Advertisement

எலுமிச்சம் பழம் ரூ.6,800க்கு ஏலம்

ஈரோடு : ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே, கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோவிலில் சித்திரை மாதம், முதல் நாளில், சித்திரைக்கனி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் அன்னதானம் நடந்தது.

அதன் பின், சடையப்ப சுவாமி முன்பாக, பூஜையில் வைக்கப்பட்ட, மூன்று எலுமிச்சம் பழங்கள், ஏலம் விடப்பட்டன. செஞ்சேரிபுதுாரைச் சேர்ந்த ஒரு பக்தர், முதல் கனியை, 6,800 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இரண்டாவது கனி, 3,600, மூன்றாவது கனி, 3,௦௦௦க்கும் ஏலம் போனது.

அன்னதானத்துக்கு பயன்படுத்தப்பட்டு, மீதியான, 1 கிலோ உப்பு பாக்கெட், 1,000 ரூபாய்க்கும், 50 -கிராம் மஞ்சள் துாள் பாக்கெட், 600 ரூபாய்க்கும் ஏலம் போனது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement