்கு.....
இந்த ஏழை பங்காளனின் ஆட்சியாளர்கள், அரசின் எந்த ரூல்ஸ் ரெகுலேசன்களையும் மதிக்க மாட்டாங்களோ?.
First of all delhi governor must be changed. He is agent of BJP. Everyday he is creating problem. Delhi people already rejected and ignored BJP
governor was already changed once. This guys can't do anything by following rules and blame everyrthing on BJP. They will put a sorry face like all fake charges on AJ and other leaders once you fight them legally.
இது ஆளுநர்களின் பொற்காலம் இது...
கான் க்ராஸ் ஆட்சியென்றால் இத்தாலி மொய்நோக்கே பொற்காலம்,
ஆலோசனையின் முடிவில் யாருக்கு அடி விழுமோ?
இப்போது உள்ள எல்லா கவர்னர் களும் பிஜேபி யின் பிரிதிநிதி போல் செயல் படுகிறார்கள்