Advertisement

மக்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் பா.ஜ.,: காங்., தாக்கு

புதுடில்லி : பொது மக்களின் அந்தரங்கத்தில் ஊடுருவும் வேலையை பா.ஜ., கட்சி செய்து வருவதாக காங்., கட்சி கடுமையாக தாக்கியுள்ளது.


கேபிள் இணைப்புக்கு பதிலாக, தற்போது நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும், 'செட்டாப் பாக்ஸ்' கருவிகளில், 'டிஜிட்டல் சிப்'களை பொருத்தி, பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட, தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனை காங்., கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.


இதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: பா.ஜ., கட்சி செய்து வரும் கண்காணிப்பின் அடுத்த நிலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் வீட்டினுள் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை உங்கள் அனுமதியின்றி தெரிந்து கொள்ள அமைச்சர் ஸ்மிருதி இராணி விரும்புகிறார் இது கடுமையான அந்தரங்கள் உரிமை மீறல். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  வாசகப்பெருமக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி இந்த பிலாக்கணம், ஓலம் 2019 தேர்தல் முடியும் வரை தொடரும், பிறகு வேறு விதமான பிலாக்கணம் தொடரும். எப்படியாவது பி.ஜெ.பி, மோடிக்கு எதிராக இன்னும் வரும் நாட்களில் தொடரும் பாருங்கள். 1 ) பணம் குறித்து, 2 ) கற்பழிப்பு குறித்து, 3 ) கொலை குறித்து, 4 ) உணவுத்தட்டுப்பாடு குறித்து, 5 ) மக்கள் பாதுகாப்பு குறித்து 6 ) விலைவாசி குறித்து, 6 ) தலித் பாதுகாப்பு குறித்து, இன்னும் இதைப்போல நிறைய நிறைய ..........ஓலம் ஒரே தொடர்கதையாக இருக்கப்போகிறது. காங்கிரஸ் முதல் எல்லா எதிரிக்கட்சிகளும் நன்றாக இதற்காக "Creative Manager" பலரை தங்கள் கட்சியில் நல்ல கொழுத்த அளவில் பணம் கொடுத்து appoint செய்திருக்கின்றார்கள்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா முதல் பல காங்கிரஸ் தலை (அதாவது வால்) மக்கள் அந்தரங்கத்தை பி.ஜெ.பி அலசுகிறது என்ற பயத்தில் இந்த உளறல்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இன்றய தினத்தில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பது ஒரு முக்கியமான ஒன்று. இதில் மக்களின் விருப்பு வெறுப்பை கணக்கிடும் வேலை முக்கியமானது . இதை வைத்துதான் இன்றய நடைமுறையே இருக்கிறது.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எந்த சேனல் என்றுதான் விவரம் சேகரிக்கிறார்கள் தவிர வேறு எந்த அந்தரங்க விஷயமும் இல்லையே , மேலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவது அனைவருக்கும் பொதுவானது , ஒளிபரப்பப்படும் தகவல்களுக்கு அந்த நிறுவனம்தான் பொறுப்பு.

 • rajan. - kerala,இந்தியா

  அதுதான் உங்க ஆட்சில மக்களின் கஜானா வரை புகுந்து அடிச்சு ஆட்டைய போட்டு தள்ளீட்டீங்களே. இப்போ அந்தரங்கத்துல போய் பார்க்க என்ன இருக்கு அங்கே கோவணம் கூட கிடைக்காது

 • Thiyaga Rajan - erode,இந்தியா

  ஆமாம் அரசன் வேவு பார்த்தாகணும் திருட்டு ஊழல் கும்பலும் தீவிரவாதிகளும் குதிப்பது சகஜம்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  //////s.kumaraswamy - Chennai,இந்தியா 17-ஏப்-2018 08:06 நல்லவர்கள் என்றும் பயப்படுவதில்லை... திருடன்கள் பயந்து புலம்ப தொடங்கியுள்ளது... இருட்டு திருட்டு கொள்ளை கூட்டங்களுக்கு...வெளிச்சம் நேர்மை உண்மை பயத்தை உண்டு பன்னுகிறது...////// - 100% உண்மைங்க, உங்க கருத்து.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  /////ஆப்பு - 17-ஏப்-2018 05:14 இது இவருக்கு வேணும்னா புதுசாத் தெரியலாம்.. உலகெங்கும் இதே வேலைதான் நடக்குது...பல இணைய நிறுவனங்கள் எதுக்கு இலவச இ.மெயில் வசதி குடுக்கின்றன? பல நிறுவனங்கள் எதுக்கு உங்கள் போட்டோக்கள், தகவல்களை இலவசமாக சேமிக்க வசதி செய்து கொடுக்கின்றன? கூகுள் எதுக்கு ரயில்வே டேசன், பஸ்டாண்டு டீக்கடையில் இலவச வை-பை செய்து குடுக்குது? எல்லாம் உங்களைப் பற்றிய தகவல்களை அறியத்தான்.பா.ஜ என்ன, எல்லோருக்கும் அடுத்தவன் மனசுல என்ன இருக்குன்னு அறிய ஆவல். இதெல்லாம் வேணாம்னா உங்க செல்போன், டி.வி இரண்டையும் உபயோகிப்பதை நிறுத்தவும்.///// - அட இவைகளை வைத்து, பொதுமக்களின் ஏகோபித்த மன குண செய்பாடுகள், விருப்பங்கள், புறக்கணிப்புக்களை புரிஞ்சிக்கிட்டா?, பின்பு, பெரும் கார்ப்பரேட் வியாபாரிகள், சினிமா துறையினர், அரசியல் கட்சியினர்கள், அனைத்து ஆட்சியாளர்களுக்கும், இப்படிப்பட்ட மக்களை கவர்ந்து ஓட்டுக்களை பெறும் வழிகளை, வியாபார விற்பனை உத்திகளை, சகல விதமான விளம்பர நுணுக்கங்களை, மிக எளிதாக உருவாக்கி, அதில் வெற்றியும் பெற்று, அவர்கள் பலன்கள் அடைய முடியுங்க, எனலாங்க.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  உங்கள் போனை நீங்கள் உபயோப்படுத்தாமல் இருந்தாலும் கூட, உங்கள் போனின் கேமரா உங்களை படம் எடுத்து கொண்டு இருக்கும். நீங்கள் வீட்டில் பேசுவதை வெளியே எங்கோ ஒரு சர்வருக்கு(பெரும்பாலும் சீனாவிற்கு) அனுப்பி கொண்டு இருக்கும். உலகின் அனைத்து பெரிய போன் சாப்ட்வேர் கம்பெனிகளும் ஏதாவது வகையில் உங்களை தொடர்ந்து கண்காணித்து கொண்டே தான் இருக்கும். இப்போதெல்லாம் இது சாதாரணம். ஆனால் மோடி அரசு செய்வது ஏதாவது இருந்தால் கந்தசாமி எதை பார்க்கிறான் என்பதற்காக இல்லை. மாறாக, இணைப்புகளின் எண்ணிக்கைகளை குறைவாக சொல்லி அரசை ஏமாற்றி திருடுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு தான். ஆகவே இந்த கண்காணிப்பு மிகவும் அவசியமான ஓன்று. பாவம், கரையான்புற்று, கொஞ்ச நாளிற்கு ரபேல் ரபேல் என்று வெறும் வாயில் காற்றை மென்றது. கேட்பார் ஆளில்லை. தற்போது மெல்வதற்கு ஊழல் என்ற ஒன்றுமே கிடைக்காமல் தவியாய் தவிக்கிறது

 • Vs rajan - Chennai,இந்தியா

  இந்த திட்டத்துக்கும் நீங்க (காங்) தான மூல காரணம்? என்னவோ இப்பத்தான் பிஜேபி இதை புதுசா அமுல் படுத்தரா மாதிரி சொல்றீங்க? மக்கள் எல்லாத்தையும் மறக்கிற முட்டாள்கள் என்னும் நினைப்பா?

 • Rajan - chennai,இந்தியா

  காங்கிரஸ் (ராகுல் காந்தி துணை தலைவராய் இருக்கும் போது) தான் கேம்பிரிட்ஜ் அனலட்டிக்கா என்னும் தகவல் ஆராய்ச்சி நிறுவனத்தை பயன்படுத்த முற்பட்டிர்கள் என்று அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது (அதாவது மக்களின் தனிப்பட்ட சமூக தகவல்களை பயன்படுத்த) ...முதலில் அதுவே மக்களின் மீது உள்ள அடிப்படை உரிமையை நீங்கள் துஷ்ப்ரயோகம் செய்தீர்கள் என்று அர்த்தம். உங்கள் மேல் வழக்கு வரப்போகுது பார்த்துக்கொள்ளுங்கள்....ஆனால் ஒன்று என்ன தான் குட்டி கரணம் அடித்தாலும் மோடியை வெல்ல முடியாது.

 • rajan. - kerala,இந்தியா

  நீங்க மக்களின் கஜானாவை ஊடுருவி கோடி கணக்கில ஆட்டைய போட்டீங்க. இனி அதுக்கு வழியில்லையேன்னு ஒரு புலம்பல் தான் இங்கே.

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  நல்லவர்கள் என்றும் பயப்படுவதில்லை... திருட்டு கம்மனாட்டிகள் பயந்து புலம்ப தொடங்கியுள்ளது...இருட்டு திருட்டு கொள்ளை கூட்டங்களுக்கு...வெளிச்சம் நேர்மை உண்மை பயத்தை உண்டு பன்னுகிறது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...'டிஜிட்டல் சிப்'களை செயலிழக்க வைத்து விடமாட்டோம்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  உங்கள் கணிப்பொறியில் இலவச தேடுபொறியா உள்ளது? டிவி இல் யார் என்ன பார்க்கிறார்கள் என்பதை வைத்து என்ன செய்துவிடமுடியும்? அரசே டிவி ரேடியோ ஏகபோகமாக வைத்துக்கொண்டு ஆளும்கட்சிக்கு ஜால்றா அடித்ததும் தனியார் ரேடியோ நிலையம் நடத்தகூட அனுமதி மறுத்ததும் உங்கள் கட்சி நினைவிருக்கிறதா?

 • VOICE - CHENNAI,இந்தியா

  கிரெடிட் card டெபிட் கார்டு மொபைல் பாங்கிங் வல்லேட் பாங்கிங் செட்டப் box ஸ்மார்ட் mobile போன் இன்டர்நெட் connection கிடைத்தாலே உங்கள் அனைத்து விவரங்கள் சர்வர் வைத்திருப்பவர்கள் பார்க்கலாம். பார்த்துக்கொண்டு இருப்பார்கள். உங்களை கண்காணிக்க கூடாது என்று நினைத்தால் மொபைல் போன் டிவி இன்டர்நெட் connection இல்ல்லாமல் தான் வாழவேண்டும்.

 • பிஜெபியின்எதிரிக்குஎதிரி -

  என்னவோ காங்கிரஸ் காரனுங்களுக்கு எல்லா செய்திகளும் தாமதமாகவே கிடைக்கும் போல

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  இது என்ன புது குண்டா இருக்கு. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் யாருமே இவர்களை நம்பமாட்டார்கள்.

 • ஆப்பு -

  இது இவருக்கு வேணும்னா புதுசாத் தெரியலாம்.. உலகெங்கும் இதே வேலைதான் நடக்குது...பல இணைய நிறுவனங்கள் எதுக்கு இலவச இ.மெயில் வசதி குடுக்கின்றன? பல நிறுவனங்கள் எதுக்கு உங்கள் போட்டோக்கள், தகவல்களை இலவசமாக சேமிக்க வசதி செய்து கொடுக்கின்றன? கூகுள் எதுக்கு ரயில்வே டேசன், பஸ்டாண்டு டீக்கடையில் இலவச வை-பை செய்து குடுக்குது? எல்லாம் உங்களைப் பற்றிய தகவல்களை அறியத்தான்.பா.ஜ என்ன, எல்லோருக்கும் அடுத்தவன் மனசுல என்ன இருக்குன்னு அறிய ஆவல். இதெல்லாம் வேணாம்னா உங்க செல்போன், டி.வி இரண்டையும் உபயோகிப்பதை நிறுத்தவும்.

 • surang -

  dai dubasgala,without facts dont mudslide

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement