Advertisement

சேலம் கோயில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி

சென்னை : உடல் நலம் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

கோயில் யானை ராஜேஸ்வரி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தது. இந்த யானையை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. யானைக்கு இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை ஐகோர்ட், யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளித்துள்ளது.

மேலும், யானையை பரிசோதித்து 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு விதிகளுக்கு உட்பட்ட கருணை கொலை செய்யும் நடைமுறைகளை பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (8)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    ஐயகோ

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    கருணைக் கொலை மகா மட்டமான செயல்.அதை செய்ய யாருக்கும் உரிமையில்லை.சாகும் வரை அந்த கோவில் யானைக்கு pain killer ஊசி போட்டு அதை பராமரிப்பதே அஹிம்சை.

    • Raj Pu - mumbai,இந்தியா

      இதற்க்கு ஏதாவது பரிகார பூஜை , செய்யலாம் சீர்

  • ஆப்பு -

    நீதியரசர்களுக்கு யனையை கோவிலில் கட்டி வைப்பது தவறுன்னு தெரியாம போனது பரிதாபம். மாட்டுக்கு நடப்பதை விட பெருங்கொடுமை இது. எந்த சாமி யானையைக் கோவிலில் கட்டி வெய்யுங்கன்னு சொல்லிச்சு?

  • ديفيد رافائيل - مدری,இந்தியா

    அய்யோ பாவம் அந்த பெண் யானை

  • suresh - chennai,இந்தியா

    யானைகள் கூட்டமாக வாழும் குணாதிசயம் கொண்டது, ஒவ்வொரு கூட்டத்திலும் பெண் யானைகளே வழி நடத்தும், அதன் இயற்கையான அதன் குணாதியத்திற்கு மாறாக அதனை இவ்வாறு கோவில்களில் தனியே சங்கிலியால் கட்டி வைப்பது கொடூரம், பசுக்களுக்கு குரல் கொடுக்கும் காவிகளும், காளைகளுக்கு குரல் கொடுக்கும் பீட்டாவும் இதனை கண்டு கொள்ளாது, காரணம் இது மதம் சம்மந்தப்பட்டது.. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், அந்த கோவிலில் யானை வேண்டும் என கேட்டார்களா? இல்லை எனது ஆலயங்களில் யானைகளை கட்டி வையுங்கள் என இறைவன் தான் சொன்னானா? யாருக்காக யானைகள் இப்படி சங்கிலிகளால் கட்டி வைக்கப்படுகின்றன? பசுக்களை கட்டி வைக்கலாம்...பக்தர்கள் அதற்க்கு உணவு அளிப்பார்கள்,,,பசுக்களுக்கு பாதுக்கான இடமாக உணவும் கிடைப்பதால்,,,அதனை மகிழ்ச்சியோடு பசுவும் ஏற்று கொள்ளும்...நிச்சயம் யானைகள் மனதால் அதனை ஏற்று கொள்ளாது.

    • Raj Pu - mumbai,இந்தியா

      சர்க்கஸில் யானை புலி சிங்கம் கூடாது என்று வழக்கு பொது விலங்குகள் சங்க பொறுப்பாளர்கள் இது போல யானைகளை கோவில் ஊர்வலங்களும் பிச்சை எடுப்பதற்கும் பழக்கி இது போல நடத்தலாமா ??

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    லஞ்சத்தில் ஊறி விட்ட இந்த அரசு இந்த வனவிலங்குகளை இப்பிடித்த்தான் பாதுகாக்கிறது... கோயிலை பராமரிப்பவர்களும் காசு பார்க்கிறார்களே ஒழிய இவற்றை பேணி காப்பதில்லை...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement