Advertisement

ஏர்போர்டில் மர்ம பை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால், பயணியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின், புறப்பாடு பகுதியின், ஒன்றாவது வாயிலில், மர்ம பை ஒன்று வெகு நேரமாக கிடந்தது. அதைப்பார்த்த, சி.எப்.எஸ்., அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், பையை சோதனை நடத்தினர். அதைப் பார்த்த பயணியர், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, ஒன்றாவது நுழைவு வாசல் மூடப்பட்டு, பயணியர் மாற்று வழியாக அனுப்பப்பட்டனர். மர்ம பையை சோதனையிட்டதில், அதன் உள்ளே, வெறும் துணிகள் மட்டுமே இருந்தன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement