Advertisement

கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடந்தது. ஐ.பி.எல்., போட்டியை நடத்த விடாமல் செய்யும் நோக்கத்துடன் போராடியவர்கள், பாதுகாப்புக்கு வந்த சீருடை அணிந்த போலீசாரை அடித்தனர்.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கருத்துத் தெரிவித்த நடிகர் ரஜினி, இது வன்முறையின் உச்சகட்டம். இதை தடுக்க கடுமையான சட்டம் தேவை என்று கூறியிருந்தார்.

இதனால், நடிகர் ரஜினியை, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்தனர். ரஜினியை கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று விமர்சிக்க, கடும் வருத்தம் அடைந்த ரஜினி, காவிரி பிரச்னை தொடர்பாக, இனி எவ்வித கருத்தும் தெரிவிப்பதில்லை என முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (118)

 • Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Who is Barathiraja? Seeman & Amir& Gowthaman & Vairamuthu all are not belongs to Hindus. They are anti social elements. All are scoundrals & they don't have market and they can speak cheaply . Rajini is correct. Rajni is still standing but these people are hiding their originality and playing. We support Rajni in this. Before commenting Rajni think twice.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  காவேரி விஷயத்தில் கருது சொன்னால் அங்கு உள்ள இவரது சொத்துக்களை யார் பாதுகாப்பது ஐயா

 • Raghul Smart - mos,ரஷ்யா

  பாரதிராஜா மகன் பெயர் மனோஜ் , மக்கள் பெயர் ஜனனி . மேலும் இவரது மகன் கேரளா பென்னி தான் கல்யாணம் பண்ணி உள்ளார் .பாராட்டி ராஜா , தமிழ் உடை அணிய மாட்டார் . இன்னும் நிறைய இருக்கு இவர் மறைத்த நட்ராஜஜனின் நண்பர் .சைமன் , டேனியல் திருமுருகன் ,அமீர் எல்லாம் இறக்குமதி மதத்தை பின்பற்றுபவர்கள் .

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  கண்முன்னே ஒரு அநியாயம் நடக்கும்போது அதை பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பவனும் அந்த அநியாயத்துக்கு துணை போனவன் காவிரி விஷயத்தில் பகிரங்கமாக சித்த ராமையாவை கண்டிக்காமல் மௌனம் காக்கும் ரஜினியும் அந்த சித்தராமையாவை ஆதரிப்பதாகவே அர்த்தம்...முழுக்க நனைஞ்சாபின்னே முக்காடு எதுக்கு ரஜினி? முன்னே வாங்க...தைரியமா வாங்க பார் அதி ராஜாவுக்கு பதிலை சொல்லுங்க

 • ஜெயராமன் - ,

  " நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு " என்னும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது இவரின் செயல். இதன் வழி காவிரி சிக்கலிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு ள்ளார்! இதனால் அரசியலுக்கும் தகுதி இல்லை என்பதை மெய்ப்பித்துக் கொண்டுள்ளார்!

 • K.Palanivelu - Toronto,கனடா

  மவுனம் கலக நாஸ்தி என்பார்கள். ரஜினி என்னசொன்னாலும் அதில் உள்ளர்த்தம் கற்பித்து கலகம் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் காத்துநிற்கிறது. இத்தனைக்கும் இவர் அரசியல்கட்சியே ஆரம்பிக்கவில்லை. இப்படி குற்றம்கண்டுபிடித்து கலாட்டா செய்தால் இவர் பயந்துகொண்டு கட்சி ஆரம்பிப்பதையே கைவிட்டுவிடுவார் என இக்கூட்டம் மனப்பால் குடிக்கிறது. கட்சி ஆரம்பித்தால் இவர்களுக்கு போணியாகாது என்பதே இதற்கு காரணம். ஆதலால் ரஜனி வீறுகொண்டு எழுந்து மக்கள் பணியாற்ற வேண்டும். மக்கள் துணை நிற்பர்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  ரஜினி அவ்வளவு நல்லவர் என்றால் ஏன் அடுத்து பிஜேபி பிரதமராக இவரை போடக்கூடாது ? தமிழ் நாடு மட்டும் சொர்கபூமியாக்காமல் நாடே சுவர்க்கம் ஆகும் அல்லவா ?

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  சமூக விரோதிகள் நல்லவர்களை அரசியலுக்கு வர விடமாட்டார்கள். நீயும் என்னைப் போலத்தான் என்று முத்திரை குத்துவார்கள். இதைத்தான் பிரதமர் மோடிஜிக்கு இருபது ஆண்டு காலமாக கேம்-கிளோஸ் காங்கிரஸ் செய்து வருகிறது. தமிழ் நாட்டிலும் தமிழ் விரோத கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்க்கு சளைத்தவரா திரு மோடிஜி?? மக்கள் செல்வாக்கு இவருக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு போகிறது. நல்லவர் மட்டும் பிஜேபி யில் சேருகிறார்கள், சேர்த்துக்கொள்ள படுகிறார்கள். எனவே தலைவர் ரஜனி திரு மோடிஜியிடம் நிறைய அரசியல் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். அவர் வந்து இந்த ஹிந்து, தமிழ் விரோத கும்பல்களை ஒழிப்பார். இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இல்லை. தமிழ் மக்கள் ரஜனி பக்கம். காலம் பதில் சொல்லும்.

 • krishnamurthy - chennai,இந்தியா

  who said like this

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இந்த லட்சணத்தில் இவர் "நேரடி முதல்வராக" வந்து என்னத்தை சாதிக்க போகிறார்? என்று வீணாய் போன ஒரு கூட்டம் இவருக்கு இன்னும் கொடி பிடிப்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.

 • R.Subramanian - Chennai,இந்தியா

  நல்லவர்களை அவர்களின் மனம் புண்படும்படி பேசி அவர்களை இனி பேசவிடாமல் செய்வது தீவிரவாதிகளின் வழிமுறைகளில் ஒன்று, அதை தான் பாரதிராஜா சீமான் அமீர் போன்றவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தற்போது தமிழகத்தில் செய்து கொண்டு இருக்கிறார்கள்... சீமானின் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பேசுவது இன்னும் மோசமாக இருக்கிறது... எதாவுது ஒரு விமர்சனம் என்றால் குடும்ப பெண்களை பற்றி மிக கேவலமாக பேசுகிறார்கள், இந்தளவுக்கு தான் இவர்களின் தராதரம் இருக்கிறது. ரஜினி போன்ற நல்லவர்கள் இந்த மாதிரியான தீய சக்திகளுக்காக தமிழக மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பதை நிறுத்த கூடாது. ஒன்று மட்டும் நிச்சயம் ரஜினியின் அரசியல் அறிவிப்பு பலருக்கு வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது, அவர் தேர்தலில் நின்றால் அடுத்த முதல்வர் ரஜினி தான் என்பது எல்லோருக்கும் தெரியும் அதனால் முடிந்தளவுக்கு அவரை மோசமாக பேசி அப்புறப்படுத்த பார்க்கிறார்கள். பாரதிராஜா போன்றவர்கள் இந்த விஷயத்தில் வெற்றி பெற்றால் இனி தேர்தலில் நல்லவர்கள் வரவே மாட்டார்கள் மேலும் இது தமிழகத்தில் தீவிரவாதம் மற்றும் இனவெறியை வளர்க்கவே உதவும். நேற்று இலங்கையில் நடந்ததை நாளை தமிழகத்தில் சீமானும் பாரதிராஜா போன்றவர்களும் செய்வார்கள் அதை தான் சேப்பாக்கத்தில் ரசிகர்களை அடித்து ஒரு சாம்பிள் காட்டி இருக்கிறார்கள்.

 • K.Palanivelu - Toronto,கனடா

  அவர் அரசியலில் தலை தூக்கக்கூடாதென்றே அவர் மீது பொறாமையும், கெட்டஎண்ணமும் கொண்ட எதிரணியினர் வேண்டுமென்றே அவரை குறி வைத்து தாக்கிவருகின்றனர். பொதுவாக எதிரணியினர் ஆளும்கட்சியைத்தான் தாக்குவார்கள். ஆனால் தனது திரைப்பட சக நண்பரையே பாரதிராஜா எக்காரணத்தைக் கொண்டும் தாக்கியிருக்கக்கூடாது. ரஜினி என்ன இவரைப்போல மார்க்கட்போய் சும்மா இருக்கிறாரா? ரஜினி இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருப்பதுடன் எதற்கும் அஞ்சக்கூடாது. அவர் மவுனமாக இருந்தாலும் நாட்டில் நடைபெரும்நிகழ்வுகளுக்கு ஏன் வாய்திறவாமலிருக்கிறார் என வம்புக்கு இழுக்கிறார்கள். இது சரியல்ல.

 • murugu - paris,பிரான்ஸ்

  இதற்க்கு முன் எல்லாவற்றிக்கும் கருத்து சொன்னது போல் ,இப்போது எதற்கும் கருத்து சொல்ல மாட்டேன் என்று சொல்வது வடிவேலு காமெடியை விட சிறந்தது இருந்தாலும் ரஜினிக்கு காமெடி செய்வதில் ரஜினிக்கு போட்டி ரஜினியே

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  தவறை தவறு என்று ஒப்புக்கொள்வதுடன், கண்டிக்கவும் மனமில்லாதவர்கள் தலைவர்கள் எனும் தகுதிதனை இழப்பதற்கு அவர்களுக்கு மனமில்லாமல் போனாலும் மக்களால் நிராகரிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கிவிட்டார்கள் எனத்தான் கொள்ளமுடியும். 'வந்தேறிகள்' என்ற ஒரு கருத்தினை 'சொந்தேறிகள்' பரப்புவதை நீதியுமில்லை, நியாயமுமில்லை. தமிழ் தாத்தா என்றழைக்கப்படுபவர் 'வந்தேறியா' அல்லது அவர் யார்? வந்தேறிகள் விட்டுச்சென்ற பாதச்சுவடுகள் நிலைத்துநிற்பதை போற்றுவதா, அன்றி தூற்றுவதா? குறுகிய வட்டத்தை விட்டுவெளிவரத்தயங்கினால், தனிமையில் தான் இனிமை காண நேரிடும். பொதுநலன்கள் முன்னுரிமை பெறும் சமுதாயமே தடைகளை கடந்து செல்லும் வலிமையைப்பெறும்.

 • Raja Manakavalan - Coimbatore,இந்தியா

  இந்த நடிகனுக்கு ஒரு மண்ணும் தெரியாது. பெரும் காற்றில் குப்பை கோபுரத்தின் மேல் ஒட்டிக்கொள்வதைப் போல் ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தினாலும், தமிழர்களின் விவஸ்தைகெட்ட ரசனையினாலும், ஊடகங்களின் அளவுக்கு மீறிய ஜால்ராவினாலும் இந்த நடிகன் மீது சற்று புகழ் வெளிச்சம் பட்டுள்ளது. அவ்வளவே. மற்றபடி இந்த நடிகனுக்கு நடிப்பு திறமையோ, பொது அறிவோ, சமூக சிந்தனையோ எதுவும் கிடையாது. எம்.ஜி.ஆரைபோல் நல்ல குணங்களோ, நல்ல பழக்க வழக்கங்களோ இந்த நடிகனிடம் இல்லை. எல்லாம் ஏமாற்று வேலை. தன் படம், தன் குடும்ப நலன் இதுதான் இந்த ஆளின் தலையாய நோக்கம். இது தெரியாத இளிச்சவாய தமிழர்கள் சில பேர் இந்த நடிகனுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

 • adalarasan - chennai,இந்தியா

  அரசியல் ஒரு சாக்கடை என்று பல ஆண்களுக்கே முன்பே கூறப்பட்டது இப்பொழுது, குறிப்பாக தமிழ்நாட்டில், இன்னும் மோசமாகி விட்டது இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று புரியவில்லை?

 • koyango - chennai,இந்தியா

  இந்த பாரதிராஜா ஒரு வீணா போனவன். இவன் வாழ்வதற்கு எத்தனைபேரை வேண்டுமானாலும் பலிகொடுப்பன் இந்த சைக்கோ. ...இவன் பேச்சையெல்லாம் பொருட்படுத்த கூடாது.

 • Sriram Gururajan - chennai,இந்தியா

  என்ன சார் அர்த்தம் இல்லாம இருக்கு. விமர்சனங்களுக்கு மௌனத்தை பதில் சொல்கிறீர்கள் ஓகே அனால் காவேரி விஷயத்தை பேசமாட்டேன் என்று சொன்னால் என்ன அர்த்தம். அப்படி என்றால் நீட் பத்தி யாரும் உங்கள் கருத்தை விமர்சித்தால் நீங்கள் அதை பத்தி பேசமாட்டீர்களா. வெற்றி பெற்று ஆட்சி பிடித்தால் யாரேனும் உங்கள் ஆட்சியை விமர்சித்தால் ஆட்சி செய்ய மாடீர்களா

 • Dinamalarfan - Lusaka,ஜாம்பியா

  பாரதி ராஜா ஒரு ஆளா? ஸ்கூல் பிள்ளைகள் காதலை படம் எடுத்தவர் அவ்வளவே. அதுவும் இளையராஜா இல்லையென்றால் இந்த ஆளு படத்தை பார்க்கவே முடியாது. எல்லாம் அரைவேக்காடு படங்கள். ரஜினி மௌனம் காக்க கூடாது. உண்மையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதோடு இல்லாமல், முன்னர் கூறியவாறு நதி நீர் இணைப்பையும் முழு மூச்சாக கையில் எடுக்க வேண்டும். இணைப்பு தான் நிரந்தர தீர்வும் கூட. பருவ மழையை நம்பியே வாரியம் செயல்படும். அது தொல்லையாகவும் இருக்கும். We need more permanent solutions rather than interim benefits.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  கூத்தாடிகள் எல்லாம் தனி கிரௌண்டில் ஆடுங்கப்பா..மக்களுக்கு ஒரு பிரயஜோனமும் இல்லை எல்லாம் பணத்துக்கு அலையும் சொகுசு ஜென்மங்கள்..

 • Nermaiyalan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தவறான கருத்துகளை கொடுப்பதில் தற்போது பத்திரிகைகளுக்கும் போட்டியே இருக்கும் போல.. பொய் தன பத்திரிகை தர்மம் என்றாகி விட்டது வெட்க கேடு. பிரிவினைவாதத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கேடிகளுக்கு, ரஜினியின் வரவு பயத்தையும், பேதியையும் கொடுத்திருக்கிறது போல..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பிரதமரை பின்பற்றுகிறார். அவரும் இப்படி தான், முக்கியமான பிரச்சினைகள் இருக்கும் போது அமைதி ஆயிடுவார் அல்லது அயல்நாட்டுக்கு எஸ்கேப் ஆயிடுவார்

 • rp sundharrajan - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்

  வாய தொறந்தான்னா கன்னடனுங்க இவன கொன்னுடுவானுங்க இல்ல அந்த பயம் இருக்கும் அவனுக்கு

 • balakrishnan - coimbatore,இந்தியா

  மதத்தை வைத்து பிரிவினை, ஜாதியை வைத்து பிரிவினை, மொழியை வைத்து பிரிவினை, சுதந்திரம் அடைந்த பிறகு பிரிவினை எண்ணங்கள் தான் வளர்ந்துள்ளன,

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மௌனம் ஞாலத்தில் சிறந்த ஆயுதம்...

 • Samaniyan - Chennai ,இந்தியா

  Rajini is a too decent person. He must change to fit into politics especially tamilnadu dirty politics. Do not get disheartened by these guys. You too have a huge fan following.So do your duty and let people judge you.

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  அறுக்க முடியாதவன் பின்னாடி அம்பத்தி ரெண்டு கருக்கு அருவாளாம்.

 • Arumugam Palani - SALEM,இந்தியா

  நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே ..வயசான காலத்திலே பேசாம இமயம் போனோமா- மனசை அமைதி படுத்தினோமான்னு கம்முனு காலத்தை ஓட்டணும் ..அல்லது இன்னும் ஒரு இருபது- முப்பது வருஷம் இளசுகளோட டூயட் பாடிட்டு ஜாலியா இருந்திடனும் ..தமிழருவி சொல்றதை கேட்டா அவரை மாதிரியே உருப்படாம போகவேண்டியதுதான் ..

 • Raji - chennai,இந்தியா

  ரஜினி அரசியலுக்கு இன்னும் முழுமையாக வர வில்லை , அதற்குள் பலரது தூக்கம் கெட்டு விட்டதே , இந்த சீமான் , கவுதமன் , அமீர் , பா .ராஜா, சத்யராசு , இந்த கூட்டம் எல்லாம் ரஜினியிடம் வாங்கி குடித்த பிரிவினைவாத கூட்டங்கள் , இன்று ரஜினி அவர்களுக்கு எதிராக அறிக்கைகள் விட்டு தங்களை விளம்பரப்படுத்தி கொள்கின்றனர்

 • VOICE - CHENNAI,இந்தியா

  கோச்சடையான் படத்திற்கு கடன் வாங்கி விட்டு அல்வா கொடுக்க முயன்ற வழக்கில் கர்நாடகாவில் தள்ளுபடி செய்த சந்தோஷம் நிலைக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கொட்டு கொட்டி பணத்தை கொடு என்று உத்தரவிட்டதால் அவருக்கு தலை சுத்தி வாய் திறக்கமாட்டேன் என்று முடிவு. பணம் குடுக்கணும் என்பதால் ஒரு வாரம் கதவு மூடி அழுதாலும் அழுவார்கள் கஞ்சர்கள்.

 • Power Punch - nagarkoil,இந்தியா

  இந்த ஆளை நினைத்தாலே சிரிப்பு சிரிப்பாய் வருது......

 • Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்

  சொல்லி 5 மாதங்கள் ஓடிவிட்டன முதலில் கட்சி ஆரம்பிங்க சார் சும்மா கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு இருக்காதீங்க. அரசியலில் இருக்கணும்னா நாட்டின் முக்கியமான பிரச்சினைக்கு குரல் கொடுக்கணும், எதிரிக்கு பதிலடி கொடுக்கணும், விமர்ச்சனங்களுக்கு அஞ்சக்கூடாது. உங்களது குரல் இங்கே எதிர்பார்க்கப்படுவதற்கு ஒரே காரணம், நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறியதால் மட்டுமே... இப்போவே அரசியல் கட்சி ஆரம்பிச்சு, முழு முயற்சியுடன் நாட்டுக்காக குரல் கொடுங்க... கன்னடன், மராத்தியன் போன்ற விமர்ச்சனங்கள் உங்களது செயல்களை பார்த்து தானாகவே காணாமல் போய்விடும். அல்லது, அரசியல் எனக்கு ஒத்து வராது என்று மரியாதையுடன் விலகிக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள் யாராவது ஒரு ஆள் உங்களை விமர்ச்சிக்கிறாரா என்று. அதன்பின்பு யாரும் உங்களையோ , உங்கள் குரலை எதிர்பார்க்கப்போவது இல்லை.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கர்நாடகாவில் வாழ்ந்தார் சிலகாலம் , உடனே அவர் கர்நாடகாகாரர், பூர்விகம் மகாராஷ்டிரா அதனால் மஹாராஷ்டிரகாரர் , தற்போது தன் வாழ்நாளில் அதிக ஆண்டுகள் தமிழகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஆனால் தமிழர் இல்லை. இந்த பாரதிராஜாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது, கேரளா பெண்களை மட்டுமே அறிமுகப்படுத்திய பாரதிராஜா எப்படி தமிழனாவார் , தமிழின பெண்கள் அழகில்லையா ? அறிவில்லையா ? நடிக்க தெரியாதா ? எதற்காக கேரளா பெண்களை தேடி தேடி அறிமுகப்படுத்தினார் இந்த பாரதிராஜா. கிறித்துவராக மாறிவிட்டதாக சொல்கிறார்கள். அது உண்மையா ?

 • ஸ்ரீனிவாசன் - COIMBATORE

  ரஜினி என்றும் கர்நாடக ஆதரவுதான்..!! இதிலென்ன விவாதம். வந்தாரை வாழவைக்கும் தமிழகம்..!!!

 • samsonjeevaraj - adelaide,ஆஸ்திரேலியா

  கருதுவதாக முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளதாக ஏன் ??ஏன் ?? இப்படி ரஜினிகாந்த் என்பது பிம்பம் அல்ல உண்மை அவரைப் பற்றி ஏதாவது எழுதினால் வியாபாரம் இதுதான் உண்மை நிலை கருத்து சிகாமணிகளைப்பாருங்க என்ன ,ஏதும் தெரியாமலே கருத்து பதிவு செய்து விடுவார்கள் அந்த ரஜினிகாந்த் என்ற ஒரு உந்துதல் கண்டிப்பாக தமிழகத்திற்கு தேவை. ஆசிரியருக்கு நன்றி

 • Sarvam - coimbatore,இந்தியா

  ரஜினியை விமர்சிக்க பாரதிராஜாவுக்கு என்ன தகுதி இருக்கு.... ரஜினியின் புகழ், வளர்ச்சி, அரசியல் பிரவேசம் இவை அனைத்தும், ஆட்சியில் அமரக்கூடிய வாய்ப்பு இருந்த கட்சிகு புளியை கரைத்துவிட்டது. இதற்கு விலை போனவன் தான் இந்த பாரதிராஜா....

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஐயோ இது என்னடா வம்பா இருக்கு.? இதே மாதிரிதான் வைகோ ,சீமான் இப்பதான் மேளத்தை தட்ட ஆரம்பிச்சிருக்காங்க, ஏன்னா அவங்களுக்கு இதுதான் வயிற்று பிழைப்பு. பைசா இல்லாததனால் பாரதி ராஜாவும் இப்போ சைடு மேளம் அடிக்க ஆரம்பிச்சிருக்கார். இதுக்குதான் நீங்க மற்றும் கமல் போன்றவர் அரசியலுக்கு வர வேணாங்குறது. மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரும் கூட தமிழ் நாட்டில் பிறந்தவரே ,ஆனால் கன்னடர்கள் அவரை பிரிச்சு பார்க்கலே. சொல்லப்போனா இவங்க இங்கே கத்துவாங்க,பேசாம சம்பாதிச்சதை நிம்மதியா வச்சு வாழப்பாருங்க .'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் 'என்பதெல்லாம் சும்மா .இப்போ ரொம்ப மாறிப்போச்சு. நண்பர் கமலிடமும் சொல்லுங்கள்.

 • thendral_kumar - chennai,இந்தியா

  தல.. பேசிக்கிட்டே எத்தனை நாள் இருப்பீங்க .. செயலுக்கு எப்போ தான் வருவீங்க .. ஒன்னு நீ வாங்க , இல்லாட்டி நா வர்றவங்களுக்கு வழி விடுங்க ..

 • Power Punch - nagarkoil,இந்தியா

  அடிக்கடி அசிங்கப் படுகிறான்... ஆட்டோகாரன்......

 • Arivu - Salem,இந்தியா

  நல்லவேளை நாம் தப்பித்தோம்

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ரஜினியை வசை பாடியே வெற்றிபெற செய்து விடுவார்கள் போல.....ரஜினி ஏதாவது கூறினாலும் பரபரப்பு.....ஒன்றுமே கூறாவிட்டாலும் பரபரப்பு..... ரஜினி தன் ரசிகர்களை விட இந்த தொடை நடுங்கிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்..... சும்மா அதிருகிறார்கள்....

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  அவருக்கே டொவுட்டு நாம கர்நாடகாவா, மராட்டியமானு.

 • Balaji - Bangalore,இந்தியா

  ஜெயலலிதா தமிழனா?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இந்த சினிமாக்காரர்களுக்கு ... வணக்கம். இரண்டு  முன்னாள் முதல்வர்களின் பூர்வீகம் தெரியாமல் தான் மாறிமாறி பாராட்டுவிழா நடத்தினீங்களோ  ? 

 • ravisankar K - chennai,இந்தியா

  ஒருவர் சொல்வதை கேட்டு மட்டுந்தான் தமிழர்கள் முடிவுக்கு வருவார்கள் என்றால் தமிழகம் மேலும் அதல பாதாளம் தான் செல்லும் . எடுப்பார் கைப்பிள்ளை போல வாழ முடியாது . ரஜினி இனிமேல் கருத்து சொல்வாரா இல்லையா என்பது அவரது சொந்த முடிவு . 75 வயது ஆனவர் போல் இந்த பாரதி ராஜா பேசவில்லை . இவர்களுக்கெல்லாம் சொந்த நலன் தான் முக்கியம் . ரஜினியை வைத்து பணம் சம்பாதித்தாயிற்று . இனிமேல் தேவையில்லை .அதனால் அவர் கர்நாடகாவை சேர்ந்தவர் . அடுத்த மாநில பெண்களை பற்றி பாரதி ராஜா பேசுவதை நிறுத்த வேண்டும் . இது மகா கேவலம் . தரங்கெட்ட பேச்சு . சீமான் , கௌதமன் பேச்செல்லாம் வெறும் வன்முறை . இவர்களுக்கெல்லாம் தமிழ் நாட்டின் வருங்காலம் பற்றி எந்த தோலை நோக்கு பார்வையும் கிடையாது . சீமான் வன்முறை பேச்சால் கனடா சென்றிந்தபோது வெளியேற்றப்பட்டார். இதெல்லாம் நாம் தான் சிந்தனை செய்து முடிவெடுக்க வேண்டும் .

 • Panangudiyan - MUMBAI,இந்தியா

  மாப்புக்கு இந்த சின்ன ஆப்பக்கூட அசைக்கத்தெரியல, அப்பரம் எப்டியாம் அரசியலுக்கு வர்ரது ?. தலைவரு இதுக்கல்லாம் சரிப்பட்டு வரமட்டாரு, மாத்தாடு தலைவா, இல்லயினா ரிஷிகேஸ்ல செட்டில் ஆயிரது நல்லது.

 • unmai - chennai,இந்தியா

  அவர் கருத்து சொன்னாரா இது எப்போ .(ரஜினி, காவிரி பிரச்னை தொடர்பாக, இனி எவ்வித கருத்தும் தெரி,விப்பதில்லை என முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.)

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  ரஜினியை விமர்சிப்பதற்கும், அவருக்கு ஓட்டு போட கூடாதுனு சொல்றதுக்கும், அவர் குடும்பம், எதையும் வியாபார ரீதியில் பார்ப்பது, பொருந்தாத கொள்கை, முகமூடி அரசியல், தெளிவில்லாத சிந்தனை, மூட நம்பிக்கைகள், பழமை - பிறபோக்கு வாதம், தனி மனித துதி (செய்வது & செய்ய வைப்பது), முதுமை, 30 வருட சினிமா வாழ்வில் புதுமை எண்ணம், புதிய முயற்சிகள் இல்லாமை, வழி நடத்தும் திறமை அறவே இல்லாமை, வாக்கு வங்கி அரசியல் நாட்டம்... இப்படி மலை மலையா காரணங்கள் இருக்கும் போது, 'கன்னடத்தான்னு' சொல்லி விமர்சிக்க வேண்டியதில்லை.. அது கேவலம்..

 • Larson - Nagercoil,இந்தியா

  இப்போதைக்கு ரஜினிக்கு தமிழ்நாட்டில் ஒரு மவுசும் இல்லை. செய்ய தெரிந்த தொழிலை செய்வதே நல்லது. ஏற்கனவே ஒரு பிரதமரை பார்த்துவிட்டோம். இன்னொரு முதல்வர் வேண்டாம்.

 • mukundan - chennai,இந்தியா

  ரஜினி எப்போதிலிருந்து கன்னடர் ஆனார். அவர் பிறப்பால் மராட்டியன், பின் வேலை பார்த்த இடம் பெங்களூரு அவ்வளவே... இவரை வைத்து காசு பார்த்தவர்கள் இப்பொழுது எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. எதிர்க்கிறவர்கள் ஒரு பைசாவுக்கு உபயோகம் இல்லாதவர்கள் என்பது நிதர்சனம். ரஜினி என்ற மாமனிதனை வைத்து விளம்பரம் தேடும் முயற்சியே அன்றி வேறு இல்லை.

 • J sundarrajan - Coimbatore,இந்தியா

  அரசியலுக்கு வந்து விட்டு இதற்கெல்லாம் ரோஷப்பட்டா முடியுமா.கமலை எதிர்க்க மாட்டேன்.... .இனிமே காவிரி பற்றி பேச மாட்டேன்....What a cry baby

 • unmai - chennai,இந்தியா

  இப்படி ஒரு பொய்யான செய்தி போட வேண்டாம் ..யார் சொன்னார்கள் எங்கு சொன்னார் ஏதேனும் ஆதாரம் உள்ளதா ?

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  ரஜனி சார் , அரசியல் வேண்டாம் . ஆஸ்ரமம் ஆரம்பியங்கள். நல்ல காசு பாக்கலாம். அமெரிக்கா கிளயயை நான் பார்த்துக்கிறேன்.

 • Sandru - Chennai,இந்தியா

  "நான் பச்சை தமிழன் " என்று அறிக்கை விட்ட பரட்டை உண்மையில் "கருப்பு கன்னடன்". பி.ஜெ.பியின் பினாமியான இடது கரம்.

 • thangaraja - tenkasi,இந்தியா

  அறப்போராட்டம் மட்டுமே சிறந்தவழி .வன்முறை மூலம் தீர்வு கிடைக்காது ,அவர் சொன்னதில் தப்பே இல்லை ,,காவிரி பிரச்சினையில் நம் உரிமைகளை முழுவதும் விட்டுக்கொடுத்தது கட்டுமரமும் ,இதயக்கனியும் மட்டுமே ,,அவர்களை கேள்விகேட்க சிலருக்கு துப்பில்லை ,,ரஜினி குரல் கொடுத்தால் மட்டும் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவார்களா /ஏன் திமுகவினர் அனைவரும் கர்நாடக முதல்வரை கண்டித்து போராடவேண்டியதுதானே ..கூட்டணிக்கு இடிக்குதா /இரட்டை வேடம் போடும் ராகுலிடம் ஏன் கேள்வி கேட்க வில்லை ....நீதிமன்றத்தையே மதிக்காதவர்கள் இவர்களையா மதிப்பார்கள் ...மழை பெய்தால் மட்டுமே காவிரியில் தண்ணீர்வரும் ...விவசாயிகள் அரைவேக்காட்டு அரசியல்வியாதிகளை இனியும் நம்பக்கூடாது

 • GOPALSABAPATHY - chennai,இந்தியா

  நாங்கள் ரசித்த ( ரஜினி ) தலைவரை நடிகராவே மட்டுமே பார்க்க விரும்புறோம். அரசியல் களம் காண விருப்பினால் அவர் அவர் மண்ணிற்கு செல் எம் மண்ணை எம் மண்ணீன் மைந்தர்களே ஆளவேண்டும்.

 • itashokkumar - Trichy,இந்தியா

  தனது மகளை போல இவருக்கும் ஆட தெரியவில்லை, மேடை கோணல் என்று கூறிவிட்டு போகவேண்டியது தானே. ஒரு காலத்தில் லீ குவான் எவ் பற்றி பேசியவர் இப்போது எம் சி ஆர் ஆட்சியை பற்றி பேசுகிறார். காமராஜரை பற்றி பேசவில்லை. தமிழ்அருவி யை கவனித்தால் எல்லாம் சரியாக வந்துவிடும். .

 • Mal - Madurai,இந்தியா

  Whatever good people say, will be dismissed by bad people... This is Kali yugam. Leave everything to God. While Pandavas were in forest speechless gouravas were happy enjoying n creating chaos ... They thought that they have won... (13 long years pandavaas exile) but the will be with dharma... This is the time for all gauravas in cine field. Let them have fun.

 • Rahim - chennai,இந்தியா

  நல்ல தமிழ் பேசுற ரௌடிப்பயலுக கிட்ட அடிவாங்கிட்டு, வெறும் வழக்கு தான் பதிஞ்சுருக்கானுக. அவ்வளவுதான் நம்ம தமிழ்நாட்டு போலீசு பவர். அத தட்டி கேக்குற ஆளுக்கு கண்டனமாம்ல? எல்லாத்துலயும் அரசியல். சட்ட ஒழுங்கு வெளங்கிரும். இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தா? போலீசை அடிச்சவனுகளோட நெலம வேறமாதிரி இருந்துருக்கும். பழனிச்சாமியும் பன்னீரும் அந்தம்மாவோட ஆக்ரோசத்துல ஒரு சதம் கூட இல்ல போலிருக்கே? நல்லாவே புரிய வைக்குறானுக ஜெயலலிதாவோட பவரையும், கருணாநிதியோட புத்திசாலித்தனத்தையும். ரஜினி கொஞ்சம் பொறுமையா இருக்குறது நல்லது தான். மக்களுக்கும் தெரியும் அவரு தமிழனா இல்லையான்னு. எப்பிடியிருந்தாலும் தனித்தமிழ் நாடு கேக்குறவன் கிட்ட ஞாயம் சொன்னா ஒத்துக்கவா போறான்?

 • rajesh - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மகிழ்ச்சி ...

 • Sankarm Sankar - Chennai,இந்தியா

  காவிரி பற்றி மட்டும் அல்ல , தமிழகத்தில் வாழ்வதற்கு தகுதி அற்றவர் , முதலில் தமிழகத்தை விட்டு சென்று விட்டால் நல்லது , இதுவே தமிழகத்திற்கு செய்யும் நல்ல காரியமாகும்

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  ரஜினி கன்னடன் தானே, கன்னடனை தமிழன் என்று எப்படி சொல்ல முடியும்? வேண்டுமானால் வெள்ளைக்காரன் என்று சொல்லிக்கொள்ளட்டும், யார் கேக்கப்போறா...

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  சில குறுக்கு புத்தி உள்ளவர்கள் பேச்சை கேட்டு ரசினி இன்னும் அசிங்கப்படப்போறான் .

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  அட நீங்கள் வர இன்னமும் அறிக்கை குருவிடமிருந்து வரவில்லையாம், வந்ததும் அவர் வெளியிடுவார், அல்லது அவர் பேரில் இவர்களே வெளியிடுவார்கள், எடுப்பார் கைப்பிள்ளை இந்த சட்டாம்பிள்ளை.

 • M.Nagarajan - Lusaka,ஜாம்பியா

  ரஜினி அவர்கள் ஏன் வருத்தப்பட வேண்டும். IPL வேண்டாம் என்று சொல்லும் இந்த கைக்கூலிகளான பாரதிராஜா , கௌதமன், களஞ்சியம், சீமான் மற்றும் மீதமுள்ள அற்ப பதர்கள் ஸ்டாலின் அவர்களிடம் ஏன் கேட்கவில்லை IPL ஐ நிறுத்த போராட வருமாறு . பாரதிராஜாவிற்கு இப்பொழுதுதான் தமிழ் உணர்வு வருகிறதோ ? அதுவும் வயது 60ஐ தாண்டி. ஏன் உன் படங்களில் அந்த உணர்வை காட்டவில்லை . நீ அறிமுகப்படுத்தியவர்கள் பெரும்பாலும் குறிப்பாக நடிகைகள் மலையாள தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு தெரியாதா? அன்று பணத்திற்காக உன் புத்தி எதை தின்ன போனது ? இன்று மார்க்கெட் இழந்த காரணத்தினால் நீ திடீர் தமிழ் உணர்வாளராக மாறிவிட்டீரோ ? உங்கள் கபட நாடகமெல்லாம் இங்கே இனி எடுபடாது ? ரஜினி அவர்கள் தொடர்ந்து குரல் கொடுங்கள் .

 • thiru - Chennai,இந்தியா

  இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா ??

 • mscdocument - chennai ,இந்தியா

  இவன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கர்நாடக ஆதரவாளன்தான். ப.ஜ.க வின் சொம்பு.

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  நல்லது, இனி வாய தொறந்தா அப்பொறம்...

 • Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ

  இதுக்கு பதில் சொல்லாமல் ஓடினால், நீர் அரசியலுக்கு வரவே முடியாது. ஜெயலலிதா வின் தைரியம் உமக்கு தேவை. அவர் எப்படி இவர்களை (இம்மாதிரி ஏசுபவர்களை) நசுக்கினார் என்று நினைத்து பாருங்கள். ஒரே வார்த்தை சொன்னார். எல்லோரும் அவமானத்தில் அடிபாதளத்திற்கு ஓடிவிட்டனர். அவர் சொன்ன வார்த்தை -" உதிர்ந்த ரோமங்கள்"

 • subbu - QLD,ஆஸ்திரேலியா

  ரஜினியை சொல்பவர்கள் பாரதிராஜா மருமகள் மலையாளி அப்போ அவர் என்ன கேரளாவின் ஆதரவாளர்? தமிழ் சினிமா,டிவி எல்லாமே மலையாளிகளின் வசம்தான் இருக்கிறது.

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  ரஜினிகாந்த் அவர்களே, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது நீங்கதான். நீங்கள் அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்று பல முறை சொல்லி, சொல்லி நழுவிவிட்டீர்கள். ஆனால், தற்பொழுது உங்களின் செய்கையே உங்களை வலிய,வலிய அரசியலில் நுழைத்துள்ளது. தமிழகத்தின் தற்போதய நிலையை யாராலும் சரி செய்ய முடியாது. அத்தனைஇக்கட்டான நிலை.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  அய்யயோ... அப்போ காவிரியில் தண்ணி வராதா??? இந்த சுயநலம் பிடிச்ச அரைக்கிறுக்கனை நம்பி ஒரு கூட்டம் (பக்கோடாக்களை தவிர) இருக்கறவரை தமிழ்நாட்டை எல்லாரும் கலாய்க்கத்தான் செய்வாங்க...

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  அது மட்டுமல்ல காவி முத்திரை.. இவர் காவியின் பி டீம்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "....இனி எவ்வித கருத்தும் தெரிவிப்பதில்லை....." - பேசாம இருந்தா கோடி நன்ம......

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  If Mr.Rajinikanth maintains such type of sentiment and feelings he can not enter in politics and also form any new political party in our state at this moment.It is better for him to remain in film industry and work for it for his better future.In public life it is common for criticism and comment and the man who bear all troubles and sufferings only comes out successful in politics with flying colours.Mr.MGR and Selvi. J.Jayalalithaa were also criticised and commented in the same way by many others in the past but they did not care or worry about such remarks and ruled our state till their death.

 • Barakathulla - Singapore,சிங்கப்பூர்

  தேவையில்லாமல் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கிட்டு

 • ஆப்பு -

  காவிரியைப் பொறுத்த வரை அண்ணன் மோடி வழியில் செல்ல முடிவு செஞ்சுட்டாரு... அதாவது மௌனம். ஏதாவது ஏடா கூடமா பேசுனா தர்ம அடில்ல விழும். மோடிஜி ஸ்வீடன் போன மாதிரி , ,இவரும் அமெரிக்கா போய்ட்டு வந்துட்டா பிரச்சனை தீர்ந்தது.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  போலீஸ் 1 லட்சம் போராட்டக்கார்களை அடித்து உள்ளது அதை கேட்ட்க துப்பில்லை . ஒரு போலீஸ் தாக்கப்பட்டாராம் உடனே துள்ளுவாராம் . போலீஸ் ஆள் வைத்து கலவரம் தூண்ட போட்ட நாடகம் தான் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவம் . அதனால தான் அந்த வீடியோ நேர ரஜினிக்கு கொடுக்கப்பட்டது . இந்த வீடியோ எப்படி ஊடங்களில் வரவில்லை ஆனால் ரஜினிக்கு மட்டும் கிடைத்தது ?

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  அப்படி மூடிட்டு இருக்க சொல்லுங்க.

 • trk - Chennai,இந்தியா

  சில்லரை பசங்களுக்கெல்லாம் பயந்துகிட்டு.... நீங்க அதுக்கு சரி பட்டு வர மாட்டிங்க

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இது மக்களை ஏமாற்றும் சுலபமான அவரது அரசியல் பாதுகாப்பு முடிவு. \\\ இனி எவ்வித கருத்தும் தெரிவிப்பதில்லை என முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ///

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement