Advertisement

ரூ.100 கோடி சர்ச்சை: சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்குமா?

சென்னை:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில் சென்னை, திருமங்கலத்தில் கட்டப்பட்ட, அரசு ஊழியர் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு, ஒன்னரை ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.
அனுமதி இல்லை:இதற்கு காரணம், மத்திய சுற்றுச் சூழல் துறையில் அனுமதியை பெறாததுதான். அனுமதி வாங்கிக் கொண்டுதான், கட்டடத்தைக் கட்டத் துவங்க வேண்டும் என்பது விதி. அதைப் பற்றி கவலைப் படாமல், ஜெயலலிதா ஆட்சி காலத்தில், வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் கூறியதன் பேரில், காண்ட்ராக்ட் விடப்பட்டு, சுற்றுச் சூழல் அனுமதி பெறாமல் கட்டினர்.தற்போது, புதிய அமைச்சராகி இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் உத்தரவின் பேரில், சுற்றுச் சூழல் அனுமதி பெற, மத்திய அரசுடன், தமிழக அதிகாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அனுமதி கிடைப்பது பெரும் சிரமம் என் கின்றனர், வீட்டு வசதி வாரிய அதிகாரிகள்.

அரசுத் தரப்புக்காக, அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்ட பின், அனுமதி வழங்கினால், அதையே காரணமாக காட்டி, தனியார் கட்டுமான நிறுவனங்கள், கோர்ட்டுக்குச் சென்று, அனுமதி கேட்கும். அதனால், தவறான முன்னுதாரணத்துக்கு காரணமாகி விடக் கூடாது என்பதாலேயே, விதிகளை தளர்த்தி அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை மறுத்து வருகிறது.

Advertisement

வாசகர் கருத்து (12)

 • thangaraja - tenkasi,இந்தியா

  பரவா இல்லை அதையும் மருத்துவமனையாக மாற்றி விடுங்கள் ..அனுமதிபெறாமல் கான்டராக்ட் விட்ட அமைச்சரை நன்கு விசாரித்து உள்ளே தள்ளவேண்டும்

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  மத்திய அரசுடன் இணக்கம்?????

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அப்போ மக்கள் வரிப்பணம் நூறுகோடி எள்ளுதான்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வைத்திய லிங்கம் இன்ஸ்டன்ட் காசு பார்க்க காண்ட்ராக்ட் விட்டார்...இப்பொழுது முழிக்கிறார்கள்... ஏன் அப்பொழுது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றம் சென்று இருக்கலாம்... அல்லது ஊடகங்களுக்கு ரகசிய தகவல் அனுப்பி இருக்கலாம்... எதுவும் செய்யவில்லை... பொதுமக்கள் பணம் வீண்...முன்னுதாரணம் ஆகாமல் இருப்பது மிகவும் நன்று...

 • Gajageswari - mumbai,இந்தியா

  மத்திய அரசின் முடிவு சரியானது

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  இந்த ப்ராஜெக்ட் அனுமதி வழங்கிய அமைச்சர் அதிகாரிகள் ஆகியோரை கைது செய்து உள்ளே தள்ளுங்கள்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வவுத்து லிங்கம் சட்டத்தை மீறி கட்டி இருக்கிறார்... மந்திக்குத்தான் அறிவில்லை - அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

 • ஆப்பு -

  அம்மாஆட்சி... பொற்காலமாச்சே... காண்ட் ராக்டர்களுக்கு.....

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  சுருக்கமாக சொன்னால் வைத்திலிங்கம் ஒரு 30 அல்லது 40 கோடிகள் சுருட்டிவிட்டு சென்றுவிட்டான். இப்போது தமிழக மக்கள் தலையில் அது விழ போகின்றது.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ஸ்டெரிலைட்டுக்கே அனுமதி கொடுத்த அசகாயசூரர்கள் அவர்கள். மாசாவது, மண்ணாங்கட்டியாவது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அனுமதி கொடுக்கும் "உன்னத" கொள்கை உள்ள துறை அது. அரசு தரப்பில் லஞ்சம் கொடுக்கமாட்டார்கள் அதனால் தங்கள் கொள்கையை விட்டு தராமல் அடம் பிடிக்கிறார்கள். அரசு தனது பிடிவாதத்தி தளர்த்திக்கொண்டு லஞ்சம் கொடுத்தால் வேலை நிச்சயம் நடக்கும்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அதானே, தனியார்களும், அதையே க்ளைம் பண்ணுவார்களே?, சரியான முந்திரி கொட்டை தனமால்ல போய்யிடுச்சு?. பேசாம, அந்த வீடுகளை, அரசு கல்லூரி மாணவர்களின் தனி விடுதிகளாக மாத்திடுங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement