Advertisement

நடுவானில் விமான ஊழியரை பிணைக்கைதியாக பிடித்த பயணி

பீஜிங்: சீனாவில், ஹுனான் மாகாணத்தின் சாங்ஸா நகரில் இருந்து, தலை
நகர் பீஜிங்கிற்கு, பயணியர் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது, அந்த விமானத்தின் ஊழியர் ஒருவரை, பயணி ஒருவர், பேனாவை ஆயுதமாக பயன்படுத்தி, பிணைக் கைதியாக பிடித்து வைத்தார். இதையடுத்து, அந்த விமானம், ஸெங்ஸோ நகர விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து, விமான நிலையத்தின் பாதுகாப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சிறிது நேரத்துக்கு பின், ஸெங்ஸோ நகரில் உள்ள விமான நிலையத்தில், அந்த விமானம் தரையிறங்கியது. அங்கே தயாராக இருந்த பாதுகாப்பு போலீசார், அந்த விமானத்தை சூழ்ந்து நின்று, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். அதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணியர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விமான ஊழியரை பிணைக்கைதியாக பிடித்த பயணி பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement