Advertisement

காட்டுத்தீ எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் மாற்றியமைப்பு

டேராடூன் : நாடு முழுவதும், காட்டுத் தீ எச்சரிக்கை தொழில் நுட்பத்தை, எப்.எஸ்.ஐ., எனப்படும், இந்திய வன அளவை துறை, முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

இதுகுறித்து, எப்.எஸ்.ஐ., இயக்குனர், சாய்பால்தாஸ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும், காட்டு தீ பற்றிய எச்சரிக்கையை அளிக்கும் தொழில்நுட்பம், முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


தானியங்கி முறை:
காட்டுத் தீ ஏற்படுவதற்கு, 10 அல்லது, 12 வாரங்களுக்கு முன்பே, அது தொடர்பான
எச்சரிக்கையை, புதிய தொழில் நுட்பத்தில் பெற முடியும். காட்டு தீ தொடர்பான, எப்.எஸ்.ஐ.,யின் புதிய தொழில்நுட்பம், காடுகளில் இரவில் தீ பற்றுவது உட்பட அனைத்து எச்சரிக்கைகளையும், தானியங்கி முறையில் தெரிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


எப்.எஸ்.ஐ., துணை இயக்குனர், விக்ரம், நிருபர் களிடம் கூறியதாவது: காட்டுத் தீ ஏற்பட்டால், அது தொடர்ந்து எரிவதற்கு தேவையான எரிபொருள் மற்றும் உகந்த தட்பவெப்பநிலை ஆகியவை இருந்தால் மட்டுமே, காட்டின் பிற பகுதிகளில் வேகமாக பரவும்.


பருவமழை:
தீ எரிவதற்கு உகந்த சூழல், காட்டில் நிலவினால், விரைவாக பரவி, கட்டுப்படுத்த முடியாத பெருந்தீயாக உருவெடுக்கும். இதனால், பெரியளவில் உயிர்களுக்கும், சொத்துக்கும் இழப்பு ஏற்படும். காட்டுத் தீ ஏற்படுவதற்கு உகந்த தட்பவெப்ப நிலை
நிலவும் பருவம், 'தீ பருவம்' எனப்படும். கோடைக் காலத்தில், தீப்பருவம் அதிகளவில் உண்டாகிறது. பருவமழை பெய்யத் துவங்கும்போது, தீப் பருவம் முடிவுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


சமீபத்தில், தமிழகத்தில் குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, 20க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த விபத்தை அடுத்து, எச்சரிக்கை தொடர்பான தொழில்நுட்பம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக, வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  ஒரு காலத்தில் மனிதன் காடுகளுக்கு நடுவேதான் வாழ்ந்திருந்தான்... பின் விவசாயம் செய்ய காடுகளை அழித்தான் ... வீடுகட்ட காடுகளை அழித்தான் ... தொழிற்சாலைகளை உருவாக்க மேலும் காட்டை அழித்தான் .. நகரங்களை உண்டாக்க மேலும் அழித்தான் ... இப்போது மிஞ்சி இருப்பதோ மிக சொற்பம் ... மழை பெய்யவில்லை என்று குமுறல் .. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று கூப்பாடு ... சுவாசிக்க நல்ல காற்று இல்லாமல் மூச்சு திணறல் ... மனிதன் வாழ தகுதி இல்லாத பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது நம் தாய்மண்... நம்மோடு முடிந்துவிடவேண்டுமா நம் மானிட இனம் ?... நம் சந்ததி வாழவேண்டுமென்றால் காட்டை காப்பாற்றுங்கள் ... நாம் நினைத்தால் நாம் வாழும் பகுதியையே சோலையாக மாற்ற முடியும் .. ஆண்டுக்கு ஒரு மரம் நட்டு வளர்த்தால்கூட , பத்தாண்டில் பசுமை காணலாம் ... பாலை நிலத்திலேயே இங்கு மரம் வளர்க்கின்றனர் .. நம்மால் முடியாதா?.. இருக்கும் மரங்களையும் வெட்டாமல் காத்திடுவோம்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  காட்டுத் தீ ஏற்படுவதற்கு, 10 அல்லது, 12 வாரங்களுக்கு முன்பே, அது தொடர்பான எச்சரிக்கையை, புதிய தொழில் நுட்பத்தில் பெற முடியும். காட்டு தீ தொடர்பான, எப்.எஸ்.ஐ.,யின் புதிய தொழில்நுட்பம், காடுகளில் இரவில் தீ பற்றுவது உட்பட அனைத்து எச்சரிக்கைகளையும், தானியங்கி முறையில் தெரிவிக்கும்...... .பஞ்சபூதங்களில் மிகவும் மோசமானது ... மிச்சம் எச்சம் வைக்காதது... தீ மட்டும்தான்... அதை முன்பே கண்டறிந்த தடுத்து விட்டால் அழிவுகளில் இருந்து தப்பிக்கலாம்...

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரி பின்னாலே எரியிற மாதிரி தீ வைச்சாலும் கூட.. இவங்க நடவடிக்கை எடுப்பங்களான்னு தெரியாது. அங்கிருந்து ஒரு ஈமெயில், குறுந்தகவல் அனுப்பும் அடித்தட்டு வசதி கூட இல்லையா? பத்தாயிரம் சாட்டலைட் விட்டும் அந்த வசதி கூட இல்லை. வரும் ஆய்வு தகவல்கள் அனைத்தும் நாசா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வருகிறது. அதே தகவல்கள் நமது இஸ்ரோ மையத்திலும் (அகமதாபாத், மற்றும் ஹப்சிகுடா (ஆந்திரா)) இறக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அதை ஆய்ந்து மக்களுக்கு தேவையான அறிக்கையை அனுப்ப துப்பில்லாத அரசமைப்பு நமது அமைப்புகள். அரசு துறைகளுக்கோ இது பற்றிய அறிவே இல்லை. ஆய்வறிஞர்களுக்கோ சமூக அக்கறை இல்லை. எப்படி அலுவலகத்தில் காக்கா பிடித்து முன்னேறுவது என்பதே பெரிய வேலை. மனம் வலிக்கக்கூடிய உண்மை இது தான்.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  காடுகள், இந்த புவியின் நுறையீரல் சுவாச முடிச்சுக்கள் எனலாம். காடுகள் இருக்கும் வரைதான், இப்புவியில், சகல ஜீவராசிகளும், மனித இனமும் உயிர் வாழ முடியும் எனலாம். ஆக, "காடுகளை காப்போம், உயிர்களை காப்போம்", என நாம், வாசகர்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்ப்போம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement