Advertisement

12 மாதத்தில் 12 செயற்கைகோள்: இஸ்ரோ மெகா திட்டம்

புதுடில்லி : 2018 ம் ஆண்டில் 12 மாதங்களில் 12 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் சந்திரயான் 2, இன்சாட் 2, இன்சாட் 29 உள்ளிட்ட செயற்கைகோள்களும் அடங்கும்.

ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி உள்ளிட்ட ராக்கெட்களும் இதில் அடங்கும். ஜனவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை ஏற்கனவே 3 முக்கிய செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அடுத்த 8 மாதங்களில் 9 முக்கிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மாதத்திற்கு ஒரு செயற்கைகோள் வீதம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரோ, அது குறித்த விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • ganapati sb - coimbatore,இந்தியா

    அருமை isro அறிவியல் அறிஞர்களின் ஆக்கபூர்வமான பணி தொடரட்டும் மேலும் அமெரிக்க google map gps போன்றவற்றிற்கு இணையாக மற்றும் ஒரு இந்திய கட்டுப்பாட்டில் செயல்படும் நில வழிகாட்டி செயல் படுத்த பட வேண்டும் அப்போதுதான் ஏதேனும் போர் பேரிடர் போன்ற அவசர காலத்தில் அவற்றின் சேவை தடை பட்டால் நமது தொழில் நுட்பம் கொண்டு தாக்குதல் தேடுதல் பணியை தொடர முடியும்.

  • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

    மாதம் ஒரு தீபாவளி தான்

  • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

    maatham oru deepaavali thaan

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வந்துவிடுமா? இந்தியாவில் பெண்களும், குழந்தைகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது நிறுத்தப்பட்டு விடுமா? எத்தனை செயற்கைகோள் ஏவி என்ன புண்ணியம்? இந்தியாவின் மானம் விண்ணை தாண்டி பறக்கிறதே

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    விலைவாசியை குறைக்கவும்,,, வறுமையை ஒழிக்கவும் ஏதாவது திட்டம் இருந்தால் அதை நமது பிரதமரிடம் சொல்லுங்களேன்

  • senapathy n - CHENNAI,இந்தியா

    இப்போ நடந்து வருகிற மணற்கொள்ளை சாராய கொள்ளைகளை பற்றி யாரையும் கேட்க வக்கில்லை இந்த லட்சணத்துல அம்பானி அதானி என்று கற்பனை?

  • அசோக் வளன் - Chuan Chou,சீனா

    மக்கள் வரி பணத்துல ராக்கெட் விட்டு எந்த எந்த ஊர்ல எந்த எந்த இடத்துல என்ன என்ன வளங்கள் இருக்குனு கண்டு பிடிச்சி அம்பானிக்கு அடானிக்கும் குடுத்துட்டு கமிஷன் வாங்க வேண்டியது ... அப்புறம் வரி கட்டுன மக்களை அடிச்சி காலி பண்ணிட்டு வளங்களை கொள்ளை அடிக்க வேண்டியது , வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துட்டு அதுலயும் பணம் பாத்துர வேண்டியது ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement