Advertisement

தாலுகா அலுவலகத்திற்கு போக்குவரத்து வசதியில்லை

புழல்: இடமாற்றம் செய்யப்பட்ட மாதவரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று வர, போக்குவரத்து வசதியின்றி பயனாளிகள் தவிக்கின்றனர்.
மாதவரத்தில் செயல்பட்டு வந்த, மாதவரம் தாலுகா அலுவலகம், புழல், பாலாஜி நகருக்கு, 13ல் இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு, 2.30 கோடி ரூபாய் மதிப்பில், 6,438 சதுர அடி பரப்பளவில், இரு தளங்களுடன் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.
அதன் கீழ் தளத்தில் வருவாய்த்துறையும், மேல் தளத்தில் தேர்தல் பிரிவு அலுவலகமும் உள்ளன.
செங்குன்றம், புழல், மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, வருவாய் மற்றும் வாக்காளர் அட்டை தொடர்பான பணிகளுக்கு வந்து செல்வோருக்கு, போக்குவரத்து வசதி இல்லை.
அவர்கள், புழல் மத்திய சிறைச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 3 கி.மீ., துாரம் நடந்து வர வேண்டும்.
அவர்களின் சிரமத்தை தவிர்க்க, புழல், காவாங்கரை முதல், வடபெரும்பாக்கம் வரை, சிற்றுந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திறப்பு விழா அன்று, 6 மாதமாக நிலுவையில் உள்ள முதியோர், விதவை உதவித்தொகை கிடைக்கும் என, பலரும் புதிய அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால் திறப்பு விழாவில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சுந்தரவல்லி பங்கேற்றதால், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளை சந்திக்க முடியாமல், அவர்கள் தவித்தனர்.
மூன்று மாதத்தில், புதிய கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படுகிறது. ஆனால், ஆறு மாதமாக உதவித்தொகை வழங்காமல், அலைய விடுவதாக பெண்கள் அதிருப்தி அடைந்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement