புதுடில்லி: ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகையில், பிரதமர் மோடி வங்கி நிர்வாகத்தை சீர்குலைத்து விட்டார். நிரவ் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாயுடன் வெளிநாட்டிற்கு ஒடிய போது பிரதமர் எந்த வார்த்தையும் கூறவில்லை. நமது பாக்கெட்டிலிருந்து 500 மற்றும், 1000 நோட்டுகளை பறித்து நிரவ் மோடியின் பாக்கெட்களில் திணித்துவிட்டதால், நாம் பணத்திற்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது எனக்கூறினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில், பல மாநிலங்களில் பணம் இல்லாமல் காலியாக உள்ளதாக தகவல் வருகிறது. பெரிய மதிப்பு நோட்டுகளை காணவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் காலம் நினைவுக்கு வருகிறது. நாட்டில் நிதி நெருக்கடி ஏதும் ஏற்பட்டுள்ளதா? எனக்கூறியுள்ளார்.
— Mamata Banerjee (@MamataOfficial) April 17, 2018
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஒ பிரையன் கூறுகையில் , இதுவும் ஒரு நிதி நெருக்கடிநிலைதான். 50 நாளில் அனைத்தும் சரியாகிவிடும் என பிரதமர் மோடி கூறினார். ஆனால், ஒன்றரை வருடங்கள் ஆகியும் பணத்தட்டுப்பாடு சரியாகவில்லை எனக்கூறினார்.
//நிரவ் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாயுடன் வெளிநாட்டிற்கு ஒடிய போது பிரதமர் எந்த வார்த்தையும் கூறவில்லை/ஆனால் அதே நீரவ் மோடி கோஷ்டியின் வக்கீல் இப்போது கர்நாடக காங்கிரஸ் எம் எல் ஏ வேட்பாளர் .தப்பியோட உதவியதில் கனெக்ஷன் புரிகிறதா?