Advertisement

அயர்லாந்தின் உயரமான 'டவர்' : 47 ஆண்டுகளுக்குப்பின் திறப்பு

டப்ளின்: அயர்லாந்தின் உயரமான 'டவர்', 47 ஆண்டுகளுக்குப் பின், பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.ஐரோப்பிய நாடான அயர்லாந்தின் தலைநகர் டப்ளின். இங்கு 155 அடி உயரம் கொண்ட 'ஓகான்னெல் டவர்' உள்ளது. இது அந்நாட்டின் உயரமான டவர் என்ற பெருமைக்குரியது.1855ல் கட்டப்பட்டது. வட்ட வடிவம் கொண்டது. 19ம் நுாற்றாண்டில் அயர்லாந்து மக்களின் சமஉரிமைக்காக போராடியதலைவர் டேனியல் ஓகான்னெல், நினைவாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. டவரின் அடிப்பகுதியில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.டவரின் மேல்பகுதிக்கு செல்ல, மரத்தால் ஆன, 198 படிக்கட்டுகள் உள்ளன. மேல்பகுதியில் நின்று, டப்லின் நகரின் முழு அழகை (360 டிகிரி) ரசிக்கலாம். மேலும் அருகிலுள்ள விக்லோ மற்றும் மீத் பகுதிகளையும் பார்க்கலாம். அந்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கியது. இந்நிலையில் 1971ம் ஆண்டு, இங்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் டவரின் அடிப்பகுதி மற்றும் உட்பகுதிகள் சேதமடைந்தன. சில அமைப்புகள், இதற்கு பொறுப்பேற்றன. ஆனால் தாக்குதலில் யார் ஈடுபட்டது என்ற விபரம், இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 2016ல் தனியார் நிறுவனம் இதனை, பழமை மாறாமல் சீரமைக்கும் பணியைத் தொடங்கியது. பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 47 ஆண்டுகளுக்குப்பின் டவர், சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட்டது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement