Advertisement

'மாஜி' தலைமை செயலர் ராவ் மீது மந்திரி தங்கமணி... பாய்ச்சல்!

''ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், பொய்யான தகவல்களை கூறியுள்ளார். சசிகலா குடும்ப துாண்டுதலால், அவர் தடம் மாறி பேசுகிறார். ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்க நாங்கள் வலியுறுத்தினோம்,'' என, தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரித்து வருகிறது. தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், சமீபத்தில், இந்த கமிஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, 'உடல் நலக்குறைவால், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்றார். 2016 செப்., 28ல்,
மருத்துவமனையில், காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆலோசனை :கூட்டத்தில், அப்போதைய அமைச்சர்கள், பன்னீர் செல்வம், பழனிசாமி, சீனிவாசன், விஜயபாஸ்கர் மற்றும் லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன், அப்போதைய அரசு ஆலோசகர், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர் பங்கேற்றனர்.

'அந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவை, வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. 'ஆனால், அமைச்சர்கள் தடையாக இருந்தனர். ஜெ., இறந்த போது, அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்' என, ராவ் தெரிவித்ததாக, தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 'விசாரணை கமிஷனில், ராமமோகன ராவ், பொய்யான தகவல்களை கூறியுள்ளார்' என, மின் துறை அமைச்சர் தங்கமணி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக, நாமக்கல்லில் நேற்று அவர் அளித்த பேட்டி: முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். யாரையோ திருப்திப்படுத்த, தவறான தகவலை கூறுகிறார். ஜெயலலிதாவை, சிகிச்சைக்காக, வெளிநாடு அழைத்து செல்ல, நாங்கள் தடையாக இருந்ததாக, அவர் கூறுவது தவறானது.

உள்நோக்கம் :சிகிச்சை அளிக்க, வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என, நாங்கள் வலியுறுத்தினோம்; அவர் தான், முடிவு எடுக்கவில்லை. ஜெயலலிதா இறந்த போது, நானும், அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரும் அங்கிருந்ததாக, ராமமோகன ராவ் கூறுவதும் தவறு. அப்போது, நான், அமைச்சர் சரோஜா, சுந்தரம், எம்.பி., ஆகியோர், நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பட்டி கோவில் விழா ஒன்றில், ஜெ., நலம் பெற யாகம் நடத்திக் கொண்டிருந்தோம். அமைச்சர் வேலுமணி, திருவனந்தபுரத்தில், அரசு தொடர்பான நிகழ்ச்சியில் இருந்தார்.

ஜெ., மரணம் அடைந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், ராமமோகன ராவ் இவ்வாறு கூறுவதில், அரசியல் உள்நோக்கம் உள்ளது. சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் துாண்டுதலில், அவர் தடம் மாறி பேசுகிறார். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (34)

 • ram - chennai,இந்தியா

  ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ், பொய்யான தகவல்களை கூறியுள்ளார். சசிகலா குடும்ப துாண்டுதலால், அவர் தடம் மாறி பேசுகிறார்

 • JANANI - chennai,இந்தியா

  ellam sasikalavin sathi seyal thaan kaaranam.

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  தங்கமணி சசிகலா என்று சொல்லவே இலையே.. யாருடைய தூண்டுதலின் பெயரில்தான் செயல் பட்டார் என்றுதான் சொனார்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  தமிழ், தமிழ்நாடு போல எல்லவற்றிலும் நம்பர் 1 போல இந்த உலகிலே வேறெதுவும் இல்லை என்று சொல்லும் நீங்கள் இங்கே இருக்கும் டாக்டர்கள் எதற்கும் லாயக்கில்லாத சோப்ளாங்கிகள் என்று சொல்வது போல இருக்கின்றது. எவன் கிட்டேயும் பணம் வந்தாச்சுன்னா அயல்நாட்டு சிகிச்சை???அப்புறம் எதுக்கு இந்த முதல் தர மருத்துவ சிகிச்சை மனைகள், அத்தனையும் மூட வேண்டியது தானே????

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  வெட்டிப் பயலுக.. அடங்க மாட்டேன்றாய்ங்க.. சொத்தை மேட்டரை புடிச்சித் தொங்குறாய்ங்க..

 • dandy - vienna,ஆஸ்திரியா

  டாஸ்மாக் நாட்டில் அரசியல் வியாபாரிகள் .. அதிகாரிகள் பொய் சொல்வது ....அதிசயமா இல்லை ..நம்ப 7 கோடி மாக்கள் உண்டு ..பாக்கிஸ்தான். பிரேசில் ..தென் கொரியா நாடுகளில் பிரதமர் ..ஜனாதிபதிக்கு பல பல ஆண்டுகள் சிறை .ஸ்பெயின் நாட்டில் அரச குடும்ப அங்கத்தவர்கள் கூட நீதிமன்றம் ஏறுவார்கள் .இங்கோ மனைவிக்கு ஞாபக மறதி என்றால் நீதிபதி கோல் மால் புரம் ..வருவார் ..ஹி ஹி ஹி உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அப்போவே சொன்னேனே, அவன் ஒரு பிராடு..

 • thennavan - chennai,இந்தியா

  மாபியா கும்பலின் திட்டமிட்ட சதிதான் ஜெயலலிதாவின் மரணம் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை. இத்திட்டம் 2011 முதலே,அதாவது சசி கும்பல் ஜெயயலலிதாவால் விலக்கிவைக்கப்பட்ட ஆண்டு முதலே ஆய்ந்து ஆராய்ந்து உருவாக்கபட்டதாகும். அதாவது ஜேவை வைத்து தேர்தலில் வெற்றிபெற்று பிறகு அவர் கதையை முடித்துவிட்டு எஞ்சிய ஆட்சியை இவர்கள் நடத்தி கட்சியையும் கைப்பற்றி தமிழ்நாட்டின் ஆட்சி குடும்பமாக ஆட்டிப்படைக்க திட்டம் போட்டனர் .பாவம், பன்னீர் வடிவத்திலும் மோடியின் ஆதரவோடும் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டு MGR - இன் தர்மம் நிலைநாட்டப்பட்டுவிட்டது .

  • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

   உன் கதைக்கு ஒரு அளவே இல்லையா தின்னவன்.. மத்திய அரசின் சூழ்ச்சிதான் ஜெயாவின் மரணம்.. ஜெயலலிதா என் சகோதரி என்று சொல்லும் மோடி 75 நாள் மருத்துவமனையில் இருக்கும் போது வராத மோடி.. ஸ்கூட்டர் மானியத்திற்கு ஏன் வந்தார்..

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  குறுக்கு விசாரணை செய்யுங்கள்.

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இவரும் சசியை முதல்வராக்க முயன்றவர் தானே. அதிமுகவில் அனைவரும் சசிகலாவை சின்னம்மா என்று கூறி காலில் விழுந்தவர்களே

  • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   சசிகலா திரும்பி வந்தால் மீண்டும் காலில் விழுவதற்கு வரிசையில் நிற்பார்கள்

 • sivam - baghram,ஆப்கானிஸ்தான்

  தெரியாமத்தான் கேக்குறேன் இனிமேல் உங்களால என்ன பண்ணமுடியும், அவங்க மறுபடியும் திரும்பி வந்து இவர் சொல்லுறது தான் சரி அல்லது தவறு என்று சொல்லப்போறாரா, ? உன்மையை கண்டுபிடிப்பதற்கு செலவழிக்கும் நேரமும் பணமும் மக்களின் உண்மையான சம்பாதித்து அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட ஏதோ ஒரு விதத்தில் வரி ஆகும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பொய்யன்கிட்டே வேலை பார்த்தா பொய் சொல்லாமல் உண்மையா சொல்லுவாங்கா ... திராவிடன் என்றால் பொய்யன் என்று கொள்க..

  • sivam - baghram,ஆப்கானிஸ்தான்

   வாஸ்தவம் தான் உண்மைக்கும் அப்பாற்பட்ட வார்த்தை

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஒரு கூடை செங்கல்லும் பிடாரிகள் தான் எல்லாமே கூட்டு களவாணிபயலுக

 • balakrishnan - coimbatore,இந்தியா

  எதுவாக இருந்தாலும் ராம் மோகன் ராவ் விசாரணை கமிஷன் முன்பு இந்த விஷயத்தை கூறியிருக்கிறார், அது தான் முக்கியம், அதை வைத்து தான் ஆறுமுகசாமி விசாரணை நடத்தமுடியும், அல்லது குறுக்கு விசாரணைக்கு அனுமதி அளிக்க முடியும், இந்த தங்கமணி, வேலுமணி எல்லோருமே அப்போது தலையாட்டி பொம்மைகளாகவே இருந்திருப்பார்கள், கருத்து சொல்லும் தெம்பு இவர்களுக்கு நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பில்லை,

 • Suresh - Nagercoil,இந்தியா

  ராம் மோகன் ராவ் ரொம்ப நல்லவர் கொள்ளை அடிப்பதற்கு உதவிய சசிகலாவுக்கு நன்றி மறவாதார்..

 • L.Pannneerselvam - chennai,இந்தியா

  முதலமைச்சரும், அமைச்சரின் இந்த கருத்தையே சொல்லியுள்ளார். ஆனால், மக்கள் எதிர்பார்ப்பது, ஏன் அவர்கள் விசாரணை ஆணையம் முன்பு சென்று தனக்கு தெரிந்த விவரங்களை சொல்லக்கூடாது? குறுக்கு விசாரணையை எதிர்கொள்ளக்கூடாது? ஒரு பாமர மக்களில் ஒருவனாக ஏற்படும் சந்தேகம் என்னவென்றால், ஜெ. மருத்துவமனையில் இருந்தவரையிலும், அல்லது சசிகலாவை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிவு செய்யும் வரையிலும், அல்லது ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைந்து துணை முதல்வர் ஆகிறவரையிலும், ஒரு அமைச்சர்கூட ஜெ.மரணம் பற்றி சந்தேகத்தையோ, எதிர்மறையான கருத்தையோ தெரிவித்தது இல்லையே, அது ஏன்??

  • balakrishnan - coimbatore,இந்தியா

   ஈ.பி.எஸ் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது, ஓ.பி.எஸ் சுக்கு உள்ளதும் போச்சுடா என்கிற நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது, இருவரின் தனிப்பட்ட பதவி ஆசையினால் தான் ஜெ மரணத்தை கையில் எடுத்தார்கள்,

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  சர்வம் பொய்களேதான் இந்தலெடி மரணத்துலே எல்லா சூதுக்களும் சசியும் நடராசனும் அறிவாங்க என்பதுதான் உண்மை எல்லாமே (அந்தம்மாவின் பேரிலே இருக்கும் போய்ச வீடு அண்ட் சொத்துக்களை முழுங்கவேதான் )இதுலே சர்வமும் அந்தம்மா வின் அம்மாசந்தியா தன மகளுக்கு என்று வாங்கின சொத்துக்களேதான்ஜெய்குமாருக்கும் அந்தம்மா தான் வாங்கித்தந்தாரு( தீபா அண்ட் தீபக் தந்தை) வாளையும் ஜெயாவின் உறவுகளையும் வெரட்டினது சசியேதான் என்பதிலே சந்தேகமே இல்லே , அதேபோல அந்தம்மா அப்போலோ க்கு கொண்டுவரப்பட்டார் சுயநினைவு இல்லாது என்பதும் உண்மை (அவருக்கு உதவியா இருந்த ரெண்டு பொண்ணுகள் எங்கே போனாங்க என்று இன்னிவரை நோ நியூஸ் (உசுரோட இருக்காங்களா ?) என்றும் தெரியலே திமுக லே ஊழல் துவண்க்கம் அதிமுக லே ஜெவின் ஊழல் வலுவடைஞ்சுது தெருவெங்க்கும் நல்லவருமானம் என்று டாஸ்மாக் வந்தது அடிமட்டமாக்கல் 90 %மத்தியதர 70 % குடிக்கு அடிமைகளே தான் , லோகத்துலே ரொம்பவெக்கஷ்டம் குடிகாரனோட வாழறதுன்னு எவ்ளோப்பான்கள் கதறுகிறாங்க பிரிஞ்சுவாழுதுங்க விதவை ஆனவா ரொம்பவே அதிகம் இந்தப்பாவமெல்லாம் தான் ஜெயா சாவுக்கு காரணம் முக இன்னமும் இஸ்துகினு இருக்காங்க டாஸ்மாக் வருமானம் தான் அரசுக்கு ஒரே வருமானம் என்று சொல்லுறாங்க அதுலேயும் 50%சசிங்ட் கனிமொழி யின் சாராயக்கம்பெனிக்களுக்கு ஷேர்போயிட்டுதாம் ஆஹா எவ்ளோ நல்ல ஆட்ச்சி பாருங்க

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ராம்மோகன் அடுத்ததாக தான் தான் அம்மாகாருவுக்கு இட்லி ஊட்டியதாக சாட்சியம் சொல்வாரோ என்னவோ? .

 • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

  இந்த மனிதரையெல்லாம் மந்திரியாக்கி..அம்மா ஜெ அவர்கள் தவறு செய்தார் என்றால் அது இந்த மாதிரியான மந்திரிகளை மந்திரி சபையில் சேர்த்துதான். இப்போ கோவப்படற இந்த மந்திரி..அப்போ தினமும் அம்மா அதை சாப்பிட்டார் இதனை சாப்பிட்டார் என்று புருடா விட்டு திரிந்தார்களே..அப்போ ஏன் சொல்லவில்லை..அம்மா அவர்களை நாங்கள் வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல விரும்புகின்றோம் என்று? யாகம் நடத்தினார்களாம்..முட்டாள்தனத்தை உச்சம் இது.டம்மி மந்திரிகள். ஒருத்தருக்கு கூட தில் என்பதே கிடையாது. பதவி ஒன்றுதான் வெறித்தனமாக இருக்கின்றது. முன்னாள் தலைமை செயலாளர் எதற்கு பொய் சொல்ல போகிறார்..இவர்களை போன்று சொத்துக்கள் சேர்க்கவா? மதிகெட்ட மந்திரிகளுக்கு ரோஷம் வேறு வருதோ? சசிகலா காலில் விழுந்து விழுந்து எழுந்த போது வராத ரோஷம் இப்போது வந்து பொங்கிவழிகின்றதோ? அம்மாவின் ஆன்மா புனிதமான ஆன்மா..ஒருபோதும் எவராலும் கொலை செய்திட முடியாது. எவர் எப்படி சொன்னாலும் கவலை கிடையாது. அம்மாவின் மரணம் இயற்கையானதே. ஆட்சி அதிகாரத்துக்கும் பணத்துக்கும் பதவிக்கும் பேராசை பட்ட ஒரு மனிதனின் செயல்தான் இத்தனைக்கும் காரணம். பதவி கிடைத்ததும் கப்சிப் என்று மணல் கொள்ளையில் ஆழ்ந்துவிட்ட அந்த துரோகியின் செயல்தான் இதனை குழப்பத்திற்கும் காரணம். ஐயோ என்றுதான் போவார்கள்..அம்மா மீது பழி சொல்லித்திரியும் படுபாவிகள்..பிடி சாபம்..

  • R dhas - Bangalore,இந்தியா

   அட சொம்பு சேகரா 'டம்மி மந்திரிகள். ஒருத்தருக்கு கூட தில் என்பதே கிடையாது' ன்னு சொல்லி இவனுங்கள திட்டுரேன்னு உங்க மம்மி முகத்த்துல கரிய பூசிட்டியேப்பா.. இப்படி டம்மி பீசுகளா பாத்து பாத்து செலக்ட் பண்ணி வச்சதே உங்க மம்மிதானே...

  • Kalyanaraman S - Bangalore,இந்தியா

   வந்துட்டீங்களா? உங்க சொல்படி தலைமை செயலாளர் மந்திரிகள் மாதிரி சொத்து சேர்க்கலையா? அப்போ அந்த உங்க பேருல பாதிய வச்சுக்கிட்டு இருக்கிற சேகர் ரெட்டி,இவர் மேலிருக்கிற ஊழல் குற்றச்சாட்டு, பையன் மேல இருக்கிற குற்றச்சாட்டு எல்லாம் ஒளஒக்காட்டியா? அம்மாவோட ஆன்மாதாங்க புனிதமானது, கொலை செய்யப்படமுடியாதது. அவங்களுடைய பூத உடலை கொலை செய்யமுடியும் அதைத்தானே நிரூபிச்சுருக்காங்க

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு கூட்டிட்டு போகல்லைன்னு தானே சொல்றாப்புலே.. அதுக்கு எதுக்கு இம்புட்டு பதட்டப்படுறாய்ங்க? கழுத்தை நெறிச்சு கொன்னாங்கன்னு சொன்னா மாதிரி? (ஒருவேளை செஞ்சிருப்பாய்ங்களோ?)

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மோடி பலருக்கு காற்றை பிடுங்கி தற்காலிதமாக ஒரு குண்டூசியை குத்தி வைத்து இருக்கிறார்... அது எப்பொழுது விழும் என்று தெரியாது... இந்த ராவு அந்த லிஸ்டில் முதல் ஆள்...

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   "நிரந்தர முதல்வர், அம்ம்மா"ங்குற காற்றை பிடுங்கி ஜெயலலிதாவுக்கு குண்டூசி குத்துனது அப்போ உங்க மோசடி தானா? ஐயா ஆறுமுகச்சாமீ.. பிடிச்சி உள்ளே போடுங்கையா..

  • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

   காவிரி தீர்ப்பை நிறைவேற்றாத, ஊழல் செய்த அதிகாரி ஒருவரை கூட டிஸ்மிஸ் செய்யாதவர் , ஒரு மகா நடிகர் எனலாம்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   மோடி அவர்களிடம் நேர்மையாக இருந்திருந்தால் ஜெ இறந்த பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், தங்களது அரசியல் நடவடிக்கைகளுக்கு இந்த நிகழ்வுகளை பிரதமர் பயன்படுத்திக் கொள்ள முனைந்துவிட்டார், எங்கே இருக்கு நேர்மை,

 • K.Rajasekaran - chennai,இந்தியா

  ஜெயா மேடம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.உள்ளே செல்லும் போதும் யாரும் பார்க்கவில்லை. உடலை வெளியே கொண்டுவரும்போதும் யாரும் பார்க்கவில்லை.மருத்துவமனையிலும் யாரும் பார்க்கவில்லை.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ராம் மோகன் ராவ் ஏற்கனவே மத்திய அரசிடம் மாட்டி உள்ளார். அவர் ஏன் மத்திய அரசிற்கு வேண்டாத சசி குடும்பத்திற்கு ஆதரவாக பதில் சொல்லி, மாட்டி கொள்ள விரும்புவார்? ஜெயா உடல்நலக்குறைவால் தான் இறந்தார் என்பது தான் உண்மை. ஆனால் இப்போது அப்போல்லோ நிறுவனரே மத்திய மாநில அரசிற்கு பயந்து சசி குடும்பத்திற்கு எதிராக தான் சாட்சி சொன்னார். ஒரு பொய்யை ஆயிரம் முறை சொல்லிவிடுவதால் தற்காலிகமாக மக்கள் நம்பினாலும், கடைசியில் உண்மை தான் வெளிவரும். ஜெயா இருக்கும்போதே அதனை சவுகரியங்களை அடைந்தவர் சசி. அவர் எப்படி ஜெயாவை கொல்வார்? மக்களிடம் எந்த கான்ஸபிரசி தியரியை சொன்னாலும் நம்புவார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை. ஆனால் மத்திய அரசிற்கு பயந்து, மாநில அமைச்சர்களும் சசிக்கு எதிராக பேசி வருகிறார்கள். சசிக்கு ஆதரவாக பேசுவதால், நான் மன்னார்குடி மாபியா கும்பலை சேர்ந்தவனும் இல்லை. நியாயத்தின் பக்கம் மனசாட்சியுடன் நிற்க ஆசைப்படுகிறேன். சசியும் மாபியா கும்பலும் தமிழகத்தை சீரழித்தவர்கள், பல கொலைகள் செய்திருப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. ஆனால், சசியின் மீது ஜெயாவின் கொலைப்பழியை ஆதாரமின்றி போடுவதற்கு, மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

  • R dhas - Bangalore,இந்தியா

   ஜெயலிதாவை, சசி திட்டமிட்டு கொல்லாமல் இருந்திருக்கலாம்.ஆனால் தவறுதலாக எதிர்பார்க்காத எதோ ஒன்று நடந்துள்ளது. எதற்காக உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் ஒரு மாநில முதல்வரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று திரும்ப பிணமாக கொண்டு வரும் வரை இத்தனை ரகசியம்? ஒரு போட்டோ கூட இல்லை. சசிகலா மட்டும் இல்லை,ஜெயலலிதா சிகிச்சையின் போது வாய்மூடி மவுனியாக இருந்த ஓபிஎஸ் ,அமைச்சர்கள் ,மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ,அப்போதைய கவர்னர் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்.ஆனால் அதிமுக பிஜேபி அதிகாரத்தில் இருக்கும் வரை ஒருபோதும் உண்மை வெளிவரப்போவதில்லை...

  • Kalyanaraman S - Bangalore,இந்தியா

   @அன்பு, \\ சசிக்கு ஆதரவாக பேசுவதால், நான் மன்னார்குடி மாபியா கும்பலை சேர்ந்தவனும் இல்லை\\ படிப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. தங்களது மற்ற சில கருத்துக்கள் ஒரு காழ்ப்புணர்ச்சியால் வருவது தெளிவாக தெரிந்தாலும், பொதுவாக தாங்கள் நடுநிலையை கடைப்பிடிக்கிறீர்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் தங்களின் மற்ற கருத்து \\ஆனால், சசியின் மீது ஜெயாவின் கொலைப்பழியை ஆதாரமின்றி போடுவதற்கு, மனசாட்சி இடம் கொடுக்கவில்லை\\ மருத்துவமனையில் சேர்த்த நாளன்று அப்போலோவில் சேர்ப்பதற்கு சற்றும் முன்னரும், அப்பலோவை விட்டு பிணமாக வரும்வரையிலும், அவருடனே இருந்தது சசிகலா மட்டும்தான். வேறு யாரையும் (மத்திய மந்திரிகள், ஆளுநர் உட்பட) JJ வை பார்க்க அனுமதிக்கவில்லை, மருத்துவமனை அறிக்கைகள் முதல் எல்லா செய்திகளும் பொய் நிறைந்தது என்பது இப்போது தெளிவாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலைமையில், கூட இருந்த அவர் மீது சநதேகம் வருவது இயற்கை. அந்த சந்தேகத்தை சசிகலா மட்டுமே தீர்க்கமுடியும் மற்றும் தீர்க்கவேண்டும். அதை செய்யாமல், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது, குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கேட்டது (விசாரணை கமிஷனில் குறுக்கு விசாரணை செய்யமுடியுமா?) , செலெக்ட்டிவாக விடியோவை வெளியேவிட்டது இவை அனைத்தும் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement