Advertisement

நீதிபதி வீட்டின் மீது துப்பாக்கி சூடு

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்குகளை கண்காணித்து வரும், உச்ச நீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது, நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.பாக்., முன்னாள் பிரதமர்,நவாஸ் ஷெரீபும், அவரது குடும்பத்தினரும், முறைகேடாக சேர்த்த பணத்தை, வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.இந்த வழக்கை, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. நவாஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை பிரதமர் பதவியில் இருந்து, நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பதவியில் இருந்தும்,நீதிமன்றத்தால்,அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.அவர் தேர்தலில் போட்டியிட, வாழ்நாள் தடை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில், நீதிபதி இஜாஸ் உல் ஆசன் என்பவர் இடம் பெற்றிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை கண்காணிக்கும் பொறுப்பு, இவரிடம் வழங்கப்பட்டது.இந்நிலையில், லாகூரில் உள்ள, நீதிபதி, இஜாஸ் உல் ஆசனின், வீட்டின் மீது, அடையாளம் தெரியாத சிலர், நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. வீட்டின் வாசல் பகுதி மற்றும் சமையலறை ஜன்னல் மீது, குண்டுகள் துளைத்துள்ளன.இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement