Advertisement

சி.எம்.டி.ஏ.,வின் எல்லை விரிவாக்கம் : காஞ்சிபுரம், சென்னையில் பயிலரங்கம்

பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் எல்லையை விரிவாக்கம்செய்வது குறித்து, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில், பயிலரங்கம்நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.தற்போதைய நிலவரப்படி, 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ள, சி.எம்.டி.ஏ., எல்லை பரப்பளவை, 8,878 சதுர கி.மீ., வரை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதையடுத்து, நிர்வாக ரீதியாக இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எல்லை விரிவாக்கத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கில், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததை வைத்து, விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.இதற்காக, விரிவாக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அந்தந்த பகுதி மக்களின் கருத்தை கேட்பதற்காகவும், பயிலரங்க கூட்டம் நடத்த, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, முதல் கூட்டம், ஏப்., 13ல் திருவள்ளூரில் நடந்தது. இரண்டாவது கூட்டம், ஏப்., 20ல், காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ள பாபு திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. மூன்றாவது கூட்டம், ஏப்., 23ல் சென்னையில் நடக்க உள்ளது.இந்த கூட்டங்களில் பங்கேற்க, அந்தந்த பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டு உள்ளனர். - நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement