Advertisement

ரூ.60 லட்சத்தில் 62 கழிப்பறை பராமரிப்பு

திரு.வி.க.,நகர்: திரு.வி.க.,நகர் மண்டலத்தில், 60 லட்சம் ரூபாய் செலவில், 62 கழிப்பறையை பராமரிக்க,மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி, திரு.வி.க.,நகர் மண்டலத்திற்கு உட்பட்ட, ஓட்டேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க.,நகர், கொளத்துார் ஆகிய பகுதிகளில், மொத்தம், 62 பொது கழிப்பறைகள் உள்ளன.இந்த கழிப்பறைகளில் பெரும்பாலானவை, பாராமரிப்பு இன்றி, மோசமாக உள்ளன. இந்த, 62 கழிப்பறைகளையும் சீரமைக்க, 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், விரைவில் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement