Advertisement

எம்.டி.சி., வேண்டாம் என 12 லட்சம் பயணியர்... புறக்கணிப்பு! கட்டணம் உயர்த்தியும் 60 சதவீதமானது நஷ்டம்

சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளின், தவறான நடவடிக்கைகளால், மாநகர பேருந்துகளை பயன்படுத்திய, 12 லட்சம் பேர், பிற போக்குவரத்தை பயன்படுத்த துவங்கி உள்ளனர். கட்டணம் உயர்த்தியும், நஷ்டம், 40 சதவீதத்தில் இருந்து, 60 சதவீதமாக அதிகரித்திருப்பது, நிர்வாகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம், 3,000க்கும் அதிகமான பஸ்களை இயக்கி வருகிறது. மொத்தம், 22 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு, 50 கி.மீ., சுற்றளவில் உள்ள, 42 லட்சம் பயணியருக்கு, சேவை வழங்கப்படுகிறது.

42 லட்சம் பேர் :



இதில், டீலக்ஸ் பேருந்து, எக்ஸ்பிரஸ் பேருந்து, சாதாரண பேருந்து என, மூன்று விதமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும், பேருந்தின் தரம், சேவை, கட்டண அடிப்படையில் வித்தியாசப்படும். இந்த வகை பேருந்துகளில் டீலக்ஸ், குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டும் நின்று, விரைவாக செல்லும். அதில், இருக்கைகள் வசதியாகவும், மேடு, பள்ளங்களில் அதிக குலுக்கல் இல்லாமலும் பயணிக்கும்.

எக்ஸ்பிரஸ் பேருந்துகள், சில பேருந்து நிறுத்தங்களில் மட்டும் நின்று, விரைவாக செல்லும். சாதாரண கட்டண பேருந்துகள், அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும். பெரும்பாலும், பழைய பேருந்துகள் இந்த சேவையில் இணைக்கப்படும். இவ்வாறு, மூன்று வித பேருந்துகளை முறையாக இயக்கிக் கொண்டிருந்த போது, தினமும், 42 லட்சம் பேர் பயணித்து வந்தனர்.


இந்நிலையில், சேவை, தரம் ஆகியவற்றில் வேறுபாடு இல்லாமல், சமீபகாலத்தில், அனைத்து பேருந்துகளும், சாதாரண பேருந்துகளைப் போலவே, அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதோடு, அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுகின்றன. இதனால், அதிக கட்டணம் செலுத்தி, சொகுசு மற்றும் விரைவு பேருந்துகளில் பயணிப்போர், நடத்துனர்களிடம் புலம்பி வந்தனர்.

கடந்த ஜனவரியில், 60 சதவீதம் வரை, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது, சொகுசு பேருந்துகளில், 11 ரூபாயில் இருந்து, 47 ரூபாய் வரையும், விரைவு பேருந்துகளில், 7 ரூபாயில் இருந்து, 34 ரூபாய் வரையும், சாதாரண பேருந்துகளில், 5 ரூபாய் முதல், 23 ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

உயர்வு :



இந்த கட்டண உயர்வால், சென்னையில், பல இடங்களுக்குச் செல்லும் பயணியர், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து கட்டணம் இவ்வாறு இருக்க, சென்னை கடற்கரையில் இருந்து, தாம்பரம், வேளச்சேரி வழித்தடங்களிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் வழித்தடங்களிலும், மின்சாரம் மற்றும் பறக்கும் ரயில் சேவை உள்ளது.

அதில், சாதாரண பேருந்து கட்டணத்தை விட, கட்டணம் பாதியாக உள்ளதால், கடந்த மூன்று மாதங்களில், ரயில் பயணியரின் எண்ணிக்கை, 11 லட்சத்தில் இருந்து, 14 லட்சமாக உயர்ந்துள்ளது. சென்னையில், 10 ஆயிரம் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில், தினமும், 2.5 லட்சம் பேர் பயணித்த நிலையில், தற்போது, 5 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

கால் டாக்சி உள்ளிட்ட வாடகை வாகனங்களில், 1.5 லட்சம் பேர் கூடுதலாக பயணிக்கின்றனர். பலர், சொந்த வாகனங்களுக்கு மாறி உள்ள நிலையில், தொலைதுாரங்களில் இருந்து பணிக்கு செல்வோரில் பலர், பணியிடத்துக்கு அருகிலேயே, குடியிருப்பை மாற்றி உள்ளனர். இவ்வாறான காரணங்களால், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், தற்போது, 30 லட்சம் பயணியர் மட்டுமே பயணிக்கின்றனர்.


ஏற்கனவே, மாதம் ஒன்றுக்கு, 2.25 கோடி ரூபாய் வசூலான நிலையில், கட்டண உயர்வுக்குப் பின், சராசரியாக, 2.60 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகிறது. அதாவது, கட்டண உயர்வுக்கு முன், 40 சதவீதம் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், தற்போது, ஊழியர்களுக்கான சம்பள உயர்வும் வழங்கப்படுவதால், நஷ்டம், 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து, பயணியர் கூறியதாவது: சென்னையில், பொது போக்குவரத்தாக, ரயில்களும், பேருந்துகளும் உள்ளன. அதில், ரயில் சேவை, நாளுக்கு நாள் மேம்படுத்தப்படும் நிலையில், பேருந்துகளின் சேவை மிகவும் மோசமாக உள்ளது.

வழித்தடம் :



குறிப்பாக, பேருந்துகள் பழுதாகி நிற்பது, குறிப்பிட்ட நேரத்துக்கு வராதது, பயணியரை மதிக்காதது, டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகளை காலியாக இயக்குவது உள்ளிட்ட செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அவர்கள், ஷேர் ஆட்டோ முதலாளிகளிடம், கமிஷன் பெற்று, 12சி, 17சி, 37ஜி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களை, பயணியரிடம் கருத்து கேட்காமல் நிறுத்தி உள்ளனர். இதனால், ஒவ்வொரு நாளும், பல லட்சம் பயணியர், பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், புதிய பேருந்துகளை, வழித்தடங்களில் இயக்கும் வரை, அனைத்து பேருந்துகளையும், சாதாரண கட்டண பேருந்துகளாக இயக்கினால் மட்டுமே, தங்களின் பயணியரை தக்க வைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (13)

  • Mal - Madurai,இந்தியா

    Privatize buses. This should only ensure good buses and good profit without any unions and strikes.

  • அசோக் வளன் - Chuan Chou,சீனா

    வசூல் கூடி இருக்கு ஆனா நஷ்டமும் கூடி இருக்கு .... குமாரசாமி கணக்கா இல்லே இருக்கு . அந்த டூப்ளிகேட் டிக்கெட்களை தடுக்க வேண்டும் .. மற்ற மாநிலங்களை போல e-ticket கொடுக்க வேண்டும் ...அதெல்லாம் செய்ய மாட்டார்கள் ... தனியாரிடம் விட வேண்டிய வேலைகள் எல்லாம் ஜரூராக நடக்கிறது ....

  • BravinLr -

    மாநகர பேருந்து கட்டணத்தை விட குறைவாக யார் பொதுமக்களுக்கு சேவை செய்தாலும்,அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் நடுத்தெருவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.இப்படிக்கு மக்கு அமைச்சர்.

  • Manian - Chennai,இந்தியா

    திருடர்கள் கழக கொள்ளை கூடடமே இந்த மாநகர பேருந்துகளை நடத்துகின்றனர். மக்கள் இதை புறக்கணிப்பதே மேல். தனியார்கள் கமிஷன் கொடுத்து நாலா சேவை செய்வார்கள். கூட்டுக்கொள்ளை தானாகவே அடங்கும்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    சட்டவிரோத ஷேர் ஆட்டோக்களால் மக்களும் ஆபத்து அரசுக்கும் வருவாயிழப்பு மூன்று பேர் பயணிக்கும் சாதாரண ஆட்டோவின் உரிமம் பெற்று பதினைந்து பேர்வரை ஏற்றி ஆபத்தாக ஓட்டுவது தொடர்கிறது. இவர்களுக்கு திமுக அதிமுக இருவரின் ஆதரவும் உள்ளது. பல தடங்களில் அதிக மினிபஸ் இயக்கினாலே பிரச்னைகள் தீர்ந்திருக்கும் .பொதுப்போக்குவரத்து சம்பந்தமாக முடிவெடுக்க இருபதாண்டுககளாகவே தங்கியதால் இரு சக்கரவாகனங்கள் பெருகி நடுத்தர வகுப்பினர் பஸ்களையே தவிர்க்கும் நிலை வந்துவிட்டது . ஊழல் மனோநிலை இரு கழகத்தாருக்கும் போகாது. தனியார் வாகன உற்பத்தியாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பஸ் போக்குவரத்தை திட்டமிட்டு சிதைத்தது அவசியமற்ற மேம்பாலங்கள் கட்டியபோதே உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கியது .இனி போக்குவரத்துப் பிரச்னைகளுக்கும் விடிவு காலமுமில்லை .ஒரே வழி மாநகரங்களில் தனியார் வண்டிகளுக்கான பதிவு மற்றும் ஆண்டுகட்டணங்களை உயர்த்துவதுதான் இப்போதிருக்கும் அதிக பட்ச வண்டிகளால் போக்குவரத்து நெருக்கடியும் விபத்துகளும்தான் மிச்சம்

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் காரில் செல்லும்போது ஷேர் செய்வதால் பெட்ரோல் செலவு குறையும்.

    • SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்

      தனியாக பங்களாவில் வசிப்பவர்கள் காரில் செல்லமாட்டார்களா

    • Manian - Chennai,இந்தியா

      அது ரொம்ப கொறைச்சல் தம்பி. சாகப் போறவன்தான் சர்க்கசு வித்தை காடடா இரு சக்கரவாகனத்திலே போறானுக. பிங்களாக்காரன் ரோட்டிலே அடி பட்டு சக மாடடானுக. ரத்த அழுத்தம், நெஞ்சுவலி, டயபடியசுன்னு ஆசுபத்திரிலே போய்த்தான் சாவானுக. கவலையை விடுங்க பாய்.

    • Manian - Chennai,இந்தியா

      அது இருக்கட்டும், இப்போ இரு சக்கர வாகனமா வச்சுக்கிட்டு, வேலை இல்லாம திரியுற பயல்களும், பின் சிஐடி வாடகைக்கு விட்டு, அவனுகளே ஒட்டி காசு பார்க்கலாமே. அதுவும் ஓரு இரு சாகர குடிசை தொழில்தான். உடுக்கு ஆப்பிலே கூபடா வந்த கூட்டி போயி திரும்ப கொண்டாந்து விடட நல்ல இருக்குமே. எனா, பொம்பளை பசங்ககளை இப்படி சவாரி செய்ய அனுமத்திக்க கூ டாது. அதஹுக்கு மகளிர் சர்விசு விடலாம். அக்கா மோதகம் வேலை இல்ல திண்டாட்டம் குறையும்.

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    மின்சார ரயில் கட்டணமும் பாசஞ்சர் ரயில் கட்டணமும் மிக மிக குறைவாக உள்ளது. மாதாந்திர சீசன் டிக்கெட் மூன்று மாத சீசன் டிக்கெட் வாங்கினால் அதை விட குறைவு. மின்சார ரயில்களால் டீசல் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது.

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    சொகுசு பேருந்துகள் சொகுசு தன்மையை இழந்தாலும் சொகுசு கட்டணம் தான் வசூலிக்க படுகிறது.சென்னை மதுரை நாகர்கோயில் நகரங்களில் இந்த பிரச்சனை உள்ளது. போட்டிக்கு தனியார் பேருந்துகள் இல்லை.

  • ஆப்பு -

    அவனவன் ஊபர், ஓலால்ல கொஞ்சம் காசை அதிகமாக் குடுத்துட்டு ஏசி கார்ல போறான்...அரசின் டப்பா பஸ்களில் இனிமே அமைச்சர்கள்தச்ன் பயணம் செய்யணும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement