Advertisement

தாம்பரத்தில் நுண் உர செயலாக்க மையம்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியின், ஏழு இடங்களில், நுண் உர செயலாக்க மையங்கள் அமைய உள்ளன. இதனால், தினமும் சேகரமாகும் குப்பை, அந்தந்த இடங்களில் உரமாக்கப்பட உள்ளது.
தாம்பரம் நகராட்சியில் மொத்தம், 39 வார்டுகள் உள்ளன. நகரப் பகுதிகளில், நாள் ஒன்றுக்கு, 100 டன்னுக்கும் மேலாக குப்பை கழிவுகள் சேகரமாகின்றன.
துாய்மை இந்தியா
அவ்வாறு சேகரமாகும் குப்பை கழிவுகள், கன்னடபாளையம் பகுதியில் கொட்டப்பட்டு, பின் அங்கிருந்து வேங்கடமங்கலம் குப்பை கிடங்கிற்கு மாற்றப்படுகிறது.
அங்கு, பல்வேறு பகுதிகளில் பெறப்படும் குப்பை, உரமாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
இத்திட்டத்தில் தற்போது, அந்தந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பையை, அந்த பகுதியிலேயே உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 3.5 கோடி ரூபாய் செலவில், நகரின் ஏழு இடங்களில், இந்த நுண் உர செயலாக்க மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ரூ.௮௦ லட்சம்
இந்த மையங்கள், மேற்கு தாம்பரம், கன்னடபாளையம், மண்ணுரான் குளம், அம்மன் நகர், சேலையூர் அம்பேத்கர் நகர், கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம், அருள் நகர், சேலையூர் சுடுகாடு ஆகிய இடங்களில் அமைய உள்ளன.
இதற்கான உரக்கிடங்கு அமைக்கும் பணிகள், விரைவில் நடைபெற உள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக, வீடு வீடாக குப்பை சேகரிக்க, 10 லட்சத்தில், மூன்று சக்கர வாகனங்கள், பேட்டரி வாகனங்கள், ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளன.
மேலும், 80 லட்சம் ரூபாய் செலவில் கன்டெய்னர் உள்ளிட்டவை வாங்கப்பட உள்ளன.
மேலும், நகரில் உள்ள, 10 பூங்காக்களில் பசுமை உரக்குடில்கள் அமைக்கவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குப்பை பிரச்னைக்கு தீர்வுதாம்பரத்தில் சேகரமாகும் குப்பை கழிவுகளை உரமாக்க, ஏழு இடங்களில் நுண் உர செயலாக்க மையங்கள் அமைக்கப்பட உள்ளன. நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகள் உரமாகவும், 'பிளாஸ்டிக்' கழிவுகள் மறு சுழற்சி விற்பனைக்கும் அனுப்பப்படுகின்றன. இதனால், மலை போல் குவியும் குப்பை கழிவுகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும் இவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உரங்கள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதே போல், பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம், அந்த பணியை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கே வழங்கப்படும்.

தாம்பரம் நகராட்சி அதிகாரிகள்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement