Advertisement

900 ஆண்டு வறட்சியால் அழிந்த சிந்துசமவெளி நாகரிகம்

புதுடில்லி : சிந்து சமவெளி நாகரிகம் 900 ஆண்டு கால வறட்சியாலேயே அழிந்ததாக கோரக்பூர் ஐஐடி மாணவர்களின் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5000 ஆண்டுகள் மழைப் பொழிவு நிலவரம் குறித்து நிலவியல் மற்றும் புவி இயற்பியல் மாணவர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.

4,350 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் 900 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வறட்சி நிலவியதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மழைப்பொழிவு சிறப்பாக இருந்த இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயரத் தொடங்கியதாகவும், கங்கை மற்றும் யமுனை பள்ளத் தாக்குகள், கிழக்கு மற்றும் மத்திய உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், தெற்கு குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (18)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மிக பெரிய மன்னார் புயல் அடித்து நகரம் புதையுண்டது என்றும் அதன்பிறகு மழை பொழிந்து அப்படியே மணல் திட்டாகி போனதாக அல்லவா ஆராய்ச்சிகள் சொல்லின. அதை முன்கூட்டியே அறிந்ததால் அவர்கள் என்றோ அண்டைய தொலைவு பகுதிக்கு புலம் பெயர்ந்ததாகவும் சொல்லினார்களே. இதில் ஐராவதம் மகாதேவனின் கருத்துக்கள் மற்ற ஆராய்ச்சி்யாளர்களின் கருத்துக்களை விட மாறாக இருந்தாலும் அதை அப்படியே ஒதுக்கத்தக்கதல்ல என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவார்கள். ஒருமுறை ராஜஸ்தான் சென்றபோதும் சரஸ்வதி நதியை பற்றிய பேச்சு வந்த போதும் வரலாற்றை பற்றி அவர்கள் கூறியது ஞாபகம்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  வறட்சியால் அழிந்தது அந்தக்காலம்....."தண்ணி"யால் அழிந்து கொண்டிருப்பது இந்தக்காலம்.....

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  பாதிரிகள் வந்துதான் இந்தியா கலாச்சாரம் கற்றது என்பது டூபாக்கூர்த்தானே

 • Barakathulla - Singapore,சிங்கப்பூர்

  அந்த காலத்தில் ஒருவர் இருந்து எல்லா நீர் வளங்களையும் யாருக்கோ தாரை வார்த்து இருப்பார்கள்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஐயா, அந்த சிந்து நதியின் கரையோரங்கள், அன்றைக்கு, இந்தியவுக்குக்கான நுழை வாயில்கள் போல இருந்ததால், அந்த நகரம் ஓரளவு செல்வ செழிப்பாக இருந்ததால், அந்த நகரின், வடக்கு, வட கிழக்கு மற்றும் வட மேற்கு நாடுகளில் வாழ்ந்தவர்கள், அங்கு அடிக்கடி படையெடுப்புக்கள் நடத்தி, சொல்லொண்ணா துயரங்களுக்கு, அந்த மக்களை உட்படுத்தியதால்தான், அம்மக்கள், நிம்மதியாக வாழவும், தங்கள் வாரிசுகளை காப்பாற்றிடவும், செல்வங்கள் மற்றும் கால்நடைகளை(ஆடுகள், மாடுகள்) காப்பாற்றிடவும், இப்படி ஓர் அழகிய நகரை விட்டு இடம் பெயர்ந்திருப்பார்கள் எனலாம், அடிக்கடி ஆற்று வெள்ள பெருக்கும் மற்றும் கடும் வறட்சியும் ஏற்ப்பட்டதனால், அவைகளை சமாளிக்க முடியாமல், வெளியேறினார்கள் என்பது, யூகத்தின் அடிப்படையிலானது எனலாம். அந்த காலங்களில், மலேரியா காய்ச்சல், அம்மை நோய்கள், காலரா நோய்கள் மற்றும் எலிகளால் உண்டாகும் கொல்லை நோயினாலும் கூட, அந்த மக்கள் இடம் பெயர்ந்து இருப்பார்கள் எனலாம். எந்த சமூகமும், தன் சமூகத்திற்கு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிகளுக்கு, அடிக்கடி தடைகள் வரும் போது, அதற்கு பதில், ஓர் மாற்று வழிகளை தேடுதல் என்பது இயற்க்கையாக எங்கும் நடப்பதுதானே?. இன்றைக்கு கூட, ஈழ தமிழர்கள் பல ஆயிரம் பேர்கள், பற்பல நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறார்கள் அல்லவா?. இதையே, ஒரு உதாரணமாக, சிந்து சமவெளி நகருக்கும் எடுத்துக்கலாமே?.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஆரியர்கள் திராவிடர்களின் அணைகளை உடைத்து நீரை வெளியேற்றி பஞ்சம் உண்டு பண்ணிவிட்டார்களோ

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  திராவிடன் ஆண்டால் தொண்ணூறு ஆண்டுகளில் தமிழகமே மறைந்துவிடும்

  • Raj Pu - mumbai,இந்தியா

   சிந்து சமவெளிக்கு பிறகு ஆரியர்கள் தான் ஆண்டார்கள், முகலாயர்கள் கிருத்துவர்கள் என்று தான் வந்தார்கள்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  ஆரியர்கள் படையெடுப்பால் தான் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்தது . காவி ஆட்சியில் இப்படி புது புது வரலாற்று மோசடிகள் நடக்கும் .

 • hussain - cuddlore,இந்தியா

  தமிழ் நாட்டையும் இதுப்போல் அழிக்க தான் மத்திய மானில அரசுகள் கங்கனம் கட்டிக் கொண்டு தமிழ் நாட்டை கார்ப்ரேட் காரர்களிடம் அடகு வைத்து விட்டது. ஆனில் இதை நடக்கவிடாமல் தமிழ் மக்களாகிய நாங்கள் உயிர் கொடுத்து காப்பாறுவோம்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   யார் தமிழ்மக்கள்? வீட்டில் இந்தி பேசிக்கொண்டு, அரபியில் தொழுதுகொண்டு உள்ளவர்களா? தேவையே இல்லை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

  • Ram Sekar - mumbai ,இந்தியா

   பேய்க்கு பயந்து போய் சீமான், திருமுருகன் மாதிரி பூதங்களிடம் நாட்டை அடகு விடுங்கள்

  • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

   இன்னும் எத்தனை நாள்தான் பாய் இந்த பயத்துல இருப்பிங்க ?? யார் ஒங்களுக்கு இந்த கதையை சொன்னது ?? தி மு க கூட்டமா ?? என்ன அவர்கள்தான் எல்லாத்தையும் காங்கிரஸோடு ஆரம்பிச்சார்கள் ..பயப்படாதீங்க இப்போ ஆட்சி மாறிடிச்சி ...

  • Raj Pu - mumbai,இந்தியா

   சமஸ்கிருதம் ஹிந்தி மேன்மை பற்றி பேசி தமிழை ஒழிப்பவர்கள் தான் தமிழர்கள் சரியா சேரன் பெருமாள்

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   நீ சமஸ்க்ரிதத்தில் சாமி பூஜை செய்யுற , அவன் அரபியில் பாட்டு பாடுறான் . தமிழை விட அரபி தான் உயர்ந்தது என்று சொன்னால் அவன் தமிழன் இல்லை . அதே போல தமிழைவிட சமஸ்க்ரிதம் தான் உயர்ந்து என்று சொல்லுபவனும் தமிழன் இல்லை .

  • S Ramkumar - Tiruvarur,இந்தியா

   சமஸ்க்ருதம், ஹிந்தி பேசுபவர்கள் வீட்டில் நன்றாக தமிழ் பேசி கொட்டிண்டுதான் உள்ளோம். தமிழ் தமிழ் என்று கூவுபவர்களால் தான் தமிழ் கேட்டது. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் மீடியம் வகுப்புகளில் எதனை பேர் சேர்த்தார்கள் என்று கணக்கு எடுங்கள். பிறகு புரியும்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  This Sindhu Samaveli Civilisation revealed the lazyness of the ancient people and they did not bother to meet the challenges of the nature and just shifted to the fetilile lands for their livelyhood like Nadodigal. But we are reading that Civilisation and praising those people for their civilisation.Comparing to those people we are thousands time better and leading peaceful and happy lives by meeting all natural calamaties ,pollution,unbearable heat,more rain and failure of rain in time.etc.

  • Subramanian S - Chennai,இந்தியா

   நாம் அனுபவிக்கும் இயற்க்கை சீர்கேடுகள் சமீப காலம் மட்டுமே, இதற்குள் நாம் நமது வேதனையை பதிவிடுகிறோம். இப்பொழுது வெளியாகி இருக்கும் கட்டுரை உண்மை என்றால், தொளாயிரம் (900) வருட வறட்சி என்பது கிட்ட தட்ட 10 முதல் 15 தலைமுறைகளை பாதித்து இருக்கும். இதில் அவர்களுக்கு இடம் பெயர்வது தவிர வேறு எந்த வழியும் கிடையாது. நமக்கு இந்நிலை ஏற்படின், நாமமும் இதைத்தான் செய்வோம். உண்மை யாதெனில், நிலவவிற்கும், செவ்வாய் கிரகத்துக்கு குடி பெயர்வதற்க்கான முயற்சிகளை ஆரம்பித்தும் விட்டோம். சிந்து சமவெளி மக்களின் கட்டுமான சாட்சியங்கள், அவர்கள் பல பல இயற்க்கை சீர் கேடுகளை (சுனாமி, கடும் வறட்சி, வெள்ளம், வேறு பல...) தாங்கி நான்காயிரம் முதல் ஆறாயிரம் ஆண்டுகள் வாழுந்து வந்துள்ளனர் என்பது உண்மை (இவை எல்லாம் கிமு என்பது குறிப்பிட தக்கது). இவர்கள் தமிழ் பேசியதாகவும் சில அறிவியலார் கூறுகின்றனர் (ஐராவதம் மஹாதேவன், பர்போலா, மற்றும் சிலர்). இச்சமூகத்தின் சிறப்புகளை அறிய: www.harrappa.com என்ற இனைய தளத்தை காணவும். இவர்களின் சிறப்பு அறியாமல், இவர்களின் வாழுவுமுறை அறியாமல், இவர்களின் கட்டிட கலை பற்றி அறியாமல் முயற்ற்சி செய்யவில்லை என்ன கூறுதல் சரியன்று.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement