Advertisement

அமெரிக்காவில் மாயமான இந்திய குடும்பம் : மீட்கப்பட்ட பெண் உடலால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின், யேல் நதியில் மூழ்கியதாக அஞ்சப்படும், ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் நான்கு பேரை, மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தீப் தொட்டப்பில்லி, 41; இவர், அமெரிக்க வங்கியில்,
பணியாற்றி வந்தார்.
இவர், மனைவி, சவும்யா, 38; மற்றும் மகன்கள் சித்தாந்த், 12; சாச்சி, 9, ஆகியோருடன், ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வந்தார்.
விடுமுறையை கழிப்பதற்காக, தெற்கு கலிபோர்னியாவின், சான் ஜோஸில் உள்ள நண்பர் வீட்டிற்கு, சந்தீப், குடும்பத்துடன் புறப்பட்டார். சாலை வழியாக பயணம் செய்த சந்தீப்பின் குடும்பத்தினர், குறிப்பிட்ட நேரத்தில், நண்பர் வீட்டிற்கு வந்து சேரவில்லை.
அவர்களை மீட்புப் படையினர் தேடத் துவங்கினர்; அந்தப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக, யேல் நதியில்,
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில், ஒரு கார் மூழ்கியதாக தகவல்
வெளியானது. அது சந்தீப்புடையதாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
யேல் நதியில்
நடந்த தேடுதலில், காரின் உதிரி பாகங்கள் கைப்
பற்றப்பட்டன.
நடுத்தர வயது பெண் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் யார் என்ற விபரம், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என போலீசார்
தெரிவித்தனர்.
காணாமல் போன நான்கு பேரை தேடி வரும் நிலையில், ஒரு பெண்ணின் உடல் கிடைத்திருப்பது, பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement