Advertisement

அடுக்குமாடி குடியிருப்பில் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு

சென்னை: சென்னை, தண்டையார்பேட்டையில், குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் கட்டப்பட்ட, கூடுதல் கட்டுமானங்களை அகற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டையார்பேட்டையில், குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசிக்கும், திருஞானசம்பந்தமூர்த்தி என்பவர், தாக்கல் செய்த மனுவில், 'பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட காலியிடத்தில், மகாலட்சுமி என்பவர், சட்டவிரோதமாக கட்டுமானம் செய்துள்ளார்; அதை அகற்ற வேண்டும்' என, கூறியுள்ளார்.
மனு, நீதிபதிகள், சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
வாரியம் சார்பில், 'ஒதுக்கீடு பெற்றவர்களிடம்இருந்து, மனுதாரரும், மகாலட்சுமியும் வீடுகளை வாங்கி உள்ளனர். இதற்கு, வாரியத்தின் அனுமதி பெறவில்லை. திறந்த வெளி இடத்தை, இருவருமே ஆக்கிரமித்து, கட்டி உள்ளனர். போலீஸ் உதவியுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன், ௧௨ வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, குடிசை மாற்று வாரியத்துக்கு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement