Advertisement

ரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்?

சென்னை : ''ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்காததால், வங்கிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது,'' என, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர், தாமஸ் பிராங்கோ தெரிவித்தார்.


சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: வங்கிகளின் வாரா கடன், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில், 88 சதவீதம், 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் வாங்கியவை. அந்த கடனை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாரா கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையை, ஆபத்திற்கு அழைத்து செல்வதாக உள்ளது.


பார்லிமென்ட் நிலைக்குழு, வாரா கடன் குறித்து, 2016 பிப்ரவரியில் கொடுத்த பரிந்துரைகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்வதில்லை.இதனால், வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுத்த, 2,000 ரூபாய் நோட்டுகளை, வாடிக்கையாளர்கள், தட்டுப்பாடு காரணமாக, வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர்.


இது, வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது. பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக குழுவில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பிரதிநிதியை, இடம்பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (69)

 • jagan - Chennai,இந்தியா

  கர்நாடக தேர்தல் முடியட்டும் எல்லாம் சரியாயிடும்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  கன்டெய்னர்களில் கர்நாடகா பக்கம் ஒதுங்கியிருக்குமப்பா. இன்று இரவு முதல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் மக்கள் தங்களிடம் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை முப்பது நாட்களுக்குள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும், ஒரு லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் செலுத்துபவர்கள் வருமானவரித்துறையில் டிக்ளேர் செய்துவிட்டு வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும் ஒரு அறிவிப்பு வெளியானால் நன்றாக இருக்கும். பதுக்கல் பேர்வழிகளுக்கு, லஞ்ச பேய்களுக்கு, ஹவாலாகளுக்கு, அரசியல்வியாதிகளுக்கு அந்த இடத்தில் பச்சை மிளகாய் வைத்தது மாதிரி இருக்கும். நேர்மையான வழியில் சம்பாதித்தவர்களுக்கு சின்ன அசெளகர்யம்தான் பரவாயில்லை. நாட்டுக்காக பொறுத்துக் கொள்வோம்.

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  அப்படியா>> நாளை நள்ளிரவுமுதல் இரண்டாயிரம் ரூபாய் செல்லாது என ஓர் அறிவிப்பு வரட்டும் அப்போ எல்லா ரெண்டாயிரம் நோட்டுகளும் வெளி வரும் .என்ன மானிடர்களோ . ஊழல் கரை படிந்த மேதாவிகளை சட்டத்தால் ஒன்றும் தண்டனை அளிக்கவே முடியாது பயமே இல்லை . நாட்டை இனி ராணுவம் ஆளனும் அப்போதான் சட்டத்தை மதிப்பார்கள் பயந்து நடப்பார்கள் போல் தெரிகிறது.????????

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  எல்லாம் நம்ம பிரதமர் நீரவ் மோடிகளுக்கு கொடுத்தனுப்பி விட்டார்

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  மக்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கும் மத்திய அரசு. மக்களுக்கு நிம்மதி இல்லாத அரசு

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  உரிய ஆவணமின்றி ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ 1,100 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஏப்ரல் 17, 2018, 01:21 இதில் இருந்தவை 80 % ரூ 2000 நோட்டுக்கள், இந்த மாதிரி பல கடத்தல் நடந்திருக்கும் அதற்குத்தான் இந்த ரூ. 2000 திடீர் தட்டுப்பாடு, தெரிந்ததா ஆனந்தப்பூர் பெங்களூருக்கு தகுந்த ஆவணமின்றி தனியார் பஸ் மூலம் கொண்டு சென்ற ரூ 1,100 கோடி பறிமுதல். கர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே)12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த பஸ்சில் சோதனை நடத்தினர். அப்போது பஸ்சில் தகுந்த ஆவணம் இன்றி ரூ.1,100 கோடி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பணம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்து உள்ளது. அந்த பணத்தை போலீசார் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் கர்நாடக சட்டசபை தேர்தலில் பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டதா அல்லது இது யார் பணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • Vijay - Bangalore,இந்தியா

  good move modi ji, please ban 2000 rs notes immediately ..

 • baalaa - Singapore,சிங்கப்பூர்

  இப்போ எல்லாம் BitCoin க்கு மாறிட்டாங்க ... இந்த மோடி என்ன வேணும்னாலும் பண்ணுவாருன்னு எல்லா அரசியல்வாதிகளும் கருப்பு பணத்தை பிட்காயினுக்கு மாத்திட்டாங்க ...

 • V.Rajeswaran - chennai,இந்தியா

  வங்கி அதிகாரிங்க முதலில் ஒழுங்காக வேலை செய்யவும் அப்புறமா அரசை குறை சொல்லலாம் நாங்க எல்லோரும் வரிசையில் நிற்கும் பொது கள்ளத்தனமாக திருட்டு பசங்களுக்கு புது ரூபாய் நோட்டை எல்லாம் தூக்கி கொடுத்த மக்கள் விரோத கும்பல் தானடா நீங்க இப்போ வந்து நீதி நேர்மை வராக்கடன் அப்படினு கதை விடுறீங்க உனக்கு தற்போதைய அரசை குறை சொல்லணும் பெருசா வந்துட்டாரு போடா போய் வேலைய ஒழுங்கா பார்

 • christ - chennai,இந்தியா

  ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்வதில்லை.அப்படி என்றால் என்ன அர்த்தம் ? 2000 ரூபாய் நோட்டை நிறுத்துவதற்க்கான அறிகுறிகள் இவை

 • Ganapathy - Bangalore,இந்தியா

  சார் இன்னுமும் பழைய 500, 1000 நோட் எண்ணி முடிக்கல-அடுத்த எலேச்டின் வரைக்கும் எண்ணுவாக. நீங்கவேற நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று பீதியை கிளப்பிறீங்க அட எல்லா கில்லாடிங்களும் இப்போவே ஸ்டாக் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. மதுரை மன்னன் தவறான கருத்தை பதிவு செய்த்துள்ளார் பணம் பரிவர்த்தனை தடைப்பட்டபோது இரவு பகல் பாக்காம உழைத்தவர்கள் வங்கியில் வேலை பார்த்தோர். இப்போது rbi கையில் தன உள்ளது .

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  மத்திய பாஜக கஜானாவையும், மாநில அதிமுக கஜானாவையும் பிடிச்சி உலுக்கினா பதுக்கிய 2000 ரூபாய் எல்லாம் கொட்டோ கொட்டுனு கொட்டும்.. ஒன்னாம் நம்பர் கூட்டு களவாணிகள்...

 • பிரபு - மதுரை,இந்தியா

  தாமஸ் பிராங்கோ சொல்வதுபோல் 2,000 ரூபாய் நோட்டுகளை யாரும் பத்திரப்படுத்தவில்லை, மாறாக பதுக்கி கொண்டிருக்கிறார்கள்.

 • Power Punch - nagarkoil,இந்தியா

  இது பொருளாதார புளி மூட்டை பிஜேபியின் சதி..வங்கிகளே இந்த நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்தி விட்டன .. 2000 நோட்டு எப்போது வேண்டுமானாலும் செல்லாது என்ற அறிவிப்பு வரும் என்று மக்களுக்கு தெரியும்..அதை எந்த முட்டாளும் பதுக்க மாட்டான்..... இப்படி செய்தியை வெளியிட்டு அந்த நோட்டுக்கள் செல்லாது என்று சொல்ல போகிறார்கள்...நாம் வைத்திருக்கும் ஒன்றிண்டு நோட்டுகளுக்கும் கேடு காலம் தான்..,

 • vsubramanian -

  If you spread the remour that Rs 2000/ will be demonetised, then there will be only Rs 2000 notes will be in circulation

 • telexpandian - zug,சுவிட்சர்லாந்து

  Check BJP big wigs . All the 2000 rupee notes are hoarded by BJP politicians because of imping elections. Vote for money is a big game of Modi and co.

 • Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா

  Elections are around the corner That is the reason

 • VOICE - CHENNAI,இந்தியா

  திருடனே திருடியதை கேள்வி கேட்பது போல உள்ளது. திருடன் அனைவரும் சேர்த்து ஒரு கம்பெனி நடத்தினால் அதற்கு பெயர் வங்கி என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது.

 • Vs rajan - Chennai,இந்தியா

  கர்நாடகாவில் பிஜேபி மட்டும் தான் தேர்தலை சந்திக்கிறதா? காங்கிரசும் மற்ற கட்சிகளும் சத்தியவான்களா என்ன? எல்லா கட்சிகளும் தான் பதுக்குகின்றன. இது இத்தாலி பக்தால்ஸ் கு தெரியாதா?

 • Ganapathy - Bangalore,இந்தியா

  சார் இன்னுமும் பழைய 500 , 1000 நோட் எண்ணி முடிக்கல- அடுத்த எலேச்டின் வரைக்கும் எண்ணுவாக . நீங்கவேற நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று பீதியை கிளப்பிறீங்க அதான் எல்லா கில்லாடிங்களும் இப்போவே ஸ்டாக் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க . மதுரை மன்னன் தவறான கருத்தை பதிவு செய்த்துள்ளார் . பணம் பரிவர்த்தனை தடைப்பட்டபோது இரவு பகல் பக்கம் உழைத்தவர்கள் வங்கியில் வேலை பார்த்தோர். இப்போது rbi கையில் தான் உள்ளது .

 • Bhaskaran Ramasamy - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  தாமஸ் பிராங்கோ, பேரை பார்த்தால் ஒரு சந்தேகம் வருகிறது, காங்கிரஸ் கைக்கூலியோ என்று

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பொது மக்களிடம் இல்லாத நேர்மையை பணமூட்டை வி ஐ புகலிடம் எதிர்பார்க்கமுடியாது .தட்டுப்பாடு எனும் வதந்தி வந்தால் காணாததைக் கண்டமாதிரி பதுங்குவது எல்லோரிடமும் உள்ள பழக்கமே

 • rajan. - kerala,இந்தியா

  உங்க மேலதிகாரிங்க ஆட்டைய போடுறப்ப ஏன் சத்தம் இல்லாம அமைதி காத்தீங்க? இப்ப கூப்பாடு போடுறீங்க.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அதிக நோட்டுகளை அடித்து அடித்துதானே நாடு நாசமாப்போனது ?

 • Ram - ottawa,கனடா

  அரசியல் வாதிகளால் நாட்டின் முன்னேற்றம் தடைபட்டு வந்தது, இப்போ இந்த வாங்கி அதிகாரிகள் அல்லக்கைகளாக செயல்படுவதால் நாட்டின் முன்னேற்றம் பெருமடங்கு தடைபட்டுள்ளது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எதுவும் எங்கேயும் போய் இருக்காது... எல்லாம் பணக்காரர்கள் இல்லத்தில் எங்கோ ஒரு குப்பையில் இருக்கும்

 • s.kumaraswamy - Chennai,இந்தியா

  தாமஸ் பிராங்கோ...ஏதோ அரசை குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பேசியிருப்பது அவர் வார்த்தைகளில் அப்பட்டமாக தெரிகிறது...எப்போதுமே ஒரு தவறை சுட்டி காட்டினால் அது ஏற்று நம்பகமாக அமையும்...கரன்சி தட்டுபாடு என்றால் அதை சொல்லிவிட்டு போகாமல் வாராக்கடன்...கார்ப்பரேட்டுகள் என்று எதையாவது கிளப்பி ஆனந்தம் அடைகிறார்...எவருக்கோ சொம்பு தூக்குவதில் இந்த ஆணந்தமா...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நீங்க முதலில் வாடிக்கையாளர்களிடம் அன்பாக பேசி குறைகளை தீர்க்க பழகுங்கள் எல்லா வாங்கி ஊழியரும் மூலச்சூடு உள்ளவர்களைப்போல் வருபவர்களிடம் எரிந்துவிழும் போக்கினால்தான் அதிகம்பேர் தனியார்வங்கிகளுக்கு மாறிவிட்டனர் அதிலும் மாதத்தின் முதல்வாரத்தில் உங்களின் அணுகுமுறை பிரமாதம்

 • Gajageswari - mumbai,இந்தியா

  Rs .2000 அனைத்தும் அரசியல் வாதிகளிடம் உள்ளது. அடுத்த election ல் அவை வெளியே வரும். மக்கள் பணமா இல்லா பரிவர்த்தனைக்கு செல்ல வேண்டும்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  எதையோ நெனச்சு எதையோ இடிச்ச கதை தான் இப்போ நடக்குது. இது எதையுமே தெரிஞ்சுக்காம மாசக் கூலிக்கு மாரடிக்கிற கூட்டமும் மதத்தின் பெயரால் ஏமாந்து நிற்கும் கூமுட்டை அப்பாவிகளும் இங்க வந்து பிரச்சாரம் பண்றானுக. பதுக்கறதால பாதிக்கப்படறது அவன் குடும்பமும் தான்னு புரியறதுக்குள்ள அவனும் பாதிக்கப்பட்டு தெருவுல தான் நிப்பான்.

 • Larson - Nagercoil,இந்தியா

  என்ன தவறு செய்தோம், செய்து கொண்டிருக்கிறோம் என்று அறியாமல், இன்னும் மார் தட்டி கொண்டிருக்கும் மத்திய அரசு.

 • Mannan - Madurai,இந்தியா

  மத்திய அரசாங்கம் நோட்டுக்களை மாற்றியதே பதுக்கல் நோட்டுகளை ஒழிக்கத் தான். அது 100% முழுமையாக வெற்றி அடைவதை தடுத்தது உங்களை போன்ற வங்கி அதிகாரிகள் தான். அரசியல்வாதியின் அடிவருடியாக செயல்படுவது, VVIPக்கு அல்லக்கையாக வேலை செய்வது, இவை எல்லாமே செய்திகளாக வெளிவந்தவை தான். எனக்கு ₹2000 கையில் கிடைத்தால் அதனை முதலில் சில்லறையாக மாற்ற வழி பார்ப்பேன். பதுக்கவா செய்வேன்? நீர் RBI ஐ குறைகூறலாம், மக்களுக்கு புரியப்போவதில்லை. ஆனால் பொதுமக்களை பதுக்கிவிடுகிறார்கள் என்று சொல்வது முட்டாள்தனம். ஒருவேளை அரசியல்வாதியை நேரடியாக சொல்லமுடியாமல் மறைமுகமாக பொதுமக்கள் என்று சொல்கிறீரோ?

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  கருப்புப் பணம் சேர்ப்பது, ஹவாலா, தங்கம் கடத்தல், இவற்றை செய்பவர்கள் பிடிபட்டால் கேஸ் போட்டு இழுத்தடிக்காமல், நிரந்தரமாக ஜெயிலில் தள்ளுங்கள்.

 • thiru - Chennai,இந்தியா

  சொம்பு நக்கி பக்தால்ஸ் இதற்கு காரணம் சொல்வார்கள் பாருங்களேன்... அரசு ₹2000 தடை செய்து ₹5000 நோட்டு வெளியிடும் என்று...

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  If the accounts are scrutinized they may be the accounts of those depositing 500 and 1000 rupees during demonetisation.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  கர்நாடகா தேர்தல் எதிரொலி. ரிசர்வ் வங்கியிலிருந்து நேராக காவி கஜானாவுக்கு அனுப்பப்படுகிறதோ

 • Mal - Madurai,இந்தியா

  Thomas Franco - he will definitely difficult times for bjp... Most of the heads in various departments, colleges n schools and institutions/ companies were all christians during UPA rule.... But no citizen would have questioned this.... Because we are all idiots.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  வாடிக்கையாளர்கள் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் பத்திரப்படுத்திவிடுகிறார்கள் ரூ 2000 நோட்டுகளை. இப்போது ரூ 2000 நோட்டுக்களாக கருப்பு பணம் பதுக்கப்படுகிறது என்பதுதான் நிதரிசனமான உண்மை. பணமாற்றலின்போது கட்டு கட்டாக 2000 ரூ நோட்டுக்கள் பின் வாசல் வழியாக மாற்றப்பட்டன தன் அதிகாரத்தை பயன் படுத்தி பலரால். இவர்கள் நிச்சயமாக பாமர மக்கள் அல்ல. ஒரு எடுத்துக்காட்டு ஆர் கே நகர் தேர்தலில் எப்படி கட்டு கட்டாக ரூ 2000 நோட்டுகள் - வோட்டுகள் வாங்க புழக்கத்தில் வந்தன.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மீட்டுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் போல இருக்கிறது... மார்ச் 31 க்கு பின்னர் செல்லாமல் போகும் என்று நினைத்தேன்...

 • ஆப்பு -

  காலங்கார்த்தாலெ எட்டுமணிக்கே ஏ.டி.எம் கள் காலியாகி விடுகின்றன....இது மக்களை வங்கியிலேயே பணமில்லை என நினைக்கத் தூண்டுகிறது. அதனால் காலை 6 மணிக்கே வந்து பணத்தை எடுத்து வீட்டில் வைத்துக் கொள்கின்றனர். மேலும் நீரவ் மோடி போன்ற ஆட்கள் அரசு, அதிகார்கள் உதவியுடன் ஆயிரம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடி விடுகின்றனர். பிரதமரோ போட்டது போட்டபடி வெளிநாடு டூர் போய்விடுகிறார். இவர் வந்ததும் ஜனாதிபதி போகிறார். வாராக்கடன் எல்லாம் மக்கள் தலையில் விடியும் என்பது தெரிகிறது. இது போறுமா? இன்னும் காரணம் வேணுமா?

 • Homer Simpson - Springfeild,யூ.எஸ்.ஏ

  இரண்டாயிரம் ரூபாய்க்கு போட்டியாக மூவாயிரம்,நாலாயிரம் ,ஐந்தாயிரம் போன்ற நோட்டுக்கள் வரலாம் என்று எதிர்பார்கலாம்.அப்புறம் கருப்பு பணத்தை ஒழிச்சிட்டோம் ,ஊழலை ஒழிச்சிட்டோம் அப்படின்னு வெட்கமே இல்லாம பேசுவாங்க.New India ,Digital India Make in India ???????????????????????

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  ஒரு வேளை கர்நாடக தேர்தல் காரணமாக இருக்கலாம். பக்தாஸ் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  500 , 1000 ஆக இருந்த கருப்பு எல்லாம் 2000 ஆக ஆக்கி பதுக்கி இருப்பானுவோ.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  மோடி அரசு currency manipulation இல் ஈடுபடுகிறது என்று அமெரிக்க கூறியது நினைவு இருக்கலாம் . எல்லாம் container பணம் பதுக்கப்படுகிறது .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement