Advertisement

மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை

டமாஸ்கஸ் : ''சிரியா, மீண்டும் ரசாயனத் தாக்குதலை நடத்தினால், அதற்கு எதிராக, மீண்டும் தாக்குதல் நடத்த, அமெரிக்கா தயார்'' என, அமெரிக்க அதிபர், டிரம்ப்
எச்சரித்துள்ளார்.


மேற்காசிய நாடான, சிரியாவில், அதிபர், பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, அதிபர் பஷாருக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் சேர்ந்து, போரிட்டு வருகின்றனர். சிரியா அரசுக்கு, ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.


கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிழக்கு கோவ்டா பகுதியில் இருந்த டூமா நகரை, சிரியா அரசுப் படைகள், சமீபத்தில் மீண்டும் கைப்பற்றின. இந்த நடவடிக்கையின் போது,

சமீபத்தில், மக்கள் மீது, ரசாயன குண்டுகளை வீசி, ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட, 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


இதையடுத்து, 'சிரியாவுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா, ரசாயன ஆயுத தாக்குதலை தடுக்கவில்லை; மாறாக, ஆதரவாக செயல்படுகிறது'என, அமெரிக்க அதிபர், டிரம்ப் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, சிரியா அரசு நடத்திய ரசாயனத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் விமானங்கள், சிரியாவில் மூன்று இடங்களில் சரமாரி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின.


இந்நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறுகையில், ''சிரியா அரசு, அப்பாவி மக்கள் மீது மீண்டும் ரசாயனத் தாக்குதல் நடத்தினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்க, அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது,'' என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதற்கிடையே, 'சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, அமெரிக்கா, பிரிட்டன்,
பிரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இதுதொடர்பாக, இம்மூன்று நாடுகளும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கூட்டு வரைவு தீர்மானத்தை, உறுப்பு நாடுகள் இடையே, நேற்று வினியோகித்தன.


ஓட்டம் பிடித்த பயங்கரவாதிகள் : சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள, கிழக்கு கோவ்டா பகுதியில் இருந்து, அனைத்து பயங்கரவாத குழுக்களும் வெளியேறி விட்டதாக, சிரியா ராணுவம் நேற்று அறிவித்தது. சிரியா ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'கிழக்கு கோவ்டாவையும், டூமா நகரையும் விட்டு, அனைத்து பயங்கரவாத குழுக்களும் வெளியேறி விட்டன. அப்பகுதியை, ராணுவம், தன் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • shankar - chennai,இந்தியா

  எவன் நாட்டுல என்ன நடுக்கும் எப்ப மூக்கை நுழைக்கலாம் என்று காத்திருக்குது அமெரிக்கா சிரியா செஞ்சது தப்புன்னா அப்போ சம்மந்தமே இல்லாம அவன் நாட்டுல போய் இவன் குண்டு போட்டது என்ன நியாயம். சிரியா குண்டு போட்டா எல்லாரும் செத்திடுவாங்க அமெரிக்கா குண்டு போட்டாமட்டும் மட்டும் என்ன பொழச்சுக்குவாங்களா.இவர் கிட்ட இருக்கிற ராணுவ பலத்த காமிக்கணும்னு நினைச்சர்னா இவர சதா சண்டைக்கு கூவி கூவி அலைகிறானே அந்த கொரிய காரன் அவன் நாட்டுல போய் கொண்ட போடவேண்டியதுதானே.

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  ஸ்ரீ டிரம்பு பேசுவது எப்படி இருக்கிறது என்றால் மீனுக்காக கொக்கு கரையில காத்திருக்கிற மாதிரி இருக்கு, அங்கே ரசாயன ஆயுதத்தை இரு முறை வீசியது அமெரிக்க முன்கூட்டியே உலக மீடியாவுக்கு விரைவு செய்து அனுப்பிடீங்க, இதை காரணமாக வைத்து சிரியாவை கைப்பற்ற முயற்சி அதை ரஸ்யா முறியடிப்பு, மறுபடியும் சூழ்ச்சியை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்கிறது அமெரிக்கா..........

 • kanchi siva - chennai,இந்தியா

  நம் நாட்டில் நடக்கும் ஜாதி சண்டைகள் எல்லாம் ஒரு தெருவில் மட்டும் நடக்கும், இல்லை .....ஓர் கிராமத்துக்கும் அடுத்த கிராமத்துக்கும் நடக்கும் ......ஆனால் சிரியாவில் நடப்பது ஜாதி சண்டை ..... ஊரு ரெண்டு பட்டாள் கூத்தாடிக்கு கொண்டாட்டம் .... இப்போது ரஷியா மற்றும் அமெரிக்கா உம் கங்கணம் கட்டி சண்டை போடுவது ஒரு மூன்றாம் உலகப்போர் அளவு போய்க்கொண்டு இருக்கிறது....இப்போதும் இது புரிய வில்லையே.....

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சிரியா சிரிக்கும் நாள் அருகில் இல்லை என்று தெரிகிறது ஜனநாயகம் தழைத்திருந்தால் சுபிக்ஸம் இருந்திருக்கும். ஜனநாயகம் இல்லாமல் மன்னராட்சி நடப்பதால் தான் பிரச்சினைகள்.

 • christ - chennai,இந்தியா

  மனிதர்களே இருக்கும் கொஞ்ச காலங்களில் நீங்களும் சந்தோசமாக இருந்து விட்டு மற்றவர்களையும் சந்தாஷப்படுத்தி விட்டு செல்லுங்கள் .

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  சிரியா என்னும் சிறிய நாடு இரண்டு பெரிய வல்லரசுக்களுக்கு நாடுகளுக்கு நடுவில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது ... இன்னும் அங்கு மக்கள் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம்தான் .. மனித குலமே மனித குலத்தை அழிப்பதுதான் வேதனையான விஷயம் ... வெளி உலகத்திலிருந்து யாரும் வரவேண்டியதில்லை ... மனிதனே ஒரு நாள் மொத்தமாக உலகத்தை அழித்துவிடுவான் ... யார் அழிப்பது என்பதில்தானே இன்று போட்டி ..

 • balakrishnan - coimbatore,இந்தியா

  அமெரிக்கா சர்வ வல்லமை படைத்த நாடு, அதை எதிர்க்கும் ஆற்றல் இன்று யாரிடமும் இல்லை, ஆனால் அதிபர் தீவிரவாத இயக்ககங்களை ஒழிப்பதில் குறியாக இருக்கிறார் அது பாராட்டுக்குரிய ஒன்று, அமெரிக்கா தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அதிபரிடம் ரசாயன குண்டுகளை வீசுவதை தவிர்க்க வேண்டுகோள் விடுத்திருக்கலாம், என்ன அரசியலோ தெரியவில்லை, அங்கு வசிக்கும் மக்கள் என்ன பாவம் செய்தார்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம், நடக்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்க்கும்போது ஆண்டவன் என்று ஒருவன் இல்லை என்று தோன்றுகிறது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நாட்டாமை கொஞ்சம் அடக்கி வாசி...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அப்பிராணிகளை அழிக்காமல் விட மாட்டீர்கள் போல உள்ளது...பொதுமக்கள் நலன் கெடாமல் எதுவேண்டும் என்றாலும் செய்யுங்கள்..

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  சிரியாவில் நடந்தது ரசாயன தாக்குதலா என்று ஐநா குழு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டது தவறு. விசாரணையின் முடிவு வந்தபிறகு தான் அமெரிக்காவிற்கு தாக்குதல் நடத்த தார்மீக உரிமை உள்ளது. அதற்கு முன்னரே, தாக்குதலில் ஈடுபட்டது தவறு. மேலும், போர் முடியும் தருவாயில், ரசாயன தாக்குதலில் ஆசாத் ஈடுபடுவாரா? என்ற சந்தேகமும் உள்ளது. மேலும் ரஷ்யா இந்த தாக்குதலை, நாடகம் என்று இழித்துள்ளது. எது உண்மை என்று தெரியவில்லை. விசாரணைக்கு பின்னரே உண்மை நிலவரம் வெளிவரும். அதற்கு முன், தாக்குதல் நடத்தியது தவறு.

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் ஐ எஸ் பயங்கரவாதிகளுடன் கூட்டாக உள்ளனர். மேற்கத்திய நாடுகள் இவர்களுக்கு ஆதரவாக செயல் படுவது ஆச்சரியமாக உள்ளது. ஆப்கன் போன்ற நிலைமை வரக்கூடாது.

 • HSR - Chennai,இந்தியா

  இப்போ வந்து திட்ட சொல்லுங்கள் இந்த பச்சைகளை ? பெரிய அண்ணா, மண்ணாங்கட்டி அண்ணா ன்னு..

 • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

  நம்ம மோடிஜியை போன்றே விளம்பரத்தால் பதவிக்கு வந்தவர் இந்த ஆள். பார் ல அரைகுறை ஆடைப்பெண்களோடு குத்தாட்டம் போட்டு திரிந்த நபரை தேர்ந்தெடுத்த அமெரிக்க ஜனங்களுக்கு மட்டுமல்ல பேராபத்து..மனிதகுலத்துக்கே ஆபத்தான நபர் இந்த நபர். என்ன பேசுகின்றோம் என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் உளறி திரியும் இந்த ஆட்கள் அபாயகரமானவர்கள்.சிரியா இவர்கள் தயாரிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி டெஸ்ட் செய்ய கிடைத்த இடமாக மாறிக்கொண்டே வருகின்றது. அப்பாவிகளின் மரணம் இவர்களுக்கு அரசியலுக்கு ஆதயாமோ? மரண வியாபாரிகள்..

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒரு நாட்டின் அதிபர் எடுக்கும் முடிவை எதிரி நாடு உளவு துறை மூலம் தகவல்களை திரட்டி அதற்கேற்ப தனது ராணுவ நகர்த்துதல்களை அரங்கேற்றும் ......இன்றோ அமரிக்கா ராணுவத்திற்கு முன்பே , TRUMP , நேரடியாகவும் , twitter மூலமும் ராணு செயல்பாடுகளை உளறி கொட்டி கொண்டு இருக்கிறார் ...." நிக்கி ஹாலே " வேறு மிடுக்காக நடனம் ஆடுகிறது ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement