Advertisement

7.3 சதவீத பொருளாதார வளர்ச்சி: இந்தியா குறித்து உலக வங்கி கணிப்பு

புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி பாதிப்பிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதாகவும் , 2018 ல் 7.3 சதவீத பொருளாதார வளர்ச்சி பெறும் என உலக வங்கி கணித்துள்ளது.


தெற்கு ஆசியா பொருளாதாரம் குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் மற்றும் ஜிஎஸ்டி அமல் ஆகியவை பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியதுடன், ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. தற்போது, அதிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது. 2017 ல் 6.7 சதவீத வளர்ச்சியுடன் இருந்த இந்திய பொருளாதாரம், 2018 ல் 7.3 சதவீதமாக இருக்கும். 2019 மற்றும் 2020ல் 7.5 சதவீத வளர்ச்சி பெறும். முதலீடு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய இன்னும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எப்பிடிப்பா... இப்பிடி எல்லாம் பொய் சொல்ல தோணுது...முழு பூசணிக்காயை எப்பிடி சோற்றில் மறைப்பது என்பதை உலக வங்கி இடம் இருந்து தெரிந்ந்து கொள்ள வேண்டும்

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இது செயற்கையான ஒன்று என்று பல அந்நிய நாட்டு பாவாடைகள் கதறும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  12 ,700 கோடி ரூபாயோ GST இன்புட் கிரெடிட் அரசு தொழிலதிபர்களுக்கு திருப்பி தர வேண்டியிருக்கிறது. பழைய அவுட் ஸ்டேண்டிங் refund இருப்பவர்களுக்கு, புதிய GST இன்புட் கிரெடிட் அடிக்கிற போது, பழைய பாக்கியை கழித்துக் கொண்டு மீதியை அடிக்கிற சவுகரியம் செய்தால் கூடப் போதும். சிஸ்டம் பிழைய பாக்கியை காட்டுகிறது, ஆனால் புதிய இன்புட்டுடன் இணைக்க வசதியில்லை. இதற்க்கு ஏதாவது செய்தால், பழைய பாக்கியை சரிக்கட்ட வேண்டும் என்று புதிய இன்புட் கிரெடிட் உடனே சமர்ப்பிப்பார்கள். செய்யுமா இந்த அரசு அல்லது நேர்மையாக GST அடைப்பவர்களை இந்த பிஜேபி அரசு நடுத் தெருவில் விட்டு விட்டு ஆட்சியையும் காலி பண்ணிவிட்டு போய்விடுமா?

 • Larson - Nagercoil,இந்தியா

  நன்றாக சென்று கொண்டிருந்த பொருளாதாரம் கடந்த 4 வருடங்களில் அதல பாதாளத்திற்கு சென்றதையே இந்த கணிப்புகள் காட்டுகின்றன. பொருளாதாரம் எத்தனை கிலோ என்று கேட்கிற ஆட்கள்தான் நாட்டின் பட்ஜெட்டையே போடுகிறார்கள்.

 • chails ahamad - doha,கத்தார்

  பித்தலாட்டங்களின் மொத்த உருவமாய் திகழுகின்ற பா ஜ கட்சியின் அபிமானியாகிய vandemataram. அவர்கள் ஒன்றினை ஒப்பு கொண்டுள்ளார் , ரூபாய்நோட்டு செல்லாத அறிவிப்பு முதல் ஜி எஸ் டி , நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதை உலக வங்கியின் அறிக்கையின் வாயிலாக என்பதில் நமக்கும் திருப்தியே, அந்த வகையில் மக்களின் பாதிப்பை கவனத்தில் கொள்ளாது கனவுலகில் மிதந்து கொண்டே தாம் எடுத்த நடவடிக்கையினால் மக்களனைவரும் சுபிட்சத்தில் வாழ்ந்து கொண்டுள்ளதாக புருட்டா விட்டு கொண்டு இருந்த பா ஜ கட்சியின் ஆட்சியினர் பித்தலாட்டத்தின் மொத்த உருவமாய் திகழுவதை இந்த அறிவு ஜீவி கவனத்தில் கொள்ள மறுத்து என்னை வசை பாடுவது தவறு என்பதை உணரும் நிலையில் அவரது மனநிலை இல்லை என்பதை நாமும் உணர்ந்துள்ளோம்.

 • ஆப்பு -

  ஆமா...வாங்குற கடனை வெகு சீக்கிரம் வாங்கிக்கோங்க...பின்னாடி வட்டியோட சேத்து உருவிடுவோம்னு சொல்றாங்க... பேசாம உலக வங்கியையே ஆளுக்கு 15 லட்சம் கணக்கில் போடச் சொல்லியிருக்கலாம்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஜி எஸ் டி ரியல் எஸ்டேட் முறைப்படுத்துதல் பினாமி.ஒழிப்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பொருளாதாரத்தின் உண்மைத்தன்மை  வெளிப்படுகிறது. ரியல் எஸ்டேட் வீழ்ந்ததால் கட்டுமானதுறைத் தொழிலாளர்கள் தற்காலிகமாக  வேலையிழந்தது   உண்மையே.அது தற்காலிக பின்னடைவே . முன்பு கருப்புப்பண ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சியையும் சேர்த்து பொய்யான வளர்ச்சிவிகிதம் காட்டினார்கள். இப்போது பணமதிப்பிழப்பு மற்றும்  RERA  சட்டத்தின் பயனால் ரியல் எஸ்டேட் வீழ்ந்தும் ஜிடி பி அதிகரிக்கிறது. பணவீக்கம் விலைகுறியீடு மன்மோகன் ஆட்சியில் 11 .4 % லிருந்து இப்போது பாதிகூட இல்லை. இதுதான்  உண்மை வளர்ச்சி. 

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Due to 7.3% poruladhara vazharchi there is no money in banks and their ATMs and I don't know how our country grow 7.3% in poruladham. If any one know well about this please explain to me and others also. If this statement is correct the people wont suffer and face hardships in banks and ATMs to withdraw their own money to meet their emergency needs at this moment.

 • chails ahamad - doha,கத்தார்

  உலக வங்கி அறிக்கையில் ருபாய் நோட்டு வாபஸ், ஜி எஸ் டி, போன்ற நடவடிக்கைகளில் இந்திய பொருளாதாரம் பாதிப்பு அடைந்து இருந்தது, ஏழைகள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்ற உண்மை நிலைகள் தெளிவாக கூறப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டால், இன்றைய மத்திய ஆட்சியாளர்களாகிய பா ஜ கட்சியினரின் தேவ தூதராக காணப்பட்ட பிரதமர் திரு. மோடி அவர்களது அலங்கோல ஆட்சி நிர்வாகத்தில் அன்றாடங் காய்ச்சிகளும், அல்லல்படும் நடுத்தர வர்க்க ஏழைகளும் பாதிக்கப்பட்டதை நாமும் உணர்ந்தோம், சொல்ல முடியாத துயரங்களையும், இன்னல்களையும் அடைந்தோம், இன்றளவும் அந்த பாதிப்புகளில் இருந்து விடுபட முடியாமல் அல்லல்பட்டு கொண்டும் உள்ளோம், அடுத்து உலக வங்கியின் அறிக்கையில் எதிர் காலத்தில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதாக குறிப்பிட்டு உள்ளதை கவனத்தில் கொள்ளும் போது, நமது சுற்று வட்டார பகுதிகளில் ஒரு பழஞ்சொல் உண்டு, நமது முன்னோர்கள் சொல்ல கேட்டதுண்டு, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போறானாம் என்பார்கள். அந்த நிலையில் தான் இன்றைய பா ஜ ஆட்சியாளர்களின் ஆட்சி நிர்வாகம் உள்ளதை ஒப்பு கொண்டுதான் ஆக வேண்டும், பா ஜ ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அவர்கள் அளந்த கதைகளை வடநாட்டவர்கள் நம்பியதால் வந்த வினைகளே இன்றைய ஆட்சி அதிகாரம் கார்ப்பரேட் கம்பெனிகளின் பினாமிகளின் கையில், அதனால் விளைந்த பாதிப்புகளை வடநாட்டவர்களும் உணர்ந்து விட்டதால், தென்னக மக்களும் இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் மீது வெறுப்பின் உச்சத்தில் உள்ளதால், நாளைய காலங்கள் மக்களின் வாழ்க்கை தரமும் உயர மாற்று கட்சியினர் ஆட்சிக்கும் வருவதும் உறுதியாகும். வாழ்க பாரதம் .

 • Mohan Kumar T - Marthandam,இந்தியா

  பொருளாதாரம் வளர்ந்துள்ளது பணக்காரர்கள் வளர்ந்துள்ளார்கள் ஏழைகள் மிகவும் ஏழைகள் ஆகியிருக்கிறார்கள் என்பது உலக வங்கிக்கு தெரியுமா

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  எப்பொழுது ரெண்டாயிரம் நோட் வாபஸ் வாங்குவீர்கள்.500RS 1000RS எண்ணி முடிச்சாச்சா ? எப்பொழுது எண்ணி முடிப்பீர்கள்?

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட எல்லாம் சரிதானுங்க, அட இருக்கட்டுங்க, இந்திய பொருளாதார வளர்ச்சியின் ஊடாக பார்த்தோம் என்றால், இந்த தமிழக மாநிலத்தின் வளர்ச்சி என்பது எத்தனை சதவீதங்க?. இதையும் நினைச்சு பார்க்கனும் தானுங்களே?.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement