Advertisement

ஜிம்னாஸ்டிக் கிளப்பில் கூரையை மாற்ற அனுமதி

சென்னை: மாநகராட்சிக்கு சொந்தமான இடம், தியாகராய நகர், ஜிம்னாஸ்டிக் கிளப்புக்கு, குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போது, பழுது பார்ப்பதாக கூறி, கட்டடத்தில் மாற்றம் செய்வதாக, மாநகராட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பழுது பார்க்கும் பணியில் குறுக்கிட, மாநகராட்சிக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில், கிளப் நிர்வாகம் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த, நீதிபதிகள், சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், 'சேதமடைந்த, ஆஸ்பெஸ்டாஸ் கூரையை மாற்றிக் கொள்ள, மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கூரையை மாற்றுவதாக கூறி, கட்டடத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது; புதிதாக கட்டுமானம் எதுவும் கூடாது' என கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement