Advertisement

காவிரி விவகாரத்தில் அடுத்தது என்ன? தி.மு.க., கூட்டணி இன்று ஆலோசனை

காவிரி விவகாரத்தில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள், சென்னையில், இன்று ஆலோசனை நடத்துகின்றன.


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்காததை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ராணுவ கண்காட்சியை துவக்கிவைக்க, ஏப்., 12ல், சென்னை வந்த, பிரதமர் மோடிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி போராட்டம் நடத்தின.


டெல்டா மாவட்டங்களில், காவிரி மீட்பு பயணத்தை முடித்த, தி.மு.க., செயல் தலைவர்
ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன், ஏப்., 13ல், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, அனைத்து கட்சி தலைவர்கள், பிரதமர் மோடியை சந்தித்து பேச, ஏற்பாடு செய்கிறேன்' என, ஸ்டாலினிடம், கவர்னர் உறுதி அளித்தார்.


இந்நிலையில், இன்று காலை, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடக்கிறது.


ஆர்ப்பாட்டம் முடிந்ததும், மாலை, 5:00 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும், ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர், ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர், காதர்மொய்தீன் மற்றும் கம்யூ.,
மாநில செயலர்கள் உட்பட, ஒன்பது கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


அப்போது, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், பிரதமரை சந்தித்து பேச, கவர்னர் அனுமதி பெற்றுத்தராவிட்டால், அடுத்த கட்டமாக, எந்த மாதிரியான போராட்டம் நடத்துவது என, முடிவு எடுக்கப்பட உள்ளது. டில்லியில் மனித சங்கிலி அல்லது பார்லிமென்டை முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (37)

 • Samaniyan - Chennai ,இந்தியா

  March to Bangalore and demand suspension of IPL there

 • Thiyagarajan - Bangalore,இந்தியா

  கூட்டணி கட்சியின் தலைவர் ஒருவரை தீக்குளிக்க வைக்கலாம். தொண்டர்கள் எவ்வளவுகாலம் தான் தீக்குளிப்பார்கள்....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அடுத்த ஆபரேஷன் என்ன தலைவரே? அடுத்த ஆபரேஷன் எனக்குத்தான்....... நடிகர் வடிவேலுவை மிஞ்சிவிடுவார்போல.

 • rajaram padmanabhan - Chennai,இந்தியா

  காவேரி மீட்பு என்பது ஒரு கனவுதான். நேற்று மயிலாடுதுறையில் இருந்து திரும்பி கொண்டு இருந்தேன். சீர்காழியில் இருந்து சிதம்பரம் வரை கிட்டத்தட்ட ஆயிரம் ட்ராக்டர்கள் கொள்ளிடம் ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டு சென்று கொண்டு இருந்தன. கொள்ளிடம் பாலத்தில் இதை போலீஸ் ஒவ்வொரு ட்ராக்டரிடமிருந்தும் பணம் வாங்கிக்கொண்டு இருந்தார். அவர் கையில் ஸ்டாலின் படம் போட்ட ஒரு கட்சி புத்தகமும் இருந்தது. நாமெல்லாம் காவேரியை காப்பற்ற போகிறமாக்கும். எதற்காக இந்த ஏமாற்றும் வேலை. எல்லா ஆற்றையும் சுரண்டி தின்றுவிட்டு வருங்கால சந்ததிக்கு எதை வைக்க போகிறோம். இப்படி சம்பாதிப்பதற்கு வேறு ஏதாவது தொழில் செய்யலாம்.

 • குண்டலகேசி - chennai,இந்தியா

  ஆக...கருப்பு கொடி போராட்டம் வெற்றி பெற்றதால், வாரியம் அமைக்கும் வரை சன் மற்றும் கலைஞர் குழும ஒளிபரப்புகள் நிறுத்தப்படும்...ஆக....சும்மா கிடந்த ஆண்டியை ஊதி கெடுத்தானாம் சங்கு என்ற பழமொழிக்கேற்ப தமிழகம் வந்து எங்களை வெறி ஏற்றி சென்ற மோடிக்கு பதிலடி குடுக்க...ஆக...தைரியம் மிக்க, பயம் என்ற வார்த்தையை அறிந்தே இராத அண்ணன் வாய்க்கோ பெங்களூரு சென்று கர்நாடக சட்டசபை முன்பு ஆர்பாட்டம் நடத்துவார்... ஆக...அம்மி மேல் அம்மி வைத்தால் அடியும் நகரும் என்பதற்கிணங்க தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவு, கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தாவை கண்டிக்கும் விதமாக ஓசூரில் கர்நாடக வாகன மறியல் செய்வார்.... ஆக...காவிரி பிரச்னை காரணகர்த்தா கட்டுமரத்தானின் கோபாலபுர வீடு முழுவதும் கருப்பு வண்ணம் பூச படும்....ஆக...

 • katta bhomman - Panchalamkurichi,இந்தியா

  அடுத்து கூவம் ஆறு மீட்பு பயணம் ஆரம்பிக்கலாம். மோடி வந்த பிறகுதான் கூவம் நாரி போச்சி என்று பழி சுமத்தலாம். இப்போ அவர் சென்று இருக்கும் Sweden னுக்கு போய் கறுப்புக்கொடி கட்டலாம். மோடி கோழை , இவர்களை பார்த்து பயந்து Sweden னுக்கு ஓடி போய்ட்டார் என்று மார் தட்டலாம்.

 • INDIAN🇮🇳🇮🇳🇮🇳 -

  இந்த கொசுத்தொல்ல தாங்கமுடியலடா சாமி. இவங்களே திட்டம் போட்டு கையெழுத்து போடுவாங்களாம்.அதையே சில வருடங்கள் கழித்து எதிர்த்து போராடுவாங்களாம்.மக்களை முட்டாளாக நினைத்துக் கொண்டு தினம் ஒரு நாடகம்,போராட்டம், காமெடி அரசியல் செய்கிறார்கள்.

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும்வரை தமிழகம் முழுவதும் போராட்டம். தமிழகம் அவரை முதல்வராக்கவில்லையென்றால் போராட்டம் தொடரும்.

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  ஐயோ குலை நடுங்குதே...சுடலைப்பைய்யர் விடலை பையர் போல என்ன வொரு சுறுசுறுப்பா இருக்காரு? அடுத்த அடுத்த கட்ட போராட்டங்களை அறிவிச்சு கூட இருக்கிற நண்டு சிண்டு நார்த்தங்கா கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் சைக்கோ உண்டியல் குலுக்கி குருமா என்று எல்லா வேலையா வெட்டி பயலுவலை அறிவு கேட்ட ஆலயத்தில் கூட்டி இவனுங்களுக்கு பிரியாணி போட்டு கூடி கும்மி அடிக்க போவுதாமே? ஆனால் சுடலை தத்தி ஒன்னு புரிஞ்சுக்கோ நீ என்னதான் தலைகீழா நின்னாலும் உங்கப்பாரு பண்ண டகல்பாஜி வேலைகளை இந்த நாடு மறக்க போவதும் இல்லை...உன்கூட்டத்த்துக்கு கூறாக சீவிய ஆப்பை அடிப்பதை நிறுத்த போவதும் இல்லை

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அடுத்தது என்ன எல்லாரும் உக்கார்ந்து கட்டிப்பிடித்து பிலாக்கணம் பாடவேண்டியதுதான்

 • karthikeyan -

  இந்த தடவை பிரியாணி குவார்ட்டர் ஐநூறு எல்லாம் போராட்டத்துக்கு பத்தாது இன்னும் கொஞ்சம் போட்டு கொடுங்க

 • ravisankar K - chennai,இந்தியா

  அய்யா புண்யவான்களே, பார்த்து முடிவுபண்ணுங்க அய்யா . போராட்டம் என்றாலே சாலை மறியல் , பஸ் கண்ணாடி உடைப்பு , ஒரு நாள் உண்ணாவிரதம் , ரயில் நிறுத்தம், வன்முறை என்று ஆகிவிட்டது . ஏற்கனவே இரண்டு பேருக்கு மேல் உயிர்பலி வேறு ஆகிவிட்டது . தண்ணீர் இல்லாமல் அவஸ்தபடறது பொது ஜனம் தான். அதுக்கும் மேல இந்த வெயிலில் தினம் தினம் சாலையில் போராட்டம் நடத்தி எங்களை வறுத்தெடுக்கிறார்கள் . இது மாறி இல்லாமல் போராட்டத்தில் எவ்வளவோ வழி இருக்கிறது . இந்திய சரித்திரத்தை கொஞ்சம் படித்து பார்த்து அப்புறம் கூட்டம் போடுங்க அய்யா .

 • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

  10 வருடம் மண்ணுமோகன் தலைமையில் ஆட்சியில் இருந்தபோது ஒரு கிள்ளி துரும்பும் போடலை.. அப்போ புல்லா எல்லா தி மு க மத்திய அமைச்சர்களும் சொத்து சேர்ப்பதில் பிஸி. இப்போ வந்து நடை பயணம் , போராட்டம்னு ஒரே ஒப்பாரி. கூட இருக்கற ஆட்களை எல்லாம் கூட்டணி தலைவர்களாம். கொடுமையடா சாமி.

 • rajan. - kerala,இந்தியா

  ஏம்பா சுடலை நீ காவிரி தண்ணியை ஆத்துனது எல்லாம் போதும். இனி பாலைவணக்கப்பால் என்று ஓன்று இருக்குது தெரியுமா உனக்கு. அந்த ஒட்டகக்தை டெல்டா விவசாயிகளுக்கு மக்கள் னால திட்டமா அறிவிச்சு இலவசம் வழங்க வேண்டும் என புதிய ஆட்டைய துவங்கு. சும்மா உங்க அச்சன் வச்சு ஆத்தின அதே காவிரி விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து உன் ஒட்டு வங்கியை காப்பாத்துப்பா. இப்படியே போன ஒரு தொகுதியிலும் டெபாசிட் கிடைக்காதுப்பா. கொடிய தூக்கி ஆடுறதுக்கு கூட ஆள் இருக்காது ஆமா.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  காவேரி விஷயத்தில் திமுக மற்றும் அதிமுகவின் மீது பழிபோடுவதை விட, காங்கிரஸ் மற்றும் பிஜேபி யின் மீது தான் நாம் பழிபோட வேண்டும். இந்த இரு தேசிய கட்சிகளும், தமிழகத்திற்கு இழைத்த வஞ்சகம் தான் அதிகம். மாநில கட்சிகள் ஒன்றை ஒன்று சாடிக்கொண்டு இருப்பது, தேவை இல்லாத கவனத்தை திசை திருப்பும் வெற்று அரசியல். இதில் மாநில கட்சிகளும் ஈடுபடுவது, முதிர்ச்சியற்ற தன்மையானது. திமுக அதிமுக மற்றும் இதர மாநில கட்சிகளும் ஒன்றை ஒன்று சாடிக்கொண்டு இருப்பது, தேசிய கட்சிகளுக்கு தான் குதூகலத்தை கொடுக்கும். நம்மை நண்டுகளாக்கி, அடித்துக்கொள்வதை தேசிய கட்சிகள் வேடிக்கை பார்த்து, ரசிக்கிறார்கள்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இப்போதைக்கு ஒரு ஐடியாவும் தோணமாட்டேங்குது எனவே கூட்டமாக இவரது தந்தையரால் மணக்கவைக்கப்பட்ட கூவத்தில் குதிக்கும் போராட்டம் நடத்தலாம்

 • SS,Chennai -

  These guys made the cauvery bed dried out and now Ops and eps become the biggest sand mafia theives and looting all the sands of cauvery beds. But see how these 2 parties playing well in politics and with people, especially in cauvery issue. They are good at fooling TN peoples and these peoples also no other way... to get themself fooled...

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் இன்டர்நெட் சேவையையும் போராட்டத்தின் ஒரு பகுதியாக முடக்கி பாருங்களேன் ...பொது மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்னு தெரியும் ... மக்களை அரசாங்க தொலைகாட்சி மட்டும் பாக்கணும்னு சொல்லுங்க ...

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  silent majority என்று வர்ணிக்கப்படும் மக்களே தேர்தல் முடிவுகளை முடிவு செய்கிறார்கள். அவர்கள் பொதுவாக எப்போதும் வாய் திறவாமல் நாட்டு நடப்பை மனதிற்குள்ளேயே அசைபோட்டு ஒரு முடிவு எடுப்பார்கள்.(RK நகர மக்கள் பிரைன் வாஷ் செய்யப்பட்டிருந்தார்)இன்று ஆர்ப்பாட்டமாக கூச்சலிடுபவர்களும் கடத்துபவர்களும் ஒரு நாள் (தேர்தல்) அன்று இவர்களால் பட்டை நாமம் சாத்தப்படுவார்கள். தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் அன்றுதான் பிறக்கும்.

 • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

  சரியாக சொல்லவேண்டும் என்றால்..காவிரி பிரச்சினைக்கு காரணமான கருணாநிதியை எதிர்த்து இவர் போராடுவதுதான் மிக பொருத்தமாக இருக்கும். பணப்பேராசையில் நாட்டை அடகுவைத்து கும்மியடித்து குடும்பம் இன்றைக்கு அரசியல் சித்து விளையாட்டை செய்து ஏமாற்றுகின்றது. தஞ்சையை பாலைவனமாக்க துணிந்த இந்த குடும்பம்..மக்கள் மறதியாளர்கள் என்று எண்ணி..பொய்யாக அரசியல் செய்கின்றது. இவர்கள் பின்னே ஒரு கும்பல்வேறு..இவர்களின் அரசியல் லட்சணமே இதுதான். எந்த காலத்திலும் இந்த திமுக பின்னே திரிவோர்..பொறைக்கு அலைகின்ற ஜீவன்களை போன்றவர்கள். இவர்களுக்கு மனசாட்சி என்பதே கிடையாதோ? தடுப்பணைகளை கட்ட அனுமதித்த நபர் யார்? எந்த கட்சி என்று இந்த கூட்டணி கட்சியினருக்கு தெரியாதா என்ன? கொள்ளையடித்த கும்பலுக்கு துணை போகின்ற இவர்கள் தங்களை நம்பிய தொண்டர்களையும் ஏமாற்றி தீர்க்கின்றார்களே? அந்த தொண்டர்களுக்கு கூடவா அறிவில்லாமல் போயிற்று? நிஜத்தை சொல்லுங்கள்..அல்லது உணருங்கள்..காவிரி நீர் பிரச்சினைக்கு முழுமுதற் காரணம் யார்? எந்த நபர்? அதன் பின்னணி கூட புரியாத ஜென்மங்கள் நீங்கள் மட்டும் இவர்களை ஆதரிக்க மறுத்தால் போதும்..இந்த செயலு ஆட்டம் அடங்கும்..எப்போ பார்த்தாலும் இவர்கள் பின்னே செல்ல வெட்கப்படவே இல்லையா? கர்மம்..கண்ராவி அரசியல் வியாதிகள்..போங்கோ ஆலோசனையில் போண்டா டீ பிரியாணியும் போடுவார்களாம்..தவறாமல் போயி உண்டுவிட்டு ஏப்பட்ம் போட்டு கையில் கொடுக்கும் கவரில் பணத்தோடு திரும்புங்கள்..தமிழக மக்களின் எதிரிகள் இந்த திமுகவும் அதன் பின்னே செல்லுகின்ற ஆதாயம் தேடி அலையும் கூட்டமும்..இந்த பிழைப்பினை நாய் கூட ஒதுக்கிவிடும்..பாய்ச்சல் அல்ல பதுங்கல்..

 • Siva Kumar - chennai,இந்தியா

  ஆளுநர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யும் வரை பொறுத்திருக்காமல் அதுவரை உருப்படியா இரண்டு போராட்டங்கள் நடத்தலாம். முதலாவது கர்நாடகம் சென்று போராடி அம்மாநில சிறைகளை நிரப்புவது, கூடவே சசிகலா சந்திப்பும் நிகஸ்த்தலாம். கர்நாடக போராட்டம் முடிந்து தமிழகம் வந்து பொது மக்களுக்கு இடைஞ்சலாக ஒரு கூட்டம் போட்டு கர்நாடக சிறைகளை புகஸ்த்தும் தமிழக சிறைகளை இகழ்ந்தும் பேசிவிட்டு அடுத்தகட்ட போராட்டமாக டெல்லி சென்று அங்கு திஹார் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தலாம்.

 • Tamilselvan - Chennai,இந்தியா

  காவிரி விவகாரத்தில் பதவியில் இருக்கும்போது செய்த துரோகங்களை புட்டு புட்டுவைத்து உள்ளனர். இதை எல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினனைத்து,சுடலை கபட நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார். தேர்தலில் மக்க்களின் பதில் கிடைக்கும். தமிழ் மக்களுக்கு த்ரிகம் செய்த எவரும் இனி தப்ப முடியாது.

 • வல்வில் ஓரி - koodal,இந்தியா

  அநேகமா சுடலை தான் திராவிடத்துக்கு எண்டு கார்டு போடுவாருன்னு தெரியுது..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  டெல்லி சென்று அடுத்து மோடி காலுக்கு அபிஷேகம்... வெளியே பெரிதாக கறுப்புக்கொடி ஆனால் உள்ளுக்குள் 2G யில் கட்சி பனாலாகி விடுமோ என்ற பயம் (+ குடும்பத்துக்குள் ஒருவரை தனியாக ஒழித்துக்கட்டவேண்டியது இல்லை என்ற ஒரு அற்ப சந்தோசம்)

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  //////s t rajan - chennai,இந்தியா 15-ஏப்-2018 23:41 பெயர் தான் தமிழ்நாடு தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் இது சுடுகாடு1000 ஆண்டு சோழர் காலத்தில் பறிபோகாத காவிரி. 200 ஆண்டு வெள்ளையர்களின் ஆட்சியில் பறிபோகாத காவிரி. வெறும் 50 ஆண்டு திராவிட ஆட்சியில் பறிபோனது காவிரி...😡😡😡இளைய தலைமுறைகள் கவனிக்க ,, பிரசன்னா என்ற யோக்கியன் கவனிக்க காவிரி பிரச்சனையில் திமுகவின் துரோகங்கள் வரிசையாக முதல் துரோகம். கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம். இரண்டாவது துரோகம். - இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் திராவிட கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம். மூன்றாவது துரோகம்.. 3.) 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் காவேரி நீர் உரிமை பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் கருணாநிதி வேறு ஒன்றும் இல்லை சர்க்காரியா கமிஷன் எனும் கத்தி /துப்பாக்கி தான் இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.. நான்காவது துரோகம் 4.) காவேரி பிரச்சனையின் மூலாதாரமே கருணாநிதிதான். கர்மவீரர் காமராஜ் காலத்தில் கர்நாடக அரசு அணைகள் கட்டவில்லை காவேரி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது . அந்த ஒப்பந்தம் சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே உருவானது. இந்த ஒப்பந்தப்படி காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசு ஒரு அணையைப் புதிதாகக் கட்ட சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகும் முன்பு நீட்டிக்க வேண்டும் என்பதே அனைவரும் ஒப்புக்கொண்டது .அதனை நீட்டிக்க முயற்சி எடுக்கவில்லை திராவிட கருணாநிதி .அதன் விளைவு கி.பி.1892-ம் ஆண்டு போடப்பட்ட முதல் ஒப்பந்தம் கருணாவின் அலட்சியத்தால் காலாவதியானது .இது தான் 219 ஆண்டு கால காவேரி நதி பங்கிட்டு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை பறிபோக முதன்மை காரணமாய் அமைந்து விட்டது இப்படி கர்நாடகா கடந்த 40 வருடங்களில் முக்கியமாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் - அணைகள் கட்டியதை - ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட அணை ,கபினி ஆற்றில் 19 டி.எம்.சி கொள்ளளவு அணை - ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை - தடுக்காத கருணாநிதி தமிழர் நலன் /திராவிடர் நலன் குறித்து கவலை கொண்டது இல்லை ஐந்தாவது துரோகம் . - 5.காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளி யிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு .இதை கெஜட்டில் ஏன் வெளியிடவில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பதவி சுகங்களை ஏகத்திற்கும் அனுபவித்து வந்த திமுக இது குறித்து துளி கூட கவலைப்படவேயில்லை . இது கருணாநிதியின் ஐந்தாவது துரோகம் . மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நீதி மன்றம் மூலம் சாதித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் ஆறாவது துரோகம் - காவேரி பிரச்சனையில் .காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (மத்திய அரசின் கெஜட்) வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தேவ கௌடா கோரிக்கை விடுத்தார் -அதில் தேவ கௌடா சாதித்தார் .அப்பேற்பட்ட தமிழின விரோதி இந்திய பிரதமராக பதவி வகிக்க ஆதரவுக்கரம் நீட்டியவர் இந்த கருணாநிதி தான்.இது கருணாநிதியின் ஆறாவது துரோகம் மிக பெரிய ஏழாவது துரோகம் இது எல்லாவற்றையும் முழுங்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு கருணாநிதி செய்த மாபெரும் துரோகம் இதோ - 1998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி திமுக ஆட்சியின் போது , சென்னையில் முதல்வர் கருணாநிதி ,பிரதமர் தலைமையில் ஆன காவேரி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் வரைவு அறிக்கையை விவாதிக்க கூட்டம் கூட்டினார் . அதில் காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில் ,பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையமே, கர்நாடக அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தது .அதனை கருணாநிதி நீக்கி விட்டார் . காரணம் அவரின் குடும்பத்தார் கர்நாடகாவில் வாங்கி குவித்துள்ள அளவற்ற/ கணக்கற்ற சொத்துக்கள் மற்றும் அவரது ஊடகங்கள் தான் . அந்த ஷரத்து இருந்தால் இப்போது உச்சமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்காததை சுட்டிக்காட்டி அதன் அணைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள் இருந்திருக்கும் . அதனை இரக்கமின்றி அடைத்தவர் கருணாநிதி தான். இது கருணாநிதியின் ஏழாவது துரோகம் . எட்டாவது துரோகம் ஏற்கனவே ஒரு காங்கிரஸ் முதல்வர் (கண்ணனின் பெயர் கொண்டவர்) கர்நாடகாவில் ஆட்சி செய்தபோது ,ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி காவேரியில் சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தர சம்மதம் தெரிவித்தார் .அப்போது காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த கருணாநிதி டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் சொல்லி காவேரியில் தண்ணீர் திறந்து விட்டால் ,ஜெயலலிதா புகழ் கூடிவிடும் .நான் சிறுமைப்படவேண்டி நிற்கும் நிலை வரும் என சொல்லி அதனை தடுத்து விட்டார் .இதனை அந்த காங்கிரஸ் முதல்வர் தனது சுயசரிதையில் தேதி முதற்கொண்டு சொல்லி உண்மையை புட்டு புட்டு வைத்து விட்டார் இது கருணாநிதியின் எட்டாவது துரோகம் ஒன்பதாவது துரோகம் இந்திய பிரதமர்கள் வி பி சிங், நரசிம்மராவ் ,குஜ்ரால் ,தேவ கௌடா, வாஜிபாய் ஆகியோர் அமைச்சரவையில் பங்கு பெற்றார் ,, அதன் பிறகு மன்மோகன் சிங் ஆட்சியில் இவர் ஆதரவு இல்லை என்றால் ஆட்சியே இருக்காது மிரட்டி மிரட்டி எத்தனையோ பதவிகள் வாங்கினார் கருணாநிதி , ஆனால் அப்போதும் கூட ,காவேரி பிரச்சனைக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் தான் கருணாநிதி . தனது மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சோனியா காந்தி அரசில் ( மன்மோகன் சிங் பொம்மை பிரதமர் ) நல்ல பசையான துறைகளை வாங்க நேரடியாக டெல்லி சென்றவர் அப்போதே மத்திய நீர்வளத்துறையை கேட்டு பெற்றிருந்தால் இந்நேரம் கருணாநிதி காவிரி பிரச்சனை தீர்த்ததற்காக உலக புகழ் பெற்றிருப்பார் . ஆனால் அவர் அதை செய்ய வில்லை இது கருணாநிதியின் ஒன்பதாவது துரோகம் பத்தாவது துரோகம் - காவிரி வழக்கை வாபஸ் பெற்றால் ..தானே பிரச்சனையை சுமுகமாக முடித்து நியாயமான நீரைத்தருகிறேன் என இந்திரா சொன்னார். கூட்டணி ஆசைக்காக ( ஊழல் பாதுகாப்புக்காக?) அதனை ஏற்று திமுக வழக்கை வாபஸ் பெற்றது. இது கருணாநிதியின் ஒன்பதாவது துரோகம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் ஏமாற்றுவது தெரிந்தும் 35 ஆண்டுகளாக பெரும்பாலும் காங் கூட்டணிக்கே வாக்களித்து வந்துள்ளனர் விவசாயிகள். இப்படி அடுக்கடுக்காக காவேரி நதி நீர் விஷயத்தில் துரோகங்கள் செய்தவர் இந்த கருணாநிதி தான் . தமிழகத்தில் காவேரி பாய்ந்த கழனிகள் எல்லாம் வறண்ட பாலைவனங்களாக மாற துரோகங்கள் செய்து தனது குடும்பத்தின் சொத்துக்களை பல பல மடங்காக பெருக்கியவர் கருணாநிதி தான் . காவேரி பாய்ந்த நிலத்தை கருக வைத்த அரசியல்வாதி இவர்தான் .ஆம் இவரின் துரோகங்களை தமிழர்கள் குறிப்பாக திருவாரூர் ,தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட இன்னும் அறியாதது தமிழகத்தின் சாபக்கேடு தான், இவர்கள் மக்கள் உயிரை பற்றியோ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வையோ விரும்பாதவர்கள். ஏமாற்றுவதற்கு அங்கீகாரம் கொடுத்தபின் ஏமாளி போராடுவது அபத்தம். அதன்மூலம் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் கொடுக்காமலிருக்கும் உரிமையை நிரந்தரமாக வழங்கிவிட்டோம். இன்றும் தமிழகத்தில். நூற்றுக்கணக்கான இந்திரா, ராஜீவ் சிலைகள் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிக்கின்றன. ஆனாலும் எதிர்காலத்தில் சோனியா ராகுலுக்கும் சிலைவைத்து வணங்கப்போகிறான் மான மிகு தமிழன் வீராணம் ? கூவத்தை மணக்கவைத்த கருணாவுக்கும்தான்.... இவ்வளவு துரோகத்தையும் செய்து விட்டு அவர் மகன் உத்தமன் வேஷம் போடுகிறார் ,, என்றால் தமிழ் மக்களின் அறியாமையை என்ன வென்று சொல்லஅனைவரும் ஒன்று திரள்வோம் மோடியை மட்டும் குற்றம் கூறுபவர்களுக்கு சமர்ப்பணம் மற்றும் தமிழகத்தில் காசுக்கு ஓட்டு போட்ட பிணம் தின்னிகளுக்கு சமர்ப்பணம் Above is a WhatsApp news in rounds. Will DMK or Thillu Mullu Kalagam answer the Above staggering revelations ?////// - இந்த வாசகர் எஸ் டி ராஜன் - சென்னையின் கருத்தில், உண்மை இருக்கா?. சத்தியம் இருக்கா?. நியாயம் இருக்கா?. நீதி இருக்கா?. நேர்மை இருக்கா?. வருத்தம் இருக்கா?. ஆதங்கம் இருக்கா?. அவலம் வெளிப்படுதா?. இயலாமை வெளிப்படுதா?, மன துன்பம் வெளியாகுதா?, வறண்ட காவிரி ஆறு சார்ந்த விசயங்களில்(முன்பு நடந்தவைகளில், இன்று நடக்கிறவைகளில்), யோசியுங்க, வாசகர்களே?.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  காவேரி விஷயத்தில் அடுத்து என்ன கூட்டணி தலைவர்களுடன் பந்தா தலைவர் ஆலோசனை.என்ன நடக்கும் ஏதாவது ஒரு ஸ்வீட் காபி குடித்து விட்டு கொஞ்சம் பேசி விட்டு மக்களுக்கு எப்படி அல்வா கொடுப்பது என்று யோசனை செய்வார்கள்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  சுடாலினும் கருணாநிதியும் நினைத்து இருந்தால் இது போன்ற காவேரி பிரச்சினை வந்தே இருக்காது. வந்து இருந்தாலும் எவ்வளவோ வாய்ப்புகளில் இதை எல்லாம் தீர்த்து வைக்கும் வழி இருந்தும் அப்போவெல்லாம் ஒண்ணுமே செய்யவில்லை. கருணாநிதி தன்னுடைய பெரிய குடும்பத்துக்கு எப்படி எல்லாம் சொத்து சேர்த்து வைப்பது, எப்படி எல்லாம் அவர்களுக்கு அரசாங்க செல்வத்தை வாரி கொடுப்பது, எப்படியெல்லாம் கூட்டணி வைத்து யாரோடெல்லாம் சேர்ந்து கொள்ளை அடிக்கலாம் என்று வேலை செய்தார்களே தவிர ஒரு சிறு துரும்பும் நம் தமிழக மக்களுக்காக செய்யவில்லை. ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. ரொம்ப காலம் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்க முடியாது என்று தெரிந்து விட்டது. அதனால் எப்படியாச்சும் மீண்டும் ஓட்டுக்களை வாங்கி விட வேண்டும் என்று காவிரிக்காக அலைவதாக கணக்கு காட்டுகிறார்கள். ஆனால் புத்திசாலி மக்கள் ஏமாறுவார்களா? மீண்டும் தளபதிக்கு நாமத்தை போட்டு சாத்துவார்கள்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  தமிழகமக்கள் ஏன் கருணாநிதிக்கு ஓட்டு போட கூடாது, ஏன் கருணாநிதி குடும்பத்துக்கு ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும் என்று ஆழமாக யோசிக்க வேண்டும். கருணாநிதியோட குடும்பம் பெருசு. அந்த கால கருணால இருந்து இனி வருங்கால பேரன் பேத்தி கொள்ளு பேரன் கொள்ளு பேத்தி எள்ளு பேரன் எள்ளு பேத்தின்னு ஏறக்குறைய ஒரு அஞ்சு தலைமுறைக்கு அவங்க குடும்பத்துல ஆளு வெச்சு இருக்காங்க. காலம் போக போக ஒவ்வொண்ணா இறக்குவாங்க. அப்படி பாத்தா இன்னும் ஒரு ஏறக்குறைய 50 இல் இருந்து 70 வருட காலத்துக்கு இவங்க குடும்பமே தாக்கு புடிக்கும். ஆனா இவங்க குடும்பத்த்தோட அராஜகத்தை நாம அவ்வளவு தூரம் தாங்குவமான்னு யோசிச்சு பார்க்கணும். இப்புடி ஒரே ஒரு குடும்பம் மன்னராட்சி மாறி நம்மை வதைத்து எடுப்பதற்கு நாம தங்குவோமான்னு பார்க்கணும். வளர்ந்து விட்ட எல்லா நாடுகளிலும் புதிது புதியதாய் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். புது புது ஆட்கள் வந்து காலத்துக்கு தகுந்த மாறி திட்டங்களை போட்டு மக்களை முன்னேற்றுகிறார்கள். ஆனால் நாம என்ன பன்றோம்? கருணாநிதி ஏமாத்துற ஆளுன்னு தெரிஞ்சும் அவங்களுக்கே ஓட்டு போடுறோம். இது ஏன் இப்படி? நொடிக்கொரு தரம் செல் போனை மாத்துறோம், போடுற துணியை மாத்துறோம், அட கால்ல போடுற செருப்பை மாத்துறோம். ஆனா நம்ம வாழ்க்கையாவே நிர்ணயம் பண்ற ஓட்டை மட்டும் மாத்தவே மாட்டேங்கிறோம். எவண்டா இதெல்லாம் பாத்துகிட்டுன்னு சோம்பேறிதனம் பட்டுக்கிட்டு இப்புடி போயி கருணாநிதி குடும்பத்துக்கிட்ட ஏமாறுகிறோமே இதெல்லாம் தப்புன்னு உங்களுக்கு தோணலியா? தோணனும். இனிமேல் தோணும். ஏன்னா நீங்க உங்க புள்ள குட்டிங்கள எல்லாம் நெனச்சு பாருங்க. உங்கள மாறி உங்க புள்ள குட்டிகளும் அடிமையா இருக்க கூடாதுன்னா கருணாநிதிக்கு ஓட்டு போடாதீங்க. வேற கட்சிக்கு போடுங்க. இல்லேனா புதுசா யாருக்காச்சும் போடுங்க. இன்னைல இருந்து யோசிச்சு பாருங்க மக்களே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement