Advertisement

ரூ.2000 நோட்டுகள் எங்கே? எங்கோ சதி!: ம.பி., முதல்வர் சந்தேகம்

ஷாஜாபூர்: 'நாட்டில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் எங்கே போயின; ஏதோ சதி நடப்பதாக தோன்றுகிறது' என ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.


ம.பி., மாநிலம் ஷாஜாபூரில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன் நாட்டில் ரூ.15 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை முடிந்தபின் புழக்கத்தில் இருந்தது ரூ.16.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தற்போது எங்கும் பார்க்க முடிவதில்லை. பல ஏடிஎம்.,கள் பணம் இல்லாமல் பூட்டிக் கிடக்கின்றன.


பதுக்கியவர்கள் யார்?
புழக்கத்தில் பணம் இல்லாததால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் ஏதோ சதி இருக்கிறது. ரூ.2000 நோட்டுகள் எல்லாம் எங்கே சென்றன. பணத்தை பதுக்கியவர்கள் யார்? அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி பணத்தட்டுப்பாட்டை போக்க முயற்சிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (109)

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  ரூ 2000 நோட்டுகள் எங்கே மறைந்தது. நம் நாட்டில் ஒரு வித செக்கூரிட்டியும் இல்லாமல் கோடி கணக்கில் கடன் கொடுக்க பாங்குகள் இருக்கும்போது, அதை புழக்கத்தில் விடும் பாங்குகளுக்கு பதுக்க சொல்லியா தரவேண்டும். ஒரு ஆட்சி செய்யும் சில நல்லவைகளை முறியடிப்பதையே லட்சியமாக கொண்ட எதிர் கட்சிகள் இருக்கும்போது எதுவும் சாத்தியமல்ல. எல்லா கொசுறு கட்சிகளையும் ஒழித்துவிட்டு இரண்டே இரண்டு பெரும் கட்சிகள் இருந்தால் போதும். டெமோகிராடிக் - ரிபப்லிக்கன் போல.

 • Arasu - Madurai,இந்தியா

  உங்க கர்நாடகா அமைச்சர் தன் மகளுக்கு சீதனமா கொடுத்து இருப்பார்

 • Gopal.V. - bangalore,இந்தியா

  2019 மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் 2019 மார்ச் மாத துவக்கத்தில் ரூபாய் 2000 செல்லாது என்று பிரதமர் அறிவித்து விடுவார். அப்பொழுது ரூபாய் 2000 த்தை பதுக்கியவர்கள் மாட்டிக்கொள்ளுவார்கள்..

 • Solomon Victor - Bangalore,இந்தியா

  அந்த நோட்டுல சிப்பு இருக்குல்ல.. அதை வச்சு நம்ம கேடி அவர்கள் செயற்கை கோள் வழியா கண்டு பிடிக்கமுடியும்னு நம்ம அறிவாளி SV சேகர் சொன்னார் தானே....

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ரூ.2000 நோட்டுகள் எல்லாம் எங்கே சென்றன. பணத்தை பதுக்கியவர்கள் யார்? ஆட்சி பிஜேபி கையில் . அச்சு இயந்திரம் பிஜேபி இடம் . இதுல தில்லுமுல்லு பிஜேபி தான் செய்திருக்கமுடியும் . ஆட்சி கடைசியில நிற்கும் பிஜேபி அடித்த நோட்டுகளை அமுக்கிவிட்டதா ? அப்படி இல்லை எனில் உடன் மீண்டும் பணமதீப்பீடு ரூ .2000 மட்டும் செய்வார்களா ? நாடு மாட்டிகிட்டு பிஜேபி வசம் மீள்வது கடினம் .

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தேர்தல் முடிஞ்சி காவிரி வருதோ இல்லையோ நோட்டு கட்டுங்க வந்துடும்..

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தேக்ஸ்சா ஜீஜி, 2000 ரூ நாட்டுக்காக ATM மெஷினை மாத்தினது பெரிய தப்பா போச்சுன்னு சொல்லுங்க .ஓக்கேவா

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  எல்லாம் கர்நாடகாவிற்கு செல்கின்றது- தனியார் பஸ் மூலம் கடத்தல்-ரூ.1100 கோடி (80 %ரூ.2000, மற்றவை 500 ,100) பிடிபட்டது. இன்னும் பிடிபடாதது ரூ.11 ,000 கோடியாக இருக்கலாம்.

 • Divahar - tirunelveli,இந்தியா

  டிஜிட்டல் இந்தியா என்ன ஆனது?

 • Larson - Nagercoil,இந்தியா

  உங்க கட்சிக்குளேயே சதி. போய் மோடியிடமும், அமிட்ஷாவிடமும் கேளுங்கள். நீங்க ரொம்ப அப்பாவிதான், நம்பிட்டோம்.

 • Larson - Nagercoil,இந்தியா

  ஏன்யா, நல்லா இருந்த 500 , 1000 தள்ளுபடி பண்ணுனீங்க. சரி 2000 நோட்டை கொண்டு வந்தீங்க, இப்போ அது எங்கய்யா போச்சு, வர்றவன் போறவன் எல்லாம் பணத்தை ஆட்டைய போட்டுட்டு வெளிநாட்டுக்கு ஓடுறான். மிச்சத்தை இங்கிருக்கிருக்கிற ஓநாய்கள் சாப்பிடுது, ஆட்சியை எப்படி நடத்துவது என்று இன்னும் பாலபாடம் படித்து கொண்டிருக்கும் ஒரு அரசு. மக்கள் ரொம்ப பாவம்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  சந்தேகம் வந்தது மத்திய பிரதேச முதலமைச்சருக்கு. அவரு மந்திரி சபையிலே அஞ்சு சாமியாருங்க புதுசா மந்திரி ஆகி இருக்காங்க. ஒருவேளை அவங்ககிட்ட சோதனை செஞ்சு பார்த்தா என்ன?

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  சிறிது நாட்களுக்கு முன் செய்திகளில் இந்த இரண்டாயிரம் மதிப்பு நோட்டுகளை , மத்திய ரிசர்வ் வங்கி புதிதாக அடிப்பதை நிறுத்தி விட்டது. மேலும் வங்கிகளில் புழக்கத்துக்கு வரும் நோட்டுகளை வெளியே புழக்கத்துக்கு விடவேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்திகளை முதல்வர் தெரிந்துகொள்ளவில்லையா ?

 • Krishnaswamy - Hyderabad,இந்தியா

  கடந்த சில மாதங்களாகவே ரூ 2000 நோட்டுக்கள் காணவில்லை. ATM களில் வெறும் ரூ 500 மற்றும் ரூ 100 மாத்திரம் தான் விநியோகிக்கப்பட்டன. ரூ 2000 நோட்டுகள் எல்லாம் மாயமானது இன்று அல்ல, சில மாதங்களுக்கு முன்பே மயமாகின. கருப்பு பண முதலைகள் தங்கள் கருப்பு பணத்தை ரூ 2000 நோட்டுகளாக மாற்றியிருக்கவேண்டும் அல்லது அரசியல் கட்சிகள் தங்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை ரூ 2000 நோட்டுகளாக மாற்றியிருக்கவேண்டும். பஜக அரசு ரூ 2000 அச்சிட்டதே கருப்பு பண முதலைகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உதவுவதற்கே என்ற சந்தேகம் எழுவதற்கு நியாயம் இருக்கிறது. கர்நாடக தேர்தலில் அரசியல் காட்சிகள் பிரச்சாரத்திற்க்காக செலவழிக்கும் பணம் எவ்வாறு கொடுக்கப்படுகிறது, மற்றும் ரூ 2000 களாக கொடுக்கிறார்களா என்று தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தினால் எல்லாம் அப்பட்டமாக தெரிந்துவிடும். ரூ 2000 நோட்டுகக்ளை பதுக்கியவர்கள் கறுப்பு பண முடலைகளா அல்லது கருப்பு பணம் வைத்திருக்கும் அரசியல் கட்சிகளா என்று தெரிந்துவிடும். அதற்க்கு தேர்தல் ஆணையம் செயல்படுமா அல்லது ஆளும் கட்சிக்கு ஜால்றா போட்டுக்கொண்டு இருக்குமா என்று பார்க்கவேண்டும்.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  புதிய நோட்டுக்கள் தட்டுப்பாடான நேரத்தில் பிஜேபினரிடம் புதிய 2000 கட்டுகள் மிகுந்து காணப்பட்டது. அதில் சில நேரடியாகவே ரெகார்ட் இல்லாமல் இருந்ததும் அப்போது செய்திகளானது. இப்போது கர்நாடகாவில் தோல்வியிலிருந்து விடுபடுவதற்காக சென்றிருக்கலாம்மோ? என்ற சந்தேகம் வருகின்றது.

 • ஸ்ரீனிவாசன் - COIMBATORE

  இவர் பாஜகவின் புதிய அதிருப்தியாளராக ஆனவர்..!! 2000 நோட்டுகள் எல்லாம் குஜராத்தில் பதுங்கி விட்டதால் கடுப்பானவர்..!!!

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  ஊழல்வாதிகள் பதுக்கி விட்டார்கள்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  அமித் ஷா வை கேட்டால் தெரியும்...........

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவிக்க இருக்கிறார். இந்த முறை வரிசையில் நின்றெல்லாம் மாற்றமுடியாது , நேரிடையாக வங்கி கணக்கில்தான் கட்டவேண்டும் , கட்டியபிறகு கணக்கு காட்டினால் மட்டுமே பணம் எடுக்கமுடியும் இல்லையென்றால் கைது நடவடிக்கை என்று ஒரு புரளியை கிளப்பி விடுங்கள் , சில நாட்களில் பதுக்கி வைத்த மொத்த பணத்தையும் வெளிகொண்டுவந்துவிடுவார்கள் காங்கிரஸ்காரர்கள்.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  கடந்த பத்து ஆண்டுகளாக உங்க பாஜக ஆட்சி தான் மபி ல ,நீங்கதான் தொடர்ந்து முதலமைச்சர் இந்த பத்து ஆண்டுகளில் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள் இப்படி இருக்க உங்களுக்கு விவசாயிகள் மாநாட்டில் என்ன வேலை ???

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அந்தெ கூத்துக்கு பேரு "Currency Exchange Mela....." - பண மதிப்பிழப்பு நடவடிக்கை கெடயாது..... ஆயரரூவா தாளுக்கு பதிலா ரெண்டாயிர ரூவா தாளுங்கள பொழக்கத்துல விட்ருக்கானுங்க பொருளாதாரம்னா என்னானு தெரியாதவனுங்க....

 • thendral_kumar - chennai,இந்தியா

  அடுத்த தேர்தல் வந்ததும் , திரும்ப 2000ரூபாய் நோட்டுகள் வந்துடும் .. கவலைப்படாதீங்க sir..

 • Power Punch - nagarkoil,இந்தியா

  எல்லாம் பிஜேபி காரனுங்க தான் பதுக்கி இருப்பானுங்க.. திடீர்னு செல்லாதுன்னு சொன்னாலும் அவங்களால தான் அதை மாற்ற முடியும்... ஏற்கனவே அப்படித்தானே 500 -1000 நோட்டெல்லாம் அப்படிதான் மாற்றினார்கள்... இன்னமும் மாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள்...அதனால் தான் இன்னும் எவ்வளவு செல்லாத நோட்டு வந்தது என்று சொல்ல வில்லை.......

 • UNMAI VILAMBI - TAMIL NADU,இந்தியா

  உங்கள் பிரதமர் தான் புது நோட்டு வந்தால் காஸ்மீரில் கலவரம் குறையும் என்றார் அவங்க அடங்கிட்டாங்க

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  கர்நாடகாவில் போயி தேடுனா எல்லா நோட்டும் கிடைக்கும். போட்டி போட்டு கொடுக்காங்களாம்

 • Prabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  2000 ஆக பதுங்குவது எளிது ...அதற்காகவே பிஜேபி 2000 ரூபாய் நோட்டை கொண்டுவந்துள்ளது...எல்லாம் இப்போது பிஜேபி தலைவர்கள் வீட்டில் இருக்கும்...

 • Madhav - Chennai,இந்தியா

  எல்லோரும் பழியை தூக்கி மோடி மற்றும் ஷா தலையில் போட முடிவு செய்து விட்டார்கள். மோடி உடன் சேர்ந்து ஆடியவர்கள் அம்பலப்பட்டு போவார்கள்.

 • குத்புதீன்.திருவாருர் -

  மத்தியிலும் மாநிலத்திலும் நடப்பது உங்கள் ஆட்சி...உங்கள் கேள்வி ஆச்சரியமா இருக்கு..மக்களிடம் பதுக்கும் அளவெல்லாம் வசதி இல்லை.காங்கிரஸ் பெரும்பாலான மாநிலத்தில் அதிகாரத்திலும் இல்லை.ஒன்று பெரும் தொழில் அதிபர்களிடம் இருக்கனும்..இரண்டாவது ஆட்சியில் இருக்கும் அதிகாரம் படைத்தவர்களிடம் இருக்கனும்.மத்திய நிதி அமைச்சமும் ரிஸர்வ் வங்கியும்தான் இதற்கான பதிலை கொடுக்கனும்.சொல்லியுள்ளவர் முக்கியமான தலைவர்..பக்தாஸ் யாரை குற்றம் சொல்ல போகிறார்கள்னு பார்ப்போம்.

 • Mahendran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கோபாலபுரம் வழியா சுவிஸ் போய் இருக்கு...இன்னும் கொஞ்ச நாள்ல டாலர் ஆஹ் திரும்பி வந்துரும் கவலைப்படாதீங்க....போயஸ் கார்டன் பக்கம் மட்டும் போயிராதிங்க......

 • ganapati sb - coimbatore,இந்தியா

  முன்பிருந்த 1000 போல இப்பொது பணப்புழக்கத்திற்காக தற்காலிகமாக விடப்பட்ட 2000 ரூபாய் நோட்டும் பதுக்க படுவதால் போதுமான புதிய 500, 200 ரூபாய் நோட்டு புழக்கத்தில் உள்ளதால் உரிய கால அவகாசம் கொடுத்து 2000 நோட்டு விலக்கி கொள்ள படும் என நினைக்கிறன் பட்டும் திருந்தாத கருப்பு பண பதுக்கல் காரர்கள் அதை வெளியே கொண்டு வரும் நிலைக்கு தள்ள படுவார்கள் என நினைக்கிறன்

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  இந்த சிவராஜ் சவுகான் மற்றும் நிதிஷ் குமார் கிட்டே பிடிச்ச விஷயமே இந்த ரெண்டு பெரும் மத்த முதல்வர்கள்போல மோடி நடவடிக்கை எடுப்பார்ன்னு பேசாததுதான் ஏன்னா ஒரு நேரத்தில் இந்த ரெண்டு பெரும் பிரதம வேட்பாளருக்கு பரிசீலனையில் இருந்தவர்கள். இப்போ டூ லேட்.. அவிங்க நிலைமையே திண்டாட்டத்தில இருக்கு... இனிமே உத்தம வேஷம் போட்டு டப்பா டேமேஜ் ஆகாம பார்த்துக்க முயற்சி செய்யுறாங்க..

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  நவம்பர் 2016 ல் இந்தியா முழுவதும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை அரசு முடக்கியது. அப்போது அரசும் பிரதமரும் சொன்ன காரணம்" அவை கருப்பு பணத்தை கொடுக்கின்றன, கருப்பு பண ஒழிப்புக்காகவே தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை மூடி இருக்கிறோம் இன்னும் ஐம்பது நாட்களில் திறந்துவிடுவோம் என்றார்கள். இப்போதும் அதே தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் மூடப்பட்டுள்ளன அல்லது செயலிழக்கப்பட்டன என்றால் அதே கருப்பு பண ஒழிப்பாக இருக்கலாம் என்று இந்த பக்தருக்கு யாராவது பக்தர் சொல்லலாமே. மக்கள் காதில் பூ வைக்கும்போது என்ன சொன்னால் என்ன? எதையாவது சொல்லலாம். நான் சுவீடன் பார்க்கவேண்டாமா?

 • unmai nanban - Chennai,இந்தியா

  தோல்விக்கு சாக்கு சொல்ல ரெடி ஆகிட்டார் போல கிணத்த காணும் கதையால்ல இருக்கு

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  இவர் ஒரு முதலமைச்சர். இவரால் கண்டு பிடிக்க முடிய வில்லையா?

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  பணப்புழக்கத்தை குறைக்கத்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கைன்னு அப்போ சொன்னாங்க.இவரு என்னடான்னா பணப்புழக்கம் ரூ.15 லட்சம் கோடியில் இருந்து ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை முடிந்தபின் ரூ.16.5 லட்சம் கோடியா ஆயிடுச்சுன்னு உண்மையை சொல்றாரு. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையே ஒரு மோசடின்னு சிதம்பரமும் மன்மோகன் சிங்க்கும் சொன்னபோது பக்தர்கள் கத்துனாங்க. இப்போ சேம் சைடு கோல் போடராரு இவரு. பக்தர்கள் மௌனம் சம்மதம்ன்னு சொல்றாங்க

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  They should be with those who exchanged old 500 and 1000 Rs notes at the time of demonetisation.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என வதந்தி கிளம்பினால் பதுக்கியவைகள் வெளியே வந்துவிடும்.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  அது தானே ஜீ உங்க குலத்தொழில் உங்களுக்கு எப்படி தெரியாம போகும் ?

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  உண்மைதான் இவரின் கூற்று

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  சிறு வியாபாரிகள் முதல் பெரு வியாபாரிகள் வரை, ரியல் எஸ்ட்டேட் பிஸினஸ் உட்பட, பண பரிமாற்ற வேகத்தை ஊக்கப்படுத்த, வேகத்தின் முடுக்கத்தை அதிகப்படுத்த, இப்படிப்பட்ட, 2000 ரூபா புதிய நோட்டு கரன்சிகளை, இன்றைய மத்திய சர்க்கார் வெளியிட்டாங்களோ என்னவோ?. ஆனால், இப்ப அது, கறுப்பு பண பதுக்கள்காரர்களுக்கு மிக எளிதான பதுக்கள் வேலையாகவும் முடிந்து போய் இருக்கலாம். எது எப்படியோ, இப்படி, பொதுமக்களின் புழக்கத்தில் இருந்து மறைந்து விட்ட 2000 ரூபா நோட்டுக்களை, மத்திய சர்க்கார், எப்படித்தான் வெளிக்கொணர போகின்றார்களோ?, அதன் வழிதான், இன்னும் தென்படவில்லை எனலாம்.

 • Siva - Aruvankadu,இந்தியா

  அதிகபட்ச மதிப்பு₹ 500 நோட்டே போதும்...இப்படியே ₹ 2000 நோட்டை ஒழித்தால் நல்லது...

 • R Sanjay - Chennai,இந்தியா

  மத்திய பிஜேபி அரசுக்கு துணிவிருந்தால் இரண்டாயிரம் ருபாய் நோட்டை தற்போது மதிப்பிழக்க செய்யட்டும். இதை செய்ய மாட்டார்கள். இரண்டாயிரம் ருபாய் நோட்டை விட்டதே கருப்பு பணமாக பதுக்குவதற்குத்தான். இதை எத்தனையோ பதிவுகளில் கூறிவிட்டேன். ஒரு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட 500 1000 ருபாய் நோட்டை தடை செய்துவிட்டு 2000 ருபாய் நோட்டை அறிமுகப்படுத்தி இருக்கமாட்டான். நயவஞ்சக நரிகள் இந்த மத்திய பிஜேபி அரசு மற்றும் வங்கி அதிகாரிகளும்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இவரு ஆளும்கட்சி முதல்வரா, அல்லது எதிர்க்கட்சி முதல்வரா என்று தெரியவில்லை, இவர் இந்த கேள்வியை கேட்க வேண்டிய இடமே வேறு, இந்த உயர்ப்பனமதிப்பு நீக்கம் அதன் தொடர்ச்சியாக திரும்பி வந்த நோட்டுக்கள் அதை பற்றின விவரம் இன்றுவரை மர்மமாகவே இருக்குது,

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  அசலு புசலாக 2000 ரூபாய் நோட்டு செல்லாமல் ஆக்க போகிறார்கள் என்ற வதந்தியை பரப்பினால் அனைத்தும் வெளியே வந்து விழும்.

 • ஆப்பு -

  இருக்கவே இருக்கு அடுத்த நோட்பந்தி...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஒன்று மட்டும் நிச்சயம்... அந்த நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து விட்டு ஐயாயிரம் நோட்டு வெளி இடலாம்.. பணக்காரர்கள் பணததை பதுக்க வசதியாக இருக்கும்...

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  எங்கே போச்சு?.... RBI 2000 ருபாய் நோட்டை அச்சு அடிப்பதை நிறுத்தி விட்டது.... மேலும் 1000 ரூபாயாய் பதுக்கி வைத்தவனுக்கு இப்போ இன்னும் சுலபமா போச்சு... 2000 ரூபாயா பதுக்குறான்... நாளை இந்த 2000 த்தை தடைசெய்தால் அவன் அன்று செய்த மாதிரி ஒரு 30 பெர்ஸன்ட் கமிஸ்ஸின் கொடுத்து எல்லாத்தையும் மாத்திக்கொள்வான்.... ATM இல் ஏன் தட்டுப்பாடு வருது?... புது 10 ருபாய், 50 ருபாய் , 200 ருபாய் தள்ள இன்னும் ATM மாற்றப்படவில்லை... அதற்கு வழி செய்யாமல் புது நோட்டை அச்சடித்து வெளியேவிட்டார்கள்... இதன் பெயர்தான் துக்லக் மூளை.. இப்போ அதை செய்தவர்கள் மக்களை திசை திருப்புகிறார்கள் ... அவ்வளவே...

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  திருட்டு காமவெறிகாவிகளிடம்

 • Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  காங்கிரஸ், திருட்டு திராவிட வீடுகளில் சோதனை செய்தால் தெரியும்.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  நடுவண் அரசு காங்கிரஸ் அரசு என்று நினைத்துவிட்டார் போல சௌகான் எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன் என்பது போல தேடுங்கள் சௌகான் எலேச்டின் மத்யபிரதேசில் வருகிறது அதற்காக கேட்கிறார் போல வியாபம் ஊழல் ஸ்பேசியலிஸ்ட் இவர்கள் இதற்க்கு லாயக்கில்லை பாவம்

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  நீங்க பேசுறது மேலிடத்திற்கு தெரியுமாவே ஏற்க்கனவே முதல்வரை மாற்றும் திட்டம் இருக்கிறதாம் , ஒரு வேளை அந்த கடுப்பில் தான் பணமதிப்பிழப்பை மறைமுகமாக போட்டு தாக்குறீங்களோ ???

 • Bhaskaran - Chennai,இந்தியா

  காவிக்கட்சிக்குள் குத்து வெட்டு ஒவ்வொன்றாக இனிமேல் வெளிவரும்

 • Rajan - chennai,இந்தியா

  வியாபம் ஊழலில் + 3 முறை ஆட்சிசெய்த எதிர்பலையில் (anti-incumbency ) மாட்டிக் கொண்டு ஷிவ்ராஜ் சவுஹான் தவிக்கிறார். இவரை முதல்வர் பதவியிலிருந்து மாற்றிருக்க வேண்டும் அமித் ஷா மோடி கூட்டணி... அது எவ்வளவு பெரிய தவறு என்று மாதவ்ராவ் சிந்தியா + கமல்நாத் வெற்றி பெற்ற பிறகு தான் மோடிக்கு தெரியவரும்.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  Enge theduven. Ithai enge theduven. Nottu mudakkam seytha periyavarai kettle pathil kidaikkum. Avarthan Mouna Samiyaraga Mari vittare. Pesinathu sakthi izhandhu pala Kalam odi vittadhu. Congress arasai kurai solla mattum vaay vilangum. Matrapadi pesa pommai.

 • kandhan. - chennai,இந்தியா

  மோடியின் ஊழலே இதில்தான் இருக்கிறது கருப்பணத்தை வெள்ளையாக்கி வெளிநாடுகளில் கார்பொரேட் கம்பனிகளுக்கு ஆதரவாக இங்குள்ள ஒரு கூட்டம் தான் இதை பதுக்கி உள்ளது என்பது தெளிவாகிறது எனவே இரண்டாயிரம் ருபாய் நோட்டை மீண்டும் வாபஸ் பெற்றால் மொத்த கருப்புப்பண முதலைகளை பிடிக்கலாம் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இந்த நடவடிக்கைகளை எடுக்குமா அல்லது இந்த ஊழல்வாதிகளுக்கு துணைபோகுமா ??மக்களே சிந்தியுங்கள் உலகமகா ஊழல் கண்ணுக்கு தெரியாமல் நடக்கிறது இதுதான் காவிகளின் சாதனை ,பி ஜே பி ஆட்சி கவிழ்ந்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பது திண்ணம் ........இந்நேரம் ஜெயா அம்மையார் இருந்திருந்தால் இந்தியாவில் பெரிய மாற்றமே வந்திருக்கும் இதுதான் காலத்தின் கோலம் என்ன என்று சொல்வது ..எல்லாமே சூழ்ச்சிதான் ..எப்போது விலகும் இந்த மாயை ????? கந்தன் சென்னை

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பொதுமக்களிடையே இல்லாத நேர்மையை அரசியல்வாதிகளிடமும் பணமூட்டைகளிடமும் எதிர்பார்க்கவே முடியாது

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  2 ஆயிரம் ரூபாய் நோட்டு நோட்டு வாபஸ் செய்தால் தான் theriyum

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  தேர்தல் நெருங்கி வருதுல்ல, நேரடியாக RBI மற்றும் வங்கி மூலம் சேர்த்து வச்சி, அப்புறமா செலவு பண்ணுவாங்க, ஒங்க தல சொல்ல வில்லையா... இதெல்லாம் பொது விலா சொல்லு வாங்க.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  செல்லதுன்னு அறிவிப்பு வரும் புரளியைக்கிளப்பிவிட்டால் அடுத்தது சிலலரை நோட்டுகளை தட்டுப்பாடு வரும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement